மூன்றாம்நிலைக் கல்விக்கான நிதியீட்டத்தை குறைப்பது தற்போதைய
நிலையில் கட்டாயத்தேவையா?

ஃபர்சானா ஹனீஃபா

புகைப்படம்: பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏனைய விடயங்கள் உட்பட
கல்வித்துறைக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%ஐ ஒதுக்கக்கோரி
மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் கல்வித்துறை சீர்திருத்தம் மீதான தவறான இடையீடுகளில்
ஒன்றான தேசிய கல்விக்கொள்கை சட்டகமானது (NEPF) பலராலும்
விமர்சிக்கப்பட்டதோடு தற்போது கைவிடப்பட்டிருக்கும் வாய்ப்புகள்
ஏற்பட்டிருக்கக்கூடும். (NEPF மீதான விமர்சனமொன்றை பார்க்க 9 மார்ச்,
2024ல் ரம்யா குமார் அவர்களால் எழுதப்பட்ட‌ குப்பி ஆக்கத்தை பார்க்கவும்).
பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட கல்வித்துறை மீதான துறைசார்
கண்காணிப்புக் குழுவானது (SOCE) சட்டக வரைபில் பயன்படுத்தப்பட்டுள்ள
மொழி தொடர்பான பயனுள்ள அவதானங்களை மேற்கொண்டுள்ளதோடு
அதன் பரிந்துறைகள் பலவற்றில் தமக்குள்ள அதிருப்தி மற்றும்
உடன்பாடின்மையை வெளிப்படுத்தியுமுள்ளது.

இக்குழுவின் கருத்துப்படி கல்வித்துறை மீதான சீர்திருத்தங்கள் நான்கு
வழிகாட்டு நெறிகளின் அடிப்படையில் வரையப்பட வேண்டும்:
இலவசக்கல்வி எனும் கொள்கை எவ்வகையிலும் சமரசப்படுத்தப்படக்
கூடாது, கல்வி என்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்,
நியாயத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவை NEPF உட்பட அனைத்து
கல்விசார் சீர்திருத்தங்களையும் ஆளும் அனைத்தையும் ஆசரிக்கும்
அம்சங்களாக ஏற்கப்பட வேண்டும், மேலும் முக்கியமாக, கல்வி என்பது
மாணவர்களின் ஏனைய தேவைகள் பூர்த்தி செய்யபபும் வேளையில் மட்டுமே
வினைத்திறனாக்கப்படுகின்றது ஆகியவையே அந்நான்கு வழிகாட்டு
நெறிகளுமாகும். இவ்வழிகாட்டு நெறிகள் எமது நாட்டின் கல்வி அமைப்பை
த்டர்ந்தும் முன்னிறுத்தி வந்தவையாகவும் NEPFஇனால் மிக மேம்போக்காகவே கையாளப்பட்டவையாகவுமே இருக்கின்றன. SOCE
இடையீடுகள் நாட்டில் நிலவிவரும் மிக மோசமான நெருக்கடி நிலையையும்
சுட்டிக்காட்டுகின்றன. மேலும் இக்குழுவானது உயர்கல்வியை சீர்திருத்தல்,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை (UGC) சீரமைத்தல் போன்ற
முன்மொழிவுகள் மற்றும் தீர்மானங்களையும் ஒத்திவைத்திருக்கின்றன.
மொத்தமாக கல்வித்துறை மீதான துறைசார் கண்கானிப்புக் குழுவின்
அரிதான ஆனால் சிந்தனைப்பாங்குடைய உள்ளீடுகள்
பாராளுமன்றத்திலிருந்தான கொள்கைவகுப்புக்கான சிறந்த இடையீடுகளை
ஏற்படுத்தியிருக்கின்றன.

NEPF மீள வரையப்பட இருப்பது குறித்து நாம் பெருமூச்சு விட முடிந்தாலும்
இவ்வரைபு உருவாக்கப்பட்ட பின்னணி மற்றும் செயன்முறை குறித்து
அவதானிப்பது முக்கியமானதாகும். NEPF உருவாக்கத்துக்கு முக்கிய
காரணகர்த்தாவாகவும் அதன் உருவாக்கக் குழுவின் அங்கத்தவராகவும்
இருந்த முனைவர் சுஜாதா கமகே அவர்கள் கல்வித்துறைக்கான நிதியீட்டம்
குறித்து பல வருடங்களாக‌ இரு இணைந்த சிந்தனைகளை
கொண்டிருப்பதையும் அவற்றை அதிகமாக வெளிப்படுத்துவதையும் நாம்
காண்கின்றோம். இவரின் எழுத்துகள் எமது நாட்டில் கல்வித்துறை மீதான
நிதியீட்டம் தொடர்பில் பல விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளன. அவரின்
கருத்துப்படி எமது நாட்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக்கல்வியை
காட்டிலும் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக காணப்படுவதை
விமர்சிக்கின்றார். எனவே முனைவர் கூறுவதன் படி குடிமக்களில்
அதிகமான பகுதியினரைக் கொண்ட மட்டும் அதிகமான முதலீட்டுத் திருப்பம்
(ROI) கொண்ட ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக
உயர்கல்வியை விட அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும்
இவர் கூறுகையில், உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு தனிநபர் முதலீட்டுத்
திருப்பத்தையே (Individual ROI) ஏற்படுத்தும் எனவும் சமூக முதலீட்டுத்
திருப்பத்துக்காக (Social ROI) ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியில்
அதிக கவனம் செலுத்தப்பட வேண்டி இருக்கின்றது. இந்தக் கருத்தை அவர்,
உயர்லவிக்காக செலவளிக்கப்பட வேண்டிய வரித்தொகை மற்றும் இதனால்
விளையும் முதலீட்டுத் திருப்பத்தை ஒப்பிட்டு நியாயப்படுத்துகின்றார். இந்த இரு சிக்கல்களையும் குறிப்பிடும் முனைவர் சுஜாதா கமகே, இதனால்
உயர்கல்வித் துறைக்கான முதலீட்டை மேலும் அதிகரிக்காமல் தனியார்
முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்கிற முடிவை எட்டுகின்றார். மேலும்
அவர் கூறுகையில், உயர்கல்வித் துறைக்கான முதலீடு அரசாங்கத்தால்
தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான‌ காரணம், தன்னார்வ அரச
பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள் சேர்ந்து உயர்கல்விக்கான
தனியார் முதலீட்டை இகழும் செயற்பாட்டில் ஈடுபடுவதே ஆகும்.
இவ்வாறான கருத்துநிலைகள் NEPFன் மொழிநடையில் ஆங்காங்கே
கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. (முனைவர் சுஜாதா கமகே மீதான எனது
இயல்பாய்வு, உயர்ல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பாராளுமன்ற
தேர்வுக்குழு முன்னரான அவரது முன்வைப்புரை, நியூஸ் பர்ஸ்ட்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மக்களுக்கான மேடை நிகழ்ச்சியில்
சொனாலி வனிகபதுகே உடனான அவரின் கலந்துரையாட‌ல் மற்றும்
2021ஆம் ஆண்டு “பைனான்சியல் டைம்ஸ்” பத்திரிகையில் அவரால்
வெளியிடப்பட்ட கட்டுரைகளின் அடிப்படையிலானதாகும்.)

நான் பின்வரும் கேள்விகளை முன்வைப்பதன் ஊடாக முனைவர் சுஜாதா
கமகே அவர்களின் கருத்துநிலை மீதான விமர்சனங்களை
முன்வைக்கின்றேன். இலங்கையில் அனைத்து துறைகளைக் காட்டிலும்
கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருப்பதால்
பொதுவாக கல்வித்துறை மீதான நிதியீட்டத்தை அதிகரிப்பதற்காக ஏன்
அரசாங்கத்தை கோரக்கூடாது? உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை
குறைப்பதற்கான கோரிக்கையை விடுக்கும் வேளையில் ஏன் பாடசாலைக்
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கை
விடுக்கப்படுகின்றது? முதலீட்டு திருப்பம் மற்றும் உலகளாவிய கல்விக்
கொள்கை தொடர்பான தற்போதைய ஆய்வுகள் இவ்வாறான நிலையையா
ஆதரிக்கின்றன? மேலும் இன்னொரு ஆக்கத்திற்கான கேள்வியாக, இந்த
கருத்தாடலில் ஏன் இலாப நோக்கிலான உயர்கல்வி மீதான தனியார்
முதலீடு குறித்து பேசப்படுவதில்லை?

முதலீட்டு திருப்பம் என்ற கருத்தாடல் மேற்கொள்ளப்படுவது கல்வியை
‘மனித மூலதனத்தின்’ திரட்டாகக் காணும் கோட்பாட்டாக்கத்தின்
விளைவாகும். 1960களில் தொடங்கி பொருளியலாளர்களான ஷுல்ட்ஸ்,
பெக்கர் மற்றும் மின்ஸர் ஆகியோர் தொடர்ந்தும் நடைபெறும் கல்வி மற்றும்
அதனால் விருத்தியடையும் வருமான இயலளவை வைத்து கல்விக்கான
செலவீனத்தை முதலீடாகக் கண்டனர். மனித மூலதனம் என்ற சொல்லாடல்
கூட கல்வியால் தனிநபர் மற்றும் சமூகத்திற்கு விளையும் பணம்சார்
நலன்களை கருத்திற்கொண்டே உருவாக்கினர். முதலீட்டு திருப்பம் மற்றும்
கல்வி தொடர்பான கருத்தாடல் இந்த மனித மூலதனம் எனும் நிலையை
வைத்து அளவிடப்படுவதோடு அது, ஒருவர் கல்விகற்கும் போது
செலவிடப்படும் தொகை, தொடர்ந்தும் கற்பதில் செலவாகும் தொகை மற்றும்
கல்வியின் பூர்த்தியின் பிற்பாடு பெறப்படும் வருவாய் ஆகியவற்றை
ஒப்பிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. முதலீட்டு திருப்பமானது தனிநபர்
மற்றும் சமூக திருப்பம் (SROI) என இரு வகைகளில் கணிக்கப்படுவதோடு
அவையிரண்டும் வெவ்வேறு அளவீடுகளை கொண்டன. மனித மூலதனம்
என்ற சொல்லாடல் கல்விக் கொள்கைகள் தொடர்பான
கலந்துரையாடல்களில் முழுவதுமாக இணைந்திருப்பதோடு
கல்வித்துறையில் தீர்மானம் மேற்கொள்ளும் முக்கிய நபர்கள்
கைக்கொள்ளும் ஒரே கருத்தாடலாகவும் மாறியிருக்கின்றது. உலக
வங்கியானது உலகளாவியரீதியில் இக்கருத்தாடலில் அதிக ஈடுபாடு
கொண்டிருக்கின்றது. பார்க்க: https://www.worldbank.org/en/publication/human-capital
நியந்தினி கதிர்காமரின் கருத்துப்படி, மனித மூலதனம் என்ற மாதிரி பல
விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதோடு அதன் தொடர்ந்தேச்சையான
பயன்பாடு பலவாறான தகுதிகளை வேண்டி நிற்பதாக மாறியிருக்கின்றது.

இலங்கையில் கல்விக் கொள்கைகளில் தனிநபர் மற்றும் சமூக முதலீட்டுத்
திருப்பங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் ஜோர்ஜ் சகாராபோலஸ்
அவர்களின் எழுததுகளை அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி சுவீகரித்த
எழுத்துகளின் மூலம் ஆரம்பமாகின்றன. கௌஷல்யா பெரேரா அவர்கள்
உலக வங்கி கல்வி மற்றும் முதலீட்டு திருப்பம் தொடர்பான சுவீகரித்த
விடயங்கள் 1985ல் ஜோர்ஜ் சகாராபோலஸ் அவர்களாலும் 2018ல் சகாராபோலஸ் மற்றும் பட்ரினோஸ் அவர்களாலும் எழுதப்பட்ட
மீளாய்வுகளில் இருந்து பெறப்பட்டதாகக் கூறுகின்றார். (பார்க்க‌
https://simplifyresearch.wordpress.com/2023/04/30/rois-in-education-what-are-they/). 61 நாடுகளில்
இருந்து பெறப்பட்ட தரவுகளில் அடிப்படையில் எழுதப்பட்ட சகாராபோலஸின்
1985 ஆய்வறிக்கை “ஆரம்பக் கல்வியே மிகவும் இலாபகரமானதாக
இருப்பதோடு அதற்கடுத்ததாக இரண்டாம்நிலைக் கல்வி காணப்படுவதாக”
கூறுகின்றது. இதன் அடிப்படையில், சகாராபோலஸ் அவர்கள் அரசின்
நிதியீட்டத்தை ஆரம்ப மற்றும் இரண்டாம் தர கல்விக்கு ஒதுக்கீடு செய்வதை
வரவேற்பதோடு அரச உயர்கல்வி அமைப்புக்கு நிதியீட்டம் செய்வதை
குறைக்குமாறு பரிந்துரை செய்கின்றார். (இவரின் 1985 ஆய்வறிக்கையின்
கோரிக்கையை பல்கலைக்கழகங்களுக்கு செல்பவர்கள் பணம் செலுத்த
முடியுமானவர்களே எனக் குறிப்பிட்டு தகுதிகாணப் பார்க்கின்றார்). 2018
ஆய்வறிக்கையானது 169 நாடுகளில் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு முடிவுகள் கொஞ்சம் வித்தியாசமாக
இருக்கின்றன, அதாவது, முதலீட்டு திருப்பம் ஆரம்பக் கல்விக்கு இன்னமும்
கூட அதிகமாகவே காணப்படுவதோடு இரண்டாம் நிலைக் கல்வியைக்
காட்டிலும் உயர்கல்வியில் முதலீட்டுத் திருப்பம் அதிகமாக இருப்பதாக
தரவுகள் கூறுகின்றன.

பெருங்கொள்ளை நோய்க்காலத்துக்குப் பிறகு உலகளவில் நியாயப்பாடு
மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு கல்விக்கான நிதி ஒதுக்கீடு
அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளதோடு மக்கள்
தொழில்நுட்ப மற்றும் காலநிலை மாற்றங்களுக்கும் நிலையற்ற
சூழ்நிலைகளுக்கும் ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளக்கூடிய நிலையை
உருவாக்கவும் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. NEPF அறிக்கையிலும்
பொதுவாகவும் முன்வைக்கப்படும் கருதுகோளாக மாணவர்கள் கற்ற
திறன்கள் கூடிய விரைவில் பொருத்தமற்றுப் போவதோடு அவர்கள்
“மீள்திறன்களை” வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதோடு
“காலத்துக்குமான தேடலில்” ஈடுபட வேண்டிய தேவை
உருவாகியிருக்கின்றது. அத்தகைய வசதி உயர்கல்வி அளவில் மட்டுமே உருவாக்கப்பட முடியுமாயிருக்கின்றது. இதன் அடிப்படையில், பெட்ரினோஸ்
அவர்கள் (2018 ஆய்வறிக்கையின் இணை எழுத்தாளர்) உலக வங்கி
வலைதளத்தில் வெளியிட்ட ஆக்கம் வெளிப்படையானது. மானுட
மூலதனத்தில் முதலீட்டுத் திருப்பமானது குறை வருமான நாடுகளில்
பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளில் மேற்கொள்ளப்படும் மூலதனத்தைக்
காட்டிலும் இலாபகரமானதாகவும் திருப்ப‍ அடிப்படையிலான தீர்மானம்
மேற்கொள்ளலானது கிராமிய மற்றும் பெண் மாணவர்களுக்கு
பயனளிப்பதாகவும் இருக்கின்றது. பின்லாந்து (1970களில்) மற்றும் போலாந்து
(2000களில்) நாடுகளை உதாரணமாகக் காட்டும் இவ்வலைத்தளப் பதிவில்,
அந்நாடுகளில் கல்வித் துறை மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய மற்றும்
தொடர்ந்தேச்சையான நிதியீட்டங்கள் புத்தாக்கம் மற்றும் அனைத்தையும்
மேவிய வளர்ச்சியை வழங்கியுள்ளதாகவும் எழுதப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளப் பதிவின் படி, முக்கியமாக குறை வருமானம் பெறும்
நாடுகளில் முதலீட்டுத் திருப்பமானது உயர்கல்வித்துறையில் அதிகமாகும்.
பட்ரினோஸ் கூட கற்ற இளைஞர்கள் சிறந்த தெரிவுகளை தமக்காகவும்
சமூகத்துக்காகவும் மேற்கொள்கின்றார்கள் எனக் குறிப்பிடுவதோடு கல்வி
மற்றும் காலநிலை மாற்றத்துக்கேற்ற கொள்கைகள் மற்றும் கொள்கைத்
தேர்வுகளுக்கு இடையிலான இடைத்தொடர்புகளை சுட்டிக்காட்டுகின்றார்.
(https://blogs.worldbank.org/en/education/50-years-after-landmark-study-returns-education-
remain-
strong#:~:text=But%20education%20is%20more%20than,10%25%20increase%20in%20earnin
gs%20annually.) NEPFன் கல்வித்துறை எதிர்கொண்டுள்ள சிக்கல்களை
அடையாளப்படுத்தும் எந்த இடத்திலும் கல்வித்துறை மீதான
தொடர்ந்தேச்சையான நிதியீட்டக் குறைப்பு அடையாளப்படுத்தப்படவில்லை.
நிகழ்கால வாசிப்பில் மானுட மூலதனம் என்ற வரையறுக்கப்பட்ட சிந்தனை
சட்டகத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட அரசின் உயர்கல்வித்துறை
மீதான நிதியீட்டத்தை குறைப்பதை ஆதரிக்கும் நிலை காணப்படவில்லை.
உண்மையில் அண்மைய ஆய்வுகள் உயர்கல்வி மீதான அதிகரிக்கப்பட
வேண்டிய நிதியீட்டத்தை குறித்தே பேசுகின்றன. எனவே, உயர்கல்வித் துறை
மீதான நிதியீட்டக் குறைப்பு (NEPF செய்வது போல) மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை “உரிமைத்தகுதி உடையவர்களாக”
அடையாளப்படுத்துவதானது, எமது பல்கலைக்கழகங்கள் குறித்த பொது
அபிப்பிராயம் மற்றும் ஆதரவை குறைக்கும் கருத்தியல் சார்பை
வலுப்படுத்துவதாகவே அமையும்.

முனைவர் கமகே குறிப்பிடுவதன் படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
(ஏனைய பங்களிப்புக் காரணிகளில்) கல்வித்துறை மீது மேற்கொள்ளப்படும்
மிகக்குறைவான நிதியீட்டம் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
மொத்தமாக கல்வித்துறையே அதள பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருப்பதோடு
பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் தமது நிலவுகைக்கே கஷ்டப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. எனவே நாம் மிக கணிசமான சீர்திருத்தங்களை
உடனடியாக மேற்கொள்ள வேன்டிய சூழலில் இருக்கின்றோம்.
இலவசக்கல்வி என்பது எமது நாட்டில் சமூக நிலைப்பெயர்வுக்கு
முக்கியமான ஒரு காரணியாக காணப்படும் நிலையில் அதனை
“மீள்கட்டமைக்கும்” எந்த முயற்சிகளையும் நாம் கவனமாக ஆராய
வேண்டும். மேலும், கல்வித்துறை மீதான குறை நிதியீட்டத்தை
ஒப்புக்கொள்ளாத எந்த கொள்கைகள் சமுதாயத்தின் நலனுக்காக வேண்டி
கல்வித்துறை நிதியீட்டத்தை குறைப்பதை அடிப்படையாக வைத்து
வகுக்கப்படும் கொள்கைகள் குறித்தும் நாம் மிக கவனமாக இருக்க
வேண்டும். உலக வங்கியால் கூட சமூக நீதி மற்றும் நியாயத்துவம் போன்ற
கருத்துநிலைகள் சீர்தூக்கப்படும் நிலையில் அவற்றிலிருந்தான உச்ச பயனை
எடுப்பதோடு ஏற்கனவே எம்மிடம் இருக்கும் அமைப்பில் உள்ள நேர்மைய
விடயங்களை பாதுகாப்பதை பாரிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதைக்
காட்டிலும் முற்படுத்துவோம்.