ஹாசினி லேகாம்வசம்
சரித டில்ஷானின் தற்கொலை காரணமாக, மீண்டும் ஒருமுறை அரச பல்கலைக்கழகங்கள் பகிடிவதை பற்றிய பிரச்சனை சார்பாக மக்களின் கவனத்தில் வந்துள்ளது. 1998 ம் ஆண்டு 20 ம் இலக்க கல்வி நிறுவனக்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வன்முறை வடிவங்களின் தடை சட்டத்தின் படியும் 1994 ம் ஆண்டு 22 ம் இலக்க துன்புறுத்தல் மற்றும் ஏனைய கொடுமையான, மனிதத்தன்மையற்ற, அல்லது இழிவுபடுத்துகின்ற நடத்தல் அல்லது தண்டனை சட்டத்தின் படியும் எந்த ஒரு பகிடிவதை நடவடிக்கையும் தண்டனைக்குரிய குற்றம் என்பது தற்போது நன்கு அறிந்த ஒரு விடயமே. இருப்பினும் ஷாம்லா குமார் (2021 மார்ச் 30 ம் திகதி வெளியாகிய) ஒரு குப்பி கட்டுரையில் தெளிவாக வாதிட்டதுபோல தற்கொலை அல்லது குறிப்பாக கொடுமையான நடத்துகை போன்ற அதி தீவிர நிகழ்வுகள் பல்கலைக்கலகங்ககளில் வெளியே சமூகத்தில் நிலவும் பரந்துபடட, சூழ்ந்துள்ள கலாச்சாரத்தின் மோசமான அறிகுறிகளேயாகும். பல்கலைக்கழக வெளியில் சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் புதுமுக மாணவர்கள் இடையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில், ஏனையோருக்கு மத்தியில் என எண்ணற்ற வழிகளில் இந்த நோய்நிலைகள் வெளிப்படுகின்றன. முழு சூழ்நிலையை கவனித்ததில் கொள்ளாததும் அதன் காரணமாக பிரச்சனைகளின் தோற்றுவிக்கும் அடிப்படை காரணிகளையும் கவனத்தில்கொள்ளாத குறிப்பிட்ட நிகழ்வுகளை மாத்திரம் அணுகும் முறையானது கட்டாயமாக தோல்வியடையும். பகிடிவதையை தடுக்கவும் நீக்கவும் நோக்கில் பரிந்துரைக்கப்படட சில முறைகளின் உட்ப்பொருள்களை அலசவும் அதில் கல்வியின் பங்கை விரிவாக ஆலோசிப்பதுமே எனது இந்த கட்டுரையின் நோக்கமாகும். பகிடிவத்தைக்கு எதிரான நிலை மற்றும் அரசியலுக்கு எதிரான நிலைக்குமிடையிலான கவனமான வேறுபாடு உள்ளதென நான் இங்கே வாதிக்கிறேன். ஏனெனில் அரசியலுக்கு எதிரான நிலை பகிடிவத்தைக்கு எதிரான நிலைபோல் ஆபத்தானது.
முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகளின் உட்பொருள்கள்
அதிமோசமான பகிடிவத்தைக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில், உயர் கல்வி அமைச்சு அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் தனது கவுன்சிலில் இருந்து ஒருவரை நியமிக்க தீர்மானித்துள்ளது. இவ்வாறு நியமிக்கப்படுபவருக்கு பகிடிவத்தையில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கவும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, பகிடிவதை சார் முறைப்பாடுகள் விடயத்தில் நேரடியாக தலைமை தாங்குவாராக அவர் காணப்படுவார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் தற்போதுள்ள பகிடிவதை முறைப்பாடுகள் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான நபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை எனும் அடிப்படையில் இந்த நகர்வை ஆதரித்துள்ளார். பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரமுள்ள, பகிடிவதை பிரச்சனைக்கு மாத்திரம் உரித்தான ஒரு அலுவலரை நியமிக்கவேண்டிய தேவையுள்ளது என்பதே UGC இனதும் உயர் கல்வி அமைச்சினதும் கருத்தாகவுள்ளது. இதிலிருந்து உடனடியாக எழும் கேள்வி என்னவெனில், ஏற்கனவே அதே நோக்கத்துக்காக நியமிக்கப்பட்டுளோர்க்கு (மார்ஷல்கள் மற்றும் வார்டன் போன்றோர்) ஏன் தேவைப்படும்போது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான அதிகாரத்தை வழங்கமுடியாது என்பதாகும். ஒரு மார்ஷல் அல்லது வார்டனால் முடியாதவகையில் எவ்வாறு இந்த கவுன்சில் அங்கத்தவரால் பகிடிவதையை கையாளமுடியும் என்பது இங்கே தெளிவாக தெரியவில்லை. எனவே அதிகாரம் மையப்படுத்தப்படும் ஒரு சூழலில், அரச பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தை தடுப்பதற்கும் கீழ்மட்ட அதிகாரிகளிடமிருந்து அதிகாரத்தை பறிக்கும் வகையிலும் இந்த நகர்வு அமைவதாக விளங்கிக்கொள்ளலாம்.
கற்பதற்கு உகந்த, பாதுகாப்பான இடங்களாக அரச பல்கலைக்கழகங்கள் இருக்கவேண்டிய நம்பகத்தன்மையை பகிடிவதை பெரியளவுக்கு தடுக்கிறது. சரித டில்ஷான் இறப்பின் பிறகு, பகிடிவத்தையை ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்காமை பற்றி அரச பல்கலைக்கழகங்களை நோக்கிய ஒரு விரோதம் மேலெழுந்துள்ளது. இதற்கு வலுவான காரணமமுள்ளது. இருப்பினும், வளங்கள் தொடர்பான பிரச்சினை பற்றிய கேள்வி அரிதாகவே எழுப்பப்படுகிறது: பகிடிவதை பெற்றுக்கொடுக்கும் உதவிக் கட்டமைப்புக்களை வழங்கமுடியாத நிலையிலுள்ள, அதிக வேலைப்பளுவுடைய கல்வியலாளர்களையே ஊழியர் பற்றாக்குறை நிறைந்த பல்கலைக்கழக வெளி உருவாக்குகிறது. (முக்கியமாக இவர்களால் உணர்வுசார் உதவி வழங்க முடிவதில்லை. அத்தோடு பரீட்சைக்காக மாணவர்கள் திரட்டும் விடைக்களுக்கு பங்களிப்பு செய்தல் போன்ற விடயங்களில் குப்பி கிளாஸ் குழுக்கள் பங்களிப்பு செய்யும்போல் ஆசிரியர்களால் முடிவதில்லை). பகிடிவதையை முகங்கொடுக்கும்போது மாணவர்கள் தமது மனோவியல் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கவதற்குரிய தகுதிபெற்ற பணிநிலையாளர்கள் போதிய எண்ணிக்கைகளில் இல்லை. இருப்பினும், பகிடிவதை போன்ற தவறான நடத்தைகள் அரச பல்கலைக்கழகங்களை தொடர்ந்துநடத்த முடியாதநிலையுள்ளதாக கூறும் சொல்லாடல்களை வலுப்படுத்துவதும்போது, அரசபல்கலைக்கழகங்களுக்கான நிதி வெட்டப்படுகிறது.
கல்வியினூடாக திட்டவட்டமாக பதிலளித்தல்
பரந்த கல்வியல் பரப்பிலுள்ள அபாயங்களை ஒப்புக்கொள்ளுவதன் அர்த்தம், அரச பல்கலைக்கழகத்திலுள்ள நாம் இந்த தீய உலகத்துக்கு எதிராக எமது கதவுகளை பூட்டுவதல்ல. அவ்வாறு செய்வது பகிடிவதையை அடைகாக்கும் நச்சு கலாச்சாரம் உள்ளடங்கலாக உள்ளேயேயுள்ள தீமைகளை நிலைநிறுத்துவதாகும். அதற்க்கு பதிலாக நாம் உள்ளுன்னுணர்வுக்கு எதிரானதை செய்ய வேண்டும். அதாவது அரச பல்கலைக்கழகங்களின் நோய்நிலைகளை ஆக்கபூர்வமாக கையாண்டு தீர்க்கப்படும் நோக்கில் அரச பல்கலைக்கலகங்கள் விமர்சன கூர்ந்தாய்வு செய்வதற்கு பெரிய அளவில் திறந்துவிடப்படவேண்டும். இதனை செய்யக்கூடிய ஒரு வழி என்னவெனில் முறைசார் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருதலாகும். உண்மையில் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நாம் கட்டாயமாக இதனை செய்ய வேண்டிய வழியாகும்.
தொழில்ச்சந்தையில் ஒரு அனுகூலத்தை பெற்றுத்தரும் ஒரு தகமையை வழங்குவதாக மாத்திரம் கல்வி காணப்படும்போது, அதனை வெறுமனே ஒரு பரீட்ச்சைகளின் தொடராக கீழ்ப்படுத்தி, கலந்துரையாடல் மற்றும் விவாதத்தை முக்கியமற்ற ஒன்றாக தள்ளுபடி செய்வது விளங்கிக்கொள்ள முடிகிறது. இந்த தகைமையை பெற மாணவர் வெறுமனே பரீட்ச்சைகளை முடித்தால் போதும். இந்த நிலையால் குறிப்புக்களை பெறுவதற்கு அல்லது வேறு வழிகளால் (உதாரணமாக ஒன்லைன் மூலமாக) பாடத்தின் சாரத்தை பெறுவதற்கான நிலை உருவாகிறது. இது தேட்டத்தெளிவாகவே உள்ள ஒரு பிரச்சனைக்குரிய விடயமாகும். ஏனெனில் அரையாண்டு காலமாக இடம்பெறும் உரையாடல்களிருந்து உருவாகும் அறிவுப் புலக்காட்சிகள் இதனால் இழக்கப்படுகிறன்றன. மாணவர்களின் உலகப்பார்வைகள் சவாலுக்குட்படுத்தப்படாமலும் சிலவேளை மாற்றத்துக்குட்படாமலும் விடப்படுகின்றன. “கவனிக்கப்படாத” அவ்வகையான உலகப்பார்வை பகிடிவதைக்கும் ஏற்கனவே உள்ள அதிகார படிநிலைகளை கேள்விக்குட்படுத்தாதாத அது போன்ற வேறு விடயங்களுக்கும் தன்னைத்தானே வழங்குவதோடு, அவற்றை வன்முறையிலான வழிகளில் மீளுருவாக்கவும் நினைக்கிறது. உண்மைதான். மாற்றத்துக்கான கல்வி காணப்படாத, அதே நேரம் பகிடிவத்தையுமற்ற பல தனியார் பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புக்களும் உள்ளனவே. இருப்பினும் இந்த நிலையே ஒரு அரசியலில் ஈடுபாடற்ற கலாச்சாரத்திலிருந்து தோன்றுவதோடு அந்த கலாச்சாரத்தையே அது மீள்வலுப்படுத்துகிறது. இந்த கேள்வியை நான் கீழே கையாள்கிறேன்.
எனவே கல்வி பற்றிய கருத்துருவாக்கம் மற்றும் அது எவ்வாறு இடம்பெறுகிறது என்பதில் மாற்றம் தேவைப்படுகிறது. இதனை கொண்டுவர நாம் STEM உள்ளடங்கலாக அனைத்து பாடங்களுக்கும் அடிப்படை தத்துவம் சார் விடயங்களை அறிமுகப்படுத்துவதை கருத்தில் கொள்ளலாம். இது, எமக்கு இவ் உலகை பற்றி என்ன தெரியும் (இருப்பியல்), அதனை எப்படி எமக்கு தெரியவருகிறது (அறிவாராட்சியியல்) என அறிவின் உரையாடல்சார் அகப்பொருள் குணாம்சத்தை பற்றியும் தொட்டுச்செல்வதாக அமையும். அவ்வாறான ஒரு நகர்வு அறிவானது மற்றய பல விடயங்களை போல ஒரு கூட்டு முயற்சி எனவும், அதனை உருவாக்கும் மற்றும் அதனால் உருவாக்கப்படும் சமூகவெளியில் அது ஆழமாக பதிந்தது எனவும் படிப்படியாக அனைவரும் விளங்கிக்கொள்வதற்கான அடித்தளத்தை அமைக்கும். அதே நேரம் தூய்மையான மாற்றமடையாத மையம் என கண்டுபிடிக்கப்படவேண்டியதாக அறிவு இல்லை எனவும், மாறாக நாம் வாழும் உலகை விளங்கிக்கொள்ள எடுக்கும் ஒரு இணைந்து உருவாக்கும் ஒரு செயல்முறை எனவும் விளங்கிக்கொள்ளப்படும். அவ்வாறான அரசியலில் காட்டப்படும்போது, அனைவரினதும் முன்னேற்றத்தை யதார்த்தமாக்குவதை நோக்காகக்கொள்ளக்கூடியதும் கொள்ளப்படவேண்டியதுமான சமூக முயற்சியாக அறிவானது விளங்கிக்கொள்ளப்படும். இவ்வாறான கல்வியை பெறுபவர்களாலேயே பகிடிவதை இயங்கும் தர்க்கங்கள் மற்றும் அது மீளுருவாக்கும் ஆதிக்கம் கேள்விக்குட்படுத்தப்பட்டு பகிடிவத்தைக்கு முடுவுகட்டவும் அதேவேளை, பகிடிவதை தீர்க்க பாடுவதாக சொல்லப்படும் பிரச்சனைகளை தீர்க்க நினைக்கவும் முடியும்.
தன்னுடைய சொந்தப்பாணியில் பகிடிவதை (வன்முறையை பயன்படுத்தி) சமூகம் சார் கருத்துக்களை நிலைநிறுத்துகிறது. இந்த விடயத்தில் தான் நாம் பகிடிவதையை நேரடியாக சவாலுக்குட்படுத்த வேண்டும். அதாவது, முறைசார் கல்வி வழியாக பகிடிவதை உருவாக்கும் ஆணாதிக்க, எதிர்பாலின நியம, சகிப்புத்தன்மையற்ற வன்முறையான சமூகத்தின் வடிவத்தை விமர்சிக்க வேண்டும். தொடர்ச்சியான விமர்சன உரையாடல்கள், அரசியல் ஈடுபாடின்மை மற்றும் வன்முறையான சமூகத்துவவாதம் எனும் இரண்டு பொறிகளிலும் அகப்படாத முறையாகவுள்ளது.
அண்மைக்காலமாக, தாம் வேலைசெய்யும் பல தொழில்களால் நசுக்கப்படுவதன் காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அரிதாக சமூகமளிப்பது வழக்கமாக வந்துள்ளது. இதுவும் அதிகரித்துவரும் அரசியலை கணக்கெடுக்காத நிலையோடு தொடர்புபட்ட விடயமாகும். பலரை பொறுத்தவரையில், அரசியலானது அதிகபடசமாக ஒரு தொல்லையாகவும், ஆக இழிவானதாக விலகியிருக்க வேண்டிய ஆபத்தாகவுமுள்ளது. அதாவது கொஞ்சம் பணம் சம்பாதிக்க பயன்படுத்தக்கூடிய நேரத்தை எடுக்கும் விடயமாக அல்லது நீண்டகாலத்தில் பெரியளவில் பாதகமாக அமையக்கூடியதான அரச அதிகாரத்துக்கெதிரான எதிர்நிலையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏற்படும் பகிடிவதை சார் வன்முறை நிகழ்வுகள் வீழ்ச்சி எதிர்மறை விளைவுகளைக் கொண்ட ஒரு நல்ல வெளியீடாகவுள்ளது. அதாவது, தமது நலன் ஏனையோரின் நலனோடு அடிப்படையிலேயே தொடர்புபட்டது என்பதை மதிப்பளிக்காத, மொத்த சமூகத்தின் நிலையைப்பற்றி அக்கறை கொள்ளாத ஒரு மாணவர் தலைமுறையையே இது உருவாக்கும். இந்த வழக்கத்தை எதிர்ப்பது பகிடிவதையை எதிர்ப்பதுபோல் முக்கியமான விடயமாகும். அரசியல் ஈடுபாட்டுக்கும் பகிடிவதை எதிர்ப்பும் சந்திக்கும் குறுகிய இடத்தில் தொடர்ந்து அயராது உழைத்தல் இதற்க்கு தேவை. இந்த சிறிய இடத்திலேதான் அதிகார படிநிலைகலற்றதும் அப்படிநிலைகள் இயக்கவைக்கும் வன்முறைகள் இல்லாதுமான சமுதாயங்களை கட்டியெழுப்புவது சாத்தியப்படுத்தும்.
பகிடிவதையை எமது பரந்த சமூகத்தில் வைத்து அதன் வரலாற்று ரீதியான நிலையை நான் இங்கு குறிப்பிடவில்லை. இந்த விடயத்தை குப்பி குழுமத்தில் உள்ளவர்களும் (மேற்குறிப்பிடட ஷாமல குமாரின் கட்டுரையை வாசிக்கவும்) ஏனையோரும் (மே 14, 2025 அன்று Ground Views தளத்தில் சஞ்சயன் ராஜசிங்கத்தின் இடையீட்டை பார்க்கவும்) குறிப்பிடத்தக்க டேபிட்னெஸ் உடன் எழுதியுள்ளனர். மாறாக, இந்தக்கட்டுரையில் எனது குறிக்கோள் என்னவெனில், பகிடிவதையை உண்மையாகவே நிரந்தரமாக இல்லாமல்செய்ய கல்வியால் என்ன செய்யக்கூடும், செய்யவேண்டும் என்பது பற்றியதாகும்.
முடிவு
அதனுடைய பிரத்தியேக வெளிப்பாடுகளைவிட பகிடிவதை பெரிய பிரச்சனையாகும். எனவே அதனை தீர்க்க எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் வெறுமனே அதன் அறிகுறிகளுக்கு அப்பால் நோக்க வேண்டும். நிதிசார் கேள்விகளோடு விடுவிக்கப்படமுடியாதவகையில் பிணைந்த நிறுவன சார் தீர்வுகள் மற்றும் நாம் எவ்வாறு கல்வியை விளங்குகின்றோம், அதோடு ஈடுபடுகிறோம் என்பதில் அடிப்படையான ஒரு நகர்வும் இதில் உள்ளடங்குகின்றன. இது பொதுவாக எடுக்கப்படும் “கலாச்சாரத்தை மாற்றுதல்” வாதம் போல் இருக்கலாம். உண்மையில் அதோடு இதற்கு பொருத்தங்களுள்ளன. இருப்பினும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் இது பகிடிவத்தையில் ஈடுபடும் மாணவரை அரசியலில் ஈடுபடாத மாணவரால் பதிலீடு செய்யாது.பகிடிவத்தையில் இருந்து விலகுதல் உடனடியாக அரசியலில் இருந்து விலகுதல் என பொருள்படாது. அவ்வாறு பொருள்படவும் கூடாது. அது அரசபல்கலைக்கழகங்களுக்கான நிதியை குறைத்தல் அல்லது அவற்றின் மேலான அதிகார பிடியை அதிகரித்தலுக்கான தேவையை உட்பொருளாக்கூடாது. இந்த விடயங்களுக்கு இடையிலான வேறுபாடடை மழுங்கடித்தல் சமூகத்தை நல்ல வகையில் மாற்றுவதற்கான ஆற்றலும் விருப்பமுமற்ற ஒரு அரசியல் நீக்கப்படட தனியார்மயமாக்கப்பட்ட உயர்கல்வி சூழலுக்கு இட்டுச்செல்லும்.



