உயர்கல்வி தனியார்மயமாக்கத்தினூடு பொறுப்பாண்மையை பின்பற்றுதல்

ஹசினி லேகம்வசம்

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்
உயர்கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நயோமி க்லெயினின் ‘பேரழிவு தரும் முதலாளித்துவம்’ ஆய்வுரையின் படி
நிச்சயமற்ற, ஆற்றொணா காலங்களில் ஏற்படுத்தப்படும் சீரிய மாற்றங்கள்
வஞ்சகமான நோக்கங்களை கொண்டிருக்கும். இக்காலங்கள்
முன்மொழியப்படும் மாற்றங்களின் உட்கிடைகளை கவனமாக ஆய்ந்து
பார்க்கும் அவகாசத்தையும் அளிப்பதற்கு வாய்ப்பளிப்பதில்லை. இந்நிலையின்
தீவிரத்தை உணர வேண்டிய நாங்கள் எமது இலவசக்கல்வியின் மீது மீட்க
முடியாத தீங்குகள் விளைவிக்கப்படும் முன்னர் ஒன்றிணைந்து செயற்பட
வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.


அத்தகைய மாற்றங்களின் முன்மொழிவொன்று அண்மையில் பாராளுமன்ற
தேர்வுக் குழுவால் “இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை
விரிவாக்குவதற்காக தகுந்த பரிந்துரைகளை வழங்குவதன்” பேரில்
வெளியிடப்பட்ட அறிக்கையின் வடிவில் வெளிவந்தது. இவ்வறிக்கையின்
நோக்கம் சரியானதாக இருந்தாலும் முன்மொழிவுகள் அரச
பல்கலைக்கழகங்கள் தாம் நிதியளிக்கப்படும் பொதுமக்களுக்கு
பொறுப்பாண்மையுடன் செயற்படுதல் என்ற எடுத்துரைப்பின் வழி
சட்டகப்படுத்தப்பட்டிருந்தன. இவ்வெடுத்துரைப்பில் உண்மைத்தன்மை
காணப்படுவதோடு நாம் எதிர்பார்ப்பதும் பொறுப்பாண்மையுடன் கூடிய
அமைப்பையே. இருப்பினும், இவ்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள
நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகுமுன்னர் “பொறுப்பாண்மை”
என்ற பதம் எவ்வாறு விளங்கப்பட்டுள்ளதென்றும், தனியார்மயமாக்கத்தினூடு
இலவசக்கல்வியை வலிதற்றதாக்கும் வகையில் இவ்வறிக்கையில்
பாவிக்கப்பட்டுள்ளதென்றும் விமர்சனரீதியில் பரீட்சிக்கவேண்டி
இருக்கின்றது.

உயர்கல்வியை தனியார்மயமாக்குதல்


இவ்வறிக்கையின் அடிப்படையான நோக்கம் அண்ணிய செலாவணி
புறப்பாய்வு மற்றும் நியாயப்பாடு என்ற பேரில் நாட்டினுள் உயர்கல்விக்கான
அணுகலை அதிகரிப்பதாகும். இதற்கான தீர்வாகவே “நிதியளிப்புக்கான
வழிகளை விரிவுபடுத்துவதோடு உயர்கல்வியை அரச மற்றும் தனியார்
வழங்குனர்களின் பங்களிப்போடு முகாமைசெய்வது”
முன்வைக்கப்பட்டிருக்கின்றது. நியாயப்பாட்டை உறுதிப்படுத்தும்
வழிமுறைகளில் முக்கியமானதாக வருமான எல்லைகளை
கவனத்திலெடுக்காது மாணவர்களுக்கான கடன் வசதிகளை
விரிவுபடுத்தலாகும்.


அரச பல்கலைக்கழகங்களை சேர்ந்த பல கல்வியியலாளார்கள் தற்போது
தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பாக “நட்புரீதியான
அணுகுமுறையை” கையாள்வதோடு அவர்கள் தீங்கற்றவர்களாக
இருப்பதோடு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவாக்கம் செய்கின்றவர்களெனவும்
நம்பத்தலைப்பட்டிருக்கின்றார்கள். தனியார் நலன்கள்
அறிமுகப்படுத்தப்படுவதோடு பொதுநலன்கள் பின்தள்ளப்படுவது
இக்கல்வியியலாளர்களின் கவனத்திலிருந்து விடுபட்டுப்போவதை
நம்புவதற்கு நான் தயாரில்லை. அரச பல்கலைக்கழகங்களில் தசாப்தங்களாக
நடைபெறும் இயல்மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டணம்
அறவிடப்படும், திறன் அடிப்படையான பணியூதிய அமைப்பைக் கொண்ட
பட்டப்பின்படிப்பு கற்கைகள், டிப்ளோமாக்கள் மற்றும் சான்றிதழ்
கற்கைநெறிகளுக்கு விரிவுரையாளர்கள் தமது ஈடுபாட்டையும்
முன்னுரிமையயும் வழங்கியும் இலவசமாக வழங்கப்படும் கல்வியை
பின்தள்ளும் நிலையையும் நாம் காண்கின்றோம். இந்த யதார்த்தத்தை
வைத்து பார்க்கும் போது, தனியார் பல்கலைக்கழகங்கள் அரச
பல்கலைக்கழகங்களின் அதிகளவான மனிதவளங்களை லாப நோக்கில்
உடன்படிக்கை அடிப்படையில் எடுக்க வாய்ப்புகள் அதிகமாக
காணப்படுகின்றது.

கல்வியின் தனியார்மயமாக்கம் (முக்கியமாக வளக்குறைபாடுகளால்
கட்டுப்பாடுகளுடன் கூடிய திறன் அடிப்படையிலானதேர்வுவிதிகளை
பின்பற்றும் உயர்கல்வி முறைமையில்) இன்னும் பல வழிகளிலும்
பிரச்சினைக்க்குரிய அம்சமாகவே காணப்படுகின்றது: முதலாவதும் ஆக
வெளிப்படையானதுமான சிக்கல் மக்கள் தமது உரிமையாக அடைய
வேண்டிய ஒரு விடயத்துக்கு கட்டணம் அறவிடுவதுடன் இதனால்
அதிகரிக்கும் சொத்து சார்ந்த ஏற்றத்தாழ்வுகள்; இரண்டாவதாக எம்மை
குடிமக்கள் என்ற மனநிலையிலிருந்து திருப்பி நுகர்வோராக மாற்றுவதோடு
நுகர்வோரின் மனநிலையான கட்டணம் செலுத்தும் வசதியை பொறுத்து
சேவைகளின் தரத்தை எதிர்பார்ப்பதானது சமத்துவம் (மற்றும் கண்ணியம்)
குறித்தான கலந்துரையாடல்களை பொருத்தமற்றதாக மாற்றிவிடுகின்றது;
மூன்றாவதும் குறிப்பாக கல்வியை மையமாகக் கொண்டதுமானது,
தனியார்மயமாக்கமானது கல்வியை உலகை புரிந்துகொள்ளவும் மானுட
சமுதாயத்தின் நலனுக்காக செயற்படவும் கூடிய கல்வியை வழங்குவதை
விட வெறுமனே தொழில்வாய்ப்பின் கருவியாக அதனை பாவிக்கின்றது.
கல்வியின் மரபாண்மைகள் இவ்வாறு மாற்றப்படும்பட்சத்தில் கல்வி ஒரு
வணிகமாக மாறிவிடுவதோடு அதன் சமூக அரசியல் ஈடுபாடுகள்
தூரமாக்கப்படுகின்றன. தற்போதைய புரிதலின் படி பொருளாதார
நெருக்கடியால் உருவாகியிருக்கும் அவசரகால சூழலில் அரசாங்கம்
இவ்வாறான சீர்திருத்தங்களை பொருளாதார செயலறிவின் பேரில்
அறிமுகப்படுத்தும் நோக்கம் முக்கியமாக அண்ணிய செலாவனிகளின்
பாய்ச்சல் குறித்த சிக்கல்களாலாகும். இந்த நிதிசார் கையறுநிலையை
அடிப்படையாகக் கொண்டே அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள
“பொறுப்பாண்மை” குறித்தான கருத்தாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


உயர்கல்வியில் பொறுப்பாண்மை


அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் அதில்
குறித்துக்காட்டப்பட்டுள்ள சிக்கல்களுக்கான தீர்வுகளை வழங்கவில்லை.
உதாரணமாக, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களின் ஆய்வு
வெளியீடுகளில் இது முக்கியமான மாற்றங்களை (பந்தியின் மத்திய பகுதி, கல்விசார்ந்த காரணிகளால் நிகழும் அண்ணிய செலாவணி இழப்பை
பற்றிக்கூறும் போது) ஏற்படுத்துகின்றது. இது, ஐக்கிய ராச்சியத்தியத்திலுள்ள
பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மாறாக‌ அரச
பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் மூத்த பேராசிரியர்களின் வேலை
மணித்தியாலங்களை குறித்த தெளிவற்ற தகவல்களை வழங்குவதோடு
இம்முடிவுகள் எவ்வாறு, எந்த மூலங்களிலிருந்து பெறப்பட்டன போன்ற
தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. இவ்வறிக்கையின் அடிப்படை
முன்மொழிவான தனியார் உயர்கல்வி நிறுவனங்களை
அறிமுகப்படுத்துவதானது, பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரச
பல்கலைக்கழகங்கள், குறைந்தது அவற்றின் ஆய்வு வெளியீடுகள் மூலமாவது
பொதுமக்களுக்கு பிரயோசனமாக இருப்பதில்லையென்ற காரணத்தை
முன்வைத்தே மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு முக்கியமாக ஆய்வு
நடவடிக்கைகளில் பொது மூலதனத்தின் குறைபாட்டையோ ஏனைய
காரணங்களை குறித்தோ எவ்வித பகுப்பாய்வும் மேற்கொள்ளப்படவில்லை.


பொறுப்பாண்மை குறித்த புரிதல் பெரும்பாலும் நிர்வாகரீதியாக இருப்பதோடு,
பல்கலைக்கழக ஆசிரியர்கள் தாம் உடன்படிக்கைக்கு வந்த விடயங்களில்
செயற்பட்டு சேவைகளை வழங்க வேண்டுமென்ற ஒப்பந்த அடிப்படையான
எண்ணவோட்டத்திலேயே இருக்கின்றது. இதன்வழி, பல்கலைக்கழக
ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படுவது, வழங்கப்பட்ட மணித்தியாலங்களில்
பாடத்திட்டங்களை நிறைவுசெய்தல், ஆய்வுகளை தேசிய அபிவிருத்தி
இலக்குகளுக்கேற்ப மேற்கொள்ளுதல், பட்டப்படிப்பின் பாடத்திட்டங்களை
பட்டதாரிகளின் தொழில்வாய்ப்பு தகுதியாக்கத்துக்கான‌ சந்தை
கேள்விக்கேற்ற‌வகையில் வடிவமைத்தல் போன்றனவாகும். இதுவே “தர
உறுதிப்பாடு” என்ற பதத்தின் மூலம் அறியப்படுவதோடு “செய்யப்பட
வேண்டிய வேலைகள்” என அறியப்படும் அதன் அளவியல்சார் ஏற்பாடுகள்
(அவற்றின் பெயர்களைத் தவிர) சமூகத்துக்கு பயனுள்ள வகையில்
பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதற்கான அறிகுறியாகவும்
கொள்ளப்படுகின்றது.

இத்தகைய நிர்வாகம் சார்ந்த பொறுப்பாண்மையும் கட்டாயம்
தேவைப்படுவதோடு இது உயர்கல்வி நிறுவனங்கள் சரியாக
செயர்படுவதற்கான தூண்டுகோலாகவும் இருக்கின்றது. ஆனால், இதனை
மட்டும் அறிமுகப்படுத்துவதனாலும் நிறுவுவதாலும் உயர்கல்வி அமைப்பில்
பொறுப்பான்மை ஏற்பட்டுவிடுமா? இவ்விடத்திலேயே ‘யாருக்காக இந்த
பொறுப்பான்மை?’ என்ற கேள்வியும் எழுகின்றது. பொறுப்பான்மை என
அறிக்கை குறிப்பிடும் விடயம், வரி செலுத்தும் பொதுமக்களுகாகவா அல்லது
அவர்களிநின்றும் கல்வியை தூரமாக்கி கட்டணம் அறவிடும் பண்டமாக்கும்
சந்தைகளுக்காகவா? நம் எல்லோருக்கும் தெரிந்தவகையில் தனியார்
நிறுவனங்கள் இலாப நோக்கில் இயங்குவதோடு அவற்றின் பொறுப்பான்மை
சந்தைகளின் கேள்வியை அடிப்படையாகக் கொண்டதாகும். அறிக்கையில்
கையாளப்பட்டுள்ள மூன்றாம் தர அணுகுமுறையானது களின் லாப
நோக்கத்தை அனுமதிக்கும் அரசின் தடையற்ற அனுமதியை
குறித்துக்காட்டுகின்றது. தெளிவாக இது ஒரு தனியார் அமைப்பில் தமது
வாழ்க்கையையும் கல்வியையும் பேரம் பேச வேண்டிய சூழ்நிலைக்கு
தள்ளப்படும் இளம்தலைமுறையினருக்கு வழங்க வேண்டிய‌ சமூக, அரசியல்
பொறுப்பாண்மையாக இருக்காது.


முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் நாட்டின் இலவசக்கல்வியின்
இலக்குகளுக்கன்றி திறந்த சந்தைக்கே பொறுப்புக்கூறுவனவாக இருக்கின்றன.
இலவசக்கல்வியின் இலக்குகளை நான் இப்பத்தியின் ஆரம்ப ஆக்கத்தில்
சுமதி கூறுவது போல “சமூக நகர்வினால் நம்மைச் சூழவுள்ள
உலகைப்பற்றிய புரிதலையும் தனது நாடு, சமூகம் மற்றும் உலகத்தில் தமது
இடத்தையும் வகிக்கவேண்டிய பாகத்தினையும் அறியும்”
புரிந்துகொள்கின்றேன். இலவசக்கல்வியின் விடுதலைக்கான பார்வை
முழுதுமாக ஒதுக்கப்பட்டு அவ்விடத்தில் அரச மற்றும் தனியார்
பல்கலைக்கழகங்களுக்கு கட்டணம் அறவிடப்படும் பாடநெறிகளை
வழங்குவதற்கான மாற்றுவழியாக முற்போக்காக காட்டமுனையும்
‘கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும்’ எடுத்துரைப்பு
முன்னெடுக்கப்படுகின்றது. இலவசக்கல்விக்கான வளங்களை நிறைவாக
வழங்குவதன் மூலம் கல்விக்கான அணுகலை விரிவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெறாமைக்கான காரணம்
நிதிப்பற்றாக்குறையாகும். நிதி பாவிக்கப்பட்ட விதம் குறித்து
கலந்துரையாடப்படுவது அதிலும் அரிதாகும். வளங்கள் குறித்தான
கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்படாதுவிடத்து பொறுப்பாண்மை,
குறிப்பாக அதன் அரசியல் மற்றும் சமூக வேற்றுநிலைகள் குறித்து
கலந்துரையாடுவது கடினமாகும்.