புரட்சிகர செயல்கள்: பவர்பாயிண்டின் மறைவு

சிவமோகன் சுமதி

MIT கல்லூரி மற்றும் ஜெப் பெஸோஸ் (இவரை ஆர்வமற்று
பதிவிடுகின்றேன்) ஆகியோர் பவர்பாயிண்ட்டை தமது வகுப்பறைகளில்
சந்திப்பு கூடங்களிலும் தடை செய்வதற்கு முன்னமே நான் எனது
வகுப்பறைகளில் அதன் பாவனையை தடை செய்து விட்டேன். நான்
வாழ்வதையும் வாழும் கணங்களை ரசிப்பதையும் நேசிப்பவள்; பவர்பாயிண்ட்
எனும் சாவை நோக்கும் அவக்கேடான கொடூரமான படவில்லைக் காட்சியை
நேசிப்பவள் அல்ல. அதன் நாயகன், வில்லன் அல்லது கதாநாயகன்
எல்லாமே அதீத சலிப்புத்தன்மை தான். இது வேற்றுக்கிரக வாசிகள் போல
அச்சுறுத்தும் குறிப்புகளையும் குத்துகள், வட்டங்கள், சதுரங்கள் நிறங்களென
பட்டனை தட்டினால் புறப்படும் குவாண்டம் பண்புகளை கொண்டன. அது
உங்கள் மனநிலையை ஆட்கொண்டு விடும், உங்கள் உடலில் முழுவதும்
உறைந்து (பவர்பாயிண்ட் குறித்த கொண்டாட்ட மனநிலை) செயலிழக்க
வைத்து விடும், தூக்கத்தை கெடுத்து ஒரு யதார்த்தம் இன்னொன்றில் தடுத்து
விழுந்து மொத்த படவில்லை விளக்கக் காட்சியும் உங்கள் உலகை
புரட்டிபோடும். அதுவே உங்களை சித்திரவதை அறைக்குள் தள்ளி உங்கள்
கண்களை வலுக்கட்டாயமாக திறக்க வைத்து சாவின் விளிம்புக்கு நகர்த்தும்.
அதன் பின்னரும் ஒரு வாழ்வு உண்டு. ஒரு நாளைக்கு பின்னர் யாருமே ஒரு
படவில்லை காட்சியின் ஒரு பக்கத்தையோ ஒரு விடயத்தையோ
உருவத்தை கூட நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். மீண்டும் பார்ப்பதற்கு
ஒரு குறிப்போ நினைவை மீட்ட ஒரு விடயமோ இல்லாத நிலையில் சாவை
அறிவிக்கும் கருவிஅந்த பவர்பாயிண்ட்டை (PPP) நிகழ்த்துவதற்கு முன்னரே
அழைத்து வந்து இலத்திரனியல் தபால் பெட்டியில் யாரும் காணாத
மூலையில் சாத்தி வைத்து விட்டு நகர்ந்துவிடும். அதை காணும் போது
முதலாவது அழிக்கப்படுவது அந்த நகல் தான், ஏனெனில் அது ஏன்
உள்ளதென்பது யாரும் அறியாதது.

ஒரு நேசன் : லெஸ் பேக்

PPPக்கு எதிரான இந்த பெரியநாடகத்தில் நாம் பொதுவாக கல்வியியலாளர்
என அழைக்கும் ஒருவரின் தனிப்பட்டரீதியில் ஒரு சின்னமாக, ஒரு முக்கிய
உறுப்பினராக, ஒரு தொலைநோக்கு பார்வையுடையவராக செயல்திறன்
சிறப்பு கூறுகளை பார்க்க விழைந்தேன். இதன் போது லெஸ் பேக்
அவர்களின் கல்வியிற் நாட்குறிப்பை (லண்டன் கோல்ட்ஸ்மித் பதிப்பகம்,
2016) கண்டடைந்தேன். ப்ரீரியன் பாணியில் எழுதப்பட்ட, வகுப்பறை மற்றும்
கற்பித்தல் கலை குறித்த இந்த கல்வி நாட்குறிப்பு ஒரு கல்வியியலாளர்
மீதான பலபடித்தான புரிதலையும் கொண்டிருப்பதோடு ஒரு கல்வியியலாளர்
அல்லது கற்றறிவாளரின் வாழ்க்கை, வகுப்பறை மற்றும் கற்பித்தல் காலை
சார்ந்த அளவான, கோட்பாடற்ற, பயன்வழிமுறையான, ஆனால் ஆழமான
அரசியல் புரிதலுள்ள ஆய்வுநூலாக இருந்தது. இவரின் அகத்தூண்டல்கள்
கலாசார உலோகாயத பாரம்பரியத்தில் வந்த ஹோகார்ட், போர்டோ,
ஷூவால்ட்டர், மிகவும் விரும்பப்பட்ட ஸ்டூவர்ட் ஹோல், பெர்கர் மற்றும்
பலராக இருந்தது. இவர்கள் சமூகரீதியில் மிகவும் யதார்த்தமான
தொலைநோக்குள்ளவர்களாக இருப்பதோடு கிராம்சியை போல
வகுப்பறையை கற்பித்தல் கலை தொடர்பான பகுத்தாய்வில் மூல சக்தியாக
கொள்பவர்களாக இருக்கின்றனர்.

இலையுதிர்கால செமெஸ்டரின் நவம்பர் 5ஆம் திகதிக்கான பெக் அவர்களின்
நாட்குறிப்புக்கான தலைப்பு: படவில்லை விளக்காட்சி மூலமான சாவு.
கற்பித்தல் கலையில் வகுப்பறையில் எனது செயற்பாட்டு உருவம் ஒரு
படையெடுப்பாளராக இருப்பின், அதாவது கிராம்சிய கோட்பாட்டின் படி
போர்முனையில் இருக்கும் போது (அகழிகளில் பதுங்குதல், தாக்குதலுக்காக
காத்திருத்தல் மற்றும் சரியான நேரத்தில் எதிரியை தாக்குதல் ஆகிய
செயற்பாடுகளில் PPP நோக்கிய எனது நடத்தை மிகவும் கணக்கிடப்பட்ட
பேச்சுவார்த்தைகளாக இருக்கும்), பெக்கின் வார்த்தைகள் நிழலாடும். பெக்
மிகவும் சமரசமுள்ள மற்றும் உறுதியான ஆசிரியர். இவரது எழுந்தேற்றம்
கோட்பாடு சார்ந்ததாக இருப்பதோடு அனுபவரீதியானதும் கூட. PPP குறித்த தவறான பாவித்தல்களில் அவர் ஐயமுற இருக்கின்றார்: அதுவே மரணம்
எனலாம், இல்லையா? அவர் எழுதும்போது:

“கல்விச்செயற்பாடுகளில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கம்
சிக்கல்களை உள்ளடக்கியது. இதில் நான் கண்ட மிகவும் கொடிய அனுபவம்,
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் ஒரு உரையின்
உள்ளடக்கத்தை படவில்லை விளக்கக்காட்சியை வாசித்து ஒரு
சமூகவியலாளர் தனது உரையை நிகழ்த்தியதாகும்.” இது மிகவும் பழக்கமான
விடயமாக உள்ளதல்லவா? பெக் தொடரும் போது: “உரை நிகழ்த்துவபர்
பார்வையாளர்களுக்கு தனது முதுகை காட்டிக்கொண்டு திரையை நோக்கி
தன் பார்வையை செலுத்தினார்.” “இது அவர் அந்த திரையை (புதிய
பெட்டகத்தை) மிகவும் ஆராதிப்பதாகவும் அந்த கோவிலில் இருந்தே புதிய
சிந்தனைகள் ஊற்றெடுப்பதை போலவும் செயற்படுவதாக இருந்தது.” பிறகு
பெக் குறிப்பிடும் போது, ” இந்த ‘புல்லட் புள்ளி விளைவானது உரை
முழுவதுமே வியாக்கியானம் இன்றி வெறும் பட்டியல்களாக
காட்சியளிப்பதாக இருந்தது. சுட்டியை அழுத்தியவுடன் வரும் சிறிய புல்லட்
பாயின்ட்களை வைத்துக்கொண்டு சிக்கலான விவாதங்களை உருவாக்க
முடியாமல் இருக்கின்றது.”

அவரின் பார்வைகளை அச்சுறுத்தும் PPP விளக்காட்சியை வைத்து
விளக்கமாக உரை நிகழ்த்த முனைந்திருக்கின்றார். “PPP ஒலி மற்றும்
ஒளிக்கலவைகள் மூலம் விளைவுகளை வழங்கி வார்த்தைகளை
ஒன்றுக்கொன்று கலவை செய்வதிலும் முக்கிய பொருளாக இருக்கின்றது.”
இதனை நான் மறுதலிக்க வேண்டும்.

PPPயினாலான மரணம்: நாசா குறித்த கிளைக்கதை

பவர்பாயிண்டினாலான மரணம் நாம் வாழும் பொய்மையும் உண்மையும்
உறைந்த புற உலகினில் நடந்தது. அது நாசா நிறுவனம் தொடர்பான கதை.
இதை நினைக்க சிரிப்பு மேலிடுகின்றது. 2016ல் நாசா நிறுவனத்தால், 16 நாட்கள் பூமிக்கான சுற்றுப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்த‌
கொலும்பியா விண்கலம் பூமியில் மீள வருவதில் உள்ள பாதிப்பு மற்றும்
அந்த விண்கலம் மற்றும் அதிலுள்ள விண்வெளி வீரர்களை பாதுகாப்பது
குறித்த விளக்கத்தை கொண்ட பவர்பாயின்ட் கோப்பு ஒன்று
தயாரிக்கப்பட்டது. பவர்பாயின்ட் கோப்பு இவ்விடயத்தை காட்சிப்படுத்திய
அமைப்பை வைத்து, இவ்வாறான ஆபத்து அல்லது பாதிப்பு எவ்வளவு
பாரதூரமானது அல்லது உடனடியாக நிகழக்கூடியது என்பதை நாசா
நிர்வாகிகளால் ஊகிக்க முடியாமல் போய்விட்டது. கொலம்பியா
விண்கலத்துக்கு ஏற்பட்ட இந்த அவலநிலை, அது உலகின் வளிமண்டல
எல்லைக்குள் வருவதனால் விளைய இருக்கும் ஆபத்து, ஆகியன சரியாக
நாசாவின் தொழில்நுட்பக்குழுவால் ஆராயப்பட்டு “விஞ்ஞானரீதியான”
அறிக்கை ஒன்று வரையப்பட்டதாயினும் அது பவர்பாயின்ட் கோப்பில்
வெளிப்படுத்தப்பட்ட மாதிரி சரியானதாக இல்லை. இந்த அறிக்கையின்
முடிவுரை இவ்வாறு இருந்தது:

“நாசாவின் தொழில்நுட்ப தொடர்பாடலுக்கும் வெளிப்படுத்துகைக்கும்
தொழில்நுட்ப அறிக்கைகளை காட்டிலும் பவர்பாயின்ட் கோப்புகளை
பயன்படுத்துவது சிக்கலான அணுகுமுறையாக இருக்கின்றது”. இதை விட
கேலிக்கூத்து இருக்க முடியாது. இது ஒரு மேடை நகைச்சுவையாளரால்
கூறப்படும் நகைச்சுவை போல இருக்கின்றது. இருப்பினும், இந்த
விண்கலத்தை ஏவ முன்னர் விஞ்ஞானிகள் குழு எடுத்த சிரித்த
முகங்களுடனான புகைப்படத்தை காணக்கிடைத்தது இன்னும் நகைச்சுவை
ஊட்டக்கூடியது. ஆனால் இது நகைப்பதற்குரிய விடயமல்ல.

பவர்பாயின்டின் தட்டையான புல்லட் குறிப்புகளுடன் நாம் வாழும் நிலை
ஏற்படுமாயின் எமது நிலைப்பின் வலிமையற்ற நிலையையும் அதீத
பலவீனத்தையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பெருந்தொற்று குறித்த
திவேதி மற்றும் மோகன் ஆகியோரின் கட்டுரையான,
“கைவிடப்பட்டவர்களின் சமூகம்: அகம்பன் மற்றும் நான்ஸி ஆகியோருக்கான
மறுமொழியில்” நாம் வாழும் இந்த மனித நாகரிகத்துக்கான காலகட்டத்தில் நாம் எல்லோரும் பகிரும் ஒரு கருத்து தான் நாங்கள் “கைவிடப்பட்ட”,
மற்றும் “பலவீனமான” ஆனால் “விலைமதிப்பற்றவர்கள்” எனும்
எண்ணமாகும். இதுவே எம்மை காப்பாற்றப்போகும் மறுமொழி.
என்னைப்பொருத்தவரையில், இதுவே எம்மை மரணத்தை அதன் ஒரு
வடிவமான பவர்பாயின்ட் மற்றும் ஸூம் நிகழ்நிலை தொடர்பாடலில் அதன்
பயன்பாடு, ஆகியவற்றிலிருந்து காப்பாற்றப்போகும் விடயமாகும்; நாம்
ஒன்றாகப் பகிரும் எண்ணமான எமது பலவீனம் மற்றும்
வலிமையற்றதன்மை.

PPP, தொழில்நுட்பம் மற்றும் எமது பலவீனம்

பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் பல்கலைக்கழகத்தில் புதிய ஆண்டு, புதிய
அரையாண்டு தொடங்க இருந்த நேரத்தில், புதிய நிகழ்நிலை தொழில்நுட்பம்
மற்றும் அதைவிட புதிய நிகழ்நிலை கற்கை ஆகிய விடயங்களுடன் பெரும்
சிரமத்துக்கு ஆட்பட்டோம். எனது விமர்சன கோட்பாட்டு வகுப்புக்கு, முகம்
தெரியாத அறிமுகம் இல்லாத மாணவர்களுக்கு ப்ரேயார் பற்றிய
அறிமுகத்தை ஸூம் நிகழ்நிலை நிரலில் வழங்க வேண்டிய நிலை
ஏற்பட்டது. நான் எனது மாணவர்களுக்கு புதுமையான மகிழ்ச்சி நிறைந்த ஒரு
பயிற்சியை வழங்குவேன்; “ப்ரெயார் மற்றும் பகிரப்படும் நினைவுகள்”, அது
தொடர்பான ஒளிப்படங்களையும் உள்ளாடக்கிய செயற்பாடு. இதுவே
அவ்வகுப்பு மாணவர்கள் எழுதிய முதல் கோட்பாடு சார்ந்த ஆய்வு
எழுத்தாகும். இங்கே நான் வழங்குவது அவ்வாறான ஒரு மாணவரின்
கணிப்பீடு மற்றும் அதனை மின்னஞலில் அனுப்பிய செய்தி. இது மாணவரின்
அனுமதியுடன் பகிரப்படுகின்றது.

அந்த 23 வயது பிள்ளை பிடிவாதமானது, அதற்கு எந்த மாற்றுக்கருத்தும்
இல்லை. எமது வீட்டில் ஒருவர் சுகயீனமுற்றாலோ அல்லது உங்களுக்குக்
கூட ஏதாவது நடந்தால் இந்த வகையான கணிப்பீடுகளில் என்ன
இருக்கிறது,,, இவ்வளவு பலவீனமாக இருப்பது என்னை வெறுப்புக்குள்ளாக்குகின்றது. அவள் அவளது தந்தையுடனும் மூத்த
சகோதரியுடனும் வேலைக்கு செல்கின்றால், அந்த மின்னஞ்சல்
தொடர்கின்றது,,, மாணவர்கள் இந்த கணிப்பீடுகளை செய்து சமர்ப்பிக்கும்
செயல்,,, உலகம் மற்றும் அதிலுள்ள எல்லாவற்றின் மீதும் வெறுப்பாக
இருந்தாலும் எதுவுமே நடவாதது போல மனநிறைவாக இருக்க வேண்டுதல்.
இந்த 23 வயதுப்பிள்ளை பல்கலைக்கழகத்தில் இணைய எடுத்த முடிவை
நினைத்து வருந்துகின்றது,,, நல்ல சம்பளத்தோடு ஒரு வேலையில்
சேர்ந்திருக்கலாம் என வருந்துகின்றது,,, எனது பெற்றோர்கள் வீட்டில்
பாதுகாப்பாக இருந்திருப்பார்கள். இந்த மனச்சிக்கல் மேலும் மேலும்
அதிகரிக்கின்றது,,, ஊரடங்கு சட்டத்தை மீண்டும் அமுலுக்கு
கொண்டுவந்தாலாவது அவர்கள் வீட்டில் இருக்கக்கூடும், அவர்கள்
பாதுகாப்பாக இருப்பதாக நான் உணரக்கூடும். இல்லாவிடின் முழு
நாட்டினதும் தொடர்பாடல் வலையமைப்பை தகர்த்து விடவும். இவ்வாறான
கவலைகளை மறைத்து கனக்கற்ற மனநிறைவாக காட்ட முயன்று தோற்ற
ஒரு தலைப்பை அந்தப்பிள்ளை இடுகின்றது, “யார் கவலைப்படப்போகிறார்,
நான் ஏதோ ஒரு கணிப்பீட்டை அனுப்புகின்றேன்”

தனது “ப்ரேயார் மற்றும் பகிரப்படும் கருத்துகள்” என்ற கட்டுரையின்
முடிவுரையில் அந்த மாணவி இவ்வாறு எழுதுகின்றார்,

“நான் முதலாவதாக எழுதிய ஆக்கத்தை அதிகம் வெட்டி மாற்றாமல்
மூலப்படிமமாகவே அனுப்புவதற்கான காரணம் நான் இதனை எழுதும்
வரையில் இருந்த மனநிலையை படம்பிடித்து காட்டுவதற்காகும். ப்ரேயார்
தொடர்பான பகிரப்படும் கருத்துகள் இவை என்பதால் நான் வேறு எந்த
கோட்பாடுகளையும் எழுதாது இதனை பின்பற்ற காரணம் சொல்ல வந்த
விடயம் மடைமாறிவிட கூடாது என்பதனாலாகும். மாறாக, இந்த வகுப்பில்
கற்பிக்கப்பட்ட கோட்பாடுகள் குறித்த எனது தொடர்ச்சியான புரிதலை
வெளிப்படுத்தும் நோக்கிலே இந்த எழுத்தை ஒரு ஆரம்ப புள்ளியாக
வைக்கின்றேன். நான் எப்படியாகிலும் ஒரு ஒளிப்படத்தை இதனுடன்
இணைப்பேன், அது எனது கையறுநிலையை படம்பிடிப்பதாக இருக்கும்.
எனது நோக்கம் எனது கையறுநிலையை வெளிப்படுத்துவதாக இருப்பதோடு இந்த ஒளிப்படத்தின் மூலம் அதனை வெளிப்படுத்தி எனது வாசல்கள்
மூடப்படுகின்றன.” (படத்தை பார்க்க)

பொதுவெளி

பின்னர், அதே மின்னஞ்சலில் ஒரு கோர்வையாக ஒரு பாடலின் இணைப்பை
அனுப்பி இருந்தாள் அந்த மாணவி.

“உங்களுக்கு நன்றிகள். உண்மையில் ஒரு பொருத்தமான ஒளிப்படத்தை
தேர்ந்தெடுப்பதில் எனக்கு பல சிக்கல்கள் இருந்தன. நான் ஒரு இல்லம்
அல்லது தனிமை ஆகிய விடயங்களை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களை
தேடினாலும் நான் வெளிப்படுத்த நினைக்கும் உணர்வுகளை கூறும்
ஒளிப்படங்கள் எனக்கு கிட்டவே இல்லை. ஆனால், நான் இணைத்திருக்கும்
பாடல், எனது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது, அது
ஒரு புளித்துப்போன விடயம் என்றாலும் கூட. அது கறுப்பு வெள்ளை எனும்
பாடலாகும். இதன் இசை கொஞ்சம் ஆழமாக இருப்பதோடு நீங்கள் இதனை
வேறெங்காவது கேட்டிருக்கலாம். ஆனால் இதன் அர்த்தம் சுவாரஷ்யமானது.
இதன் கடுமையான ராக் இசைக்காக நான் மன்னிப்பு கேட்கின்றேன் ஆனால்
இது அந்த உணர்வுகளை வெளிக்கொணர்வதாக நான் நினைக்கின்றேன்”.

மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகிய இருவருமே இந்த நாகரீக அபாயத்தீலும்
அதற்கு எதிராகவும் கூடி இருக்கும் நிலை ஏற்படுவதோடு எமது ஒன்றாக
பகிரபப்டும் எண்ணமான பலவீனம், கைவிடப்பட்ட நிலை மற்றும்
விலைமதிப்பற்ற உணர்வு, ஒரு தொடர்ச்சியான சுரண்டல் அல்லது
ஆதிக்கத்தின் கீழுள்ள எண்ண அலைகளாக மட்டும் வெளிப்படாது
அதனளவிலும் இருப்பதை காணலாம். “வார்த்தை, ஒலி மற்றும் ஒளி”
ஆகியன ஒன்றையொன்று அவிழ்க்கின்றன, லெஸ் பேக் சொல்வது போல மரணத்துக்கு, அதுவும் PPPயினால் ஆன மரணத்துக்கும் அவற்றுக்கான எமது
உத்திகளுக்கும் எதிராக.

கறுப்பு வெள்ளை
https://youtu.be/4AYAcFcFu84?si=-TWbzoRcNKZEozHd