தக்கன பிழைத்தலா? கல்விச் சீர்திருத்தத்திலே சூழலை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம்

ஹாசினி லேகம்வசம்

என்னுடைய தற்போதைய கள ஆய்வுகள் இலங்கையில் விவசாயம் சார் அரசியல் பற்றியதாகும். விவசாயத்தில் என்ன நடக்கின்றது என்பதோடு நேரடியாக தொடர்புபடவிட்டாலும் அங்கே நடப்பவற்றை பாரியளவில் தீர்மானிக்கும் பல விடயங்களை நான் இதிலிருந்து கற்றுக்கொண்டுள்ளேன். தினசரி வீட்டு வாழ்க்கையின் இயங்கியல்கள் எவ்வாறு விவசாயம் சார் முடிவுகளில் தாக்கம் செலுத்துகின்றன என்பதை நான் கற்ருக்குக்கொண்டுள்ளேன். விவசாயம் சார் தேவைகளுக்காக எடுக்கப்படும் கடன்கள் விவசாயத்தில்தான் செலவிடப்படுகின்றவா? நெருங்கிய உறவுகள் எவ்வாறு விவசாய நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துகின்றன (உதாரணமாக யார் யாருடன் உழைப்பு சார் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபட மறுக்கிறார்கள்)? ஏனைய  விடயங்களுக்கு மத்தியில், பிள்ளைகளின் போசாக்கு, கல்வி, எதிர்கால வாய்ப்புக்கள் போன்றன தொடர்பான முடிவுகள், மக்கள் எதை எப்போது பயிரிடவேண்டும் என தீர்மானிக்கிறது?  என பல விடயங்களை கற்றுக்கொள்கிறேன். இந்தச் சூழலிலேயே இலங்கையின் கல்வி முறைமை விளி,ம்புகளிலே செயற்படுவது பற்றி நான் பல விடயங்களை அவதானித்துள்ளேன். இவ் யதார்த்தங்களை கருத்திற்கொண்டு இன்றைய கட்டுரையில் அதிக உள்ளடக்கலை கொண்டதும் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றாப்போன்றதுமான விடயங்கள் கல்விச் சீர்திருத்தத்தில் கொண்டுவர வேண்டும் என்பதை வாதிடுக்கிறேன்.

எனது களஆய்வில் பெரும்பாலானவை பொலனறுவையிலுள்ள வெலிகந்தவிலும் மொனராகலையில்லுள்ள சியம்பலான்டுவாவிலும் இடம்பெறுகின்றவை. முல்லைத்தீவிலுள்ள வெலி ஓயாவிற்கும் நான் சில முறைகள் சென்றுள்ளேன். விடுதலைப் புலிகள் ஊடுருவலை தடுக்கும் “மனித கவசங்களாக” பயன்படுத்தும் வெளிப்படையான நோக்கிலேயே இதில் வெளிகந்தவும் வெலி ஓயாவும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பகுதியாக உருவாக்கப்பட்டன. சியம்பலாண்டுவ கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் எல்லைக்கு அண்மையில் இருப்பதால் அவ்வகையில் முற்றுமுழுதாக எல்லை என்று சொல்ல முடியாதெனிலும் இப் பிரதேசமும் போரின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இடமாகும். சியம்பலாண்டுவாவின் குடித்தொகையிலே பெரும்பாலானோர் மீள் குடியேற்றப்பட்டவர்களாக காணப்பட்டாலும் சிங்கள நில ஆக்கிரமிப்பு திட்டங்களான அபிவிருத்தி திட்டங்களின் பகுதிகளாக கொண்டுவரப்பட்ட இக் குடியேற்றங்களில் மக்கள் போரின் ஆரம்பத்திற்க்கு முன்னரே வந்துவிட்டனர். இருப்பினும் கல்வியிலும் அதற்கு வெளியிலும் வழக் குறைபாடுகள் நிறைந்தவையாக இவை அனைத்தும் காணப்படுகின்றன.

இவ்வாறான தொலை தூர பிரதேசங்கள் ஆசிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது அரிது. இந்நிலை நீண்டகாலமாக பணியாளர்களை கசக்கிப் பிழியும் நிலைக்கு இட்டுச்செல்கிறது. மோசமான உட்கட்டமைப்பு வசதிகள் (தண்ணீர் பற்றாக்குறை, இடிபட்ட தங்குமிடங்கள் போன்றன) மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் (யானை அச்சுறுத்தல், தீண்டக்கூடிய ஊர்வனக்கள்) விண்ணப்பதாரர்களை ஊக்குவிக்க ஒன்றும் செய்வதில்லை. அவர்கள் பெரும்பாலும் வெறும் சாதாரண தர சித்தி பெற்றோரையே தமது ஆசிரியர் பணி வேலைகளை நிறைவேற்ற நம்பி இருக்க வேண்டுமென இவ்வாறான பிரதேசங்களில் நான் கதைத்த ஒரு ஓய்வு பெற்ற அதிபர் கூறினார். தேசிய பாடசாலையாக அது இருந்தாலும் அங்கே இணைய ஆசிரியர்கள் விரும்பாத நிலை காணப்படுவதாக அவர் கூறினார். அங்கு வருவோரும் கட்டாய சேவைக்காலம் முடிந்த பின்னர் உடனடியாக சென்றுவிடுகின்றனர் என கூறினார்.

பாடசாலைகளில் காணப்படும் வள குறைபாடு வீடுகளில் ஏற்படும் பிரச்சினைகளின் தாக்கத்தையும் இன்னும் மோசமாக்குவதாக தென்படுகிறது. ஏனெனில் அவற்றால் பாடசாலைக் கல்விக்கு ஏற்படும் தாக்கங்களை பாடசாலைகள் வினைத்திறனுடன் கையாள முடியாதுள்ளது. உதாரணமாக இவ்வாறான பிரதேசங்களில் பலவற்றில் குடும்பங்களை பிரிந்து காணப்படும் நிலை ஒரு பரவலான பிரச்சினையென மக்கள் கூறினர். தனது தாயார் குடும்பத்தை விட்டு பிரிந்தமையால் தனது இளைய சகோதரன் மன உளைச்சலுக்கு ஆளானார் என அவ்வாறான இடத்தை சேர்ந்த என்னோடு உரையாடிய பெண் ஒருவர் கூறினார். விரக்தியில் அவர் தனது சகோதரனின் வகுப்பாசிரியரை நாடி அவரின் இந்நிலைமை காரணமாக அவருக்கு அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுள்ளார். இரண்டு மூன்று மாதங்களில் அவர் சகோரதரன் பாடசாலை செல்வதற்கே மறுத்தபோது அவர் மீண்டும் அந்த ஆசிரியரை சென்று சந்தித்தார். ஆனால் அந்த ஆசிரியருக்கு அவரையும் அடையாளம் காணமுடியவில்லை அவரது தம்பியையும் அடையாளம் காண முடியவில்லை.

ஆசிரியர் மீது பழிபோடாமல் எனக்கு இரண்டு பெரிய பிரச்சனைகள் தென்படுகின்றது. 1) அவ்வாறான ஒவ்வொரு மாணவரையும் தனியாள் தனியாளாக கவனிக்குமாறு வரும் வேண்டுகோள்களை நிறைவு செய்வதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லவே இல்லை. குடும்பங்கள் முறிந்திருக்கும் நிலை வெறுமனே விதிவிலக்காக அல்லாமல் சாதாரணமாக காணப்படும் விளிம்பு பரப்புக்களிலே சாதாரணமாக பாடசாலையில் காணப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கைகூட போதாமலிருக்கலாம். 2) இப் பாடசாலைகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு மன ஆலோசனை வழங்கல் போன்ற விடயங்களில் பயிற்சி வழங்க எந்தவொரு முதலீடும் காணப்படுவதில்லை. தினசரி கற்பித்தல் பொறுப்புக்களை நிறைவேற்றக்கூட போதுமானோர் இல்லாத நிலையில் இதுவே சூழ்நிலை அறியாமல் வேண்டுகோள் விடுவதுபோல் காணப்படலாம்.

வளக்குறைபாட்டுக்கு மீளிட்டுச் செல்லும் வேறு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. அதில் முதலாவது திறனுருவாக்கும் கல்வியில் போதுமான பயிற்சி வழங்காமல் ஆசிரியர்களை ஆரம்பக் கல்வி பாடசாலைகளுக்கு நியமிப்பதாகும். தற்போது நன்றாக அறியப்பட்ட வகையிலே, திறனுருவாக்கும் கல்வியின் மிக முக்கியமானது. இலங்கை கல்வி முறைமை ஆரம்பக் கல்வியில் முதலீடு செய்யாத நிலையிலிருந்து தெரிவது என்னவென்றால் அதற்கு இந்த விடயம் விளங்கவில்லை என்பதாகும். தானே மாணவர்களுக்கு பெரிய அநீதியை ஈட்டுவதாகவும் தமக்கு வழங்கப்பட்ட ஒரு வார திறனுருவாக்கும் கல்வி பயிற்சி முற்றிலும் போதுமற்றதெனவும் நான் பேசிய ஒரு முன்பள்ளி ஆசிரியர் வருந்தினார். தான் கற்ற அரசியல் விஞ்ஞானத்தை மேல்வகுப்புக்களுக்கு கற்பிக்கக்கூடிய வேலை கிடைக்கப்பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இவரின் நிலமை வெறுமனே ஒரு தனியாள் நிலமையல்ல. “வேலைக்கமர்த்த முடியாத பட்டதாரி” பிழையான வேலைக்கமர்த்தல்களின் விளைவாகும். ஏனெனில் தாம் செய்ய முடியாத வேலைகளை ஒருவருக்கு வழங்கும்போது அவர்கள் பயனற்றவர்களாவார்கள்; அவர்களின் சேவைகளை பெறுவோர் கிடைக்கும் சேவையை வைத்து சமாளிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். சரியான நியமனங்கள் அச் சேவைகளின் தேவையுடையோருக்கு பெரியளவான மாற்றத்தை கொண்டுவரக்கூடிய நிலையிலே, அரசுப்பணி பெரியளவிலுள்ளது என்று கூற முடியாது; மாறாக பொருத்தமற்ற நியமனங்கள் பொருத்தமற்ற இடங்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றதையே குறிக்கும்.

இரண்டாவது பிரச்சினை விசேட தேவையுடைய மாணவர்களை பற்றியது. வழக் குறைபாடுகளுள்ள சூழல்களில் அதிக தாக்கமுடையவாயாக இவை காணப்படுகின்றன. அதே ஆரம்பப் பாடசாலை ஆசிரியரின் கருத்தின்படி அவ்வாறான மாணவர்களின் தேவைகளை சந்திக்க போதுமான வசதிகள் இன்றிய நிலை காணப்படுகின்றது. அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு வழியாக விசேட தேவையுடைய மாணவர்கள் சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப் பண்ணும் நோக்கிலே முன்பு பல பாடசாலைகளில் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக நிறுவப்பட்ட பிரிவுகள் இல்லாமல்ச் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பெரியளவு வழக்குறைபாடுகள் உள்ள ஒரு சூழலில் ஏற்கனவே மாணவர் எண்ணிக்கை அதிகமாகவுள்ள வகுப்பறைகளை சமாளிக்க ஆசிரியர்கள் திணறும்போது, இது வெறுமனே விசேட தேவையுள்ள மாணவர்கள் கவனிக்கப்படாமல்விடப்படும் நிலைக்கு இட்டுச்செல்கிறது. 99 சதவீதமான இடங்களிலே, விசேட தேவையுடைய மாணவர்களோடு ஆசிரியர்கள் திறம்பட செயல்பட வைத்திருக்கக்கூடிய முதலீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வகையான மாற்றம் திறம்பட செயல்படும் வகையில் முழு நாட்டிலேயே ஒரு சில நன்றாக வசதியுள்ள பாடசாலைகளிலேயே  உள்ளன. இந்த மாற்றத்துக்கு பிரத்தியேகமாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் கொண்ட விசேட தேவைகள் அலகும் ஏனைய  வகுப்புகளில் தினமும் சில மணித்தியாலங்களை செலவிடலும் தேவை. ஏனைய பாடசாலைகளில் பெரியளவானவற்றில் ஏனைய மாணவர்களை “சினப்படுத்தாத” அளவிற்கு விசேட மாணவர்களை ஏதாவதொரு கல்விச் செயற்பாட்டில் ஆழ்த்தும் நிலையே காணப்படுகின்றது. விசேடய தேவை பிரிவுகளை அகற்றுவதின் நோக்கத்தையே இது வலிவற்றதாக்குகிறது என்பது கூறத்தேவையில்லை.

இவ் வகையான நன்றாக அறியப்பட்ட யதார்த்தங்களை கருத்தில் கொள்ளும்போது “சில பாடசாலைகள் மூடவும் சிலதை ஒன்றிணைக்கவும் சில இடங்களில் புதிதாக பாடசாலைகள் உருவாக்கப்படவும் வேண்டிய தேவை வரலாம்” எனும் ஜனாதிபதி திஸ்ஸநாயக்கவின் கருத்து ( பார்வையிட: https://www.newsfirst.lk/2025/07/25/%E2%80%9Cno-child-left-behind%E2%80%9D-president-calls-for-overhaul-of-school-dropout-crisis ) பிரச்சினைக்குரியாதாக இருப்பது மட்டுமின்றி அவருடைய கல்வி சீர்திருத்த மொத்த திட்டத்திலிருந்தே பாரதூரமாக விலகிச் செல்வதாவுள்ளது. ஜனாதிபதியின் கருத்தின்படி இந்த சீர்திருத்தங்கள் “எந்த ஒரு குழந்தையும் பின்ணடய  விடப்படாமையை” உறுதிசெய்ய முற்படும். பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவும் இதற்கு இணைந்த வகையில் வசதி குறைந்த பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் தற்போது பெரும் கல்வியை விட மேம்பட்ட கல்வியை பெறுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என கூறியுள்ளார் (பார்வையிட: https://www.youtube.com/watch?v=UjmPunkM80A ). நன்றாக செயற்படாத பாடசாலைகள் மூடுவது அல்லது வேறொன்றோடு இணைப்பதால் இந் நோக்கம் எவ்வாறு அடையப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

திட்டவட்டமாக நவதாராளவாதத்தை நோக்கி போகும் இந்த திருப்பத்தில் தனிப்பட்ட பாடசாலைகளின் செயல்திறன் பதிவின் அடிப்படையிலே சீர்திருத்தத்தை சட்டகப்படுத்திக்கிறது NPP அரசாங்கம். இவ் செயல்திறன் பதிவில் இடை விலகல் வீதங்கள், மாணவர்களின் எண்ணிக்கை போன்ற விடயங்கள் காணப்படுகின்றன. (இதனை இந்த இணையத்தளத்தின் பார்வையிடலாம்: https://www.newsfirst.lk/2025/07/25/%E2%80%9Cno-child-left-behind%E2%80%9D-president-calls-for-overhaul-of-school-dropout-crisis ).

அமைப்பு சார் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது அவற்றை “நிலைக்கமுடியாதது” (unviable) என இது சித்தரிக்கிறது. இவ்வாறு கவனத்தில் கொள்ளப்படாத காரணிகளில் குடும்பங்களின் பொருளாதார இடர்பாடுகள், அடுத்தடுத்த அரசாங்கங்களின் கவனமின்மை ஆசிரியர்கள் (அதேபோல் ஏனைய அரச பணி சேவையாளர்கள்) அவ்வகையான “சவாலான” இடங்களில் வேலை செய்வதை தவிர்த்தல், அதன்காரணமாக அவற்றின் தொலைவு இன்னும் அதிகரித்தல், இவ் வொவ்வொரு விடயங்களும் வட்ட முறையிலே ஏனையவற்றை பாரதூரப்படுத்தல் என்பனவாகும். அவ்வகையான சூழ்நிலையிலே பொறுப்பை தனிப் பாடசாலைகள் மேல் சுமத்துவது “தக்கன பிழைக்க” வேண்டிய நிலைக்கு இட்டுச்செல்லும். “நிலைக்கக்கூடிய” (“viable”) என கூறப்படும் பாடசாலைகள் ஏற்கனவே நன்றாக செயற்படுபவை. கல்விச் சீர்திருத்தங்கள் அவற்றுக்கு மாற்றத்தை கொண்டுவராது.

மோசமான தோல்வியை தடுக்கவேண்டுமானால் அதிக வலிமையான அர்த்தத்தில் மக்களிடம் ஆலோசனை கேட்பதாகவும் அவர்களை உள்ளடக்குவதாகவும் இருக்கவேண்டும். வெறும் பெயரளவில் உட்சேர்க்கை இருக்காமல் கொழும்புக்கு வரமுடியாத அவ்வாறான சமூகங்களை சந்தித்து ஆலோசிப்பதற்கு அரசு தனது நேரத்தையும் சக்கிதியையும் செலவிட வேண்டும். அவ்வகையான செயல்முறை உள்ளது என்பதையே தெரியாத சமூகங்கள் கூட இருக்கலாம். இது மாத்திரமே “தேசிய” சீர்திருத்தங்களிலிருந்து அரசாங்கத்தை திசை திருப்பி, வேறுபட உள்ளூர் தேவைகளை கருத்தில் கொள்ளும் சீர்திருத்தங்களை கொண்டுவர அர்ப்பணிக்கும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன