இலங்கையின் பல்மருத்துவக் கல்வியின் சவால்களை வழிசெலுத்துதல்

உதாரி அபேசிங்க‌

உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது இலவசக்கல்வியின்
பிரதான கொள்கைகளிலொன்றாகும். 2020ஆம் ஆண்டில், அப்போதைய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால், தேர்தல் விஞ்சாபனத்தின்
அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் அனுமதியை 12,000ஆல்
அதிகரிக்கும் படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (UGC)
வழிகாட்டல் வழங்கப்பட்டது. அதனையடுத்து, பல்கலைக்கழகங்களில்
மாணவர் அனுமதி அதிகரிக்கப்பட்டதாயினும் பல்கலைக்கழகங்களுக்காக
ஒதுக்கப்பட்ட வளாங்களின் போதாமை மாணவர்களின் திடீர் அதிகரிப்பை
முகாமை செய்யுமளவு காணப்படவில்லை.

தற்போதைய சூழ்நிலையில், பாதீட்டு கட்டுப்பாடுகளுடன் சேர்த்து
பல்கலைக்கழக மாணவர்களை முகாமை செய்வது சிக்கலுக்குரிய விடயமாக
மாறியுள்ளது. அதிகரிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கைக்கேற்ப மானுட
மற்றும் பௌதீக வளங்கள் அதிகரிக்கப்படாமையால் உயர்கல்வி அமைப்பில்
பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. இலங்கையில் பல்மருத்துவர்களை
உருவாக்கும் ஒரே பல்கலைக்கத்தின் கல்வியியலாளராக இருக்கும்
அடிப்படையில், எமது பல்மருத்துவ பீடத்திலும் பல்மருத்துவ கற்கையிலும்
காணப்படும் சிக்கல்களும் அவை பொருளாதார நெருக்கடியால் மேலும்
சிக்கலாகியதையும் குறித்தான கலந்துரையாடலை மேற்கொள்ள
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றேன்.

வரலாறு மீதான பார்வை

இலங்கையில் பல்மருத்துவத்தின் வரலாறு மிகவும் சுவாரஷ்யமானது.
இலங்கையில் 15 மே, 1915ல் பல்மருத்துவம் ஒரு தனியான தொழிலாக
அங்கீகரிக்கப்பட்டது. பல்மருத்துவர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் இலங்கை
மருத்துவ சங்கத்தால் முதலாவது தேர்ச்சியடைந்த பல்மருத்துவர்களாக பதிவுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் பிரித்தானியாவில் பயின்றோராக
இருந்தனர். இவர்கள் தமது சேவைகளை பிரித்தானியப் படை,
தொழிற்பண்பட்டோர், மற்றும் இலங்கையில் பல்மருத்துவ‌ சேவைகளை
பெறுவதற்கான வசதிவாய்ப்பை பெற்றிருப்போருக்கு, அடிப்படையில் தனியார்
துறை வழியாக வழங்கினர். 1925ஆம் ஆண்டிலேயே காலனித்துவ
அரசாங்கமானது பொதுமக்களின் பல்மருத்துவ தேவைகளை அங்கீகரித்தது.
1930களில் சிலோன் மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறிய மாணவர்கள்
தமது கல்விப்பயணத்தில் புதிய மைல்கல்லாக தகுதிச் சான்றுடைய
பல்மருத்துவ கற்கைநெறியை, இருவருட பட்டப்பின் படிப்பாக தொடர்ந்தனர்.

1943 ஆண்டாகும் போது, இலங்கையில் பல்மருத்துவ வரலாற்றில்
முக்கியமான விடயமாக கொழும்பில் அமைந்திருந்த சிலோன்
பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியில் பல்மருத்துவ பட்டக்கல்வி (BDS)
அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இதில் நான்கு மாணவர்களே
காணப்பட்டதோடு தொடர்ந்து வந்த ஆண்டில் ஆறு மாணவர்கள்
இணைந்தனர். இதுவே இலங்கையில் பல்மருத்துவ கற்கையின்
உத்தியோகபூர்வ ஆரம்பமாக இருந்தது. பல்மருத்துவ கற்கையின்
கோட்பாட்டுசார் மாதிரியை செயன்முறைசார் கல்வியோடு வழங்கும்
பொருட்டு கொழும்பு பொது வைத்தியசாலையில் (தற்போது கொழும்பு தேசிய
வைத்தியசாலை என அறியப்படுகின்றது) சிறிய பல்மருத்துவ பிரிவொன்று
(தற்போது ஒன்பது மாடிக்கட்டடமாக இருக்கின்றது) ஆரம்பிக்கப்பட்டது.

1953ஆம் ஆண்டு பல்மருத்துவ கல்லூரி கொழும்பிலிருந்து பேராதனைக்கு
மாற்றப்பட்டது. பேராதனையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது மருத்துவ
கல்லூரியின் ஆரம்பத்தோடு பல்மருத்துவ கல்லூரி அதன் ஒரு துறையாக
மாற்றப்பட்டது. கடந்து வந்த ஆண்டுகளின் பல்மருத்துவ துறையில் பல
மாணவர்கள் இணைந்ததோடு 1986ல் அது ஒரு பீடமாக மாற்றப்பட்டது.
1998ஆம் ஆண்டு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் ()
செயற்றிட்டத்தால் பேராதனை பல்மருத்துவ பீடமும் வைத்தியசாலை
தொகுதியும் நிர்மாணம் செய்யப்பட்டன. 2017ஆம் ஆண்டு நான்கு வருட
பட்டப்படிப்பாக காணப்பட்ட பல்மருத்துவம் சர்வதேச நியமங்களுக்கேற்ப ஐந்து வருட கற்கைநெறியாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கையின் 80 வருட பல்மருத்துவ வரலாற்றில் தற்போது ஒவ்வொரு
வருடமும் கிட்டத்தட்ட 80 பட்டதாரிகள் இலவசக்கல்விக் கொள்கைகளின்
அடிப்படையில் திறன்பெற்று வெளியாகின்றனர். 2021 டிசம்பர் மாதம்
இரண்டாவது பல்மருத்துவ பீடம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்
உருவாக்கப்பட்டதோடு அதன் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு
இன்னும் மூன்று வருடங்களில் முதல் தொகுதி பட்டதாரிகள் வெளியாக
உள்ளனர்.

பல்மருத்துவத்தில் காணப்படும் நெருக்கடி

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வித்துறை மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளதோடு அதன் மீதான நிதி ஒதுக்கீடுகள் பாரியளவில்
குறைக்கப்பட்டுள்ளன. UNICEF புள்ளிவிபரப்படி, இலங்கையானது தனது
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%க்கும் குறைவாகவே கல்வித்துறைக்கு
ஒதுக்கீடு செய்துள்ளதோடு, இது சர்வதேச அளாவீடான 4%-6% வீதத்தை
விடக் குறைவாக உள்ளதோடு தென்னாசிய பிராந்தியத்திலேயே குறைவான
ஒதுக்கீட்டை மேற்கொள்ளும் நாடாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பல்மருத்துவதுறையில் மாணவரொருவருக்கு
ஆண்டுதோரும் ஏற்படும் தொடர்ச்சியான செலவு 1.72 மில்லியன்களாக
கணிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருட பட்டப்படிப்புக்கான மொத்த தொடர்ச்சியான
செலவு 8.62 மில்லியன்களாக காணப்படுவதோடு மருத்துவ பட்டப்படிப்புக்கான
மொத்த தொடர்ச்சியான செலவு 4.18 மில்லியன்களாகும். இறக்குமதி
செய்யப்படும் பல்மருத்துவ உபகரணங்களின் விலை அதிகரித்துள்ளதால்
பல்மருத்துவ கற்கைக்கான செலவு மேலும் அதிகரித்திருப்பதற்கான
வாய்ப்புகள் அதிகமாகும். இலங்கையில் அதிகமான செலவுடன் கூடிய
கற்கைநெறியாக காணப்படும் பல்மருத்துவ துறையானது பொருளாதார
நெருக்கடி காரணமாகவும் பாதீட்டு கட்டுப்பாடுகளாலும் அதிக சிக்கல்களை
சந்தித்து வருகின்றது. மேலும், அரசாங்கத்தின் தீர்மானமான பேராதனை
வளாகத்தில் பல்மருத்துவ பீடத்தின் மாணவர் எண்ணிக்கையை 80இலிருந்து 123ஆக அதிகரிப்பதானது (அதாவது 50%ஆக அதிகரித்தல்) நிலமையை மேலும்
சிக்கலாக்கியுள்ளது.

பல்மருத்துவ கற்கையானது மருத்துவகற்கை அமர்வுகளின் போது நேரடி
அவதானிப்பை வேண்டும் துறையாக காணப்ப‌டுவதோடு உயர் நியமங்களை
பேணும் நோக்கில் பொருத்தமான மனித வளங்களை வேண்டும்
துறையாகவும் காணப்படுகின்றது. இலங்கையின் தர நியமங்களின் படி
மாணவர்: ஆசிரியர் சதவிகிதம் 7:1 ஆக இருக்க வேண்டும். மாணவர் வருகை
அதிகரித்துள்ள நிலையில் பல்கலைக்கழக ஆசிரியர்களின்
பற்றாக்குறையானது இச்சதவிகிதத்தை தொடர்ந்தும் பேணுவதில்
சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஆசீர்யர்களின்
வேலைப்பளு வெகுவாக அதிகரித்துள்ளதோடு, கற்பித்தல், பட்டபின்படிப்பு
மாணவர்களை மேற்பார்வை செய்தல், ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும்
பீடம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக விடயங்களில் ஈடுபடல் போன்ற
இன்னோரன்ன பொறுப்புகளுக்கிடையில் முகாமைசெய்ய முடியாத நிலை
உருவாகியுள்ளது. மனிதவளங்களில் காணப்படும் குறைபாடுகள், சேவையில்
இருக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் நல்வாழ்வில் சிக்கல்களை
ஏற்படுத்தியுள்ளதோடு அவர்கள் வழங்கும் கல்வியின் தரத்திலும் பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளது.

வழிசெலுத்துதல்

நான் எனது கடைசி குப்பி ஆக்கத்தில் (09/05/2023) குறிப்பிட்டுள்ளது போன்று
பல்மருத்துவ கற்கைத் துறையில் இளம் கல்வியியலாளர்களை தக்கவைப்பது
முக்கியமான சவாலாக மாறியுள்ளது. எந்த நிறுவனத்தின் வினைத்திறனான
செயற்பாட்டுக்கும் தற்காலிக விரிவுரையாளார்களிலிருந்து இளம்
விரிவுரையாளார்கள், மூத்த விரிவுரையாளர்கள், மற்றும் பேராசிரியர்கள்
போன்ற அனைத்து மட்டங்களிலுமுள்ள கல்வியியலாளர்களின் கூட்டுப்
பங்களிப்பு அவசியமாகின்றது. தற்போதைய சூழ்நிலையில் பல்மருத்துவ
பீடத்தில் ஒரு பல்மருத்துவ பட்டதாரி தானும் தற்காலிக
விரிவுரையாளாராக‌ கடமையில் இல்லை. இதற்கான காரணம், பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறிப்பிடப்படாத பல சிக்கல்களுக்கு
அப்பால் தற்காலிகமான பதவியொன்றுக்கு அங்கு வழங்கப்படும் குறைவான
சம்பளத்தை விட தனியார் துறையில் அதைவிட அதிகமான சம்பளத்தை
பெறக்கூடியதாக காணப்படுவதாகும்.

மருத்துவ பீடங்களில் பணிபுரியும் தகுதிகாண் விரிவுரையாளர்களுக்கான
வெளிநாட்டு பயிற்சிநெறிக்கு (MD) வழங்கப்படும் உதவித்தொகையை
இல்லாமலாக்கிய அரசாங்கத்தின் தீர்மானம் நிலமையை மேலும்
சிக்கலுக்குள்ளாக்கி இருக்கின்றது. பல்மருத்துவ பட்டதாரிகளுக்கு கட்டணம்
செலுத்தி வெளிநாட்டு பயிற்சிநெறிகளை நிறைவு செய்வதும் உதவித்தொகை
வழங்கப்படாமல் அவற்றை பெறுவதும் இயலாத விடயமாகும். வெளிநாட்டு
பயிற்சிநெறியை முடித்தம் மற்றும் வாரியத்தின் சான்றிதழ் பெற்றிருத்தலின்
முன்னரே விரிவுரையாளார்களின் பதவிகள் நிரந்தரமாக்கப்படும் வாய்ப்புகள்
காணப்பட்டாலும் அவர்கள் மூத்த விரிவுரையாளர்களாக ஆக முடியாது.
இத்துறையில் தமது தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முடியாமலிருப்பதன்
காரணமாக இளம் பட்டதாரிகளை இத்துறையில் தக்கவைப்பதும்
இத்துறையை நோக்கி கவர்வதும் பாரிய சவாலாக மாறியுள்ளது. மேலும்,
அரசாங்கத்தின் தீர்மானமான, சுகாதார அமைச்சின் பணியாளர்களுக்கு மட்டும்
வெளிநாட்டு பயிற்சிநெறிக்காக (MD) உதவித்தொகை வழங்கும்
தீர்மானமானது, பல்மருத்துவ பட்டதாரிகளை பல்கலைக்கழகங்களை நோக்கி
வரவிடாமல் சுகாதார அமைச்சின் தொழில்களை நோக்கி செல்லும்படி
நிலமை மாறியுள்ளது.

அதிகரிக்கும் மாணவர் வருகைக்கு ஏற்ப பௌதீக வளங்களை அதிகரிக்கும்
இயலுமை பீடத்துக்கு காணப்படவில்லை. பணவீக்கம் உயர்ந்திருப்பதன்
காரணமாக பல்மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வது சிக்கலாக
மாறியிருப்பதோடு இதனால் நோயாளிகளை பராமரித்தலும் கற்கைகளுக்கான
பயன்பாடும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் பீடமானது
நோயாளிகளதும் பழைய மாணவர்களதும் நன்கொடையில் தங்கியிருந்து
இவ்விடைவெளியை குறைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதிகரிக்கும்
மாணவர் எண்ணிக்கை காரணமாக ஏனைய வளங்களான திறன்கள் ஆய்வுகூடத்திலிருக்கும் உடற்கூறு படிமங்கள், பல்மருத்துவ இருக்கைகள்,
மருத்துவ உபகரணங்கள் போன்ற‌ மருத்துவ பயிற்சி வழங்கல்
வசதிகளிலும், தகவல் தொழிநுட்ப ஆய்வுகூடங்களிலுள்ள கணனிகள்,
இணைய வசதிகள், சிற்றுண்டிச்சாலை இடவசதிகள், மாணவ விடுதி
வசதிகள் உட்பட ஏனைய அடிப்படை வசதிகளிலும் பாரிய சிக்கல்கள்
எழுந்துள்ளன. அதிகரிக்கும் மாணவ எண்ணிக்கை காரணமாக எழுந்துள்ள
சிக்கல்களை தீர்க்கும் பொறுப்புகள் கல்வியியலாளர்களின் தோள்களில்
விழுந்துள்ளதோடு அதற்கான ஒத்துழைப்புகள் UGCயிடம் இருந்து சரியாக
கிடைப்பதாயில்லை.

பரந்தளவிலான பார்வை

பல்மருத்துவ கற்கை என்பது இலங்கையில் மிகவுமே செலவான கற்கையாக
காணப்படுவதோடு பின்தங்கிய சூழல்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு
இக்கற்கையின் ஆதாரமே இலவசக்கல்வியாக இருக்கின்றது. ஈடுபாடுள்ள
கல்வியியலாளர்கள் என்ற வகையில் எமது பொறுப்பானது, எவ்வித சமூக
சூழ்நிலைகளிலிருந்தும் பல்மருத்துவ கற்கைகளுக்காக நுழையும்
மாணவர்கள் இலவசக்கல்வியின் பூரண பயன்களை பெறும் அதேவேளை,
கற்றல் கற்பித்தலில் சரியான தரங்களை பேணவும் உருதுணையாக இருக்க
வேண்டும். பல்மருத்துவ துறையான படிப்படியாக 4 மாணவர்களிலிருந்து 80
பேர் வரை விரிவடைந்திருக்கும் துறையென்பதை மனதிலிறுத்த வேண்டும்.
இக்கற்கைநெறியின் விரிவாக்கம், கவனமான திட்டமிடலுடன் கூடிய
காலமெடுத்து மேற்கொண்ட பேண்தகு வளார்ச்சியாக காணப்படுகின்றது.

நெருக்கடியான காலப்பகுதிகளில் திடீரென மேற்கொள்ளும் மாணவர்
அதிகரிப்பானது நிச்சயமாக பல்மருத்துவ கற்கையின் தரத்துக்கு பாதிப்பாகவே
அமையும். சுகாதார அமைச்சின் பட்டப்பின்படிப்பு () பயிற்சியாளர்களுக்கு
வழங்கப்படும் உதவித்தொகை பல்கலைக்கழக பீடங்களின் பட்டப்பின்படிப்பு (MD)
பயிற்சியாளர்களுக்கு மறுக்கப்படுவது பல்மருத்துவகல்வி மேலும்
சமரசமடைந்து செல்லும் சூழ்நிலைக்கே இட்டுச்செல்லும்.
விரிவாக்கத்துக்கான தேர்வுகளை மேற்கொள்ளும் போதும், ஏனைய நிலைப்பாடுகளிலும், பல்மருத்துவ கல்வியின் நீண்டகால் பேண்தகு
நிலையை உறுதிப்படுத்துவதோடு நாட்டின் இலவசக்கல்வி அமைப்பை
பாதுகாக்கும் பொறுப்பு கொள்கைவகுப்பாளர்களுக்கும் தீர்மானம்
மேற்கொள்வோருக்கும் காணப்படுவதை மறுக்க இயலாது.