NEPF வேண்டாம் என்போம்! இலவசக்கல்வியை ஒழிப்பதை எதிர்ப்போம்!-
பல்கலைக்கழக அமைப்பின் கல்வியியலாளர்கள் வெளியிடும் அறிக்கை

நாம் தற்காலத்தில் நம் நிலவுகைக்கே சவால் விடுக்கக்கூடிய பொருளாதார
நெருக்கடியொன்றுக்குள் இருக்கின்றோம். அதிகரித்து வரும் கடன் சுமைக்கும்
மிகக்குறைவாகவே காணப்படும் பொருளாதார வாய்ப்புகளுக்கு மத்தியில்
நிச்சயமற்ற பொருளாதார எதிர்காலம் மற்றும் அது தொடர்பான அரசியல்
மற்றும் சமூக அழுத்தங்களுக்குள்ளே நாம் தொடர்ந்தும் உழல வேண்டிய
சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அண்மைக்காலங்களில் கல்வித்துறையில்
முன்னெடுக்கப்படும் பாரிய முன்மொழிவுகள் இத்தனை காலமும் எமது நாடு
கல்வித்துறையை ஒரு சமூகப் பண்டமாக நோக்கி வந்த நிலையை மாற்றும்
சூழலை உருவாக்கி அதற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைத்துள்ளமை
பல்கலைக்கழக ஆசிரியர்களான எம்மை கவலைக்கிடமாக்குகின்றது.

இவ்வாறாக முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களுக்கான முயற்சிகள் அரச
பல்கலைக்கழகங்களை வலிதற்றதாக்கவும் மதிப்புக்கேடடையச்செய்வதாகவும்
இருப்பதை நாம் விசனத்துடன் இங்கே பதிவிடுகின்றோம். அரச
பல்கலைக்கழகங்களுக்கான நிதியொதுக்க்கீடுகள் பாரியளவில்
குறைக்கப்பட்டுள்ள அதேவேளை அரசாங்கமானது எல்லா வகையான
போராட்டங்களையும் ஒடுக்கி வருகின்றது. போராட்டங்களில் ஈடுபடும்
மாணவர்கள் வரிப்பணத்தை
வீணாக்குவதாகக் கருதும் புகைப்படங்கள் ஊடகம் எங்கும் பரப்பப்படுகின்றன.
அரச பல்கலைக்கழகங்கள் தொடர்ந்தும் ‘வேலை செய்ய இயலாத’
பட்டதாரிகளை உருவாக்குவதாக உயர் மட்ட அரசியல்வாதிகள் தொடர்ந்தும்
குற்றஞ்சாட்டும் அதேவேளை இவர்கள் அவ்வாறான மாணவர்களுக்கு
குறைவான வேலைவாய்ப்புகளே காணப்படுவதை கண்டுகொள்ளவில்லை.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த முன்மொழிவுகளை
ஒத்த சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட்டு உயர்கல்வித்துறை பாரிய
நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் ஐக்கிய ராச்சியம் மற்றும் ஐக்கிய
அமெரிக்க அரசுகள் போன்ற நாடுகளின் மூலம் பெற்ற அத்தாட்சிகள்
தீர்மானமாக இருக்க இவ்வாறான கருத்தாடல்கள் பொதுமக்களின் சில தரப்புகளை இச்சீர்திருத்த முன்மொழிவுகளின் பால் நாட்டங்கொள்ளச்
செய்வதோடு இதுவொன்றே ஒரே வழியென்று நம்பச்செய்கின்றன.

மிக சமீபத்தில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக்
கொள்கைக்கான சட்டகம் (NEPF) என்ற முன்மொழிவானது கூடிய விரைவில்
ஆரம்ப குழந்தைப் பருவ கல்வி, பொதுக் கல்வி (உதாரணமாக, ஆரம்ப
மற்றும் இரண்டாம்நிலைப் பாடசாலைக் கல்வி) மற்றும் மூன்றாம் நிலைக்
கல்வி ஆகியவை குறித்தான சீர்திருத்தங்களைத் தாங்கி பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படவுள்ளது. NEPFஆனது எவ்வித ஆலோசனை
செயன்முறைகளுக்கும் உட்படுத்தப்படவில்லை என்பதோடு வெறுமனே
கருத்துகளுக்கான திறந்த அழைப்பு மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளது. இதன்
முன்மொழிவுகள் கல்வி அமைப்பின் இரு முக்கிய துறைகளை நோக்கி
தாக்குதல் தொடுக்கும் வகையில் உள்ளது: பொதுக்கல்வி (உதாரணமாக,
பாலர் மற்றும் இடைநிலைக்கல்வி) மற்றும் மூன்றாம்நிலைக் கல்வி
ஆகியனவே அவையாகும். இம்முன்மொழிவுகள் எமது மக்கள் பிரியத்தோடு
கைக்கொண்டு வரும் இலவசக்கல்விக் கொள்கை மீது முட்டுக்கட்டைகளை
போடுகின்றன. பாடசாலைக் கல்வி மீது மேற்கொள்ளப்பட்டுள
முன்மொழிவுகள் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற போதும் இந்த
அறிக்கை, மூன்றாம் நிலைக்கல்வியின் மீது இம்மொன்மொழிவுகள்
ஏற்படுத்தும் பாதிப்புகள் சிலவற்றை சுட்டிக்காட்டுகின்றது.

கட்டமைப்பு மற்றும் ஆளுகை
தேசிய உயர்கல்வி ஆணையகம் (NHEC) எனப்படும் புதிய கட்டமைப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (UGC) மாற்றீடாக மாற
இருக்கின்றது. NHEC என்ற ஒற்றை அதிகாரத்தின் கீழ் அரச
பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி அமைப்புகள்/
பட்டமளிக்கும் அமைப்புகள் இரண்டுமே கொண்டுவரப்படவுள்ளதோடு
இக்கட்டமைப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அதிக இடம் காணப்படும்
நிலை இருக்கின்றது. NPEFல் பொதுக்கல்விக்கான அரச ஆதரவை விருத்தி
செய்தல் குறித்த எவ்வித ஈடுபாடுகளுக்கான எவ்வித உறுதிப்பாடும் காணப்படவில்லை. ஆனால் NPEF தெளிவாக குறிப்பிடுவதன் படி ஏற்கனவே
அருமையாக காணப்படும் பொது வளங்களை ஆதாயத்துக்காக இயங்கும்
தனியார் உயர்க்லவி நிறுவனங்களை நோக்கி திசைதிருப்புவதன் மூலம்
தனியார் துறைக்கான ஆதரவை வழங்குவதற்கான இயங்கமைவுகள்
முன்மொழியப்பட்டிருக்கின்றன. உண்மையில், இக்கொள்கை சட்டகத்தின்
உந்துகையாக “பொது- தனியார் பங்குதாரர்கள் உட்பட அரசு அல்லாத
பங்குதாரர்களின் பங்களிப்பை” (.28) வசதிசெய்வதன் மூலம்
உயர்கல்வித்துறையில் தனியார் துறையின் பங்களிப்பை
விரிவுபடுத்துவதாகும்.

மூன்றாம்நிலைக் கல்விக்கான நிதியீடு
மூன்றாம்நிலைக் கல்வியை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை
மிகக்குறைவென புலம்பும் அரசாங்கம், (NEPF குறிப்பிடும்
பல்கலைக்கழகங்களுக்கான‌ அனுமதி பெறப்படுவோர் 8.9% வீதமானோர்
என்ற தரவ்வு தவறாக வழிநடத்துவதாக உள்ளது) 2022ம் ஆண்டின் உலக
வங்கி தரவுகளின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.2% வீதம்,
அதாவது உலகிலேயே கல்வித்துறைக்காக GDPயில் மிகக்குறைவாக ஒதுக்கீடு
செய்யும் நாடுகளில் இரண்டாவதாக இருக்கின்றது. அரசாங்கமானது
“ஏற்கனவே காணப்படும் வளங்களை மறுபாவனைக்கு உட்படுத்தல், மேலதிக
வளங்களை அரச‍- தனியார் கூட்டண்மை நிறுவனங்கள் மற்றும் தனியார்
அமைப்புகளின் மூலம் நிதிப்பயனீடு செய்வதன் மூலம்” அன்றி கல்விக்கான
முதலீட்டை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை (p.4).

பல்கலைக்கழகங்களுக்கான நிதியீடு குறித்து NEPFஆனது முழுமையான ஒரு
தேர்வாய்வை முன்மொழிவு செய்கின்றது. அரச பல்கலைக்கழகங்களுக்கான
நிதியீட்டம் மூன்று வழிகளுக்கூடாக நடைபெறும்: மானியங்கள் ஊடான
அரசாங்கத்தின் நிதியீட்டம், கடன்கள் மற்றும் சொந்த செலவுகள் ஊடான
மாணவர்களின் நிதியீட்டம் மற்றும் பல்கலைக்கழகங்களின் சொந்த
நிதியீட்டம் என்பனவே அவையாகும். மேலும் வருடாந்த அரசாங்க பாதீட்டில்
உள்ளபடி உறுதிப்படுத்தப்பட்ட வரி உருப்படி அடிப்படையிலான பாதீட்டிலிருந்து மாணவர் சேர்க்கை அடிப்படையிலான வரவு
செலவுத்திட்டத்துக்கு நிதியீட்ட நிகழ்ச்சிநிரல் மாற்றம் பெறப்போகின்றது.
அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இரண்டுமே தமது இருப்புக்கும்
நிதியீட்டத்துக்கும் போட்டிக்குள்ளாகும் சூழல் எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்விக்கான அணுகல்
இலங்கையில் பொதுக்கல்வியைப் போலவே பொது மூன்றாம்நிலைக்
கல்வியும் வரலாற்று ரீதியாக ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும் சிலரை
வறுமையிலிருந்து தப்பவும் உதவியிருக்கின்றது. மத்தியதர வர்க்கத்தினரில்
பலர் இதனால் பாரிய நன்மைகளை எய்திருக்கின்றனர். சில
கற்கைநெறிகளில் மாவட்ட ரீதியான ஒதுக்கீடுகள் காணப்படல் மற்றும்
பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்களின் சமூக சூழ்நிலைகளை
அடையாளம் காணுதல் போன்ற அம்சங்களால் பால்மை, வகுப்பு, சாதி,
வலயம் மற்றும் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைக்கான ஏனைய
குறிகாட்டிகளை விடுத்து மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கான
அணுகலை இலகுவாக்கி இருக்கின்றது. இவ்வாறான இயங்கமைவுகள்
ஊடாக‌ சமூகநீதியை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளில்
பல்கலைக்கழகங்கள் தவிர்க்க முடியாத பாகத்தை வகிக்கின்றன. மேலும்
மிகக்குறைந்த செலவில் தொழில்சார் மருத்துவக்கல்வியை
பல்கலைக்கழகங்கள் வழங்குவதன் மூலம் நாட்டில் இலவச மருத்துவத்தை
பாதுகாக்கும் பணியிலும் அவை ஈடுபடுகின்றன.

முன்மொழியப்பட்டுள்ள புதிய ஆளுகைக் கட்டமைப்பு பல்கலைக்கழகங்களை
மாணவர் அனுமதிக்கான விதிகளை தாமே உருவாக்க அனுமதிப்பதால்
கருதப்படுவது, அதிக நிதிகளை பெறும் பொருட்டு பல்கலைக்கழகங்கள்
அந்தந்த நேரங்களில் ஜனரஞ்சக‌மாக இருக்கும் கற்கைநெறிகள்
வழங்கப்படும் கல்விசார் கற்கைநெறிகளின் செல்நெறியை தீர்மானிக்கும்
என்பதாகும். தொழில்சந்தையில் அதிக வாய்ப்புகளை தக்கவைக்கக் கூடிய
நகர்ப்புற மற்றும் உயர்மத்தியதர வர்க்க சமூக மற்றும் வகுப்புப்
பின்புலத்திலிருந்து வரும் மாணவர்களை பல்கலைக்கழகங்கள் ஈர்க்க விரும்புவதால் விருப்புக்குரிய மாணவர்களின் மாதிரியும் மாற்றமடையும்
நிலை காணப்படுகின்றது. “வெளிநாட்டு மாணவர்களை” வசீகரிக்கும்
பொருட்டு வீசா செயன்முறைகளை ஒழுங்குபடுத்தி வசதிசெய்து கொடுத்து
பட்டமளிப்பின் பின்னர் இலங்கையில் தொழில்வாய்ப்புகளை
மேற்கொள்வதற்காக ஆவன செய்யும் NHECயின் திட்டங்களால் மேற்கூறிய
சிக்கல் மேலும் வலியுறுத்தப்பட வேண்டி இருக்கின்றது (p.26).

விஷேட தேவைகளை உடைய மாணவர்களை விடுத்து NEPFஆனது
வேறெந்த சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கான தீர்வாக எந்த இயங்கமைவுகளையும்
பிரேரிக்கவில்லை. பல்கலைக்கழகங்களுக்கான நிதியீட்டப் பங்களிப்பு
மாணவர்களுடையதாக மாறும் போது காலப்போக்கில் அரசாங்கத்தின்
பங்களிப்பு குறைந்துகொண்டே செல்லும். முடிவில், எல்லைமீறும்
பல்கலைக்கழக செலவுகள் பணக்காரர்களுக்கான அணுகலை மட்டுமே
அதிகப்படுத்தும். இந்நிலை ஏற்கனவே காணபப்டும் சமூக ஏற்றத்தாழ்வுகளை
மேலும் விரிவாக்கும்.

மூன்றாம்நிலைக் கல்விக்கான மாற்றங்களின் விளைவுகள் பாரிய சிக்கலாக
மாறப்போகின்றன. நமக்குத் தெரிந்த இலவசக்கல்வியானது இதனூடாக
காணமாலாக்கப்படப் போகின்றது. நீதமான ஒரு கல்வி அமைப்பில்
குறைபாடுகள் நிகழ்வது மக்களை மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழே
தள்ளுவதோடு மிகவுமே குறைவாக காணப்படும் அவர்களின் சமூக
நகர்வுக்கான வடிகால்களில் ஒன்றை அவர்களுக்கு மறுப்பதான செயலாக
மாறும். கல்விக்கான ஏனைய வாய்ப்புகளை கைவரப்பெற்ற நகர்ப்புறவாசிகள்
மற்றும் உயர்மத்தியதர வர்க்க மக்களுக்கு NEPF பாதிப்பாக அமையாது.
இலவசக்கல்வியை படிப்படியாக ஒழித்துக்கட்டும் செயற்பாடுகள் பேரச்சம்
தரக்கூடிய அநித்தியமான காலப்பகுதிக்குள் எம்மை இட்டுச்செல்லும்
என்பதை நாட்டில் சமூக ஒருங்கிணைவை நாடும் மக்கள் விளங்கிக்கொள்ள
வேண்டும்.

NEPFஐ நாங்கள் திட்டமாக எதிர்க்கவேண்டி இருப்பதோடு கல்வித்துறையில்
முன்மொழியப்படும் அல்லது மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் பரந்தளவிலான முறையான கூட்டுக்கலந்தாய்வுக்கான‌ இயங்கமைவுடன்
செயற்படுவதற்காக குரல்கொடுப்போம்.

SIGNED BY

  1. A. K. David, formerly Univ. of Peradeniya
  2. A. M. Navaratna Bandara, formerly Univ. of Peradeniya
  3. Ahilan Kadirgamar, Univ. of Jaffna
  4. Anurudda Karunarathna, Univ. of Peradeniya
  5. Anuruddha Pradeep Karnasuriya, Univ. of Sri Jayewardenepura
  6. Anushka Kahandagama, formerly Univ. of Colombo
  7. Arjuna Parakrama, Emeritus Professor, Univ. of Peradeniya
  8. Aruni Samarakoon, Univ. of Ruhuna
  9. Athulasiri Samarakoon, Open University of Sri Lanka
  10. Asha L. Abeyasekera, formerly Univ. of Colombo
  11. Avanka Fernando, Univ. of Colombo
  12. Ayomi I. Irugalbandara, Open University of Sri Lanka
  13. B. D. R. Prasantha, Univ. of Peradeniya
  14. B. M. H. S. K. Banneheka, Univ. of Peradeniya
  15. Barana Jayawardana, Univ. of Peradeniya
  16. Bhathiya Rathnayake, Univ. of Peradeniya
  17. Chamathka Devasirie Kariyawasam, Univ. of Colombo
  18. Camena Guneratne, Open University of Sri Lanka
  19. Chamika A. Silva, Univ. of Peradeniya
  20. Chammika Mallawaarachchi, Univ. of Visual and Performing Arts
  21. Charudaththe B. Illangasinghe, Univ. of Visual & Performing Arts
  22. Chathurika Munasinghe, Univ. of Peradeniya
  23. Chinthaka Chandrakumara, Univ. of Colombo
  24. Chrishantha Abeysena, Univ of Kelaniya
  25. Crystal Baines, formerly Univ. of Colombo
  26. Dayapala Thiranagama, formerly Univ. of Kelaniya
  27. Dewmini Amunugama, Univ. of Peradeniya
  28. Dhamma Dissanayake, Univ.of Colombo
  29. Dhanuka Bandara, Univ. of Peradeniya
  30. Dileepa Witharana, Open University of Sri Lanka
  31. Dilrukshi Abeysinghe, Univ.of Colombo
  32. Dilmi Tharaka, Univ. of Peradeniya
  33. Dimagi Pitawala, formerly Univ. of Peradeniya
  34. Dinuka Wijetunga, Univ.of Colombo
  35. Erandika de Silva, formerly Univ. of Jaffna
  36. A. Janarth, Eastern University, Sri Lanka
  37. F. M. Nawastheen, Open University of Sri Lanka
  38. Farzana Haniffa, Univ. of Colombo
  39. Fazeeha Azmi, Univ. of Peradeniya
  40. G. D. U. P. K. Gamage, Univ. of Peradeniya
  1. Gameela Samarasinghe, Univ. of Colombo
  2. Gananath Obeyesekere, formerly Univ. of Peradeniya
  3. Ganganee Chandima Samaraweera, Univ. of Ruhuna
  4. Gayani Nawarathna, Univ. of Peradeniya
  5. Gayatri Wijekoon, Univ. of Colombo.
  6. Geethika Dharmasinghe, Univ. of Colombo
  7. Gihan de Chickera, formerly Univ. of Colombo
  8. H. Sriyananda, Emeritus Professor, Open University of Sri Lanka
  9. Harshana Rambukwella, formerly Open University of Sri Lanka
  10. Hasini Lecamwasam, Univ. of Peradeniya
  11. Hasintha Wijesekara, Sabaragamuwa Univ. of Sri Lanka 
  12. Hasitha Pathirana, Univ. of Kelaniya
  13. Hiniduma Sunil Senevi, Sabaragamuwa Univ. of Sri Lanka
  14. Ishafa Illiyas, Univ. of Peradeniya
  15. J. Prince Jeyadevan, Univ. of Jaffna
  16. Jayadeva Uyangoda, Emeritus Professor, Univ. of Colombo.
  17. Jennifer Edama, Univ. of Peradeniya
  18. Jinasena Hewage, formerly Univ. of Ruhuna
  19. K. K. G. Randula, Univ. of Colombo 
  20. K. M. S. Wimalasiri, Univ. of Peradeniya
  21. Kalpa Rajapaksha, Univ. of Peradeniya
  22. Kamal Wasala, Univ. of Moratuwa
  23. Kamani Sylva, Univ. of Peradeniya
  24. Kanchuka Dharmasiri, Univ. of Peradeniya
  25. Kasun Gajasinghe, formerly Univ. of Peradeniya
  26. Kaushalya Ariyarathne, Univ. of Colombo
  27. Kaushalya Perera, Univ. of Colombo
  28. Kethakie Nagahawatte, Univ. of Colombo
  29. Krishantha Fedricks, Univ. of Colombo
  30. Krishmi Apsara, Univ. of Peradeniya
  31. Kumudu Kusum Kumara, formerly Univ. of Colombo
  32. Lahiruka Madhuwanthi, Univ. of Peradeniya
  33. Liyanage Amarakeerthi, Univ. of Peradeniya
  34. M. A. Nuhman, formerly Univ. of Peradeniya
  35. M. M. Alikhan, Univ. of Peradeniya
  36. Madhara Karunarathne, Univ. of Peradeniya
  37. Madhubhashini Disanayaka Ratnayake, Univ. of Sri Jayewardenepura
  38. Maduranga Kalugampitiya, Univ. of Peradeniya
  39. Madushani Randeniya, Univ. of Peradeniya
  40. Mahendran Thiruvarangan, Univ. of Jaffna
  41. Mahim Mendis, Open University of Sri Lanka
  42. Manoj Alawathukotuwa, Univ. of Peradeniya
  43. Ven. Muthukeliyawe Indarathana, Univ. of Peradeniya
  44. N. Gafoordeen, Univ.of Colombo
  1. Nadeesh de Silva, Open University. of Sri Lanka
  2. Neavis Morais, Open University. of Sri Lanka.
  3. N. G. A. Karunathilaka, Univ. of Kelaniya
  4. Nicola Perera, Univ. of Colombo
  5. Nira Wickramasinghe, formerly Univ. of Colombo
  6. Nirmal Ranjith Dewasiri, Univ. of Colombo
  7. Nishani Jayaweera, Univ. of Peradeniya
  8. P. Iyngaran, Univ. of Jaffna
  9. Paba Suraweera, Univ. of Peradeniya
  10. Pamuditha Herath, formerly Univ. of Peradeniya
  11. Pavithra Ekanayake, Univ. of Peradeniya
  12. Pavithra Jayawardena, Univ. of Colombo
  13. Prabhath Jayasinghe, Univ. of Colombo
  14. Pradeep Peiris, Univ. of Colombo
  15. Priyantha Fonseka, Univ. of Peradeniya
  16. R. T. Gamalath, Univ. of Peradeniya
  17. R. Angammana, Univ. of Peradeniya
  18. Rajan Hoole, formerly Univ. of Jaffna
  19. Rajitha Ranasinghe, Univ. of Peradeniya
  20. Ramanie Jayatilaka, formerly Univ. of Colombo
  21. Ramesh Ramasamy, Univ. of Peradeniya
  22. Ramila Usoof, Univ. of Peradeniya
  23. Ramya Kumar, Univ. of Jaffna
  24. Ranjini Obeyesekere, formerly Univ. of Peradeniya
  25. Rohan Laksiri, Univ. of Ruhuna
  26. Ruhanie Perera, Univ. of Colombo
  27. Rumala Morel, Univ. of Peradeniya
  28. Rupika Rajakaruna, Univ. of Peradeniya
  29. Ruth Surenthiraraj, Univ. of Colombo
  30. S. Sivasegaram, formerly Univ. of Peradeniya
  31. S. Arivalzahan, Univ. of Jaffna
  32. Sachini Marasinghe, Univ. of Peradeniya
  33. Sahani Situbandara, Univ. of Peradeniya
  34. Samal Vimukthi Hemachandra, Univ. of Colombo
  35. Saman Dharmakeerthi, Univ. of Peradeniya
  36. Saman Pushpakumara, Univ. of Peradeniya
  37. Samudrika Sylva, Univ. of Colombo
  38. Sandaruwan Subasinghe, Univ. of Peradeniya
  39. Sarala Emmanuel, Open University of Sri Lanka
  40. Sarath Witharana, Univ. of Kelaniya
  41. Sasanka Perera, formerly Univ. of Colombo
  42. Sasinindu Patabendige, formerly Univ. of Jaffna
  43. Saumya Liyanage, Univ. of Visual and Performing Arts
  44. Savitri Goonsekere, Emeritus Professor, Univ. of Colombo
  1. Savitri Kumar, Emeritus Professor, Univ. of Peradeniya
  2. Seetha Bandara, Univ. of Kelaniya
  3. Selvaraj Vishvika, Univ. of Peradeniya
  4. Shalini Wijerathna, Univ of Peradeniya
  5. Shamala Kumar, Univ. of Peradeniya
  6. Shanil Wijesinha, Univ. of Colombo
  7. Shashikala Assella, Univ. of Kelaniya
  8. Shirley L. Wijesinghe, Univ. of Kelaniya
  9. Shyamani Hettiarachchi, Univ. of Kelaniya
  10. Siri Hettige, Emeritus Professor, Univ. of Colombo
  11. Sirima Gajameragedara, formerly Rajarata Univ. of Sri Lanka
  12. Sithumini Rathnamalala, Univ. of Moratuwa
  13. Sivamohan Sumathy, Univ. of Peradeniya
  14. Sudesh Mantillake, Univ. of Peradeniya
  15. Supoorna Kulatunga, Univ. of Peradeniya
  16. T. Sanathanan, Univ. of Jaffna
  17. Tasneem Hamead, Univ. of Colombo
  18. Thiru Kandiah, formerly Univ. of Peradeniya
  19. Udari Abeyasinghe, Univ. of Peradeniya
  20. Ven. Uduhawara Ananada, Univ. of Colombo
  21. Unnathi Samaraweera, Univ. of Colombo
  22. Upul Abeyrathne, Univ. of Peradeniya
  23. Uwin Ariyarathna, Univ. of Peradeniya
  24. Varuni Ganepola, formerly Univ. of Colombo
  25. Vasanthi Thevanesam, Emeritus Professor, Univ. of Peradeniya
  26. Vihanga Perera, Univ. of Peradeniya
  27. Vijaya Kumar, Emeritus Professor, Univ. of Peradeniya
  28. Visakesa Chandrasekaram, Univ. of Colombo
  29. Vivimarie Vanderpoorten, Open University of Sri Lanka
  30. Warshi S. Dandeniya, Univ. of Peradeniya
  31. W. D. N. S. M. Tennakoon, Wayamba Univ. of Sri Lanka
  32. Wijith Rohan Fernando, Univ. of Kelaniya.
  33. W. M. M. P. Hulugalla, Univ. of Peradeniya
  34. W. M. T. P. Ariyaratne, Univ. of Peradeniya
  35. W. T. L. S. Fernando, Sabaragamuwa Univ. of Sri Lanka
  36. Yasas Kulasekara, Univ. of Peradeniya
  37. Yushani Alahakoon, Univ.of Peradeniya