பல்கலைக்கழகங்கள் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக
இருந்தால்…

கௌஷல்யா பெரேரா


ஒரு வருடங்களுக்கு முன்னர் (உலக வங்கியால் வழங்கப்பட்ட கடன்களால்
நிதியுதவி அளிக்கப்பட்ட) ஒரு பயிற்சிநெறியில் பட்டதாரிகளை
உருவாக்குவது கார்களை உற்பத்தி செய்வது போலானது எனச்
சொல்லப்பட்டது. வாங்குபவர்கள்- தொழில்வழங்குனர்கள்- அவர்கள் என்ன
பெறுகின்றார்கள் என தெரிய வேண்டியுள்ளது. இந்த உதாரணத்தை ஒரு
மேம்போக்காக எடுத்துக் கொள்வோம். கடந்த வருடம் மிச்சிகனின் தானியங்கி
தொழிற்துறை உணர்ந்துகொண்டதைப் போல ஒரு காரின் தரம்
தங்கியிருப்பது பல காரணிகளிலாகும், அதன் ஒரு முக்கியமான காரணி
அதற்கான மனித உழைப்பாகும்.
அரச பல்கலைக்கழகங்களில் காணப்படும் மனித ஊழியம் சார் சிக்கல்கள்
இலங்கையில் காணப்படும் பல்கலைக்கழகங்களில் கூட ஊழியர் சார்
சிக்கல்கள் காணப்படுகின்றன. இதனால் எமது மாணவர்களின் கல்வியும்
எமது தொழிற் தரமும் பாதிக்கப்படுகின்றன. ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு
செய்வதும் தக்கவைப்பதும் பல்கலைக்கழகங்களில் ஒரு பாரிய சிக்கலாக
தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது.
கடந்த இரு தசாப்தங்களில் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்களை
ஆட்சேர்க்கும் அளவு அதிகரித்து வருகின்றது: 1995ல் 9245, 2015ல் 25,676
மற்றும் 2021ல் கிட்டத்தட்ட 44,000. 2015 தொடக்கம் 2021 வரை மட்டும்
மாணவர் ஆட்சேர்ப்பு 70%ஆல் அதிகரித்துள்ளது. ஒப்பிட்டுப் பார்த்தால்
பாடசாலை (பாலர் மற்றும் இடைநிலை) மாணவர்களின் ஆட்சேர்ப்பு
நிலையான புள்ளிவிபரத்தைக் காட்டுகின்றது: 1995ல் 342, 386 இலிருந்து 2021ல்
337, 450 பேர். பல்கலைக்கழக ஆசிரிரய் உள்ளீர்ப்பு பட்டதாரி மாணவர்

ஆட்சேர்ப்புக்கு ஏற்ப அதிகரிக்கப்படவில்லை. அதற்கு நேர்மாறாக, “அரச
திறைசேரியில் நிதியின்மை” என்ற காரணத்தைக் காட்டி பல்கலைக்கழக
ஆசிரியர் ஆட்சேர்ப்பு அதே நிலையில் இருத்தப்பட்டுள்ளது.
எப்போதுமே அரச பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது
நிவர்த்திக்கப்படாத விடயமாகவே இருந்து வந்துள்ளது. நிரந்தர ஆசிரியர்
ஆட்சேர்ப்புக்கு அரச திறைசேரி இடங்கொடுத்தாலும் காலங்கடந்து போன
வழிமுறைகள் மற்றும் உள்ளார்ந்த ரீதியில் நடக்கும் அரசியல்கள் அதர்கான
இடத்தை வழங்குவதில்லை.
பல்துறைகளின் இணைவை கவனத்திற்கொள்ளாத யின் விரிவுரையாளர்
நியமனங்களுக்கான அளவுகோள்கள், தெரிவுசெய்யப்படுபவர்களின் முதல்
பட்டப்படிப்படிப்பை முன்னுரிமைப்படுத்துவதூடு அவர்களின்
பட்டப்பின்படிப்பை கூட கவனத்திற்கொள்வதில்லை. பட்டப்பின்படிப்புகள்
தொடர்புடையதாயிருந்தாலும் முதல் பட்டப்படிப்பு குறிப்பிட்ட துறை
சார்ந்ததாக இல்லாதிருப்பதனால் நியமனங்கள் மேற்கொள்ளப்படாமல்
இருந்ததற்கான சான்றுகள் நிறைய காணப்படுகின்றன.
ஏனைய துறைகளில் நியமனங்களில் காணப்படும் சிக்கல்களாக தமக்கு
விருப்பமானவர்களுக்கு நியமனன்க்களை வழங்குதல் மற்றும் பாகுபாடு
காட்டுதல் என்பவற்றை குறிப்பிடலாம். நியமனங்களின் போது சாதி,
பால்மை, இனம் மற்றும் விண்ணப்பதாரிகள் இருக்கும் வகுப்பு என்பன
செல்வாக்கு செலுத்துகின்றன. மேலும் தனது கல்விக்கூடத்தில் கற்ற
விண்ணப்பதாரியை தெரிவு செய்யும் கவலைக்கிடமான நிலையும்
காணப்படுகின்றது. சில வேளைகளில் மேலே குறிப்பிட்ட அளவுகோல்களும்
விண்ணப்பதாரிகளில் பாகுபாடு பார்க்கத்தூண்டுகின்றன. உதாரணமாக,
முதலாவது பட்டப்படிப்பு பொருத்தமில்லாத காரணத்தினால் பொருத்தமான
பட்டப்பின்படிப்புக்கான தகுதிகள் இருந்தாலும் ஒருவர் தகுதி
இழக்கப்படுகின்றார். பதவி வெற்றிடங்கள் மற்றும் பாகுபாடு காரணமாக
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தகுதிகாண் ஊழியர்கள் தமது பதவியை
காப்பாற்றிக்கொள்ளும் நோக்கிலும் துஷ்பிரயோகத்திலிருந்து தம்மை

காத்துக்கொள்ளும் நோக்கிலும் அமைதாயாக இருக்கின்றனர். இந்நிலை ஒரு
பலமான படிநிலை அமைப்பை உருவாக்கியுள்ளதோடு உயர்படிநிலைகளில்
இருக்கும் ஊழியர்கள் தமக்கு கீழே உள்ள ஊழியர்களை அதே தரத்தில்
பேணும் நிலை காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் அமைப்புஸார் சிக்கல்களும் இதில் செல்வாக்கு
செலுத்துகின்றன. அண்மைய காலங்களில் பொருளாதார நோக்கிலான
அளவுகோல் ஒன்றே கல்வியியலாளர்களின் “வினைத்திறனை”
அளவிடுகின்றது. அதாவது, ஒரு விரிவுரையாளர் நிர்வாகம் சார்ந்த பல
வேலைகளோடு சேர்த்து ஆய்வு வேலைகளையும் செய்தாலும் அவரின்
வினைத்திறன் இரு காரணிகளை அடிப்படையாக வைத்தே
அளவிடப்படுகின்றது: தனிப்பட்டரீதியில் அவர் கற்பித்த பாடப்பிரிவுகளும்
அவர் ஸார்ந்திருக்கும் கல்வி நிலயத்தில் (பீடம் மற்றும் துறை) காணப்படும்
ஆசிரிய, மாணவர் சதவிகிதமும். நாம் முன்மாதிரிகளாகக் கொள்ளும்
முதலாம் உலக பல்கலைக்கழகங்களில் காணப்படும் அளவுகோல்களை
(ஆசிரியர்கள் பாடத்தை கற்பிக்க ஆயத்தப்படுத்திய நேரத்தின் அளாவு,
கணிப்பீடுகள், ஆய்வு மற்றும் நிர்வாகம் ஸார் வேலைகள் போன்றன) இங்கே
அளவிடப்படுவதில்லை.
கணக்காய்வின் தர்க்கம் யாதெனில் ‘ஒரு துறையில் 500 மாணவர்கள்
இருப்பின் 25 விரிவுரையாளர்கள் போதுமானவர்களில்லையா?’,
இப்பட்டப்படிப்பை 5 அல்லது 10 விருஇவுரையாளார்களைக் கொண்டு
வினைத்திறனாக கற்பிக்க முடியாதா?’ உதாரணமாக, ஒரு
விரிவுரையாளாருக்கு ஒதுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விடக்
குறைந்த அளவில் மாணவர்கள் காணப்படின் அத்துறையில் தற்காலத்தில்
முக்கியமாக கருத்தப்படும் ஆய்வுத்துறையொன்றில் தேர்ந்த ஒருவராக
இருந்தாலும் அவரை விரிவுரையாளாராக இணைக்க குறிப்பிட்ட துறையில்
காணப்படுவோர் இயலாமலிருக்கின்றனர். கணக்காய்வாளார்களைப்
பொருத்தவரையில் ஆசிரிய மாணவர் சதவிகிதம் தொடர்ந்து பேணப்படும்
வரையில் மொழியியலாளார் இலக்கிய நயத்தை கற்பிப்பதிலும் கடன்
பேண்தகைமையை புள்ளியியலாளர் கற்பிப்பதிலும் எந்த
ஆட்சேபனையுமில்லை.

நெருக்கடி தொடர்பான ஊழியர்சார் சிக்கல்கள்
இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடியின்
விளைவாகவும் எம்மிடம் காணப்படும் பொருளாதார தர்க்கத்துக்கு
ஏதுவாகவும் காணப்படும் மிக அண்மைய நடைமுறையாக
பல்கலைக்கழகங்களில் இருக்கும் வருகைதரு விரிவுரையாளர்கள் மற்றும்
தற்காலிக விருவுரையாளர்கள் போன்ற ஒப்பந்த ஊழியர்களின்
எண்ணிக்கையை குறைப்பது காணப்படுகின்றது. வழமையாக ஒப்பந்த
ஊழொயர்கள் நியமிக்கப்படும் காரணம் குறிப்பிட்ட துறை போதுமற்ற
துறைஸார் நிபுணர்களை கொண்டிராமை அல்லது போதிய ஆசிரியர்கள்
காணப்படாமை என்பனவாகும். பணிஓய்வு, விடுகை அல்லது புதிய
திட்டங்களை ஆரம்பித்தல் போன்ற காரணிகளால் இவ்வகையான
சிக்கல்களை மேலும் அதிகப்படுத்துகின்றன. ஒரு விஷேட துறையில்
பாடப்பிரிவை அறிமுகப்படுத்தவோ அல்லது புதிய பாடப்பிரிவை
நெரவரையறைக்குள் வழங்க திட்டமிட்டாலோ உருவாகும் ஒப்பந்த
ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் தேவையை விரிவுரையாளர்: மாணவர்
சதவிகிதம் மற்றும் பாடப்பிரிவில் காணப்படும் தேவைப்படுகள் போன்ற
விடயங்கள் தீர்மானிக்கின்றன. உதாரணமாக, ஒரு துறை நகர்ப்புற வாழ்வில்
காலநிலை நெருக்கடி என்ற பாடப்பிரிவை வழங்க எண்ணினால்
அத்துறையில் இருக்கும் விரிவுரையாளர்களுக்கு (அவர்கள் குறிப்பிட்ட
பாடப்பிரிவில் பரீச்சயம் இல்லாதிருப்பினும் கூட) குறிப்பிட்ட பாடப்பிரிவை
கற்பிக்க முடியுமா எனப்பார்க்க வேண்டும் அல்லது நிர்வாகம் அத்தகைய
புதிய உள்ளீட்டை வரவேற்கவில்லையெனின் அப்பாடப்பிரிவை சேர்ப்பதை
தவிர்க்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் கொண்டுவந்த அண்மைய
கொள்கைகளின் விளைவாகவும் இந்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின்படி அரச
நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்கள் (பல்கலைக்கழக கல்விசார்
மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உட்பட) தமது தொழில் மற்றும்

பணிமூப்புநிலையை தக்கவைத்துக்கொண்டே வெளிநாடுகளில் பணிபுரியும்
வாய்ப்பு காணப்படுவதோடு தாம் உழைக்கும் வெளிநாட்டு செலாவணியை
நாட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிபந்தனையின் கீழ் செல்லுபடியானதாக
இருக்கும். ஒரு பத்திரிகை செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
“இவ்வாறான பட்டுப்போன மரங்களை யார் ஆட்சீர்ப்பார்?”. தற்போதைய
நிலவரப்படி, அரச துறையில் விடுப்பு எடுப்போர் மற்றும் தொழிலிலிருந்து
விலகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உண்மையில் பல்கலைக்கழக
ஊழியர்கள் ஏனைய நாடுகளில் தொழில்பெறும் தகுதியில் இருக்கின்றார்கள்
என்பதோடு தற்போது காணப்படும் இந்நிலையால் பல்கலைக்கழகங்களில்
இருக்கும் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக,
இவர்களுக்கு சிறந்த கணிப்பீடுகளை வழங்கமுடியாதிருத்தல், ஆய்வு மற்றும்
எழுத்து வேலைகளில் ஈடுபடமுடியாதிருத்தல், மற்றும் தரம்வாய்ந்த
கற்பித்தலுக்காக நேரமொதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்
நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனது நண்பர் வட்டத்திலிருந்தே
மானிடவியலாளர்கள், ஊனமுற்றோருக்கான விஷேட நிபுணர்கள் மற்றும்
ஆசிரிய ஆலோசகர்கள் போன்ற நிறைய பேர் வெளிநாடுகளுக்கு
செல்கின்றார்கள். அவர்கள் செல்லும் காரணம் அதிக சம்பளம் என்பதை விட
சிறந்த தொழில்நிலமைகள் என்பதே பொருத்தமானதாகும். இந்நிலை
மருத்துவ, பல்வைத்திய, கூட்டு ஆரோக்கிய துறைகளில் பாரிய சிக்கலாக
உருவெடுத்துள்ளது. காரணம், பெருந்தொற்றுக்குப் பின்னர் சுகாதாரப்
பணியாளர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையாகும்.
இந்நிலையில் நிதியீட்டை குறைத்த அரசாங்கம் பல்கலைக்கழகங்கள் தமது
இயலுமையில் சேர்க்கும் நிதியை (கட்டணம் செலுத்தப்படும் பாடப்பிரிவுகள்
மூலம்) காகிதாதிகள் வாங்குவது முதல் மாணவர் ஓய்வறைகளை
திருத்துதல் போன்ற பராமரிப்பு பணிகளுக்கு செலவளிக்குமாறு
வேண்டியுள்ளது. அரசாங்கம், சில பட்டப்பின்படிப்புக்கான நிலையங்களுக்கு
அவர்களின் நிரந்தர ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்கான
நிதியைக்கூட வழங்காத நிலை காணப்படுகின்றது. பொதுவாக
முக்கியத்துவம் வழங்கப்படாத செலவாக இருக்கும் ஆய்வுகளுக்கான

நிதியீட்டங்கள் சில பல்கலைக்கழகங்களில் அறவே இல்லாத நிலை கடந்த
வருடத்திலிருந்து உருவாகியுள்ளது.
உங்களுக்கு சிறந்த கார்கள் வேண்டுமென்றால்…
நாடு வேண்டிநிற்பது திறமையான பட்டதாரிகளையும் நாட்டை
கட்டியெழுப்பக்கூடிய பிரஜைகளையுமாகும். ஆனால் குறைந்தது இரண்டு
தசாப்தங்களாக எமது நாடு கல்விகற்ற தொழிலாளர்களை அதிகரிப்பதில்
கவனம்கொள்ளவில்லை. முரண்நிலையாக, தொடர்ந்துவந்த அரசாங்கங்கள்
அரச பல்கலைக்கழகங்களை நலிவடையச்செய்வதோடு ஆட்சேர்ப்பையும்
குறைத்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போதைய அரசாங்கமானது
பல்கலைக்கழகங்களுக்கான நிதியொதுக்கீட்டை மேலும் குறைத்துள்ளதோடு
இலங்கையில் காணப்படும் நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்
நிலையை உருவாக்கியுமுள்ளது. அரசாங்கம் கனவு காண்பது போல
இலங்கையின் உயர்கல்வியை கார் உற்பத்திக்கு ஒப்பிட்டால் அதன் முதலீடு
தற்போது அவர்கள் கனவு காணும் நிலையிலும் பார்க்க
மிகத்தொலைவிலேயே காணப்படுகின்றது.