அதிகார படிநிலைக்கு சவால் விடுதல்? அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் முறையீட்டுப்  பொறிமுறை

ரம்யா குமார்

எமது பல்கலைக்கழகங்கள் அதிகாரப்  படிநிலைகளை கொண்டவையாகக்  காணப்படுகின்றன. ஏற்கனவே வர்க்க, இன, பால்நிலை ரீதியாக காணப்படும் அதிகார சமச்சீரின்மையை மீள்வலுவூட்டுவதோடு, உயர் நிலையில் இருப்பவருக்கு மிகுதியான அதிகாரத்தை வழங்குமிவை உத்தியோகபூர்வ உத்தியோகபூர்வமற்ற வழிகளில் வெளிப்படுகின்றன. மருத்துவ துறையில், பேராசிரியர்களை விரிவுரையாளர்களுக்கு மேலாகவும், மருத்துவமனை சார்ந்தோரை மருத்துவமனை சாராதோருக்கு மேலாகவும், விசேட மருத்துவர்களை பொது வைத்தியர்களுக்கு மேலாகவும், இப்படி பல வகைகளில் ஒருவருக்கு மேல் இன்னொருவரை வைத்து செயல்படும் ஒரு “மறை திட்டம்” இளநிலை மாணவர்களை அவர்களது பயிற்சியின் ஆரம்ப நாட்களிலிருந்தே படிநிலைகளுக்கு வழிகாட்டுகின்றன. பல்கலைக்கழகங்களிலும் (வைத்தியசாலைகளிலும்) முடிவெடுத்தலை ஒழுங்குபடுத்த அதிகார படிநிலைகள் தேவைப்படும்போதிலும், செயற்படாதா படிநிலைகள் கற்பதற்கு பொருத்தமற்ற சூழ்நிலைகளையும், கேள்வி கேட்பதையும் பிரச்சனைகளை கூறுவதையும் ஊக்கக்கேடு செய்யும் கலாச்சாரத்தையும்  உருவாக்குகின்றன. மேலும், தவறாக நடத்தலை, அவமானப்படுத்தலை, அடாவடித்தனம் செய்தலை, மற்றும் ஏனைய அதிகார துஸ்பிரயோகங்களை சரியானதாக்குகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, புதிதாக இணையப்போகும் மாணவர்களுக்கான பகிடிவதை மற்றும் தொல்லைகொடுத்தல் பற்றிய ஒரு கூட்டத்தில் பங்குகொள்ளுமாறு நான் ஒரு மருத்துவ துறை மாணவியை அழைத்தபோது, அவர் பின்வருமாறு கூறினார் (அனுமதியோடு மேற்கொள் காட்டப்பட்டுள்ளது): “அலுவலக மட்டத்தில் அனைவரும் அறிந்த வகையில் பகிடிவதை ஆசியர்களால் இடம்பெறும்போது, இவ்வாறான நிகழ்ச்சியை நடத்துவதில் என்ன அர்த்தம், மேடம்?” ஆசியர்களாலும் பல்கலைக்கழக நிற்வாகத்தாலும் இடம்பெறும் அதிகார துஸ்பிரயோகங்களை எதிர்க்க இளநிலை மாணவர்களுக்கு அரச பல்கலைக்கழகங்களில் உள்ள வாய்ப்புக்களை ஆராய அவருடைய கேள்வி என்னை இட்டுச்சென்றது

இளநிலை மாணவர்கள் என்ன செய்ய முடியும்?

பகிடிவதை , பாலியல் மற்றும் பால்நிலைசார் வன்முறை பற்றி முறைப்பாடு செய்வதற்கான வழிமுறைகளை (SGB)  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் (UGC) அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் ஏற்படுத்தியுள்ளனர்.  “அனைத்து வகையான பகிடிவதை, பாலியல் தொல்லைகொடுத்தல், பாலியல் அல்லது பால்நிலைசார் வன்முறை, பயமுறுத்தல் மற்றும் மிரட்டல், அடாவடித்தனம், தொல்லைகொடுத்தல்” போன்றவைபற்றி UGC இன் ஒன்லைன் தளத்தில் முறையீடு செய்ய முடியும். பகிடிவதை மற்றும் SGBV பற்றி முறைப்பாடு செய்யும் முறைபற்றி அனைத்து பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்திலும் அவற்றின் சில பீடங்களின் இணையத்தளத்திலும் விளக்கமாக விபரிக்கப்பட்டுள்ளது. பீடாதிபதி, மாணவர் ஆலோசகர்கள், கல்வி ஆலோசகர்கள்/ வழிகாட்டிகள், ஆசிரியர்களிடமும் தங்கள் முறைப்பாடுகளை மாணவர்கள் கொண்டு செல்லலாம். மேலும், பகிடிவதை மற்றும் தொல்லைகொடுத்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஒன்லைன் வாயிலாக முன்வைப்பதற்கான முறையையும் பல பீடங்கள் கொண்டுள்ளன. இவ் முறைகள் மாணவர்களால் ஓர் அளவிற்கு பயன்படுத்தப்படும்போதிலும், ஆசியர்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகார படிநிலையில்  உள்ள ஏனையோரின் அதிகார துஸ்பிரயோகங்களுக்கு எதிரான அதிகாரத்தை சமநிலைப்படுத்தும் வேலையை இவை செய்வது அரிதாகவே உள்ளது.

முறைப்பாடு மற்றும் குறைகளை தெரிவிப்பதற்காக ஏற்கனவே உள்ள பொறிமுறைகள்மீது மாணவர்களுக்கும் (பொதுவாக பல்கலைக்கழக சமூகத்திற்கும்) நம்பிக்கை இல்லை என்பது அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அனைவரும் அறிந்த விடயமே. முறைப்பாடு செய்த நிகழ்வுகளில் ஒரு சிறுபான்மையானவை விளக்கமறியல் கட்டம்வரை கொண்டுசெல்லப்பபட்டாலும், அதிகாரத்தில் உள்ளோரிடம் இருந்து வரும் மிரட்டல்  மற்றும் பயமுறுத்தல் காரணமாக, முறைப்பாடுகள் வழக்கமாக மீளப்பெறப்படுகின்றன. அல்லது, அவை மூடிமறைக்கப்படுகின்றன. மிக சமீபகாலத்தில், சில பல்கலைக்கழகங்களும் பீடங்களும் SGBV/ பகிடிவதை முறைப்பாடு பொறிமுறை போன்றவற்றிக்கு வெளியே, முறையான மாணவர் முறைப்பாடு செய்யும் பொறிமுறைகளை நிர்மாணிப்பதை நோக்கி செயற்பட்டன.

புதிய முறைப்பாட்டுப் பொறிமுறைகள்

முறைப்பாடுகளை  தொடர்ந்து திருத்தங்கள் செய்வதற்கான பல்கலைக்கழக அளவிலான கொள்கையைகொண்ட பல்கலைக்கழகமாக சபரகமுவா பல்கலைக்கழகம்  மாத்திரமே தென்படுகிறது. நிலையான இயக்க முறையில் (SOP) விபரிக்கப்படுள்ள நெறிமுறையின்படி, தமது முறைப்பாடுகளை எழுத்துவடிவில் பீடாதிபதிக்கோ அல்லது பீடத்தின் உப சிரேஷ்ட மாணவ ஆலோசகரிடமோ கொடுக்கவேண்டும். ஒரு முறைப்பாட்டைப்   பெற்ற பின்னர், பீடாதிபதியால்/ உப சிரேஷ்ட மாணவ ஆலோசகரால் விளக்கமறியல் செய்வதற்கான ஒரு குழு உருவாக்கப்படும். அந்த குழு ஐந்து சிரேஷ்ட பணியாளர்களும் “பக்கச்சார்பற்ற இரண்டு  அங்கத்தவர்களும் (இன்னொரு துறையை சேர்ந்தவராக ஒருவர் இருப்பார். பீடத்தின் பால்நிலை வகிபங்கு மற்றும் சமத்துவ அலகினை பிரநிதித்துவம் செய்ப்பவராக மற்றயவர் தேவைப்பட்டால் இருக்கலாம்) கொண்டதாகவிருக்கும்…”  “அவரது பிரச்சனையை கையாளும் ஐந்து பேரை கொண்டவிக் கழுவில், தன்னுடைய வழிகாட்டி அல்லது/ மற்றும் பீடத்தை சேர்ந்த அங்கத்தவர் யாராவது  பங்குவகிப்பதை அம்மாணவர் எதிர்க்கலாம்” என SOP மேலும் சொல்கிறது. இருப்பினும், சிக்கலான பல்கலைக்கழக இணையத்தின் வாயிலாக சென்று, தர உறுதிப்பாடுக்கான நிலயத்திற்கான tab ஐ அழுத்தி, ஆவண பட்டியலை பார்வையிட்டு “சிறந்த நடைமுறைகள்” ஐ தெரிவுசெய்தலென இவ்வளவற்றையும்  செய்யத்தெரிந்த ஒரு மாணவருக்கே இந்த தகவல் கிடைக்கப்பெறுகிறது.

பல்வேறு மருத்துவ பீடங்கள் முறையீட்டு முறைகளை கொண்டுவந்துள்ளன  போல தெரிகிறது. முறையீடு செய்ப்பவரையோ அல்லது அவரின் தொழில்சார் கல்வியியல் திறனுக்கு தீங்கு விளைவிக்ககூடியதாக பார்க்கப்படும் ஒரு முடிவு அல்லது செயல்” தொடர்பான முறையீடுகளை பரிசீலனைசெய்ய கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முறைப்பாடுக குழு எடுத்துக்கொள்கிறது.  இதன் செயல்முறையின்படி, மாணவர்கள் தமது முறைப்பாட்டை பீடாதிபதிக்கு எழுத்துவடிவில் கையளிக்க வேண்டும். இக்குழுவானது “மருத்துவபீடத்தின் தற்போதைய பணியாளர்களைத்  தவிர்ந்த ஏனையோரை” கொண்டிருப்பதோடு, மருத்துவதுறை மாணவர்களின் நலன்சார் சமூகத்தின் உறுப்பினர் ஒருவர் இருப்பதையும் முறைப்பாடு செய்பவர் வேண்டிக்கொள்ளலாம். “கற்பித்தல் கற்றல் சூழலில் ஏற்படும் ஒழுங்குபடுத்தல்/ அமைப்பு ரீதியான மாற்றங்கள், தனி நபர்களை அல்லது மாணவர் குழுக்களை பாதிக்கும் வகையில் கல்வியியல் பணியாளர் உறுப்பினர்காளால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் உள்ளடக்கத்திலோ அல்லது அமைப்பில் வரும் மாற்றங்கள், கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் போன்றவற்றின் தன்மை மற்றும் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆய்வு வேளைகளில் ஈடுபடும் மாணவர்களை மேற்பார்வை செய்தல், எழுத்தாளர்நிலை மற்றும் அறிவுசார் உரிமை [மற்றும்] மாணவர் சேவைகளின் தரம் மற்றும் பல்கலைக்கழக வசதிகள் மற்றும் வளங்களை பெற்றுக்கொள்ள இயலுமை” போன்றவை தொடர்பாக கவனம் செலுத்தும் வகையில் அதிகம் பரந்துபதிட்ட ஒரு முறையீடு சார் கொள்கையை ருகுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் நடைமுறைப்படுத்துகிறது. தொல்லைகொடுத்தல், பாரபட்சம், அடாவடித்தனம்சார் நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தின் SGBV கொள்கையின் கீழேயே அடங்குகின்றன என கொள்கை கூறினாலும், பரீட்ச்சைகள் தொடர்பான  முறையீடுகளை அது கருதுவதில்லை. “உடலியல், மனவியல், கல்வியல் அனைத்து பிரச்சனைகள் அல்லது பல்கலைக்கழக வாழ்க்கை சார் எந்த பிரச்சனை” தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஒரு ஒன்லைன் முறைப்பாட்டு முறையை சிறி  ஜயவர்த்தெனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் கொண்டுள்ளது.  “மாணவரின் அனுமதியின்றி மாணவர் முறையீட்டுக் குழுவிற்கு வெளியே தகவல் பரிமாறப்பட்டது” என உறுதியளித்தவகையில், இந்தமுறை இரசிகையத்தன்மையை பேணுவதற்கு அர்பணித்துள்ளது.

ஏற்கனவே உள்ள பொறிமுறைகளிலுள்ள இடைவெளிகள்

 முழு பல்கலைக்கழக மட்டத்திலுள்ள SGBV / பகிடிவதை முறைப்பாட்டு முறைமை அனைத்துவகையான தொல்லைகொடுத்தல், பயமுறுத்தல் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்தலாம். இருப்பினும், கவலைக்கிடமான வகையில், இளநிலை மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பற்றி அறியாதவர்களாகவோ அல்லது அவற்றை பயன்படுத்த தயங்குபவராகோ இருப்பதாக தென்படுகிறது. பல்கலைக்கழகங்களிலும் பீடங்களிலுமுள்ள புதிய முறைப்பாட்டு பொறிமுறைகள் விரும்பிய பலன்களை பெற்றுவிட்டவனவா என்பது தெளிவாக தெரியவில்லை. அவை மாணவர்களால் பயன்படுத்த படுகின்றனவா? கற்றல் சூழலில் அவை ஆக்கபூர்வ மாற்றங்களை கொண்டுவரபோவாயாக உள்ளனவா அல்லது தர உறுதிப்பாட்டை வெறுமனே பெயரளவில் நிவர்த்தி செய்வனவாகவுள்ளனவா? விசாரிக்கப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை பற்றியோ அல்லது மேற்கொள்ளப்பட்ட நிவர்த்தி நடவடிக்கைகள் பற்றியோ எந்தவொரு இணையதளவும் குறிப்பிடுவதில்லை. இந்த பொறிமுறைகள் மாணவர்களால் பயன்படுத்தப்பட வேண்டுமானால், அவை சில தேவையான அடிப்படை விடயங்களை கொண்டிருக்க வேண்டும்.

 முதலாவதாகவும் மிகமுக்கியமாகவும், காணப்படும் முறைப்பாட்டு பொறிமுறைகள் பற்றி அனைத்து மாணவர்களும் பணிபுரிவோரும் அறிந்திருக்கவேண்டும். கோள்களைகளும் செயல்முறைகளும் பீட/ பல்கலைக்கழக இணையத்தளத்தில் ஒரு tab க்கு கீழே மறைத்துவைக்கப்பட்ட்தாக இருக்கலாகாது. அவை முகப்பிலும் மத்தியிலும் இருக்கவேண்டியன. இரகசியத்தன்மையை உறுதிசெய்வதற்காக கல்விநிறுவனம் என்ன நடவடிக்கைளை மேற்கொள்ளும் எனவும் சாட்சிகள் உள்ளடங்கலாக முறைப்பாடுசெய்ய முன்வருவோர் எவ்வாறு பாதுகாக்கபடுவார்கள் என்பதைப்  பற்றி மாணவர்கள் அறிந்திருக்கவேண்டும். இரகசியத்தன்மை மீறப்படும் எந்த கட்டத்திலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். தாமதமின்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு முறைப்பாடு பற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி முறைப்பாடு செய்தொருக்கு  தகவல் வழங்கப்பட வேண்டும். நிறைவாக, முறைப்பாட்டு பொறிமுறையில் நேர்மையையும் நியாயத்தையும் உறுதி செய்வதற்கு பல்கலைக்கழகங்கள் மற்றும்/ அல்லது பீடங்கள் தம்மை அர்பணித்தனவாக இருக்கவேண்டும்.

 இரண்டாவதாக, விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடப்பது உறுதிசெய்யப்படவேண்டும். பக்கச்சார்பற்ற உறுப்பினர்கள், அதாவது, தற்போது பீடத்தில் பணிபுரியாத அங்கத்தவர்கள், வேறு பீடங்களை சேர்ந்த கல்விசார் பணியாளர்கள் மற்றும்/ அல்லது மாணவ பிரதிநிதிகள், முறைப்பாட்டு குழுக்களில் உள்ளடக்கப்படவேண்டுமென சில பல்கலைக்கழகங்களின்/ பீடங்களின் SOP வலியுறுத்துகின்றன. தொழில்முறை தவறான நடத்தையை அனைத்து மட்டங்களிலும் மூடிமறைக்கும் போக்கு காணப்படும் மருத்துவம் போன்ற துறைகளில், பீடத்தை சேராத அங்கத்தவர்களை உள்ளடக்குவது பக்கசார்பின்மையை உறுதி செய்யுமா என்பது கேள்விக்குரிய விடயமே. முறைப்பாட்டு பரிசீலணைக்குழு எவ்வாறு அமையவேண்டும் என்பதில் முறைப்பாடு செய்ப்பவரின் அபிப்பிராயத்துக்கு அனுமதியளித்தல் இந்த பொறிமுறையில் அவருக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கும். பல்கலைக்கழக அதிகார படிநிலையின் ஓர் அங்கமான கல்விசார் பணியாளர்களைவிட, தீர்ப்பளிப்பவர்களாலேயோ அல்லது விசாரணை முடிவால் பாதிக்கப்படாத வேறு யாராலாவதோ விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது பரிந்துரைக்கத்தக்கதாக அமையலாம்.

மூன்றாவதாக, பல்கலைக்கழக நிர்வாகங்கள் மற்றும் ஆசிரியர்களிடம் வரிக்கக்கூடிய எதிர்த்தாக்குதல்களின் உண்மையான சாத்தியப்பாட்டை முறைப்பாட்டு பொறிமுறைகள் தீர்க்கவேண்டும். ருகுன பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் விதிமுறை குறிப்பின்படி, “முறைப்பாடு செய்தல் அல்லது குறைகளை கூறுவதன் விளைவாக மாணவர்கள் எந்தவொருவகையிலும் பலியாகவோ பாகுபடுத்தப்படவோ இல்லை” என குழு உறுதிசெய்யவேண்டுமென கூறினாலும், அது எவ்வாறு அமையுமென எந்தவொரு வழிகாட்டலயும்  வழங்கவில்லை. பழிவாங்கல் இடம்பெறும் பட்சத்தில் முறையீடு செய்தொர் மற்றும் சாட்சிகள் என்ன மாற்றுச்செயற்பாட்டுகள் செய்யலாம் என்பதை எந்த ஒரு முறைப்பாட்டு பொறிமுறையும் தீர்க்கவேண்டும். முறையற்ற நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டோர் பரீட்ச்சை நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது என உறுதியளிக்கும் எந்தவொரு கட்டுப்பாடுகளும் தற்போது இல்லை. முறைப்பாடு செய்ப்பவரின் கல்விசார்/ வேலைவாய்ப்புசார் வாய்ப்புகள் பாதிக்கப்படாதென எந்தவொரு பல்கலைக்கழகமும் எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை.

 மருத்துவமனைசார் செயல்முறை திறன் மதிப்பீடு மற்றும் நேர்காணல் அடிப்படையாகக கொண்ட (viva) மருத்துவத்துறையில் இது முக்கிய பிரச்சனையாக காணப்படுகிறது.

முன்னோக்கி செல்லல்

பல்கலைக்கழக பணியாளர்களாலேயோ அல்லது கொள்கைகளாலேயோ தாம் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டோமென  மாணவர்கள் உணரும்பட்ச்சத்தில் அவர்கள் தமது பிரச்சனைகளை கூறவும் குறைதீர்க்கவும் ஒரு முறையான பொறிமுறையை மாணவர் முறைப்பாட்டு பொறிமுறை வழங்குகிறது. அரச பல்கலைக்கழகங்களில் தற்போது உள்ள பொறிமுறைகளை பலவீனமானவையாகவும் போதுமற்றவையாகவும் காணப்படுகின்றன. கல்விசார் விடயங்கள், பீடத்தில் நடத்தை, மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் நிர்வாகம் போன்றவற்றில் நேர்மையை ஊக்குவிக்கும் வழிகளில் மாணவர் முறைப்பாடுகளை கையாளுவது பற்றிய கொள்கையை இலக்காகக்கொண்ட ஒரு ஆலோசனை செய்முறையில் பங்குகொள்ளுமாறு UGC பல்கலைக்கழகங்களை அழைக்கலாம். ஆதரவளிக்கும் கற்றல் சூழல்களை வளர்ப்பது, பல்கலைக்கழக நிர்வாகங்கள் மற்றும் மாணவர்கள் இடையில் நம்பிக்கையை வளர்த்தல், மாணவர்களை அடாவடித்தனம், பயமுறுத்தல், தொல்லைகொடுத்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்தல் போன்றவற்றை அவ்வாறான கொள்கை வளர்க்கும்போது, எமது பல்கலைக்கழகங்களிலுள்ள செயலாற்ற படிநிலைகளை தீர்ப்பதற்கும் அகற்றுவதற்குமான முயற்சிகளோடு அது சேர்ந்ததாக வரவேண்டும்.