எமது நல்வாழ்வுக்கான சுமை: வசைகளின் கதையாடல்களில் வர்க்கம்

ஷாமலா குமார்

தற்போதைய காலகட்டத்தில் எந்த போராட்டமானாலும் கொடூரமான
அடக்குமுறையையும் அந்த இயக்கங்களின் தலைவர்கள் மீதான
திட்டமிடப்பட்ட தாக்குதல்களையும் ஏனைய உறுப்பினர்களை
செயற்படுவதினின்றும் தடுப்பதற்கான பயத்தை ஏற்படுத்தும்
உத்திகளுடனேயும் தான் முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது. சில
வேளைகளில் இதற்கான பலமான ஆயுதமானது உளம்சார்ந்ததாக
இருக்கக்கூடும்; இப்பொருளாதார நெருக்கடி காலங்களில் அதனை சமாளித்து,
இன்னும் அதனை எதிர்த்துப் போராடுவோரிடமிருந்து நெருக்கடியால்
பிழைக்க முடியாதோரை பிரிக்கும் உத்தி. இருப்பவர்களுக்கும்
இல்லாதவர்களுக்குமிடையில் ஆழமான குழிகளை தோண்டி
இல்லாதவர்களின் இழப்பில் இருப்பவர்களை நோக்கிய பலமான ஈடுபாட்டை
செலுத்துவதன் ஊடாக அரசாங்கம் தனக்கான அணியை தேர்வு
செய்துள்ளதாக கருதலாம். இந்நடவடிக்கை நீதிக்கான போராட்டத்தில்
கூட்டாகவும் வலுவாகவும் நிற்கும் தொழிற்சங்கங்கள், மாணவ மற்றும்
சிவில் அமைப்புகள் போன்ற அமைப்புகளின் மூலங்களை மௌனிக்கச்
செய்வதையும் உள்ளடக்கியுள்ளது.

அரசின் பொறுப்பான பொருளாதார நீதியை பாதுகாப்பதை புறந்தள்ளல்
மற்றும் கூட்டான எந்த நடவடிக்கைகளுக்கும் அதன் துலங்கலான
தாக்குதல்கள் காரணமாக எமது நல்வாழ்வு உட்பட நாட்டின் பல
அம்சங்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. கல்வித்துறையில்
ஏற்படுத்தப்படும் சீர்திருத்த முன்மொழிவுமக்ளும் திடீர் மாற்றங்களும்,
அவற்றுக்கான நியாயப்பாடுகள் கல்வித்துறையில் இருக்கும் சிக்கலகளாக
கட்டமைக்கப்படுவதும், உண்மையான சிக்கல்களுக்கும்
முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கும் இடையே காணப்படும்
முரன்பாடுகளும், ஜனநாயகத்தன்மையுள்ள எதிரணியை மௌனிக்கச்செய்யும் அரசின் செயற்பாடுகளும் என்னை நம்பிக்கையற்ற சூழலுக்கு
இட்டுச்சென்றிருக்கின்றது. இவ்வாறான நெருக்கடியான காலங்களில்
கல்விக்கான அணுகல் குறைந்து போகும் மக்களுக்கு மேலும் கல்விக்கான
அணுகலை தூரமாக்குவதாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக
தெரிகின்றது.

ஏழைகளின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள நெருக்கடி

கல்வி, கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மற்றும்
இவற்றில் பொதுமக்களுக்கான ஈடுபாடு போன்ற விடயங்கள் நாம்
முகங்கொடுக்கும் சிக்கல்களிலிருந்து பிரிக்க முடியாதவையாகவும் நமது
சிக்கல்களுக்கு நாமே தீர்வு காண வேண்டுமென்ற மனநிலையிலிருந்து
விலத்திவைக்க முடியாதவையாகவும் இருக்கின்றன. உணவு விவசாய
அமைப்பின் (FAO) 2022ன் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செப்டெம்பர்
மாதத்தில் வெளியாகிய அறிக்கையின் படி, இலங்கையில் 40%மான
குடும்பங்கள் பொருத்தமற்ற உணவுமுறையை கையாள்வதோடு அவற்றில்
25%மான குடும்பங்களுக்கு குறைவான உணவே கிடைப்பதாகவும் 50%மான
குடும்பங்கள் தமது உணவின் அளவை குறைக்க வேண்டிய சூழ்நிலை
உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்புள்ளிவிபரங்கள் நாம்
யாரென்பதை பொருத்து மாற்றமடையலாம். உதாரணமாக, மிகக்குறைந்த
வருமானம் பெறும் குடும்பங்களில் எட்டில் ஒரு குடும்பம் கடந்த வாரத்தில்
தமது உணவில் புரதச்சத்தை சேர்க்கவே இல்லை. ஜூன் 2022 ஆகும் போது,
நான்கில் ஒரு குடும்பம், நெருக்கடி காலத்துக்குரிய “வாழ்வாதார
அடிப்படையான” சமாளிப்பு உத்திகளுக்கு மாறியிருப்பதோடு, இவ்வுத்திகள்,
தமது அதிக ஆக்கவளமுடைய சொத்துகளை விற்றல், மருத்துவ
செலவுகளை குறைத்தல் மற்றும் குழந்தைகளை பாடசாலைகளில் இருந்து
இடைநிறுத்தல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இவ்வாறான
நடவடிக்கைகளால் குடும்பங்களின் தற்கால நல்வாழ்க்கை மட்டுமன்றி, நீண்ட
காலத்தில் தம்மை பேண்தகு நிலைக்கு கொண்டுவர ஏதுவான வாழ்வாதார
மூலம், சுகாதார நலம், கல்வியை அடைவதற்கான இயலுமை ஆகியவை
பாதிக்கப்பட்டிருக்கின்றன.

2023 பாதீடானது கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான செலவீனங்களை
குறைத்துள்ளதோடு மிகவும் குறைந்த நிவாரநங்களையே
கொண்டிருக்கின்றது. பொது வைத்தியசாலைகள் ஏற்கனவே தாம் வழங்கி
வந்த சில ஆய்வுகூட சேவைகள் மற்றும் மருந்துகளின் வழங்கலை
நிறுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. எமது பீடத்தின் சுத்தம் செய்யும்
பணியாளரான சுவர்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது தாயின்
கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயை சமாளிக்க முடியாமல் திணருவதாக
கூறுகின்றார். இவர் ஒரு வெளியில் இருந்து பெறப்படும் சேவை
வழங்குனரின் கீழ் பணிபுரிவதால் வைத்தியசாலைக்கான ஒரு நாள் பயணமே
தன்னால் இயலாத காரியமாக இருப்பதாக கூறுகின்றார். இப்பயணத்துக்காக
தனது அன்றாட கூலியில் ஒரு நாளை தியாகம் செய்து, முச்சக்கரவண்டிக்கு
பெருந்தொகையான பணத்தை கட்டி, தாயை வைத்தியசாலையில்
பரிசோதனைக்காக கொண்டுசென்று, பொது வைத்தியசாலையில் இரத்த
மாதிரிகளை பரிசோதனை செய்யும் சேவைகள் வழங்க முடியாதிருப்பதால்
அதனை தனியாருக்கு எடுத்துச்செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார்.
இதனால், அவர், யாருமே இருக்க கூடாத சூழ்நிலையான தனது தாயை
தன்னால் கவனிக்க முடியுமா என்ற சிக்கலான தீர்மானத்தை அன்றாடம்
மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும்
இவர் எடுக்க வேண்டிய தீர்மானங்களும் மேற்கொள்ள வேண்டிய
செலவுகளும் தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் தூரநோக்கற்ற தேசிய
கொள்கைகள்; இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளாரின்
கண்ணியமான தொழில் செய்வதற்கான உரிமை; தரமான, செலவுகளை
தாங்கத்தகு பொதுபோக்குவரத்தை வழங்கத் தவறியிருக்கின்றமை; பொது
சுகாதாரம் மற்றும் நலன்புரிக்கான செலவீனங்களை குறைத்தமை;
முதியோருக்கான பராமரிப்பை உபேட்சித்தமை போன்ற விடயங்களோடு
இணைத்து நோக்கப்பட வேண்டியவையாகும். தற்போது இது அனைத்துமே
சுவர்ணாவின் தனிப்பட்ட சிக்கலாக மாறியிருப்பதோடு அரசாங்கம் அதன்
பொறுப்பிலிருந்து துறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நான் தினமும் வேலைக்காக வாகனத்தில் பயணிக்கும் போது (நான்
இன்னமும் தாங்கத்தகுந்த செலவு) பல பெண்கள் பாதைகளில் சுள்ளிகளை
தமது தோள்களில் சுமந்து தமது தோள்களின் மீது சுமத்தப்பட்டுள்ள
சுமைகளை அசையாமல் தாங்கி வீடு நோக்கி செல்வதை காண்கின்றேன்.
அரசாங்கத்தின் மின்சார கட்டண வீதப்பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள
பின்னடைவான திருத்தம் காரணமாக, 50 ரூபாவிலிருந்து 500 ரூபா வரை
மின்சார் கட்டணங்கள் வரும் குறைவான நுகர்வு மேற்கொள்ளும் மக்களுக்கு
அதிகரிக்கும் கட்டண வீதப்பட்டியல் காணப்படுகின்றது. இத்திருத்தம்,
இலங்கை மின்சார சபையில் (CEB) காணப்படும் ஊழல்கள், CEB
தொழிற்சங்கம் சோரம்போனமை, CEBக்கு உள்ளேயும் வெளியேயும்
மேற்கொள்ளப்படும் வினைத்திறனற்ற மற்றும் வீண்விரயமான
நடவடிக்கைகள் குறித்து நாட்டில் சூடான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு
வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சங்கள் காத்திரமாக
செயற்பட வேண்டிய சூழ்நிலையொன்றில் இத்தொழிற்சங்கம் சோரம்
போயுள்ளதோடு, தனது தொழிலாளார்களை பாதுகாக்கும் வலிதான
தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதோடு அரசாங்கத்தின் மிகவும் மோசமான
நிலையிலுள்ள பிரஜைகளை தாக்கும் கொள்கைகளை எதிர்க்கத்துணியாத
நிலையில் இருக்கின்றன. இவ்வாறான கட்டணப்பட்டியலகள் ஏனைய
எரிபொருள் செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு இதனால்
மக்கள் விறகை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இதனால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சில
மாணவர்கள் தமக்கான செலவுகளை சுமக்க வேண்டிய சூழ்நிலை
உருவாகியுள்ளதோடு, ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மருத்துவ
நெருக்கடி, இதனால் இளைய சகோதரர்களுக்கான கல்வியின் அணுகல்
பாதிக்கப்பட்டுள்ளமை போன்ற காரணங்களால் தமது குடும்பங்களுக்குமாக
உழைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள் தமது
கல்வி நடவடிக்கைகளை கொண்டு நடத்தவே கஷ்டப்படும் நிலையில்
மாணவர்களின் நலன், அவர்கள் உள்ளாகியிருக்கும் உளரீதியான நெருக்கடி
போன்ற விடயங்களை அடையாளப்படுத்தி தீர்வு காண்பதில் சிக்கல்கள்
எழுந்துள்ளன. இவர்களின், பட்டினிலிருக்கும் மக்களின் கதைகள், அவர்களின் குடும்பங்கள் எத்ரிகொள்ளும் ஊதிய இழப்புகள் அரசாங்க
கொள்கைகளிலிருந்து தூரமாக்கப்பட்டிருக்கின்றன.

கல்வியும் தவறான கல்வியும்

இலவசக்கல்வியை பாதுகாப்பதற்கான பலமான அணியாகவும் அரகலய
போராட்டத்தின் முக்கிய அங்கமாகவும் இருக்கும் பல்கலைக்கழக
மாணவர்கள் CEB தொழிற்சங்கங்களை போல உண்மையை உரக்கக்
கூறுவதனால் மௌனிக்கப்படவும் தாக்கப்படவும் செய்கின்றனர். பல
மாணவத் தலைவர்கள் தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ளதுடன்
இலவசக்கல்வியின் பயனை அடையாதவர்கள் எனத் தூற்றப்படவும்
செய்கின்றனர். இன்னும் பலர் அரகலயவில் பங்குபற்றியமைக்காக 10 முதல்
12 மணித்தியாலங்கள் “கேள்விக்குட்படுத்தல்” என்ற பேரில்
விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர். பல மாணவர்களும் அவர்களின்
குடும்பங்களும் தாம் எப்போது அழைக்கப்படுவோம் என அஞ்சுகின்றனர்.

அரசாங்கம் கவனமாக உடன்சேர்த்துக் கொள்ளும் பகிடிவதை தொடர்பான
கலந்துரையாடலே இரண்டாம் கட்ட தாக்குதலாகக் கருதலாம். பகிடிவதை
ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனை இல்லாதொழிக்க
அர்ப்பணிப்புள்ள வளங்கள், ஊழியர்கள், பல்கலைக்கழக அமைப்பினுள்
அதிகாரப்படிநிலைகளை அடையாளங்காணுதல், மாணவர்களின்,
பல்கலைக்கழக ஊழியர்களின் மற்றும் பொதுமக்களின் மனப்பாங்குகளில்
மாற்றங்களை ஏற்படுத்தல் மற்றும் மிக முக்கியமாக வினைத்திறனான
மாற்றத்தை உண்டுபண்ணுவதற்காக அரசியல் திடசித்தத்தையும் ஏற்படுத்த
வேண்டி இருக்கின்றது. இருப்பினும் தற்போது மாணவர்கள் மற்றும்
பல்கலைக்கழகங்கள் பற்றி மேற்கொள்ளப்படும் இலகுபடுத்தப்பட்டுள்ள
மற்றும் தேவையற்ற பகுப்பாய்வுடன் கூடிய கலந்துரையாடல்கள்
கல்விப்புலத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவதாய் இல்லை.
மாணவர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும் கடமைக்காக இதனை
தடுப்பதற்கு முன்னிறுத்தப்பட்டாலும் அரசாங்கத்தால் உருவாக்கப்படும்
கொள்கைகள் (அவை புலக்கத்துக்கு வந்தவுடன்) எவ்வாறு பல்கலைக்கழக நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்த உதவுகின்றன, கல்விக்கான
நிதியீட்டை குறைத்தல், ஏனைய நவதாராளவாத சீர்திருத்த கொள்கைகளை
சுமத்துதல் போன்றன எவ்வாறு பகிடிவதையை ஊக்குவிக்கின்றதென்ற
விடயம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு விடுகின்றது. கல்விப்புலத்தில்
காணப்படும் சிக்கலகளை அடையாளங்கண்டு அவற்றுக்கான அர்த்தபூர்வமான
தீர்வுகளை முன்வைப்பதை விடுத்து இவ்வாறான சிக்கல்களையும் அவை
தொடர்பான கலந்துரையாடல்களையும் மாணவர் சங்கங்கள் மற்றும்
பகிடிவதையை சுற்றி திட்டமிட்டு ஒழுங்கமைத்திருப்பதையே நாம்
காண்கின்றோம்.

மாணவர்கள் தமது பிரச்சினைகளை குறித்து பேசும் போதும், அவர்களில்
பலர் தாங்கொணாது அழுதுவிடும் போதும் பயனற்றுப்போவதாய்
தோன்றுவதோடு அரசாங்கத்தின் உணர்திறனின்மையும் வருத்துகின்றது.
அண்மையில் பேசிய ஜனாதிபதி, உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும்
பொருட்டு தனியார் கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதைப் பற்றி கூறினார்.
இவ்வாறான சீர்திருத்தங்கள் எம்மில் அதிகமாக பாதிக்கப்படும் மக்களையும்
உயிரை பிழியும் இந்நெருக்கடியையும் எந்த வகையிலும்
அடையாளப்படுத்தாது. கட்டணம் அறவிடப்படும் பாடநெறிகளால்
இலவசக்கல்வியும் அதற்காக ஒதுக்கப்பட வேண்டி இருக்கிற குறைவான
வளங்களில் மானிய திட்டங்கள், கடன்கள், மனித வளங்கள் இழக்கப்படுதல்
போன்ற சிக்கல்கள் ஏற்படுவதை இவர்கள் அறியவில்லையா? இவ்வாறான
வளங்கள் மூலமான உதவிகள் அதிகமாக தேவைப்படும் இக்காலத்திலும்
மக்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் பாரிய அடியாக விழுவது இவர்களுக்கு
விளங்கவில்லையா? இச்சீர்திருத்தங்கள் சில மாணவர்களுக்கு கல்வி
கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும் இதனால் கொடுக்க நேரிடும்
சமூக விலை, பணக்கார மற்றும் ஏழை மக்களுக்கிடையே விரிவடையும்
ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இலவசக்கல்வி தொடர்ந்தும் நலிவடைந்து
செல்லும் நிலை போன்ற சமூக விலைகள் சிலருக்கே ஏற்கக்கூடியதாக
இருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் கூட்டு முயற்சியும் நடவடிக்கையுமே
மாற்றத்துக்கான ஒரே வழி. இருப்பினும் எமது அரசாங்கம்,
ஜனநாயகபூர்வமான ஈடுபாடுகளையும் கூட்டுமுயற்சிகளையும் நசுக்குவது
கவலைக்கிடமானதாக இருப்பினும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசாங்கம்
கூட்டு சமூக பிரச்சினைகளை தனிப்பட்ட சிக்கல்களாக காட்ட முயற்சிக்கும்
நிலையையும் வர்க்க அடிப்படையிலான சிறப்புரிமைகளை (பொருத்தமாயின்)
வைத்து மறுத்துவிடும் எடுத்துரைப்புகளை நாம் கட்டாயம் சவாலாக்க
வேண்டி இருக்கின்றது. இதற்கான ஆதார வழி நெருக்கடிக்கான
கூட்டுக்காரணிகளின் தன்மையை விளங்குவதும் இவ்வாறான பொருளாதார
நெருக்கடிமிக்க சூழலில் மாற்றுக்கருத்து முன்வைப்பதற்கான உரிமையை
பாதுகாப்பதுமாகும்.