நாடு சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் கொடுங்கோன்மையான அரசிற்கெதிராக விஸ்வரூபம் எடுத்ததோரின் மக்கள் போராட்டத்தை 2022 கண்டிருந்தது. பாரதூரமானதோர் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஊழல், தவறான ஆட்சி, பொருளாதாரத்தின் முறையற்ற கையாளுகை என்பவற்றிற்கெதிராகவும், ஜனநாயகத்தின் மேம்பாட்டைக் கோரியும் மக்கள் குரல் எழுப்பினர். மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத அரசோ, அரசியல் கலாசாரத்திலும், பொருளாதார ரீதியான பொறுப்புக்கூறலிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதை விடுத்து, அடக்குமுறையின் பால் திரும்பியுள்ளது. அரசாங்கத்துக்கெதிராக மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதைத் தடுக்க போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளும் மக்களைப் பெரும் அசெளகரியத்திற்குட்படுத்தியுள்ளன.
கீழே கையொப்பமிட்டுள்ள நாம், மக்களின் இறையாண்மையை அங்கீகரிக்குமாறு அரசாங்கத்தினைக் கோருகிறோம். அத்தோடு போராட்டக்காரர்களை இடர்ப்படுத்துவதை நிறுத்தவும், அனைத்து மக்களினதும், குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட, சிறுபான்மை மக்களின் குடியுரிமை, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளைப் பேணுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். நாம் தற்சமயம் எதிர்கொண்டுள்ள ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த அரசியல் மற்றும் பொருளாதரா நெருக்கடிக்கு அடக்குமுறையோ சர்வாதிகாரமோ தீர்வாக அமையாது. மாறாக, தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயகக் களத்தில் மக்களின் தொடர்ந்த ஈடுபாடும், மக்களினதும் நிர்வாகத்தினதும் இடைத்தொடர்பாடலுமே தேவைப்படுகின்றன.
அரசாங்கப் பாதுகாப்புப் பிரிவு
காலனித்துவத்திற்குப் பிற்பட்ட இலங்கையின் பரிபாலனத்தில் முன்பிருந்தே அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவும் அதன் அடக்குமுறையான செயல்களும் முக்கியத்துவமாகக் காணப்படுகின்றன. தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியும், வடக்குக் கிழக்கின் போராளிகளின் எழுச்சியும் அதைத் தொடர்ந்த 30 வருட யுத்தமும் அரசாங்கப் பாதுகாப்பின் அடக்குமுறையான தன்மையை சட்டபூர்வமாக்குவதற்குப் பயன்பட்டன. சகல அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்று ஜனாதிபதிப் பதவி (1978) இந் நிலையை மேலும் மோசமாக்கியது. சகல அதிகாரங்களும் ஒரு குறித்த பதவியில் காணப்பட்டமை, கேள்விக்கிடமான சட்டங்களினதும், நடவடிக்கைகளினதும் துரித அங்கீகரிப்பிற்கு உதவியது.
1979 இல் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது எந்தவொரு நபரையும் ஆணைப்பத்திரமின்றிக் கைது செய்யும் அதிகாரத்தை அரசுக்கு அளித்தது. இதன் படி தெளிவான ஆதாரங்கள் இல்லாவிடினும், “சட்டத்திற்குப் புறம்பான செயல்களில்” ஈடுபடுதல் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவரை 18 மாதங்கள் வரை நீதிமன்றத்தின் முன் ஒப்படைக்காது தடுப்புக் காவலில் வைத்திருக்க அதிகாரமளிக்கப்பட்டது. பலர் இவ்வாறு தசாப்தங்களாக நியாயமானதோர் நீதிமன்ற விசாரணையின்றிச் சிறைசெய்யப்பட்டுள்ளனர். தமிழ்ப் போராளிகளைக் கட்டுப்படுத்துவதன் பெயரில், ஒரே நாளில் இச் சட்டமானது ஒரு தற்காலிக யுத்தியாகப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, செயல்ப்படுத்தவும் பட்டது. இதனை மேலும் வலுப்படுத்த வேறு பல ஒழுங்கமைக்கப்பட்ட அடக்குமுறைகளும் கையாளப்பட்டன. குற்ற விசாரணைகள் பிரிவு (CID), பொலிசாரின் சிறப்புப் பணிப்பிரிவு (STF), மற்றும் பயங்கரவாத விசாரணைகள் பிரிவு (TID) ஆகியன நாட்டின் பாதுகாப்புமயப்படுத்தலையும் இராணுவமயமாக்கலையும் அதிகரித்தன. நீண்ட கால யுத்தம் மற்றும் அமைதியின்மையினால் இராணுவமயமாக்கலானது சமூகத்திற்குள்ளும் ஊடுருவியது.
போர் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்திற்குப் பிற்பட்ட குண்டுத்தாக்குதல்கள்
இன்று எமது நாட்டின் தற்போதைய நிலைக்கான அடித்தளம், போரிற்குப் பிற்பட்ட காலத்திலேயே சிறுபான்மையினரைக் குறிவைப்பதன் மூலம் அரசாங்கத்தினால் வகுக்கப்பட்டது. உண்மையான நல்லிணக்கத்தையும், அதிகாரப் பகிர்வையும் விடுத்து அரசாங்கமானது அதன் பாதுகாப்புப் பிரிவை வடக்கிலும் கிழக்கிலும் வலுப்படுத்தியது. இதனால் உருவான உயர் பாதுகாப்பு வலயங்கள், பாதுகாப்பு அல்லது அபிவிருத்தியின் பெயரில் காணிகளைப் பறிக்க உதவியதோடு, மக்களையும் தங்கள் வீடுகளுக்கோ, ஜீவனோபாயங்களுக்கோ திரும்புவதைத் தடுத்தன. சுமார் 270 உயிர்களைக் காவுகொண்ட ஏப்ரல் 2019 உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலின் பின், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்தன. அரசின் அடக்குமுறைகளுக்குள்ளான முஸ்லிம் சமூகத்தை அச்சமும் திகிலும் ஆட்கொண்டன. பயங்கரவாதத்த் தடுப்புச் சட்டத்தின்படி இனங்காணப்பட்ட, இனங்காணப்படாத நபர்களை வலுவற்ற குற்றச்சாட்டுகளின் பெயரில் கைதுசெய்யவும் தடுப்புக்காவலில் வைக்கவும் எத்தனிக்கப்பட்டது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஃனப் ஜஸீம் ஆகியோரின் கைதும், தடுப்புக்காவலும் இச் சட்டத்தினால் நீதி மீறப்படுவதற்கான இரு சிறு உதாரணங்களே.
இதனுடன் தொடர்புடைய சற்று முற்பட்ட சில நடவடிக்கைகள் மக்களின் கவனித்தைப் போதியளவு ஈர்க்கத் தவறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் இலக்கம் 1373, பயங்கரவாதத்திற்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதன் அங்கத்துவ நாடுகளைக் கோரியிருந்தது. அதன் படி பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 300 சந்தேக நபர்களின் பெயர்களை 2020 இல் இலங்கை பட்டியலிட்டது. அதில் பெரும்பான்மையானவை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் பெயர்களாகும். கேள்விக்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் காலத்திலேயே சிலர் ஆதாரமின்றிச் சிறை செய்யப்பட்டிருந்தனர். இப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களோ பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களுக்குத் தமது நிதிச் சொத்துக்களைப் பயன்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதோடு, அவ்வுரிமையானது எப்போது மீண்டும் அளிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறு நிதிப் பயன்பாடு மறுக்கப்பட்டதால் சட்ட ரீதியான உதவியையும் அவர்களால் நாட இயலாதுள்ளது. பட்டியலிடப்பட்டதால் ஏற்பட்ட துர்ப்பெயர் காரணமாக வேலைகளைப் பெறவோ அவற்றைத் தக்கவைத்துக் கொள்ளவோ அவர்கள் சிரமப்படுகின்றனர். அவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதோடு எச்சமயத்திலும் தவறான செயலுக்காக ஆதாரமின்றிக் கைது செய்யப்படும் அச்சுறுத்தலின் கீழ் அவர்கள் வாழ்கிறார்கள்.
மறுவாழ்வுப் பணியக மசோதா
அரசாங்கத்தின் அடக்குமுறையை அனுமதிக்கும் சட்டங்களின் தொடரில் மறுவாழ்வுப் பணியக மசோதாவானது அண்மையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தனி ஒரு அம்சமாக நோக்குவதை விடுத்து நாட்டின் பாதுகாப்புமயமாக்கலின் ஒரு பகுதியாகப் பார்வையிடுவது அவசியம். இம் மசோதாவின் படி “போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறைத் தீவிரவாதக் குழுக்களைச் சார்ந்தோர் மற்றும் வேறு எந்த நபர்கள் குழுவையும்” போதியளவு காரணங்களை முன்வைக்காது கட்டாயத் தடுப்புக்காவலில் வைக்க முடியும்.
இந்த மசோதாவில் “முன்னாள் போராளிகள்” மற்றும் “வேறு எந்த நபர்கள் குழு” ஆகியவை அரசியலமைப்பிற்கு மாறானவை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இருப்பினும் போதைப் பொருளுக்கு அடிமையாயிருப்பதைக் குற்றமாக அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பது, இச்சட்டத்தை எதிர்க்கேள்வி கேட்பதன் தேவையை வலியுறுத்துகிறது. கடுமையான இந்த மசோதாவானது கிட்டத்தட்ட எந்தவொரு நபரும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதை அனுமதிக்கின்றது. மேலும் அவர்கள் மீதான போதப்பொருள், முன்பு ஈடுபட்ட ஆயுதம் கையாளும் நடவடிக்கைகள், வன்முறைத் தீவிரவாதம் ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள் எவ்வாறு நிலை நாட்டப்படும் எனவும் அதில் குறிப்பிடப்படவில்லை. அண்மைக்காலத்தில் நாம் கண்ட ஜனநாயக எழுச்சிகளையும் நடவடிக்கைகளையும் குற்றங்களாக மாற்றுவதற்கான ஒரு களத்தை இந்த மசோதா தாபித்துள்ளது. இப்படிப்பட்ட இந்த மசோதாவானது முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட வேண்டும்.
தற்சமயம் நிலவும் அடக்குமுறை
இன்று பல்வேறு நபர்கள் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றனர். “அரகலய” மக்கள் எழுச்சியில் மத்திய பங்கு வகித்தோர் மீது அரசின் கண்காணிப்புத் திரும்பியுள்ளது. மாணவர்கள் உட்பட அரசாங்கத்தின் வன்முறைக்கெதிராகக் குரலெழுப்பியவர்கள் வீதிகளிலிருந்து அகற்றப்பட்டு தடுப்புக் காவல் நிலையங்களின் அந்தகாரமான முடுக்குகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
நாம் தற்போது ஒரு பொலீஸாரின் அரசினை எதிர்நோக்குகின்றோம். எமது குரல்களை நாம் மீளப் பெறுவதோடு, அதிருப்தி வெளிப்பாடு, எதிர்ப்புகள், மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கெதிரான சட்டங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக எழ வேண்டும். ஆகவே இங்கு அத்தியாவசியமான பணியாக இருப்பது சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஜனநாயகத்துக்கான எமது களத்தை மீளப்பெறுவதாகும். இலங்கையின் அனைத்து மக்களினது நலனைக் கருத்தில் கொண்டு இவ்வரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு மக்களின் ஈடுபாடும், கலந்துரையாடல்களும், போராட்டங்களும், வாக்கெடுப்புக்களும் இன்றியமையாதவையாகின்றன.
கையொப்பமிடுவோர்
Signed:
1. Ranil Abayasekara, formerly University of Peradeniya
2. Udari Abeyasinghe, University of Peradeniya
3. Asha L. Abeyasekera, formerly University of Colombo
4. M.M. Alikhan, University of Peradeniya
5. Liyanage Amarakeerthi, University of Peradeniya
6. Fazeeha Azmi, M. I., University of Peradeniya
7. Crystal Baines. formerly, University of Colombo
8. Navaratne Banda Formerly University of Peradeniya
9. Visakesa Chandrasekaram, University of Colombo
10. Erandika de Silva, University of Jaffna
11. Nadeesh De Silva, the Open University of Sri Lanka
12. Nirmal Dewasiri, University of Colombo
13. Kanchuka Dharmasiri, University of Peradeniya
14. Priyan Dias, Emeritus Professor, University of Moratuwa
15. Avanka Fernando, University of Colombo
16. Priyantha Fonseka, University of Peradeniya
17. Savitri Goonesekere, Emeritus Professor of Law, University of Colombo
18. Camena Guneratne, Open University of Sri Lanka
19. Dileni Gunewardena, University of Peradeniya
20. Farzana Haniffa, University of Colombo
21. Shyamani Hettiarachchi, University of Kelaniya
22. Gayathri Hewagama, Visiting Lecturer, University of Peradeniya
23. Charudaththe B. Illangasinghe, University of the Visual and Performing Arts
24. Prabhath Jayasinghe, University of Colombo
25. Theshani Jayasooriya, University of Peradeniya
26. M. W. A. P. Jayatilaka, Retired, University of Peradeniya
27. Barana Jayawardana, University of Peradeniya
28. Pavithra Jayawardena, University of Colombo
29. Ahilan Kadirgamar, University of Jaffna
30. Anushka Kahandagamage, formerly University of Colombo
31. Pavithra Kailasapathy, University of Colombo
32. Maduranga Kalugampitiya, University of Peradeniya
33. A. K. Karunarathne, University of Peradeniya
34. Madara Karunarathne, University of Peradeniya
35. Chulani Kodikara, Visiting Lecturer, Faculty of Graduate Studies, University of Colombo
36. Pradeepa Korale Gedara, University of Peradeniya
37. Savitri Nimal Kumar, University of Peradeniya
38. Ramya Kumar, University of Jaffna
39. Shamala Kumar, University of Peradeniya
40. Vijaya Kumar, Emeritus Professor, University of Peradeniya
41. Amal Kumarage, University of Moratuwa
42. Aminda Lakmal, University of Sri Jayewardenepura
43. Rohan Laksiri, University of Ruhuna
44. Abdul Haq Lareena, Sabaragamuwa University
45. Hasini Lecamwasam, University of Peradeniya
46. Kamala Liyanage, Professor Emerita, University of Peradeniya
47. Nethmie Liyanage, University of Peradeniya
48. Sachini Marasinghe, University of Peradeniya
49. Tharinda Mallawaarachchi, University of Colombo
50. Sudesh Mantillake, University of Peradeniya
51. Prabha Manuratne, University of Kelaniya
52. Mahim Mendis, Open University of Sri Lanka
53. Rumala Morel, University of Peradeniya
54. Sitralega Maunaguru, retired formerly Eastern University of Sri Lanka
55. Kethakie Nagahawatte, University of Colombo
56. Sabreena Niles, University of Kelaniya
57. M. A. Nuhman, formerly University of Jaffna
58. Gananath Obeyesekere, formerly University of Peradeniya
59. Ranjini Obeyesekere, formerly University of Peradeniya
60. Arjuna Parakrama, University of Peradeniya
61. Sasinindu Patabendige, University of Jaffna
62. Pradeep Peiris, University of Colombo
63. Kaushalya Perera, University of Colombo
64. Nicola Perera, University of Colombo
65. Ramindu Perera, The Open University of Sri Lanka
66. Ruhanie Perera, University of Colombo
67. Sampath Rajapaksa, University of Kelaniya
68. Ramesh Ramasamy, University of Peradeniya
69. Harshana Rambukwella, The Open University of Sri Lanka
70. Rajitha Ranasinghe, University of Peradeniya
71. Rupika Subashini Rajakaruna, University of Peradeniya
72. Aruni Samarakoon, University of Ruhuna
73. Athula Siri Samarakoon, The Open University of Sri Lanka
74. Dinesha Samararatne, University of Colombo
75. Unnathi Samaraweera, University of Colombo
76. T. Sanathanan, University of Jaffna
77. Samitha Senanayake, formerly University of Peradeniya
78. Kalana Senaratne, University of Peradeniya
79. Anusha Sivalingam, University of Colombo
80. H. Sriyananda, Emeritus Professor, the Open University of Sri Lanka
81. Sivamohan Sumathy, University of Peradeniya
82. Hiniduma Sunil Senavi, University of Sabaragamuwa
83. Esther Surenthiraraj, University of Colombo
84. V. Thevanesam, Emeritus Professor, University of Peradeniya
85. Dayapala Thiranagama, formerly University of Kelaniya
86. Mahendran Thiruvarangan, University of Jaffna
87. Deepika Udagama, University of Peradeniya
88. Ramila Usoof, University of Peradeniya
89. Jayadeva Uyangoda, Professor Emeritus in Political Science, University of Colombo
90. Vivimarie Vanderpoorten, Open University of Sri Lanka
91. Ruvan Weerasinghe, University of Colombo
92. Nira Wickramasinghe, formerly, University of Colombo
93. Ranjit Wijekoon, formerly University of Peradeniya
94. Dinuka Wijetunga, University of Colombo