எம்மைப் பற்றி
பொதுவாகத் தமிழ் மற்றும் சிங்கள மொழிவழக்கில் குப்பி என்பது ஒரு சிறு வெளிச்சம், ஒரு சிறிய எண்ணெய் விளக்கு, ஒரு சிட்டி எனப் பொருள்படும். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் குப்பி என்பது சிரேஷ்ட மாணவர் ஒருவராலோ, அல்லது”புத்திசாலியாகக்” கருதப்படும் ஒரு சகாவினாலோ மாணவர் குழு ஒன்றிற்கு குறித்த ஒரு பாட விடயத்தை விளக்கும் கலந்துரையாடலைச் சுட்டும். எம்மைப் பொறுத்த வரையில் குப்பி என்பது கற்பித்தல் கலை மற்றும் செயல்திறன் சார் அரசியலாகும்.
2021 இன் ஆரம்பப் பகுதியில் கொரோனாத் தொற்று, ஊர் அடங்கு போன்றவற்றின் மத்தியில் எமது கல்வி முறை பற்றிய கருத்துக்களையும் விசாரங்களையும் கொண்ட, இலங்கையின் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிலர், பொது மக்களுடனான ஒரு கலந்துரையாடல் மன்றமாக ஒன்று சேர்ந்தோம். இங்கு நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கல்வி சார் பிரச்சினைகளை நாம் ஆராய விளைந்தோம். சமூக மாற்றத்தினை உருவாக்கவும், வன்முறையற்ற ஒரு சமூகத்தினைக் கட்டியெழுப்பவும் ஒரு குழுவாக நாம் உறுதிகொண்டுள்ளோம். குறிப்பாக இலவசக் கல்வியினை வளர்க்கவும், பெரும்பான்மைச் சிந்தனைப் போக்கில் ஆதிக்கம் செலுத்தும் தேசியவாதத்தை எதிர்க் கேள்வி கேட்கவும் நாம் முன்வந்துள்ளோம்.
எமது அங்கத்தவர்கள்
-
உதாரி அபேசிங்ஹ
பேராதனைப் பல்கலைக்கழகம்
-
ஃபர்ஸானா ஹனிஃபா
கொழும்புப் பல்கலைக்கழகம்
-
ஷாமலா குமார்
பேராதனைப் பல்கலைக்கழகம்
-
சசிந்து படபென்டிகே
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
-
ஹர்ஷன ரம்புக்வெல்ல
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
-
சுமதி சிவமோகன்
பேராதனைப் பல்கலைக்கழகம்
-
மதுரங்க கலுகம்பிட்டிய
பேராதனைப் பல்கலைக்கழகம்
-
ருத் சுரேந்திரராஜ்
கொழும்புப் பல்கலைக்கழகம்
-
அவன்கா பெனாண்டோ
கொழும்புப் பல்கலைக்கழகம்
-
எரந்திகா டி சில்வா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
-
அகிலன் கதிர்காமர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
-
ரம்யா குமார்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
-
ஹஸினி லேகம்வாசம்
பேராதனைப் பல்கலைக்கழகம்
-
சுதேஷ் மன்திலக
பேராதனைப் பல்கலைக்கழகம்
-
கெளஷல்யா பெரேரா
கொழும்புப் பல்கலைக்கழகம்
-
மகேந்திரன் திருவரங்கன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
-
நிகொலா பெரேரா
கொழும்புப் பல்கலைக்கழகம்
-
ரூபிகா ராஜகருணா
பேராதனைப் பல்கலைக்கழகம்