எவ்வளவு வேலை – அதிகளவிலான வேலை? கல்விப் பணிச்சுமையும் பொறுப்புணர்வு கலாசாரமும்

ஃபர்சானா ஹனிஃபா

அன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில், கல்வி ஊழியர்களுக்கான நெறிமுறைகளும் கல்வி பொறுப்புக்கூறலும் என்ற தலைப்பில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)வின் தர உறுதி மன்றத்தினால்  தயார்படுத்தப்பட்டது. மேலும் பணிச்சுமை, பணி விதிமுறைகளை வரைபடமாக்குவதற்கான கல்வி சுதந்திரமும் பொறுப்புக்கூறலும்  என்ற பகுதியையும்  உள்ளடக்கியுள்ளது.

தர உத்தரவாதத்தின் ஒரு மூலக்கூறாக பொறுப்புக்கூறல் இருந்து வருகிறது, இது ஒரு இணக்க செயல்முறையாக நிறுவனமயமாக்கப்பட்டுள்ளதுடன் இது முக்கியமாக, பல்கலைக்கழகங்களின்  சந்தை தேவைகள், “வேலைவாய்ப்புத் தேவைகளுக்கு” பதிலளிக்கின்றனவா?, நிகழ்ச்சித்திட்டங்கள் அவற்றின் உள்ளடக்க விநியோகத்தில் சீரானவையா? அங்கீகார நிறுவனங்களுக்கும் தரப்படுத்தப்பட்ட தகுதி கட்டமைப்புகளுக்கும் அங்கீகரிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளனவா? என்பதைக் வினாவுகிறது. 2003 இருந்து செயல்பாட்டில் உள்ள உலக வங்கி கடன் சுழற்சிகள் மூலம் தர உத்தரவாதம் இலங்கை சூழமைவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணக்கம் ஒரு தணிக்கை கலாசாரம், சுய மதிப்பீட்டு செயல்முறைகளுடன் பாடத்திட்டங்களின் முறைப்படுத்தப்பட்ட அமைப்பை நிறுவனமயமாக்கியுள்ளது. இலங்கை சூழமைவில், இந்த பொறுப்புக்கூறலின் ஒரு பகுதியாக, மேலே குறிப்பிடப்பட்ட தர உத்தரவாத சுற்றறிக்கை, அவற்றை ஒத்த பிற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச மணிநேரங்களை கல்வியாளர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வதாகும்.

தர உறுதிப்பாட்டுப் பிரிவுகள் மூலம் அமைக்கப்பட்ட பொறுப்புணர்வு செயல்முறைகள், பெரும்பாலும் அவசியமானவை எனப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. காரணம், தங்கள் “சுதந்திரத்தை” பயன்படுத்தி வகுப்புகளுக்கு வராமல் இருப்பது, பாடத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் விடுவது, மேலும் தங்கள் மாணவர்களையும் பல சந்தர்பங்களில்  கனிஷ்ட – சக ஆசிரியர்களையும் தங்களின் மீறல்களின் விளைவுகளை சமாளிக்க அனுப்புவது  போன்ற பிழைகளும் கல்வியாளர்களை கட்டுப்படுத்தும் ஒரு வழியாக அவை செயல்படுகின்றன. இந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் ஏமாற்று கல்வியாளர்களின் எண்ணிக்கை, குறிப்பாக கல்வி சமூகத்திற்கு வெளியே பொதுவான ஒன்றாகும், மேலும் இதுவே கல்வியாளர்களின் பணிச்சுமைகளை கண்காணித்து கட்டுப்படுத்த முனைந்த “தரமான” கலாசாரத்தை செயல்படுத்தியுள்ளது. பொறுப்புக்கூறல் செயல்முறைகள் வருகைப் பதிவேடுகள், மாணவர் கருத்துப் படிவங்கள், சக மதிப்பீடு, குறைந்தபட்சத் தேவையான பணி விதிமுறைகள் உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளன, அவை கல்வியாளர்களை தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்பட வைத்துள்ளது. எனவே, கல்வியாளர்கள் நிர்வாகத்திற்கு எத்தனை மணி நேர தொடர்பு நேரங்கள், மதிப்பீடு மேற்பார்வைக்கு எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறதுடன் குறைந்தபட்ச தேவையை கடைபிடிக்காததற்காக தணிக்கை செயல்முறைகளில் ‘சிக்காமால்’ இருப்பதை உறுதிசெய்ய ஆராய்ச்சிக்கும் வெளியீட்டிற்கும்  எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பதை தெரிவிக்கின்றனர். பணிகளை உண்மையில் செய்வதோடு மேலதிகமாக  ஆதாரங்களுடன் பதிவு செய்வதற்கு கணிசமான நேரம் தேவைப்படுகிறது.

தர உறுதி செயல்முறைகளிலிருந்து தேவைப்படும் “தரம்” என்பது கல்வியாளர்களிடமிருந்து தோன்றிய ஒன்றோ அல்லது ஆராய்ச்சி செய்யப்பட்ட நாடுகளில் உள்ள பெரும்பாலான கல்வி சமூகங்களால் ஆதரிக்கப்படும் ஒன்றோ அல்ல என்பது இப்போது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில், தரத்தை மேம்படுத்துவதில் உண்மையான அர்ப்பணிப்பு இல்லாத ஒரு நிர்வாக செயல்முறையின் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது, இது பெரும்பாலான கல்வியாளர்கள் மாணவர்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கற்றல் அனுபவமாக புரிந்துகொள்ளப்படுகிறது. தர உறுதி ஆட்சியால் திரட்டப்பட்ட தரம் என்பது கல்வி நிறுவனங்களை மிகவும் “திறம்பட” நிர்வகிக்கக்கூடிய ஒரு கண்காணிப்பு செயல்முறையை மட்டுமே குறிக்கிறது.

இந்தப் புதிய மேலாண்மை முறை உலகளவில் உருவாக்கியுள்ள செயல்முறைகளில் ஒன்று, கல்விப் பணிகளை வரைபடமாக்கி ஒதுக்கப் பயன்படுத்தப்படும் பணிச்சுமை ஒதுக்கீடு மாதிரி (WAM) ஆகும். இருப்பினும், இத்தகைய பணிச்சுமை ஒதுக்கீடு மாதிரிகள் கல்விப் பணிகளுக்குத் தேவையான உண்மையான நேரத்தைக் கடுமையாகக் குறைத்து மதிப்பிடுகின்றன என்பது நிறுவப்பட்டுள்ளது, எடுத்துக்காட்டாக, ஐக்கிய இராட்சிய (UK) கல்வியாளர்கள் பொதுவாக ஒப்பந்தம் செய்யப்பட்ட 37 மணிநேர வாரங்களை விட 50-60 மணிநேர வாரங்கள் வேலை செய்கிறார்கள். ஐக்கிய இராட்சிய (UK) பல்கலைக்கழகங்கள் முழுவதும் பணிச்சுமை ஒதுக்கீடு மாதிரியின் (WAM) தோல்விகளை முன்னிலைப்படுத்த பல்கலைக்கழக கல்லூரி ஒன்றியம் (UCU) பணியாற்றியுள்ளது. இலங்கை முறைமையில் தற்போது பணிச்சுமை ஒதுக்கீடு மாதிரியின் (WAM) செயல்முறையில் இல்லை அத்துடன் கல்வியாளர்களின் நேர பயன்பாட்டைக் கண்காணிக்க வருடாந்திர தணிக்கைகளை நம்பியுள்ளது.

கற்பித்தல், ஆராய்ச்சி மதிப்பீடு, தணிக்கை செயல்முறையில் கல்வியாளர்களைக் கேட்கும் வெளியீடுகள் ஆகியவற்றின் முதன்மைப் பொறுப்பைத் தவிர, பல்கலைக்கழக முறைமைக்குள் பல பொறுப்புகள் உள்ளன. தரம், மதிப்பீடுகள் தேவைகள் பல்கலைக்கழக மட்டத்திலும், ஆசிரிய மட்டத்திலும், துறைகளின் மட்டத்திலும் ஏராளமான ஆய்விதழ்களை  உருவாக்கியுள்ளன, அவை ஒருங்கிணைக்கவும் செயல்படுத்தவும் எடுக்கும் நேரமானது குறைந்தபட்சம் ஒரு தடவையிலான  சக மதிப்பாய்வையாவது தேவைப்படுத்துகின்றன. பல்கலைகழக பீடம் சார்  மட்டத்தில் மாணவர்களுக்கான மாநாடுகள் , பல்கலைக்கழக அளவிலான கல்வி மாநாடுகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான துறைகள் பல்கலைகழக பீடம் சார் ஆய்வுகளுக்கு அதிகமாக ஆண்டுதோறும் தங்கள் சொந்த துறை சார்ந்த மாநாடுகளைக் கொண்டுள்ளன. மேலும், முக்கிய பட்டப்படிப்பு கற்கைகளில்  உள்ள சில பாடத் தொகுதிகளில், தொடர்ச்சியான  களப்பணிநியமனங்கள் உள்ளன; களப் பயிற்சித் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிடாமல், சனிக்கிழமைகளிலும் மாணவர்களுடன் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகின்றன. கலைப் பீடத்தில் உள்ள அனைத்து கௌரவப் பட்ட மாணவர்களும் இரண்டு வருட காலப்பகுதியில் ஒரு சுயாதீன ஆய்வு கூறுகளைக் கொண்டுள்ள ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். இதன் போது மேற்பார்வை, விளக்கக்காட்சிகள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கல் என்பன  மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், பீடங்கள் முழுவதும் பயிற்சிகள் வழக்கமாகிவிட்டன. நிறுவனங்களை அடையாளம் காண்பது, மாணவர் முன்னேற்றத்தைக் கண்காணித்தல், அத்துடன் கள ஆய்விதழ்கள், பயிற்சி அறிக்கைகளை தரப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து ஒருங்கிணைப்புக்கும் கல்வி ஊழியர்கள் பொதுவாக பொறுப்புடையவர்கள் ஆகின்றனர். ஆசிரிய மட்டத்தில் மாணவர் வழிகாட்டுதலுடன் தொடர்புடைய மேலதிக  பணிகள் உள்ளன, பீட மட்டத்தில், மாணவர் வழிகாட்டுதலுடன் தொடர்புடைய கூடுதல் பணிகள் உள்ளன; அதோடு பல்வேறு குழுக்களும் உள்ளன. அவற்றில் நெறிமுறை ஆய்வு குழுக்கள், ஆய்வு (ஆராய்ச்சி) குழுக்கள், பல்வேறு குறைதீர் குழுக்கள், தகவல் தொழில்நுட்பக் குழுக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள், காலாண்டு பீட மதிப்பீட்டு குழுக்கள், பாடத்திட்ட மறுபரிசீலனை குழுக்கள், முதுநிலைப் படிப்பு குழுக்கள் மற்றும் உருவாகும் புதிய பிரச்சினைகளை சமாளிக்க அமைக்கப்படும் குழுக்கள் ஆகியவை அடங்கும். ஊழியர்கள் தங்கள் துறையின் முதுகலை திட்டங்களில் வார இறுதி நாட்களில் கற்பிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தர உறுதிப்படுத்தல் செயல்முறை, இவ்வகையான பணிகளில் செலவிடப்படும் நேரத்தை வரைபடமாகுவதோ அல்லது அவ்வாறான பணிகளை சமமாகப் பகிர்வதை உறுதி செய்வதோ இல்லை.

இங்கிலாந்தில் 2016 மற்றும் 2023 க்கு இடையில் நடத்தப்பட்ட பல்கலைக்கழக கல்லூரி ஒன்றியத் தின் (UCU) பணிச்சுமை கணக்கெடுப்புகள் வருத்தமளிக்கும் முடிவுகளைப் பதிவு செய்துள்ளன. பெரும்பாலான கல்வியாளர்கள் வாரத்திற்கு ஒப்பந்தத்தில் உள்ள 37.5 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள், சிலர் பயிற்சி காலத்தில் 70-80 மணிநேரம் வேலை செய்கிறார்கள். சவுத்ஹாம்டன் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றிய (UCU) கிளை கணக்கெடுப்பில் 72.3% பேர் தங்கள் பணிச்சுமை மிக அதிகமாகவோ அல்லது சமாளிக்க முடியாமல்  மாலை, வார இறுதி நாட்களில் வேலை செய்ய வேண்டியிருப்பதாகவும், 75% அதிகமானவர்கள் வேலைப்பளு காரணமாக  தங்கள் மன ஆரோக்கியத்தை பாதித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கை முறைமையில்  கல்வியாளர்களின் நல்வாழ்வு குறித்த தகவல்கள் தற்போது எங்களிடம் இல்லை. இருப்பினும், இலங்கையில் உள்ள கல்வியாளர்களும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்வதாகத் தெரிகிறது.

இலங்கை சூழலின் பிரத்தியேகங்களுடன் தொடர்புடைய பல சிக்கல்களையும், பணிச்சுமை பற்றிய விவாதத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். நிர்வாகத்தை கையாள்வதில் உள்ள சிரமம் அத்தகைய ஒரு பிரச்சினையாகும். கல்வியாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள உற்பத்தித்திறன் சார் கலாசாரம் – குறிப்பாக பல உலக வங்கி கடன் சுழற்சிகள் மூலம் – நிர்வாக மட்டத்தில் அதே அளவிற்கு நிறுவனமயமாக்கப்படவில்லை. உண்மையில், முன்னர் நிர்வாகத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட சில பணிகள், இப்போது கல்வியாளர்களால் செய்யப்படுகின்றன (உதாரணமாக, கணினியில் மதிப்பெண்களை உள்ளீடு செய்வது). எளிமையான அனுமதி செயல்முறைகள் என்று தோன்றுவதற்கு கூட  நிர்வாகத்தின் பல கையொப்பங்களின் தேவை, வேகத்தை உறுதி செய்வதற்கான நடைமுறையை பகுத்தறிவு செய்ய இயலாமை, முறைமைகளுக்கு பரிச்சயமில்லாத செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள், செயல்முறைகள் ஏற்கனவே நடைமுறையில் இல்லாத இடங்களில், கல்வியாளர்கள் தொடர்ந்து செல்ல வேண்டிய அவசரநிலைகள். ஒரு  கனிஷ்ட சக ஊழியர், எந்தவொரு வேலை நாளிலும் சரியான நேரத்தில் மதிய உணவை சாப்பிடுவதற்கு அரிதாகவே இடம் கிடைப்பதாகவும் , மன அழுத்தத்தால் இரவு தாமதமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதையும் விவரித்தார். மதிய உணவு நேரம் புனிதமானது என்றும், 4.15 மணிக்கு வேலையை விட்டு வெளியேறுவது விதி என்றும் கருதப்படும் ஒரு நிர்வாகத்தைச் சுற்றி வேலை செய்ய வேண்டியிருப்பது அவளுக்கு வெறுப்பாக இருக்கிறது. கனிஷ்ட ஊழியர்களின் விடுப்பு கடிதங்களை துறையிலிருந்து  அலுவலகத்திற்கும்,  பீடாதிபதியின் அலுவலகத்திற்கும், பின்னர் அங்கிருந்து துணைவேந்தர் அலுவலகத்திற்கும் ஊழியர்களே எடுத்துச் சென்று, அவை சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதை மற்றொரு சக ஊழியர் விவரித்தார்.

பல்கலைக்கழகத்திற்குள் ஆராய்ச்சி மானியங்களை நிர்வகிப்பது என்பது இன்னும் ஒரு கனவாகவே உள்ளது, மேலும் அது மற்றொரு கட்டுரையின் பொருளாக அமையும். இருப்பினும், நிர்வாகங்களினுள்  ,ஒருங்கிணைப்புச் சுமையின் பெரும் பகுதியைச் சுமக்கும் நபர்கள் உள்ளனர், அவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இருப்பினும், பெரும்பாலும், கல்வியாளர்கள் தங்கள் சொந்தப் பணி நிர்வாக மந்தநிலையால் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான தீர்வுகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மேலே குறிப்பிடப்பட்ட பெரும்பாலான சேவைப் பணிகளைச் செய்ய கனிஷ்ட ஊழியர்களை கட்டாயப்படுத்தும் துறைகளுக்குள் படிநிலையும் ஒரு பிரச்சினையாகும். கனிஷ்ட சக ஊழியர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் சேவைப் பணிகளுக்கு மேலதிகமாக, “தன்னார்வத்தொண்டும் ” செய்ய வேண்டிய கட்டாயத்தில் பலர் இருப்பதாகவும்,  அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளும் உள்ளன என்று கூறினர். ஒரு கனிஷ்ட சக ஊழியர், தங்கள் சகாக்களில் சிலர் சேவைப் பொறுப்புகளைத் தவிர்ப்பதில் சிறந்தவர்கள் என்றும், மற்றவர்கள் அதிக சுமையைச் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறினார். எனவே, பெரும்பாலும், பல குழுக்களிலும் அடிக்கடி அதே முகங்களையே காண முடிகிறது. துறைத் தலைவர்கள் தங்கள் கற்பித்தல் சுமையைக் குறைப்பதன் மூலமும், பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுப்பு எடுத்திருந்தாலும் கூட பணிகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலமும் கனிஷ்ட ஊழியர்களின் சேவைப் பொறுப்புகளை ஏற்க மறுப்பதாகவும் தகவல்கள் உள்ளன. இதுபோன்ற மிகைப்படுத்தல்கள் அரிதாகவே வழக்கமாக இருந்தாலும், ஊழியர்களுக்கு, குறிப்பாக  கனிஷ்ட ஊழியர்களுக்கு பொறுப்புக்கூறல் கலாசாரம் இல்லாதது, அத்தகைய மிகைப்படுத்தல்கள் ஏற்படுவதற்கு இடமளிக்கிறது.

தர உறுதி செயல்முறைகளில் அடையாளம் காணப்பட்ட சிக்கல்களில், கல்வியாளர்களின் பணி நிலைமைகள் குறித்து எந்தவிதமான கவனமும் இல்லாதது ஒன்று மட்டுமே. உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு சீர்திருத்தமும், தர உறுதி செயல்முறைகளால் ஏற்படும் தீங்கைக் கருத்தில் கொண்டு, தரம், பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டின் கருத்துக்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஊழியர்களின் நல்வாழ்வு, அதன் மையத்தில் மாணவர்களுக்கு ஒரு மாற்றத்தக்க கற்றல் அனுபவத்தை வழங்க வேண்டும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன