தர உத்தரவாதம்ஃ நிர்ணயம்

ஹஸினி லேகம்வாசம்

இலங்கை துக்கத்திற்கிடமான பொருளாதார வீழ்ச்சியில் மேலும் வீழ்ந்திடுவதால், பொது
நிதியிலான மாற்றங்களை நியாயப்படுத்தவும், தர உத்தரவாத அதிகரிப்பில் கவனம் செலுத்தவும்
அரச பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. சில பொதுவான தரநிலைகள்
பூர்த்தி செய்யப்படுவதையும் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்வதன் மூலம்இ மாநிலப்
பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வியின் ‘தரத்தை’ மேம்படுத்த தரநிர்ணயமானது முயல்கிறது.
விரிவான ஆவணங்கள் அதற்கான சான்றாகக் கருதப்படுகின்றன. இதற்கமைய, சிறந்த தரம்
மற்றும் தர வரிசைப்படுத்தலை நிலைநாட்டவும்இ தமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்குத் தாம்
நியாயமான வகையில் செயலாற்றுவதனை நிரூபிக்கவும், அதிகரித்து வரும் ஆவணப்படுத்துகை
தேவைப்பாடுகளையும், எப்போதும் போலில்லாத குறுகிய முடிவுத்திகதிகளையும் மற்றும்
இன்னும் செய்யக் கோரும் சமூகம், உயர் நிலை அதிகாரமுடையோர் மற்றும் அரசியல்வாதிகளின்
அதிகரித்த கேள்வியை பூர்த்தி செய்யவும் பல்கலைக்கழகங்கள் “சிறந்த” சான்றுகளை
சேகரிப்பதில் பலமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார மந்த காலகட்டத்தில் எம்மைச் சுற்றியுள்ள உண்மை
நிலைமைகளை அடைப்புக்குறிக்கு வெளியே இட்டு விட்டு, பல்கலைக்கழகத்திற்குள் நமது
வேலையைத் தொடருவது என்பது இலகுவான காரியமன்று. குறிப்பாக இந்த நெருக்கடியான
காலகட்டத்தில், தர உத்தரவாதத்தின் பொருள் மற்றும் இலக்குகளை கருத்திற் கொள்ளவும், அதை
அடைந்து கொள்வதில் அவற்றின் திறன் பற்றியும் சுருக்கமாக ஆராய்வதே என் நோக்கமாகும்.

குறைபாடுகளுடன் கூடிய வளாகங்களும் பொய்யான வாக்குறுதிகளும்

நிர்ணயிக்கப்பட்ட தர உத்தரவாத நியமங்களை அடைந்து கொள்வதானது, தொழிற்சந்தை
தேவைகள் மற்றும் கல்வி என்பவற்றுக்கிடையிலான சீரான, திருப்திகரமாக தொடர்புகளை
பேணுவதாகும். (குறிப்பாக, தொழிற்சந்தை எதிர்பார்க்கும் திறன்கள் மற்றும் ஆளுமைகள் உடைய
மாணவர்களை வழங்குவதன் மூலம் அவர்களது பட்டப்படிப்பின் பின் அவர்களை வேலைக்கு
அமர்த்தி, “தொழில் புரியத்தக்க” வகையில் வழங்குதல்)
இத்தகைய நிலமையை அடைந்து கொள்ளும் வகையில், கல்வி நிகழ்ச்சிகள் தமது
உள்ளடக்கங்கள் மற்றும் முறைமைகளை மீள வடிவமைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், நாம் சந்தையின் அனைத்து சமிக்ஞைகளுக்கும் பதிலளிப்பதானது எமது நோக்கங்கள்
மற்றும் காரணங்களில் இருந்து விலகிச் செல்ல வழி வகுக்கிறது. நோய்த் தொற்று நிலைமைகளின்
பின்னர், சந்தையானது உலகப் பொருளாதாரத்தினால் மந்த நிலையை நோக்கி தள்ளப்படும்

ஒவ்வொரு அறிகுறிகளையும் காட்டி நிற்கிறது. இம் மந்த நிலை விளைவுகளைப் போக்க
வெளிநாட்டு சந்தைகள் தம்மைத் தாமே தனிமைப்படுத்தினால், வெளிநாட்டுச் சந்தைகளில்
தங்கியிருப்பது பாரிய நெருக்கடிக்கு உள்ளாகி, வரலாற்றில் பலமுறை நிரூபிக்கப்பட்டதைப்
போன்று எம்மை தலை குனியச் செய்யும் நிலமை ஏற்படும். இந்த மாற்றமானது மிக விரைவாக
பொருளாதார சீர்திருத்தத்தைப் மையப்படுத்த வேண்டும்.

தர உத்தரவாதமானது தனியார் மயமாக்கல் தொடர்பில், ‘கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தல்’
போன்ற விருத்தியடையும் சொல்லியலைத் தனதாக்கியுள்ளது. மூலதன வெளிப்பாய்ச்சலை
தடுப்பதில் தனியார் மயமாக்கல் பெரிதும் பங்காற்றுவதில்லை. உள்நாட்டில் பட்டங்களை
வழங்கும் தனியார் நிறுவனங்கள் பலவற்றினதும் தாய் நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள்)
வெளிநாடுகளிளேயே அமைந்துள்ளன. ஆகையால் இலாபமானது ஏனைய உலக நாடுகளையே
சென்றடையும். இவை பெருமளவு இலாபத்தை தமதாக்கிக் கொள்கின்றன. தனியார்
மயமாக்கலின் மற்றுமொரு பிரதான துறை சுகாதாரத்துறை ஆகும். இலாபத்தில் பெருமளவு
பங்கானது வெளிநாட்டில் அமைந்துள்ளஇ அதிலும் குறிப்பாக வடக்கில் அமைந்துள்ள நாடுகள்
மருந்து மற்றும் மருத்துவ உபகரண நிறுவனங்களினால் உறிஞ்சப்படுகிறது. உள்நாட்டவர்கள்
மீதமாகும் இலாபத்தை வரி விலக்குள்ள நாடுகளில் முதலீடு செய்வதைப்பற்றி குறிப்பிட
வேண்டிய அவசியமில்லை.
தர உத்தரவாதமானது அறிவியல் மற்றும் அரசியல் குறைபாடுகளினால் நிரம்பியுள்ளமை
தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகும். சில சமயங்களில்இ கருத்தியற் பிரச்சினைகள் வெறுமனே
பெயர் குறிப்பிடுவதிலான பிரச்சினைகளாக குறைக்கப்படுகின்றன. உதாரணமாக, தர உத்தரவாத
கூட்டமொன்றில் கல்வியினை ஒரு பண்டமாக (வர்த்தக) குறிப்பிட்டமைக்கு நான் எதிர்ப்பு
தெரிவித்திருந்தேன். “கல்வியினை ஒரு பண்டமாக்குதல் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று
எனில் நாம் அதை வேறு வகையில் கூறலாம்’ என எனக்கு பதில் தரப்பட்டது. இங்கு, என்ன
அனுசரிக்கப்பட்டுள்ளது எனும் அரசியலிலும் பார்க்கஇ என்ன பெயர் வழங்கப்படுகிறது என்பதே
பிரச்சினையாகவுள்ளது.

வேறுபட்ட நிகழ்ச்சிகளை மதிப்பீடு செய்யும் மேம்படுத்தப்பட்ட பொதுவான குறிப்புகள் மிகவும்
சிக்கலாகிறது. இது தொடர்பில் நான் முன்னர் குறிப்பிட்டவற்றை மீளவும் குறிப்பிட
விரும்பவில்லை. மேலும் இவை, தற்போதைய பொருளாதார மந்த காலகட்டத்தில்இ
கடைப்பிடிக்க முடியாதவையாகும். சாதாரண நிலமைகளின் கீழ் பயன்படுத்தப்படும்,
நிறுவனங்கள் அல்லது நிகழ்வுகளை மதிப்பீடு செய்யும் இம்முறையானது அசாதாரண
நிலைமைகளின் பரிமாணங்களை வினைத்திறனாகக் காட்டாது. ஒரு நிகழ்ச்சி எவ்வாறு
செயற்படுகிறது என்பதை மதிப்பீடு செய்து அதற்கு ஒரு தரவரிசை வழங்கும் போது பாரியளவில்
சமமற்று பகிரப்பட்டுள்ள நிலப்பரப்பில் என்ன செய்யமுடியும், என்ன செய்ய முடியாதென்பதில்
தாக்கம் விளைவிக்கும், பெருகிவரும் நோய்த்தொற்று மற்றும் பாரிய அளவிலான பொருளாதார

நெருக்கடிகள் ஆகிய இரண்டினாலும் விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலைக் கட்டுப்பாடுகளை
புறக்கணிப்பது நியாயமற்றது.

எங்கே தர உத்தரவாதம்?

மிக வேகமான சந்தைப்படுத்தல் சூழலில் ” தொடர்புடையதாக’ ருக்க அதிக அழுத்தங்களை
எதிர்கொண்டுள்ள நிலையில், தர உத்தரவாதம் பற்றிய எமது சிந்தனையானது, ஒரு நிறுவனமாக
வாழ்வதற்கான பெரும் போராட்டத்தை பிரதிபலிக்கிறது. பொருளாதார மற்றும் வரலாற்று சூழல்
பற்றிய கேள்விகளை எழுப்புவதில் நமது இயலாமையையும் இது பிரதிபலிப்பதோடு உயர் கல்வி
நிறுவனங்கள் என்ற வகையில், எமது பாரிய தோல்வியும் இதில் வெளிப்படுகிறது.
பல்கலைக்கழகங்களிலான தார்மீக வழக்குகளானது, தொடர்ந்தும் தர உத்தரவாத தலையீடுகளை
நியாயப்படுத்தியே வருகின்றன என்பதனை நான் அறிவேன். இதற்கான பிரதான காரணம்இ
பரவலான படிநிலை மற்றும் பொறுப்புக் கூறல் இன்மையே ஆகும். எனினும் தர
உத்தரவாதமானது, “பணிகளை நிறைவேற்றிக் கொள்ளல்” மற்றும் “பணிகள்
நிறைவேற்றப்பட்டமை” தொடர்பில் கிடைக்கத்தக்கதான சான்றுப்படுத்தும் ஆவணங்களை
மலையளவு சமர்ப்பிக்கவும் இப் படிநிலையைப் பயன்படுத்துகிறது. குறைந்தளவு
நிதியளிக்கப்பட்ட முறையின் கீழ்இ தமது கடமைகளை வினைத்திறனாக புரிய ஏற்கனவே
போராடிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் மீது நேரம் மற்றும் முயற்சிக்கான அதிகரித்த கேள்வியை
தர உத்தரவாதம் மேலதிகமாக கோருவதால், குறித்த பணி முழுமையாக
நிறைவேற்றப்படாமலிருக்கலாம்.

தரத்தினை நாம் உறுதிப்படுத்த விளைகிறோம். ஆகையால், அதன் உண்மையான
நோக்கத்தினை, காரணத்தினை உணரத் தவறுகிறோம். அதிலும் குறிப்பாக, தற்போதைய
காலகட்டத்தில் உணரத் தவறுகிறோம். இந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சி இரு
தரப்பிலிருந்தும் அவசியமாகிறது. ஒன்று தர உத்தரவாத செயன்முறை; மற்றையது நிகழ்ச்சிகளது
மதிப்பீடு. நிகழ்ச்சிகளை மேம்படுத்தல்இ வழி முறைகள் மற்றும் வேறுபட்ட சூழல்களிற்கான
மதிப்பீட்டு முறைகள் இவற்றுள்ளடங்கும். இவை நிகழ்ச்சிகளது கலாசார மற்றும் சந்தர்ப்ப
சூழ்நிலைகள் தொடர்பிலும் தேவையான முக்கியத்துவத்தை வழங்கும். நிகழ்ச்சிகளைப் போலவே
அதிகளவு நேரம் மற்றும் முயற்சி கல்வி கற்றல் கற்பித்தலில் அவசியமாகிறது. அதன் பலனாக,
இவை இரண்டிற்கும் அரசின் பாரிய வள ஒதுக்கீடோ அல்லது மாறாக, தனியார்மயமாக்கல், முழு
அரச அனுமதியுடன் இலவசக் கல்வியை முற்றிலும் சிதைக்கும் ஒரு இருண்ட நிலைமை மீது
நேர்மறையான எதிர்பார்ப்போ அவசியமாகிறது.