முன்வைப்போர்: உதறி அபேயசிங்கே, பர்சனா ஹனிஃபா, அகிலன் கதிர்காமர், அனுஷ்கா கஹந்தகம, ரம்யா குமார், ஷாம்லா குமார், ஹாஸினி லேகம்வாசம், கௌசல்யா பெரேரா, அருணி சமரக்கூன், சிவமோகன் சுமதி, மகேந்திரன் திருவரங்கன்
பல தசாப்தங்களாக போதிய நிதி ஒதுக்கீடு செய்யாயதன் காரணமாக, எமது கல்விமுறைமை முற்றிலும் உடைந்துபோய், மீள் கட்டியெழுப்பப்படவேண்டிய நிலையிலுள்ளது. அரச ஆரம்ப சிறுவர் கல்வி கிட்டத்தட்ட முழுமையாகவே இல்லாத நிலமை, பலவருடங்களாக கவனிக்கப்படாத தொழில்பயிற்சி, பொதுக் கல்வி முகங்கொடுக்கும் பாரிய பிரச்சனைகள் (பரந்துபட்டுகாணப்படும் பணியாளரின்மை, வளங்கள் தொடர்பான அப்பட்டமான ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல பிரச்சனைகள்) எதைக்கூறுகின்றன என்றால், இவ் உபதுறைகள் உடனடி கவனிப்பின் தேவையிலுள்ளன என்பதுவாகும். எனவே, அதன் ஆலோசனைச் செயன்முறை பற்றிய தெளிவின்மை காணப்பட்டாலும் மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளடக்கம் பற்றிய கேள்விகள் எமக்கு இருந்தாலும், கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் பொதுக்கல்வி மற்றும் தொழில்க்கல்வி சீர்திருத்தம் வரவேற்கப்படவேண்டிய ஒரு நகர்வாகும். இருப்பினும், அமைப்புமுறைமையின் எந்தவொரு பாகமும் தனித்து செயற்படுவதில்லை. சீர்திருத்தங்கள் ஆரம்ப, பொது, அல்லது தொழில்கல்வியில் கவனம் செலுத்தினாலும், உரையாடலின் ஒரு பகுதியாக உயர்கல்வி இருக்கவேண்டும். உயர்கல்வியை ஜனநாயகப்படுத்தி, அதனை இன்னும் அதிகமானோர் பெற இயலும்படி செய்தல் முழுக் கல்வி முறைமையையே வலுப்படுத்தும். ஒரு ஆலோசனை செயல்முறையூடாக, வேறு செயற்பாடுகளுடன் அவ்வகையான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். மற்றய துறைகள் “நல்ல நிலைக்கு” வரும்வரைக்கும் காத்திருப்பது வெறுமனே ஏற்கனவேயுள்ள சிதறியநிலையையே மேலும் அதிகரிப்பதாகவிருக்கும்.
அனைத்து கல்வித் துறைகளுக்கும் உதவுமாற்போலும் ஒவ்வொரு உப துறைகளின் பிரத்தியேகத் தேவைகளை தீர்க்க வலுவுள்ள ஒரு அதிக ஒருங்கிணைந்த முறைமையை கட்டியமைக்கக்கூடியதாயும் ஒரு முழுமையான திட்டமே எமக்கு தேவைப்படுகிறது. அதன் பின்னரேயே எதிர்கால சவால்களை சந்திப்பதற்கு தயாரான ஒரு கல்விமுறையை எம்மால் உருவாக்க முடியுமாகவிருக்கும். வேறு இடங்களில் தோல்விகண்ட சந்தைமுறைமை அடிப்படையிலான மாதிரியை இலங்கையின் அண்மைக்கால உயர்கல்வி சீர்திருத்தங்கள் பின்பற்றுவதை நினைத்து நாம் கவலைகொள்கிறோம். அரச ஆதரவுடனான இலவசக் கல்வி எமது உயர் கல்வியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. அனால், அண்மைக்காலமாக, இந்தக்கொள்கை பெரியளவில் தேய்வடைய விடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தனியார் உயர்கல்வி விரிவாக்கத்தை ஆதரித்த அதேவேளை, குறைந்த செலவிலான அதிக சரிநிலையை கொண்டுவரும் மூன்றாம் நிலைக் கல்வியான எமது பலகைலைக்கழக முறைமையை நிதியிழக்க செய்துள்ளன. வணிக நிறுவனங்களாக செயற்பட்டு தமது நிதிகளை தாமே உருவாக்கவேண்டிய நிலைக்கு பல்கலைக்கழகங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளன. வசதி படைத்தோருக்கு அதிகரித்து வரும்வகையில் சாதகமானதாக பல்கலைக்கழக அனுமதிகள் மாறுவதோடு நுழைவுசார் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தவகையிலுள்ளன.
தற்ப்போது இடம்பெற்றுக்கொண்டுள்ள கல்வி பற்றிய கலந்துரையாடலுக்கு பங்களிப்புச் செய்யும் வகையில், நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய பிரச்சனைகள் பற்றியும் அரச பல்கலைக்கழக முறைமையை வலுப்படுத்த அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளையும் நாம் குறிப்பிடுகிறோம்.
அரச பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்குதல்
மொத்த தேசிய உற்பத்தியின் (GDP) சதவீதமாக பார்க்கையில், கல்விக்கு மிகக்குறைந்த அளவில் அரசு செலவு செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அச்செலவானது அதிகரித்துவரும்வகையில் வெளிவாரி அமைப்புகளிடமிருந்துவரும், அதிலும் முக்கியமாக உலக வங்கியிடமிருந்துவரும், திட்டம்சார் நிதிகளால் பதிலீடு செய்யப்படுகின்றன. தற்போது, எமது பல்கலைக்கழகங்கள், முக்கியமாக முதுநிலை படிப்புகளிடமிருந்தும் வெளிநாட்டு மாணவர் சேர்ப்பிலிருந்தும் தமது நிதிகளை ஈட்டவேண்டியுள்ளது. தமது இளநிலை கல்விக்கு செலவுசெய்ய வேண்டுமென அதிகருத்துவரும்வகையில் மாணவர்களும் அவர்கள் குடும்பங்களும் எதிர்பார்க்கப்படுகின்றனர். இது இலவசக் கல்வி கொள்கையை தேய்வடையச் செய்கிறது.
- அரச பல்கலைக்கழகங்களுக்கான பாதீட்டு ஒதுக்கீடு அதிகரிக்கப்படல். சுயமாக நிதி சம்பாதிக்க தள்ளுவது நிறுத்தப்படல்.
- கட்டணம் விதிக்கப்பட்ட இளநிலை படிப்புக்களின் அறிமுகத்தை நிறுத்த வேண்டும். (உதாரணம்: திறந்த கற்கை நிலையம், பரதெனிய பல்கலைக்கழகம், கட்டணம் பெற்று மருத்துவ துறை மாணவர்களை வவுனியப் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான திட்டங்கள்)
- தனியார் மற்றும் வெளிநாட்டு பட்டங்களுக்கான நிதி அனுசரணை/ மானியங்களை வழங்குவற்கான முன்னெடுப்புக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தல். அரசின் நிதி அனுசரணை/ மானியங்களால் ஆதரிக்கப்படும் தனியார் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளின் அதிவேக பரவலானது தனியார் விருப்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அரச கல்விக்கான வளங்களை சுரண்டுவதற்கு இட்டுச்செல்கிறது.
- திட்டங்கள் அடிப்படையிலான நித்திகளில் தங்கியிருப்பதை விமர்சனரீதியாக அலசுதலும் குறைத்தலும். முக்கியமாக, உலகவங்கி தனது நோக்கங்களை எமது கல்வி முறைகளில் கொண்டுவரும் நோக்கில் நிதிவழங்கல் முன்னெடுப்பக்களை பயன்படுத்துகிறது. பல தசாப்தங்களாக நிகழும் அப்படியான தலையீடுகள் குறிப்பிட்ட அளவில் உயர் கல்வியை உருமாற்றியுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகங்களை ஜனநாயகப்படுத்தல்
அதிகமானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து (UGC) துணைவேந்தர்களுக்கும் பீடாதிபதிகளுக்கும் வடிகட்டிச்செல்லும் நிலையில், பல்கலைக்கழக நிர்வாகமானது அதிகரித்துவருமளவில் படிநிலைகளைக் கொண்டதாக வந்துள்ளது.
விமர்சன சிந்தனையை வளர்க்கும் மாணவர்களுக்கு சார்பான கற்பித்தல்முறையை நிர்வாக ஆணைகள் நிர்பந்திக்கும் வேளையில், யதார்த்தத்தில் நடக்கும் செயற்பாடுகள் கல்வியல் சமூகத்தின் குறைந்த தரங்களில் உள்ளோரின் அதிகாரத்தை, முக்கியமாக ஆசிரியரின் அதிகாரத்தை, பிடுங்கிவிடுகின்றன. துணைவேந்தர்களிடமும், மன்றங்களிலும், UGC இடமும் அதிகாரம் அதிகரித்துக் கொண்டிருக்கும்வகையில் அளிக்கப்படுகிறது. கல்விசார் நோக்கத்தையோ அல்லது மாணவர்களின் மற்றும்பணியாற்றுவோரின் நலனை மேம்படுத்த இது எந்தளவிலும் உதவுவதில்லை.
- பீட அவைகள், பேரவைகள் (Senates), சட்ட முறைக்குழுக்கள் போன்ற வகிபாகம் செய்யும் மன்றங்களின் அதிகாரத்தைப் பலப்படுத்துவதன்மூலம், பங்கேற்பு செய்யும் கலந்தாலோசித்தல் அடிப்படையிலான நிர்வாக மாதிரி முன்னிலைப்படுத்தப்படவேண்டும். செயல்முறைமை பற்றியும் நடைமுறையாக்கல் சாத்தியம் பற்றியும் நிர்வாக அமைப்புகள் அதிகளவான கவனம் செலுத்த வேண்டும்.
- பாடத்திட்டம் பற்றி கவனத்தில்கொள்ள வேண்டிய விடயங்கள் மற்றும் பாடத்திட்ட திருத்தங்கள் துறைகளாலும் பீடங்களாலும் முன்னெடுக்கப் படவேண்டும். நிர்வாக விடயங்களில், கல்வியியல் சமூகத்திற்கு அதிக அளவிலான சுதந்திரம் வழங்கப்படவேண்டும்.
நியமனங்களிலும் ஆதிசேர்ப்புக்களிலும் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தல்
கல்விசாரா பணிநிலைகளில் அரசியல்சார் நியமனங்கள் மேற்கொள்ளப்படலை முடிவுகட்டுவதற்கான அண்மைய தீர்மானம் வரவேற்கத்தக்கது. இருப்பினும், அரச உத்தியோகர்களால் UGC செயற்குழுக்களுக்கும், பல்கலைக்கழக அவைகளுக்கும், ஏனைய பல்கலைக்கழக/ பீட மட்டத்திலான செயற்குழுக்களுக்கு மேற்கொள்ளப்படும் நியமனங்களை கொண்ட இன்றய முறைமை வெளிப்படைத்தன்மை இல்லாததோடு, சூழ்ச்சிகளை உட்பட்டது. அறிவை மேம்படுத்தவும் தமக்கு ஈடுபாடு உள்ள பிரத்தியேக பரப்புகளில் ஈடுபடவும் விரும்பும் அர்ப்பணிப்புள்ள கல்வியலாளர்களும் ஏனையோரும் பொருத்தமான முடிவெடுக்கும் மன்றங்களில் நுழையமுடியாமல் போகலாம். கல்வியல் பணியாளர்கள் ஆட்ச்சேர்ப்பிற்கான திட்டங்கள் காலஞ்சென்றவையாகவும் நன்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரிகளை சேர்ப்பதில் அடிக்கடி இடையூறு செய்வனவாகவும் உள்ளன. கல்வியல் ஆட்சேர்ப்பு செயல்முறைகளில் அதிகரித்துவரும் அரசியல்மயப்படுத்தல்களை சுட்டிக்காட்டி பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
- ஆணைக்குழுக்களுக்கும் மன்றங்களுக்குமான உயர்மட்ட நியமனங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மையான செயல்முறைகளை உருவாக்கல்.
- பொருத்தமான தகுதியுடைய விண்ணப்பதாரிகளை சேர்ப்பதற்காக, துறைகளுக்கிடையிலான மற்றும் பல்துறை பயிற்சியின் யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆட்செர்ப்பு திட்டங்களை மேம்படுத்தல்.
- ஆட்செர்ப்பு செயல்முறைகள் பல்கலைக்கழக நிர்வாகங்க்களால் வெளிப்படையாக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தல்.
- சிறந்த தகுதியுடைய கல்வியாளர்களை தக்கவைக்கும்வகையில், ஒப்பந்த கட்டுப்பாடுகளை மேலும் நியாயமானதாக மாற்றுதல்.
ஏற்கனவேயுள்ள பட்டப்படிப்புக்களை வலுப்படுத்தல்
கல்வியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது ஒரு கொடிய பல்கலைக்கழக ஆசிரியர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. விளிம்புநிலையிலுள்ள பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் பணியாளர்களின்றி காணப்படுகின்றன. கைத்தொழிற்சாலைகளுக்கு தேவையான “சந்தைப்படுத்தக்கூடிய திறன்களுடைய” மாணவர்களை உருவாக்கும் எனும் ஊகத்தில் அரசபல்கலைக்கழகங்க்களில் STEM ( விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கற்கை நெறிகள் நன்றாக ஆதரிக்கப்படுபவையாகவுள்ளன. அதேவேளை, மிகக்கூடிய மாணவர் சேர்ப்பை கொண்டதாகவும் அதிக்கூடியளவு வசதியற்ற சமூகங்களுக்கு பணியாற்றுவதாகவுள்ளவையாகவும் உள்ளபோதிலும், சமூக விஞ்ஞானகளுக்கும் மனிதவியல்களுக்கும் (SSH) குறைந்தளவு முக்கியத்துவமே கொடுக்கப்படுகின்றன. சில துறைகளில், கட்டணம் வாங்கும் கற்கை நெறிகளில் வேலை நேரங்களிற்குப் பிறகும் வார இறுதிகளிலும் கற்பிக்கும் விரிவுரையாளர்கள் மிக மோசமாகவே சரியீடு செய்யப்படுகிறார்கள்.
- கல்விசார் மற்றும் ஏனைய பணியாளர்களின் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், ஆட்சேர்ப்பு முடக்கங்களை இல்லாமல்ச்செய்தல். கல்வியல் பணிநிலையாளர் எண்ணிக்கைகளை, முக்கியமாக விழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களில், அதிகரித்தல்.
- ஏற்கனவே நடந்துகொண்டுள்ள கற்கை நெறிகளுக்கு தேவையான கல்விசார், ஏனைய பணியாளர்களை சேர்த்தல். புதிய கற்கைநெறிகளுக்கு குறைந்தபட்ஷ பணியாளர் தேவைகளை கொண்டுவருதல்.
- ஒப்பந்த அடிப்படையிலான வேலைக்கமர்த்தும் வழக்கத்தை நிறுத்துதல். ஒப்பந்த அடிப்படையிலான வேலைக்குஅமர்த்தலானது இயலுமைகளை கட்டியெழுப்பாததும் புலமை, கற்பித்தல், கல்விநிறுவனம் போன்றனவுக்கான குறைவான அர்பணிப்பும்கொண்ட ஒரு வேலை சூழலுக்கு இட்டுச்செல்கிறது.
- மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையிலான விகிதம் உட்பட, ஆட்சேர்ப்பு தரவுகளானவை பொதுமக்கள் பரிசீலனை செய்வதற்காக பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உறுதிப்படுத்தல். (2022 ம் ஆண்டு வரை அத்தரவுகள் அவ்வாறு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது).
- SSH ஐ வலுப்படுத்த நிதிகளை ஒதுக்குதல்.
- SSH இல் ஆங்கில மூல கற்பித்தல் பற்றிய அழுத்தத்தை மீளாய்வு செய்தலோடு, எந்தவொரு ஏகவீன முடிவும் உருவாக்கக்கூடிய பெரியளவிலான அசமத்துவங்களை மனதில் வைத்தவாறு, இந்த விடயத்தை கூடிய கூருணர்வோடு அணுகுதல். சிங்கள மற்றும் தமிழ் மூல கற்பித்தல் ஆதரிக்கப்படுகின்றமையும் அவற்றிற்ற்கு நன்றாக நிதி ஒதுக்கப்படுகின்றமையும் முக்கியமானது.
- ஆங்கில மொழிமூலக் கல்வியை முக்கியத்துவப்படுத்தாமல், ஆங்கில மொழி கற்பித்தலை வலுப்படுத்தல். ஆங்கில மொழிமூலத்துக்கு மாறுகையில், மாணவர்களுக்கு உதவவும் அவர்களின் ஆங்கில மொழி புலமையை மேம்படுத்தவமுள்ள ஆசியர்களையும் வளங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
- துறைகளால் (departments) நடத்தப்படும் கட்டணம் வாங்கும் (முதுநிலை, இளநிலை) கற்கைகள் முறைமையை மீள்பரிசீலனை செய்தல். வேலை மணித்தியாலங்களுக்குப் பிறகும் வார இறுதிகளிலும் வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்படும் விரிவுரையாளர்களுக்கு ஈடுசெய்வதிலுள்ள தடைகளை இல்லாமல்செய்தல்.
பல்கலைக்கழக நுழைவுகளிலே நேர்மையை முக்கியப்படுத்தல்
பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களில் எப்போதுமே மூன்றாம் நிலைக் கல்விக்காக தயாரானவர்களாக இருப்பதில்லை. தமது பாட துறையை சாதாரண தரத்திலேயே தெரிவுசெய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சில கற்கைகளுக்கான நுழைவுகளிலே, மாவட்ட அடிப்படையிலான பெரியளவான ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. நுழைவுக்கு பின்னர், STEM ( விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கல்வியை தொடரும் மாணவர்களுக்கு சமூகவிஞ்ஞான மனிதவியல் கற்கைகளை ஆராயவோ, சமூகவிஞ்ஞான மனிதவியல் மாணவர்களுக்கு STEM கல்வியை ஆராயவோ வாய்ப்புக்களில்லை.
- இவ்வாறான படிப்புக்களுக்கிடையில் மாற்றம் செய்யக்கூடிய வகையில், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, மற்றும் தொழில் கல்விக்கு மத்தியில் கூட்டுசெயல்பட்டுக்கொண்ட ஒரு முறையான செயல்முறையாக்கத்தை கொண்டுவருதல்.
- உயர்கல்விக்கான வாய்ப்பின் சமநிலை உறுதிசெய்யும்வகையில், மாவட்ட ரீதியிலான ஒதுக்கீட்டு முறையை வலுப்படுத்தல். இந்த முறையானது நிகழ்காலத்திலுள்ள பிழையான வளப்பங்கீட்டின் சனத்தொகையியலை பிரதிபலிப்பதாக உள்ளதை உறுதிப்படுத்தல்.
- பட்டப் படிப்புக்களிலே துறைகளுக்கிடையிலான கூட்டுச்செயல்பாட்டுக்கான வழிகளின் வளர்ச்சியை ஆதரித்தல்
தரவுறுதியளிப்பு சட்டகத்தை மீளாய்வுசெய்தல்
சொல்லக்கூடிய அளவிலான வளங்கள் தர உறுதியளிப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் கல்வியாளர்களின் பெரியளவான நேரத்தையும் வலுவையும் எடுத்துக்கொள்கின்றன. இருப்பினும் இதன் விளைவாக பல்கலைக்கழகங்களில் கல்வியியல் படிப்புக்களின் தரம் அதிகரித்துள்ளனவா என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் தமது சொந்த முறைமைகளை வடிவமைப்பதற்கான நெகிழ்வுத்தன்மை இல்லாமல் UGC இடம் இருந்து வரும் உத்தரவுகளுடன் மேலிருந்து கீழான முறையில் தரவுறுதிதியளிப்பு முறைமைகள் நிகழ்த்தப்படுகின்றன. உண்மையில் எவ்வாறு பட்டப்படிப்புக்களை மேம்படுத்தலாம் என எவ்வித விமர்சன சிந்தையுமில்லாமல் “ஆதாரத்தை” சேர்ப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
- இன்று காணப்படும் தரவுறுதியளிப்பு திட்டத்தையும் அவை எந்த அளவிற்கும் எவ்வகையிலும் பாடத்திட்ட வடிவமைப்பில் தாக்கம் செலுத்துகின்றன என்பதையும் மீள்பார்வையிடல்.
- கட்டுப்படுத்தும் கண்காணிப்பு பொறிமுறையாக இல்லாமல், பல்கலைக்கழகங்கள் பீடங்களில் வடிவமைக்கப்பட்ட தர உறுதியளிப்பு பற்றிய மாற்று அணுகுமுறைகளை ஆதரிக்கும் ஒரு ஆலோசனை முறைமையின் வழிகாட்டியாக தொழிற்படும் வகையில் அதனை திருத்தம் செய்தல்.
- பல்கலைக்கழகங்களானவை மாணவர்களுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் பதில்கூறவேண்டிய வகையில் கீழ்நோக்கிய பொறுப்புக்கூறும் பொறிமுறைகளை உள்ளடக்குதல்.
ஆய்வுகளுக்கும் புலமைக்கும் ஊக்கமளித்தல்
ஆய்வுகளின் வெளியீடுகளின் மத்திப்பிடலில் எண்ணிக்கைக்கு முக்கியம் கொடுக்கும் அல்லது தரத்தை எண்ணிக்கை அடிப்படையில் மதிப்பிடும் மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் காரணமாக அரச பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கு கலாச்சாரம் மாற்றமடைந்துள்ளது. ஆய்வு நிதிகளை பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் பல இடர்களை முகங்கோள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உசாத்துணை குறிப்பீடுகள் சார் பல்வேறு துர்நடத்தைகளும் காணக்கூடியதாகவுள்ளது. (உதாரணம்: மோசமாக மதிப்பிடப்பட்ட இதழ்கள், சுயலாபம் கருதிய இதழ்களில் (predatory journals) வெளியிடுதல், ஒரு ஆய்வாய்ஆய்வை பல்வேறு பகுதிகளாக வெளியிடுதல் ஏனையவை)
- வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்கள் அரச பல்கலைக்கழகங்களுடனான உறவுகளை ஆரம்பித்தல் தொடர்பாகவுள்ள அதிகார ஆட்சியை தளர்த்தல்.
- தேசிய நிதி கட்டுப்பாடுகளை திருத்துதல். நிகழ்காலத்தில் கல்வியாளர்கள் சர்வதேச மன்றங்களில் கூட்டு ஆய்வு செயற்பாடுகளில் ஈடுபடவும் பங்குபற்றவும் இடர்பாடுகளை உருவாக்கும் செயல்முறைகளை கைவிடுதல்.
- அனைத்து துறைகளிலும் ஆனால் முக்கியமாக சமூக விஞ்ஞானங்களில், வேறு காரணங்களில் கருவியாக பயன்படும் ஆய்வுகளின் அதிகரிப்பிற்கும் சமூக நீதி நோக்கிய ஆய்வின் மதிப்பிளப்பிற்கும் இட்டுச்சென்ற ஆய்வின் வர்த்தகமயமாக்கலை முக்கியத்துவப்படுத்தாமல்விடல்.
- உலக பல்கலைக்கழக தரவரிசைகளில் அரச பல்கலைக்கழகங்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் வேலை செய்வதில் இருந்து விலகி, எமது சூழலுக்கு தேவையான வீரியமான புலமையை ஊக்குவித்தலுக்கு முக்கியத்துவத்தை செலுத்தல்.
திறந்த, உள்வாங்கும் பல்கலைக்கழகங்களை உருவாக்கல்
வன்முறைகள், தொந்தரவுகொடுத்தல் போன்றவற்றை பல்கலைக்கழக வெளிகளில் இருந்து நீக்குவதற்கான தலையீடுகள் வழக்கமாக பகிடிவத்தையையே இலக்கு வைத்ததாகவுள்ளன. ஏனைய வன்முறையின் வடிவங்கள் மற்றும் பல்வேறு அதிகார படிநிலைகள் விலக்கிவைத்தல் மூலம் வன்முறையை உருவாக்கும் பல்கலைக்கழக உப பண்பாடுகள் குறைந்தளவிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ் முக்கியமான பிரச்சனைகள் தொடர்பில் கதைத்தல், கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் உள்வாங்கும் பல்கலைக்கழக வெளிகள் இல்லாத முறைமையில் இருந்து வன்முறை நீக்கப்படமுடியாது.
- பாதிக்கப்பட்டோருக்கான ஓரளவான நீதியை ஆதரிக்கும் மற்றும் வழங்கும் ஒரு செயல்முறையினை வழங்கும் கொள்கைகளையும் உப சட்டங்களையும் உருவாக்கல். முறையிடுவோர் சாட்சிசொல்வோரின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதித்திப்படுத்தும் வழிகளில் ஏற்கனவேயுள்ள முறையீட்டு பொறிமுறைகளை வலுவூட்டல்.
- நிர்வாகத்தினர், மேற்பார்வையாளர்கள், கல்வியாளர்கள், மற்றும் ஏனையோருக்கு பல்கலைக்கழக அளவில் அடிப்படை நடத்தை விதித்தொகுப்புக்களை அறிமுகப்படுத்தல்.
- கற்பித்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேசிய மொழிக் கொள்கையை அமுல்படுத்தலும் பல்கலைக்கழக நிர்வாகத்திலிருந்தான அனைத்து தொடர்பாடல்களும் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் வழங்கப்படுகிறதை உறுதிப்படுத்தல். அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் தமிழிலும் சிங்களத்திலும் ஒரே தரத்தையும் பண்பயும் கொண்டதான அறிவுறுத்தல்/ கற்பித்தல் மாணவர்களுக்கு வழங்கப்படுதலை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
- பாடத்திட்டம் மற்றும் ஏனைய மன்றங்களினூடாக சமூக ஒருங்கிணைப்பு, பால்நிலை நுண் உணர்வு, இணக்கம் போன்றவற்றை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புக்களை ஆராய்வதற்கு பல்கலைக்கழகங்களுக்கு உதவுதல். மேற்குறிப்பிட்ட விடயங்களில் பணியாளர்களுக்கு பயிற்சி வாய்ப்புக்களை முக்கியப்படுத்தலும் வழங்குதலும். அரசியல் வகிபாகத்திலும் ஜனநாயக செயல்முறைகளிலும் மாணவர்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அறிமுகத்தை ஆதரித்தல்.
கல்வியல் சுதந்திரத்தை நிலை நிறுத்தல்
எந்தவிதமான நியாயமற்ற தலையீடுகளோ கட்டுப்பாடுகளோ இன்றி ஆசிரியர்களும் மாணவர்களும் கற்பிக்கவும், கற்கவும், ஆய்வுகளை முன்னெடுக்கவுமான சுதந்திரம் கட்டாயம் காணப்படவேண்டும். ஊடக கொள்கைகள், வேலை பற்றிய மன பாதுகாப்பின்மைகள், ஆய்வு மற்றும் ஏனைய பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கான ஏனைய நிதிக்கு கொள்கைகள், மையப்படுத்தப்பட்ட அதிகார ஆணையால் கீழ்மட்ட அதிகாரிகள் செயற்குழுக்களிடம் இருந்து அதிகாரங்கள் பறிக்கப்படுத்தல் போன்றவை கல்வியல் சுதந்திரத்தின்மீது அடக்குமுறை செய்துள்ள சில பொறிமுறைகளாகும்.
- பல்கலைக்கழகங்களும் கல்வியல் சுதந்திரத்தை பாதுகாக்கவும் அதனை பயன்படுத்துவதை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை விசாரணை செய்யவும் தேசிய மட்டத்தில் ஒரு தற்சார்பற்ற குழுமத்தை உருவாக்கல். இக்குழுமமானது வன்முறை, தொந்தரவு முறைப்பாடுகள் மற்றும் தரம்சார் பிரச்சனைகளை தீர்க்கும் செய்ற்ககுழுக்களுக்கு ஒத்ததாகவிருக்கலாம் .
10) மாணவர் சேவைகளை வலுப்படுத்தலும் நலன்களை ஊக்குவித்தலும்
அண்மிய மகாப்போல புலமைப்பரிசில் தொகை வழங்குதலில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு வரவேற்கத் தக்கது. இருப்பினும் அடிப்படை மாணவர் நலனும் தாங்கும் சேவைகளும் விசனகரமான நிலையிலுள்ள. மாணவர் தங்குமிடங்களிலும் ஏனைய பீடங்களிலும் சமாந்தரமாக முதலீடு செய்யாமல், மாணவர் சேர்ப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இளையோர் மத்தியில் மனோரீதியான சுகாதார பிரச்சனைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளபோதிலும், மேலதிக உதவி தேவைப்படும் மாணவர்களை ஆதரிப்பதற்குரிய பணியாளர்களோ வசதிகளோ காணப்படுவதில்லை. பல்வேறு பொறுப்புகள் மத்தியில் மாணவ ஆலோசகர்களும் ஏனைய கல்வியாளர்களும் மாணவ நலன்சார் கடமைகளை கையாள வேண்டியுள்ளது.
- அரச பல்கலைக்கழகங்களில், மாணவர் தங்குமிடங்களை கட்ட நிதிகளை ஒதுக்குதல் மற்றும்/ அல்லது அவ்வாறு செய்யும்படி பல்கலைக்கழகங்களை விண்ணப்பித்தல். தங்க்குமிடங்களானவை உணவு தயாரிப்பதற்கான வசதிகளை கொண்டதாக இருக்க வேண்டும்.
- கூடுதலான பீடங்களில், விகிதத்தில் அதிகரித்துவரும் பெண் மாணவர்களின் நலன் விடயங்களை சந்திப்பதற்கான கொள்கைகளை அறிமுகப்படுத்தல். (உதாரணம்: தங்குமிட வசதிகள், கழிப்பறைகள், பாலியல் சுகாதார வசதிகள், ஏனையவை)
- நிபுணம்மிக்க ஆலோசகர்கள், உடல்முடியாதோர் சார் சேவைகள், குறைதீர்ப்பாளர் உள்ளடங்கலான மாணவ நலன் விடயத்தில் தமது பிரதான வகிபாகத்தைக் கொண்ட பல்கலைக்கழக பணிநிலைகளை உருவாக்கல்.