‘பல்கலைக்கழகம்’ தொடர்பான விடயம்

ஹசினி லேகம்வசம்

கல்வியென்பது வெறுமனே சில தகுதிகளையும் திறன்களையும்
பெறுவதற்கான செயன்முறையாக்கப்பட்டு ‘மட்டப்படுத்தும்’ நிலைக்கு வரும்
போது ஆதாரபூர்வமாக அச்செயற்பாடு அரச பல்கலைக்கழக அமைப்பை
தகர்க்கும் செயலாக உருவெடுக்கின்றது: “நீங்கள் செய்யும் காரியங்கள்
குறைந்தளவான நேரத்திலும், குறைந்தளவான இடத்திலும், குறைந்தளவான
பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களாலும், நிகழ்நிலையிலும் கூட வழங்கப்பட
முடியுமாயின் இவற்றை பேணுவதற்காக ஒதுக்கப்படும் நிதி மற்றும் பௌதீக
வளங்களுக்கான நியாயப்பாடுதான் என்ன?”

அறிவு உற்பத்தியின் எந்த அர்த்தம் பொதிந்த செயற்பாடுமே மானுடத்தின்
நல்வாழ்வுக்கான மாற்றத்தை கொண்டுவருவதன் பொருட்டு எமது சமூக,
அரசியல் மற்றும் பொருளாதார ஏற்பாடுகளை அடிமட்டத்திலிருந்து
மாற்றுவதற்கான சிந்தனைகளை நோக்கக்கூடிய மையமாக வைத்தே
காணப்படும். பல்கலைக்கழகங்கள் விமர்சன சிந்தை, சமூக நீதி மற்றும்
மானுட விடுதலையின் தளங்களாக தொழிற்படுவதும் இதன்
அடிப்படையிலானதாகும். இந்த காரணத்தினால் தான் பல்கலைக்கழகத்தில்
கற்பிக்கப்படும் பாடங்கள்- அவை கலை மற்றும் மானுடத்துறையாக
இருக்கட்டும் அல்லது STEM கல்வியாக இருக்கட்டும்‍- அவை ஒரு
மாணவனை அறிவை சட்டகப்படுத்தும் மற்றும் “புறநிலையான உண்மை”
மற்றும் “விஞ்ஞானம்” என கருதுவதாக அமையும் கருத்தோட்டங்கள்
தொடர்பான கருத்தியல் விசாரணையை மேற்கொள்ளத் தூண்டும்
விடயங்களை உள்ளடக்கோருவதாக இருக்கின்றன. இன்னொரு வகையில்
கூறுவதாயின், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எல்லா வகையான
பயிற்சிகளும் அரசியல் மற்றும் உண்மை தொடர்பான ஒப்புமை மற்றும்
அறிவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவிளைகின்றன. இருப்பினும்
பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சந்தைகளின் ஊடுருவல்கள் காரணமாக பல்கலைக்கழகங்களின் மேற்கூரிய ஆக்கினைகள்
வலிதற்றதாக்கப்பட்டு பல்கலைக்கழகங்களுக்கு மத்தியிலேயும் இவை
தொடர்பான பார்வை மாற்றப்பட்டு வருகின்றன.

ஆய்வு விடயங்களில் கூட, இந்நடைமுறை எவ்வாறு
வெளிப்படுகின்றதென்றால், சந்தையில் அதிக நிதிகளை மேற்கொள்ளக்கூடிய
தொழில்துறை வல்லுன‌ர்களை கவரக்கூடிய ஆய்வுகளே
மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கேற்பவே சந்தையின் தொழில்துறை
வல்லுனர்களும் தமது இலாபங்களை அதிகரிக்கும் நோக்கிலான ஆய்வுகளை
வரவேற்கின்றனரே அன்றி சமூக நல்வாழ்வை ஏற்படுத்தும் விடயங்களுக்கு
முன்னுரிமை அளிப்பதில்லை. இதன் விளைவாக ஆய்வுகளும் கூட,
முக்கியமாக மானுட மற்றும் சமூக விஞ்ஞான துறைகளில், கருத்தியல்
முரணுரைகளை (அதாவது ஆய்வுச் சிக்கல்களை) ஆய்வு செய்வதை விடுத்து
அனுபவத்தரவுகளை கோர்ப்பதை (ஆய்வு வினாக்களை) மையமாகக் கொண்டு
நிகழ்கின்றன. இதனால் ஆய்வுச் செம்மையின் தேர்வு அளவைகள் கூட
தகவல் செரிவான ஆய்வை வரவேற்கும் ம்ற்றும் ஏலவே இருக்கும் சமூக
நடைமுறைகளை மற்றும் அமைப்புகளை பொதுப்படையான கேள்விகளுக்கு
விடையளிப்பதன் மூலம் நிலைநிறுத்தும் செயற்பாடுகளாக மாறிவிட்டன.
அவ்வாறான பொதுப்படையான கேள்விகள்: “ஏன் மாணவர்கள் தனியார்
பல்கலைக்கழகங்களை நாடுகின்றனர்?”, STEM பாடங்களுக்கான கேள்வி
எத்தகையது?”, “உயர்கல்வியில் தர உத்தரவாதத்தின் ஊடாக எவ்வாறு சிறந்த
அடைவுகளை கொண்டு வரலாம்”? போன்றவையே எழுப்பப்படுகின்றன.
இவ்வாறான கேள்விகளுக்கான விடைகள் பொதுவாக அளவீட்டு ஆய்வுகள்
(KAP மதிப்பாய்வுகள், போன்றன) மூலம் இடைநிகழ்வான பண்பறி
ஆய்வுகளால் குறைநிரப்பப்பட்டு இருப்பதால், இவை, பரந்தளவான இயல்
நிகழ்ச்சிகளின் மீதான குவியத்தை ஏற்படுத்துவதோடு அவற்றை
அடிப்படையாக வடிவமைக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக
பரிமாணங்களையும் அவை தொடர்பான அரிதலையும் புறக்கணித்து
விடுகின்றன.

இந்த மாற்றம் கற்றல்- கற்பித்தலில் கூட மாற்றங்களை
நிகழ்த்தியிருப்பதற்கான காரணம் எமது ஆய்வுகளே அடிப்படையில் எமது
கற்பித்தலை வடிவமைக்கின்றன. ‘விமர்சனரீதியான’ கலந்துரையாடல்கள்
வகுப்பறைகளில் மிக அரிதாகவே நிகழ்கின்றன. அதற்கு மாறாக,
நடைமுறையில் விரிவுரைகள் மிக எளிதான முறைகளில்
முன்வைக்கப்படுகின்றன, அதாவது ஆசிரியர்கள் தகவல் திரட்டை
முன்வைக்க மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறும் நோக்கில்
அவற்றை மனப்பாடம் செய்கின்றனர்.

இவ்வாறான விமர்சன சிந்த்னையற்ற, ‘தகவல் அடிப்படையிலான’
கல்வியானது, எம்மில் பெரும்பாலானோரை மரபுக்கோட்பாட்டுக்குள்
தள்ளிவிடுவதோடு அதன் வழி அன்றாட சிக்கல்களை காணவும், தீவிர
தனிநபர்வாத நோக்குடன், சமூக விடயங்களுக்கும் தமக்கும் சம்பந்தமே
இல்லையெண்ர பாணியில் தொழிற்பட வைக்கின்றன. சில மாதங்களுக்கு
முன்னர், பேராதனை பல்கலைக்கழக இளமானி மாணவர்களிடம், செனட்
கட்டிடத்தின் நிர்வாக மற்றும் வரலாற்று முக்கியம் கருதி அங்கு
போராட்டங்கள் நிகழ்த்தப்படக் கூடாதென வலியுறுத்தப்பட்டது.
இவ்வலியுறுத்தல் மேலும் ஒரு படி முன்னேறி, மாணவர்களை செனட்
கட்டிடத்தொகுதியின் தூண்பகுதியில் ஒன்றிணைவதை தடுக்கும் வகையில்
முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் நிர்வாகத்துக்கு எதிர்ப்பு
கூறி அதற்கோ அல்லது பொதுமக்களுக்கோ சத்தமான இசை மற்றும் பொது
இடங்களில் காதல்கொள்ளும் விடயங்களை மேற்கொண்டு தமது எதிர்ப்பை
முன்வைக்கவில்லை. இவ்வாறான நிகழ்வுகள் ஆசிரியர்கள் மற்றும் சில
மாணவ அமைப்புகளில் குறைந்துவரும் தன்முனைப்பை காட்டுகின்றன.
இவ்விடயம் என்னை மேலும் மாணவர்களின் கல்வி, வாழ்க்கை
நடைமுறைகள் என்பன எவ்வாறு அறிந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது
குறித்தும் பல்கலைக்கழக வளாகங்களில் அதிகரித்து வரும் இறுக்கங்கள்
குறித்தும் கேள்விகளை எழுப்பின.

கல்வி, முக்கியமாக உயர்கல்வியானது வெறுமனே தகுதியை பெறுவதற்கான
விடயமாக மட்டந்தட்டப்பட்டு, கல்வியை முழுமையாக்கும் விடயங்களான
அரசியல் பிரக்ஞை, செயற்பாட்டுக்களம், சமவதினருக்கிடையிலான காதல்
மற்றும் இரக்கத்தின் வெளிப்பாடு கூட, நழுவிப்போகும் சூழ்நிலையில்
இவ்விடயங்கள் எவ்வாறான சூழ்நிலையில் நிகழ்கின்றன என்பதை விளங்க
வேண்டும்: பல உலக முன்மாதிரிகளை முன்னோக்கி இலங்கையின்
கல்வித்துறையை சந்தையாக்கத்தினூடு வழிநடத்துவதும் பல உலக
முன்மாதிரிகளை முன்வைத்து உயர்கல்வியைச் சூழ இருக்கும்
விடயங்களான கல்விக்கொள்கை, நிதியீட்டம் மற்றும் பயிற்றுவிப்புகளை
அதன்வழி கட்டமைப்பதுமாகும். இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட எல்லா
அரசாங்கங்களுமே கல்வியை முதன்முதலாக சந்தை கேள்விக்கேற்ப
வடிவமைத்த மற்றும் அதனூடாக கல்விச்சேவையை நுகர்வுப்பொருளாக
மாற்றிய உலக வங்கி போன்ற அமைப்புகளுக்கு வெளிவாரியான நிதியீட்டம்
என்ற அடிப்படையில் தாரைவார்க்க பின்நிற்கவில்லை. இதன் விளைவாக
கல்வித்துறை செலவு- உபகார அடிப்படையில் புரியபப்டுவதும் (செலவுகளும்
உபகாரங்களும் தனிநபர்களுக்கேற்ப தீர்மானிக்கப்படுவதும் அவை
நவதாராளவாத சந்தை அமைப்பை பிரதிபலிப்பதும்) இதன் விளைவாக ஒட்டு
மொத்த மாணவர் மற்றும் சமூக அபிவிருத்தி புறக்கணிக்கப்படுவதும்
இதனையே கல்வி நிர்வாகமும், கல்வியியலாளர்களும், மாணவர்களும்
அகவயப்படுத்துவதும் இயல்பாக மாறி விட்டது.

கல்வியென்பது வெறுமனே சில தகுதிகளையும் திறன்களையும்
பெறுவதற்கான செயன்முறையாக்கப்பட்டு ‘மட்டப்படுத்தும்’ நிலைக்கு வரும்
போது ஆதாரபூர்வமாக அச்செயற்பாடு அரச பல்கலைக்கழக அமைப்பை
தகர்க்கும் செயலாக உருவெடுக்கின்றது: “நீங்கள் செய்யும் காரியங்கள்
குறைந்தளவான நேரத்திலும், குறைந்தளவான இடத்திலும், குறைந்தளவான
பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களாலும், நிகழ்நிலையிலும் கூட வழங்கப்பட
முடியுமாயின் இவற்றை பேணுவதற்காக ஒதுக்கப்படும் நிதி மற்றும் பௌதீக
வளங்களுக்கான நியாயப்பாடுதான் என்ன?”

விமர்சன சிந்தையுடனான கல்வியை முன்வைக்கும் கலாசாரத்துக்கு
திரும்புவதற்கான அழைப்பு வெறுமனே மாணவர்களையும் (அத்தோடு
ஆசிரியர்களையும்) பிரக்ஞை மற்றும் செயற்பாட்டுத்தளத்தை நோக்கி
நகர்த்துவதன் வழி சுதந்திரமான பல்கலைக்கழக சூழலை உருவாக்கும்
செயற்பாட்டுக்காக மாத்திரம் அல்ல; அந்த அழைப்பு இத்தகைய மாற்றம்
எதனை முன்வைக்கின்றதென்பதை நோக்கியதாகும். ஒரு
பல்கலைக்கழகத்தின் செயற்பாடு சந்தையில் வேலைவாய்ப்பை பெறக்கூடிய
பட்டதாரிகளை வெளியாக்குவது மட்டுமல்ல. ஒரு உண்மையான
பல்கலைக்கழகத்தை உருவாக்கி பேணும் நோக்கிலன்றி வெறுமனே ஐந்து
அடுக்குமாடி (அல்லது அதனிலும் குறைவான) கட்டடத்தில் அடைத்து விட்டு
இந்தத்தொழிலை மேற்கொண்டு விடலாம். மாணவர்கள் வேலைவாய்ப்பை
உறுதிப்படுத்த வேண்டுமென்பது உண்மைதான், அதற்காக நாங்கள் அவர்களை
தயார்படுத்த வேண்டுமென்பதும் நிஜமானது; ஆனால் ஒரு பல்கலைக்கழகம்
வேறுபடும் இடம், பட்டதாரிகளாக வெளியாகும் மாணவர்கள் விமர்சன
சிந்தனையோடு வெளியாக வேண்டுமேயன்றி வெறுமனே சக்கரத்தின்
பற்சில்லுகளாக மாறிவிடக்கூடாது. இவ்வாறான கல்வியே ஆசிரியர்களான
எம்மையும் மாணவர்களையும் உற்சாகத்தோடு முன்நோக்கி நகர்த்துவதோடு
அதிகாரத்தின் மெத்தனப்போக்கு மற்றும் விக்டோரிய
பெறுமானங்களுக்கெதிராக கிளர்ந்தெழ வைக்கும்; இவ்வாறான கல்வியே
நாம் தற்போது முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
வெளிக்கொண்டு வருவதற்கு பெருநிலைப் பொருளாதார குறிகாட்டிகளைக்
காட்டிலும் சமூக நல்வாழ்வை முன்நிலைப்படுத்த‌ உதவக்கூடியதாகும்.

எனவே நாங்கள் எதிர்- உள்ளுணர்வை முற்செலுத்தி விமர்சன ஆய்வையும்
(நிதியீட்டமின்றி நிகழக்கூடிய) வகுப்பறைகள் மற்றும் பல்கலைக்கழக‌
விமர்சன கலந்துரையாடலையும் வலியுறுத்துவோமாக. ஏனெனில், எமது
பல்கலைக்கழகங்களின் உய்தல் அதனிலேயே தங்கியிருக்கின்றது.