நிகழ்பாலுறவாளர்கள் கவனிக்கப்பட்ட வேண்டியவர்கள்:
பல்கலைக்கழகங்களில் நேர்மறையான தளங்களை உருவாக்குதல்

ரம்யா குமார்

நான் கொழும்பு மருத்துவ பீடத்தால் வழங்கப்படும் பால்மை மற்றும்
சுகாதாரம் குறித்தான பட்டப்பின்கற்கை நிலையத்தில் கற்பிக்கின்றேன். நான்
ஒருங்கிணைந்து வழங்கும் பால்மை பதில்வினை சார் சுகாதார அமைப்பு
தொடர்பான மாதிரி அலகில் ஏனைய விடயங்கள் உட்பட
நிகழ்பாலுறவாளார்கள் சுகாதார அமைப்பில் முகங்கொடுக்கும் அனுபவங்கள்
குறித்தும் நாங்கள் கலந்துரையாடுவோம். இந்நிலை மிகவும் மந்தமானது.
இந்த மாதிரி அலகை கற்பிக்கும் பல செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி
மிகப்பெரும்பாலான சுகாதார ஊழியர்களுக்கு பால்/ பால்மை பதில்வினை
சார்ந்த ரீதியில் சேவைகளை வழங்குவது குறித்து எந்தவிட புலனுமில்லை.
Equal Ground அமைப்பினரால் 6 மாவட்டங்களில் (கொழும்பு, காலி,
யாழ்ப்பாணம், கண்டி, மாத்தளை, பொலன்னறுவை) மேற்கொள்ளப்பட்ட
ஆய்வின்படி, வெவ்வேறு வகையான ஒதுக்கல்கள், பாகுபடுத்தல்கள்,
வாய்மொழி/ உடல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட
பல்வேறுவகையான விடயங்களை நிகழ்பால்நிலையினர் முகங்கொடுப்பதாக
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வகையான கலந்துரையாடல்கள் பல்கலைக்கழகங்களில் கற்கும்
பால்புதுமையாளர்களின் நிலை குறித்து என்னை சிந்திக்க வைத்தன. 2021ஆம்
ஆண்டு நாடளாவிய ரீதியில், அனைத்து 25 மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட
4500 பேருக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பீடு ஒன்றின்படி,
12%மான மக்கள் தங்களை பால்புதுமையாளர்களாக அடையாளம்
கண்டுள்ளனர் (Equal Ground 2021). இதான்படி, எமது பல்கலைக்கழக
உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களில் 10%மானவ்ர்கள் தம்மை இவ்வாறு
அடையாளம் காணக்கூடும். இருப்பினும், அவ்வாறானவர்கள்
பல்கலைக்கழகங்களில் இலைமறைகாய்களாகவே இருக்கின்றனர். நான் கற்பிக்கும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கடந்த 8 வருடங்களில்
ஒரு மாணவரே என்னிடம் தனிப்பட்ட ரீதியில் தான் ஒரு பால்புதுமையாளர்
என அடையாளப்படுத்தியிருக்கின்றார். திருனருக்கான ஒரு செயலமர்வில்
நான் ஒருமுறை பங்குகொண்டபோது எனது வருகையையொட்டி ஒரு
மருத்துவ மாணவர் அவ்விடத்திலிருந்து உடனடியாக வெளியேறிச்சென்றமை,
தமது அடையாளத்தை வெளிப்படுத்த அச்சமுற்ற நிலையாக இருக்கலாம்
என்பதைக் காட்டுகின்றது. இதனை அடுத்து நான் ஏனைய அரச
பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் இந்த அனுபவத்தை கூறிய போது
இவ்வாறான அனுபவங்கள் தமக்கும் நேர்ந்ததாக கூறப்பட்டதோடு அரச
பல்கலைக்கழகங்களில் நிகழும் இவ்வாறான விடயங்கள்
கவலையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

‘ஈரின’ பல்கலைக்கழக வளாகங்கள்

ஈரினத்தன்மை அனுமானிப்பது அனைத்து மக்களும் இருவகையான பால்மை
மற்றும் பாலினத்துக்குள் அடங்குவர் என்பதாகும். எமது பல்கலைக்கழகங்கள்
போன்ற ஈரின கருத்தாக்கங்களை முன்னிறுத்தும் அமைப்புகள்
ஈரினத்தன்மையையும் இருபாலின நிலையையுமே வலியுறுத்துகின்றன.
பேராதனை பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்வியியலாளர் ஒருவரின்
அவதானத்தின் படி “இருபால்தன்மை குறித்து அதிருப்தியாக உணரும்
எவருக்கும் பல்கலைக்கழகங்கள் பாதுகாப்பான இடங்களல்ல, பகிடிவதை
போன்ற நிகழ்வுகளில் இவர்களுடன் நடந்து கொள்ளும் மாதிரிகள் மிகவும்
வீரியமாக இருக்கும்”. மாணவர்கள் தமது பால்மை நிலையை
வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். எமது
பல்கலைக்கழக அமைப்புகளில் தம்மை மகளிர் ஓரினப்பாலுறவு சார்
அடிப்படையில் சுய விளக்கம் வழங்கக்கூடியவர்களை (அல்லது இதற்கு
இடைப்பட்டவர்களை) காண்பது மிக அரிது. இன்னொரு பேராதனை
பல்கலைக்கழக ஆசிரியரின் அவதானப்படி, பல்கலைக்கழக ஊழியர்களின்
மத்தியில் பால்புதுமையாளர்கள் தம்மை வெளிப்படையாக
அடையாளப்படுத்தாவிடினும், “வாழ், வாழ விடு” என்ற கருதுகோளின் அடிப்படையில் செயற்படுவதால் மாணவர்களைக் காட்டிலும் ஆரோக்கியமான
நிலையே நிகழ்கின்றது” என தெரிவித்தார்.

பல கல்வியியலாளார்களின் கருத்துப்படி பல்கலைக்கழகங்களில் இடம்பெறும்
பகிடிவதை என்பது ஈரினத்தன்மையை பேண உதவும் அமைப்பாகும்.
பேராசிரியர் ஒருவர் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது “பகிடிவதை
பால் மற்றும் பால்மை சார் ஈரினத்தன்மையில் தங்க்யிருப்பதோடு,
பால்நிலை சார்ந்த விளிம்புநிலையை நகைப்புக்குள்ளாக்கும் செயலையும்
மேற்கொள்கின்றது”. பகிடிவதை குறித்த இந்த இருநிலை சார்ந்த கருத்து
கட்டாயமாக அடையாளப்படுத்தப்பட வேண்டியதோடு இதன் மூலம்
அபாயத்துக்கு உட்படக்கூடிய பாலியல் விளிம்புநிலையில் காணப்படும்
மாணவர்கள் குறித்த அக்கறையையும் கோரி நிற்கின்றது. பல்கலைக்கழக
உத்தியோகத்தர்களாகட்டும், மாணவர்களாகட்டும், ஏதோவொரு வகையில்
உடைசார்ந்த கட்டுப்பாடுகள் பல பீடங்களிலும் விதிக்கப்படுவதோடு அவை
பேணப்படவும் செய்கின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியலாளர்
ஒருவர் “எமது பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அரைக்கால் உடை மீது
விதிக்கப்பட்ட கட்டுப்பாடானது, பால்மை சார்ந்த வெளிப்பாட்டை
கட்டுப்படுத்தும் செயற்பாடாகும்” என கருத்து வெளியிட்டார். பகிடிவதை
கலாசாரம் பால்புதுமையாளர்களி சில குறிப்பிட்ட இடங்களிலிருந்து ஒதுக்கும்
செயற்பாட்டை கவனமாக மேற்கொள்கின்றது, உதாரணமாக பேராதனை
பல்கலைக்கழகத்தில் காணப்படும் “lovers’ lane” பகுதியில் பால்புதுமையாளர்கள்
அனுமதிக்கப்படுவதில்லை.

பல்கலைக்கழக மற்றும் பீட நிர்வாகங்களும் ஈரினத்தன்மையை பல
வழிகளிலும் ஊக்குவிக்கின்றன. பல சுகாதார தொழில்சார் கற்கைநெறிகளும்
பல வகையான பால்நிலை (மற்றும் இனங்களுக்கு) பாதகம் விளைவிக்கும்
வகையில் உடௌ சார்ந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. சில பீடங்கள், சில
வகையான உடைகளை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளேயும் சில
வேளைகளில் வைத்தியசாலை அமைப்புகளுக்கு வெளியேயும் தடை
செய்திருக்கின்றன. சில பீடங்கள் பெண்களுக்கு டெனிம் கால்சட்டை, டேன்க் டொப் மேற்சட்டை, டீசேர்ட், மெல்லிய கீலங்களுடைய மேற்சட்டை, டெனிம்,
குட்டை பாவாடை/ ஆடை, அரைக்கால்சட்டை, முக்காற்சட்டை, ரப்பர்
பாதணிகள், மற்றும் நிக்காப் போன்ற உடைகளும் ஆண்களுக்கு டீசேர்ட்,
டெனிம், கொம்பெட் காற்சட்டை, அரைக்காற்சட்டை, முக்காற்சட்டை, செருப்பு
மற்றும் ரப்பர் செருப்பு போன்றவையும் தடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான
செயற்பாடுகள் பால்புதுமையாளர்களை மிகக்குறைவான தெரிவுகளோடு
வரையறுக்க வைத்திருக்கின்றன.

திருநர்களுக்கு அசாத்தியமாக உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக
அமைப்புகள் அவர்களை சிக்கலுக்குள்ளாக்குகின்றன. பல ஓய்வறைகள்
பால்பொதுமைத்தன்மையோடு காணப்படுவதில்லை. இவ்வாறான
சூழ்நிலையே கட்டுப்பாடாக பால்மை சார்ந்து பிரிக்கப்பட்டுள்ள விடுதிகள்
மற்றும் ஏனைய தங்குமிட வசதிகளில் காணப்படுகின்றன. தங்குமிட
வசதிகளில் திருநர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொடர் வன்முறை
குறித்தான தகவல்கள் அவ்வாறானவர்களை அவ்வசதிகளில் தங்கியிருப்பதை
தடுக்கும் செயல்களாக இருக்கின்றன. இவ்வாறான நிகழ்வுகள்
பல்கலைக்கழக மாணவர்களை பல்கலைக்கழக கர்கைநெறி முடியும் வரை
பால்நிலை மாற்றும் மருத்துவ செய்கைகளை மேற்கொள்ள விடாமல்
தடுப்பதுவும் உண்மையே. பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவர்
தன்னிடம் ஒரு மாணவர் கூறியதாக சொன்ன விடயம் “எனது
பல்கலைக்கழக BA கற்கைநெறி முடியும் வரை நான் ஆணாக மாறும்
மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதை பிற்படுத்த வேண்டும்” என்பதாகும்.

இருப்பினும், பல்கலைக்கழகங்களில் பால்நிலை புதுமைத்தன்மை சார்ந்த
வெளிப்பாடுகளும் இல்லாமலில்லை. கிராபிட்டி சுவர் வரைவுகள் இவ்வாறான
புதுமை நிலைகளின் இருப்பை வெளிக்காட்டுவதாக இருக்கின்றன.
பல்கலைக்கழக அமைப்புகளில் ‘ட்ரேக்’ வகை நாடக அமைப்புகளை
திரையரங்கு அனுபவங்களில் வழங்குவதும் நிகழ்வதோடு இவ்வாறான
‘ட்ரேக்’ வகை திரையரங்கு அனுபவங்கள் பொதுவாக தென்னாசிய நாட்டு
கலாசாரங்களில் காரசாரமான விமர்சனங்களை பெறும் அனுபவங்களாகும்.

பேதைமையும் பக்கச்சாய்வும்

பால்மை எனும் படகை அசைக்கும் எந்தவித பால்மை சார்ந்த வெளிப்பாடும்
பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களை நேர்மறையான
நடத்தைக்கே கொண்டுசெல்கின்றன. பல்கலைக்கழகங்களில் பால்புதுமை
சார்ந்த அக்கறையை வெளிப்படுத்தும் போதெல்லாம் பழமைவாதிகளால்
ஏதோவொரு வகையில் அந்த அக்கறைகள் சருகாகவே போகின்றன.
இவ்வாறான நேர்மறையான நடத்தைகள் சிலபோது பால்புதுமை எனப்படும்
‘வோக்’ கலாசாரம் எமது கலாசார சீரழிவுக்கு இட்டுச்செல்வதாகவும்,
இன்னொரு வகையில் இதுவொரு மேற்கின் அஜென்டா எனவும் எமது
நாட்டின் சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும்
செயற்பாடெனவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் இந்த
பால்புதுமை/ இருமை எதிர் பாலியல் ஒத்திசைவுகளை குழந்தைப் பருவ
அதிர்ச்சி அல்லது பாலியல் அத்துமீறலால் ஏற்பட்டதெனவும் தவறாக
சித்தரிக்கின்றனர்.

பல்கலைக்கழக சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கைகள் பாலியல் சமத்துவம்
மற்றும் நியாயத்துவத்தை முற்படுத்தி வரையப்பட்டிருந்தாலும்
இக்கொள்கைகள் பால் இருமை நிலையை மேவிச்செல்லும் அளவு
காணப்படுவதில்லை. பாலியல் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு
கொள்கையாக “பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே
பால்மை, பால்நிலை, பால்மை வெளிப்பாடு மற்றும் வயது போன்ற
பேதங்களை விடுத்து சமத்துவத்தை [மேலுயர்த்தி] வேற்றுமைக்கு எதிராக
[போராடல்]” என்பதை குறிப்பிடலாம். பால்புதுமையாளர்கள் குறித்த
கலந்துரையாடல்கள் ஆங்காங்கே நடைபெற்றாலும் அவை எங்கோவொரு
முட்டுச்சந்தில் நின்றுவிடுகின்றது. பேராதனை பல்கலைக்கழக
கல்வியியலாளர் ஒருவரின் கூற்றுப்படி, இவ்வாறான கலந்துரையாடல்கள்
கூட “பாலியல்சார் மோசமான நகைச்சுவைகளையும் ஆண்களை
விளிம்புநிலையினராகக் கொண்டு முன்வைக்கப்படும்
கலந்துரையாடல்களாகவுமே எஞ்சுவதாக” காணப்படுகின்றது.

எந்தவொரு பல்கலைக்கழகங்களிலும் பால்புதுமையாளார்களுக்கான ஆதரவு
அமைப்புகள் இல்லை. கொழும்பு பல்கலைக்கழக கல்வியியலாளார்
ஒருவரின் கருத்துப்படி, “எனக்குத் தெரிந்தவரை பல்கலைக்கழகங்களில்
பால்புதுமையாளர்களுக்கான மாணவ ஆதரவு அமைப்புகளோ சேவைகளோ
காணப்படவில்லை”. அவரின் கருத்துப்படி, கொழும்பு பல்கலைக்கழகம்
அமையப்பெற்றிருக்கும் இடம் காரணமாக பல்வேறு அரச சார்பற்ற
அமைப்புகள் பால்புதுமையாளர்களுக்காக இயங்குவதால் அதன் மூலமான
ஆதரவு அமைப்பு காணப்படுவதாக தெரிவித்தார். பேராதனை பல்கலைக்கழக
கல்வியியலாளர் ஒருவரின் கருத்துப்படி தம்ழி பேசும் ஆலோசகர்கள்
எவருமே பால்மை குறித்த உணர்திறன் அற்றவர்கள் என்கின்றார்.
பால்புதுமையாளர்களுக்கான முறையான ஆலோசகர்கள் இல்லாத
காரணத்தால் இவ்வாறான மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள்
பெரும்பாலும் அவர்கள் தற்துணிவோடு எடுத்த முடிவே இந்த அடையாளம்
என்ற தொனியில் அந்த அடையாளங்கள் மற்றும் பாலியல் நாட்டத்தை
கைவிடும் படியே ஆலோசிக்கப்ப‌டுகின்றார்கள். “முறையாக
பயிற்றுவிக்கப்பட்ட பால்மை உணர்திறன் நிறைந்த ஆலோசகர்கள்
இல்லாதவிடத்து மாணவர்கள் தம்மை வெளிப்படுத்த முடியாத சூழ‌லையே
முகங்கொடுப்பர்”.

இறுக்கமான நேரியல்புள்ள தளங்கள்

தற்போதைய சூழ்நிலையில் தமது பால்புதுமை அடையாளத்தைமாணவர்கள்
ஒத்துணர்வுள்ள சக மாணவர்கள் மற்றும் விரிவுரையாள்ர்களின்
உதவியையே நாடுகின்றார்கள். கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாள்ர்
ஒருவரின் கருத்துப்படி, “மாணவர்கள் தமது பால்புதுமை அடையாளத்துக்கு
ஒத்துழைப்பு வழங்கக்கூடிய பீடங்கள் மற்றும் விரிவுரையாளார்கள்
யாரென்பதை இனங்காணுகின்றனர், பொதுவாக ஆங்கில பீடமே இவ்வாறான
ஒத்துழைப்பை வழங்குகின்றது. “சில அரிதான நிகழ்வுகளில்
பல்கலைக்கழகங்களில் காணப்படும் உயர்பதவி வகிக்கும் சிலர் கூட
பால்புதுமையாளர்களுக்கான ஒத்துழைப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் கூறியதன்படி, “இரு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் அவர்கள் பல்கலைக்கழக
வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுயமரியாதை பேரணியில் கலந்துகொண்ட
நிகழ்வானது முன்னேற்றமளிப்பதாகவும், இவ்வாறான விடயங்களுக்கு
ஏதுவான களம் காணப்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளதோடு
இதற்கு மேலதிகமாக கொள்கையளவிலும் நிர்வாக மற்றும்
கல்வித்திட்டங்களிலும் ஏற்படும் மாற்றங்களே மேலதிக உறுதிநிலையை
ஏற்படுத்தும்” என்றும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் நேரியல்புள்ள தளாங்கள் உருவாவதில் உள்ள
மிகப்பாரிய சிக்கல் நாட்டில் காணப்படும் குற்றவியல் சட்டம் பால்புதுமையை
குற்றப்படுத்தியிருப்பதாகும். இலங்கையில் காணப்படும்
உளவியலாளர்களுக்கான கல்லூரி உள்ளிட்ட‌ பல நிறுவனங்கள் இதனை
குற்றப்படுத்துவதை எதிர்த்தும் குற்றவியல் சட்டத்தில் 365ஆம் உறுப்புரை
நீக்கத்தையும் வேண்டுகின்றன. ஓரினச்சேர்க்கை
குற்றப்படுத்தப்பட்டிருந்தாலும் பால்புதுமையினராக
அடையாளப்படுத்தப்படுவது குற்றமற்றதாக காணப்படினும் தம்மை அவ்வாறு
அடையாளப்படுத்துவதில் சட்டரீதியான சிக்கல்கள் காரணமாக மாணவர்கள்
தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, தம்மை பால்புதுமையினராக
அடையாளப்படுத்துவோர் பொதுவாக உயர் இடங்களில் இருப்பவர்களாக
இருப்பதோடு இவை தொடர்பான விமர்சன கண்ணோக்கு மிகவும் குறுகிய
எல்லைக்குள்ளேயே விரிகின்றது.

முரண்நகை என்னவெனில், நாம் வாழும் உலகின் பகுதி
வரலாற்றுரீதியாகவே பாலியல் நாட்ட மற்றும் பால்மை அடிப்படையில்
மிகவும் பாய்மமாக இருந்திருப்பதே ஆகும். ஒரு பேராசிரியரின் கருத்துப்படி
“மகாபாரதம் போன்ற காவியங்களில் கூட மிகப்பரந்தளவிலான
அடையாளங்களை நாம் கண்டுகொள்ளலாம். காலம் மற்றும் இடரீதியான
ஓட்டம் மற்றும் மாற்றத்திலும் கூட இவற்றின் எல்லைகள் விரிந்து
செல்வதை நாம் காணலாம். இவ்வாறான கலந்டுரையாடல்கள்
விளிம்புநிலையிலான குரல்களை மேலோங்கச் செய்ய உதவும்”. பல்கலைக்கழக சமூகமான நாங்கள் பால்புதுமையினர் தொடர்பான
மௌனங்களை தகர்த்தெறிய உழைப்பதோடு அவர்களுக்கான நேரியல்புள்ள
தளங்களை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.