அனுசரித்தல், இணங்குதல் மற்றும் உடந்தையாயிருத்தல்: ஒரு இளம்
கல்வியியலாளரின் பார்வை

ருத் சுரேந்திரராஜ்

இத்தகைய விடயமொன்றை முன்னிருத்தும் சம்பவமொன்று அன்றொருநாள்
என் வகுப்பில் நடந்தது‍ “நான் என்ன எதிர்பார்ப்பேன் என்று உங்கள்
எல்லோருக்கும் தெரியுமாதலால் நீங்கள் ஏன் அந்த விடயை தெரிவு
செய்தீர்கள் என்பதற்கான காரணங்களை கூறுங்கள்” என்று கூறினேன். அந்த
நேரத்தில், இரண்டாம் மொழி கற்பிக்கப்படும் என் வகுப்பறையில் உள்ள
மாணவர்களுக்கு அவர்கள் மேற்கொண்ட தெரிவுகளுக்கான காரணங்கள்
மற்றும் எவ்வாறு அவர்கள் அத்தெரிவுகளை நோக்கி உந்தப்பட்டார்கள்
போன்ற விடயங்களை கிரகிக்கும் சூழலை உருவாக்கி விட்டதாக நான்
நினைத்தேன். ஆனால் இவ்வகையான அணுகுமுறை கூட மாணவர்கள் நான்
முன்வைத்த கேள்வியை, எனது மொழியாற்றலை கேள்விக்குட்படுத்த
முடியாதென்ற அனுமானத்தின் பின்னரே விடையளிப்பார்கள் என்று பின்னர்
நான் உணர்ந்துகொண்டேன்.அதாவது, ஒரு ஆசிரியராக நான் எதனை
மாணவர்களிடம் வேண்டுகின்றேன் என்பதை அவர்களுக்கு முன்னறிவித்து
விட்டதனூடாக அவர்களது விடைகள் குறித்த ஒருபக்கச்சார்புடைய கருத்தை
நான் உருவாக்கிவிட்டேன்.
ஹர்ஷன ரம்புக்வெல்ல அவர்கள் தனது குப்பி ஆக்கத்தில்
குறிப்பிட்டுள்ளதைப்போல எமது பல்கலைக்கழக அமைப்பானது, மாணவர்கள்
அனுசரித்துப் போகும் தன்மையை ஊட்டி வளர்க்கும் காரணம், ஏலவே
காணப்படும் திட்டமிடல்கள் மற்றும் நடைமுறைகளிலிருந்து மாணவர்களால்
எவ்வித விலகலோ அல்லது சலசலப்போ ஏற்பட்டுவிடக்கூடாதென்பதே.
இந்நிலை பல்கலைக்கழகத்திலுள்ள கல்விசார் மற்றும் நிர்வாக
உறுப்பினர்களில் அனைத்து மட்டங்களாலும் பேணுதலாக
நடைமுறைப்படுத்தப்படுவதால் அனுசரித்துப்போகும் தன்மையானது
பல்கலைக்கழகங்களில் புரையோடிப்போயுள்ளது. இப்படிநிலைகள் ஒரு

அமைப்பை கொண்டுநடத்துவதற்கு உதவுவதாக காணப்பட்டாலும் அவை
மாற்றுக்கருத்து மற்றும் வழமையான நடைமுறையிலிருந்து விலகும்
முயற்சிகளை தோல்வியுறச்செய்யும் நிலையில் அவை ஆபத்தானதாக
மாறுகின்றன. இப்படிநிலைகள் அதிகமாக தமக்குக் கீழுள்ளவர்கள்
அதிகாரத்திலுள்ளவர்களை சவாலுக்குட்படுத்தாமலிருக்கும் நிலையிலேயே
தங்கியுள்ளன. இது பொதுவாக அமைப்பு சார்ந்த சிக்கலாக இருந்தாலும்
இவ்வமைப்பில் கற்றல்/ கற்பித்தல், ஆய்வு மற்றும் நிர்வாக செயற்பாடுகளில்
ஈடுபடும் நாங்கள் இவ்வமைப்பு சார்ந்த சிக்கலை வலுவூட்டும்படி செயற்படும்
தருணங்களை எவ்வாறு ஒப்புக்கொள்வதென சிந்திக்க வேண்டும். உதாரி
அபேசிங்க எழுதிய இளம் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
பற்றிய‌ குப்பி சிறப்பு பத்தியின் தொடர்ச்சியாக, தொழில் வளர்ச்சியின்
ஆரம்பப்படிகளில் இருக்கும் நாங்கள் இந்த பல்கலைக்கழக அமைப்பை
அனுசரித்தும் அதன் சுரண்டும் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டு அதனுள்
செயற்படுவதனூடாக எவ்வாறு எமது பெறுமானத்தையே நாங்கள்
தகர்க்கின்றோம் என்பதை ஆராய ஆவலாக இருக்கின்றேன்.
கல்வியியலாளர்களின் (குறிப்பாக தொழில்வளார்ச்சியில் ஆரம்பகட்டத்தில்
இருக்கும் கல்வியியலாளார்கள்) வேலைப்பளு நீண்டகாலத்தில்
அதிகமாயிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏற்கனவே பல பத்திகளில்
எழுதப்பட்டதைப் போன்று பல்கலைக்கழக கல்விப்புலம் என்பது
வகுப்பறையைத் தாண்டி சமூகப்புலத்திற்கு மாணாவ்ர்கள் எதை வழங்கத்
தயாராயிருக்கின்றார்கள் என்பதைப் பற்றியதாகும். கல்வித்துறைக்கு
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் குறைந்த நிதியொதுக்கீடு, பல்கலைக்கழக
நிர்வாகம் அரசியல்மயப்படுதல் மற்றும் அன்மைக்காலங்களில்
அதிகரித்துவரும் வெளிநாட்டு இடப்பெயர்வுகளால் பல்கலைக்கழக
ஆசிரியர்களின் வேலைப்பளு மேலும் அதிகரித்துள்ளது.
தொழில்வளார்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பல்கலைக்கழக
ஆசிரியர்களை வேலைப்பளுவுக்கு உள்ளாக்கலாம் என்ற மூத்த
பல்கலைக்கழக ஆசிரியர்களின் நிலைப்பாடும் இவர்களை மேலதிக
வேலைப்பளுவுக்குள் தள்ளியுள்ளது.

தரப்படும் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றக்கூடிய இயலுமையும்
அதற்குத்தேவையான திறன்களும் எம்மிடம் (தொழில்வளர்ச்சியின்
ஆரம்பத்தில் இருப்போர்) கூறப்பட்டாலும் அப்பொறுப்புகள் தொடர்பான
அமைப்புசார் அறிவு குறைவாக இருப்பதால் அப்பொறுப்புகளை சரிவர
செய்யக்கூடிய சூழ்நிலை உருவாவது கடினமாகிறது. எனவே ஒன்றில்
நாங்கள் மூத்த உறுப்பினர்களின் வழியையே பின்பற்ற வேண்டி இருப்பதால்
அதற்கான அனுசரிப்போடு செயற்படவும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட
பொறுப்புகளை அதே சட்டகங்களுக்குள் வைத்தே செய்யவும்
தலைப்படுகின்றோம் அல்லது, அச்சட்டகங்களுக்குள் இயங்குவதால் ஏற்படும்
நீண்டகால விளைவுகள் குறித்த சரியான புரிதலின்றி அப்பொறுப்புகளை
ஏற்கின்றோம்.
தொழில்வளர்ச்சியில் ஆரம்பகட்டத்தில் இருக்கும் எல்லோருமே
இப்பொறுப்புகளை செய்ய முடியாதவர்களாக இருப்பார்கள் என
திட்டவட்டமாக கூறிவிடவும் முடியாது. இளமானி மற்றும் பட்டப்பின்படிப்பு
தொடர்பாக நேரடியாக வழங்கப்படும் பொறுப்புகளை சரிவரச் செய்யக்கூடிய
சிறந்த கல்வியியலாளர்களும் காணப்படுகின்றார்கள். சிக்கலான விடயம்
யாதெனில் இப்பொறுப்புகளை எம்மில் எல்லோரும் செய்யக்கூடியவர்கள் என
அனுமானிப்பதே. “இதனை உன்னால் செய்ய முடியுமென நான்
நம்புகின்றேன்” எனக்கூறுவது நயவஞ்சகமான செயலாகும், ஏனெனில்
இயல்பாகவே பாராட்டுகள் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் அவற்றைச்
செய்யவேண்டிய நலிவான நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகின்றோம். மேலும்
மூத்த கல்வியியலாளர்கள் விண்ணப்பிக்கும் விடயங்களை செய்யாமல்
மறுக்க முடியாதென்ற வழமை இருப்பதனால் நாங்கள் எங்கள் இயலுமைக்கு
மீறிய பொறுப்புகளை மறுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
எமது கலாசாரம் மற்றும் பண்பாட்டு அறவிழுமியங்களின் படி மூத்த மற்றும்
தொழில்நிலையில் மூத்தநிலையில் உள்ளவர்களுக்கு “மரியாதை” வழங்க
வேண்டுமென்ற சூழ்நிலை எம்மை அனுசரித்துப்போகும் கட்டாயத்துக்குள்
தள்ளுகின்றது. துரதிஷ்டவசமாக “மரியாதை” என்பதை நாம் மூத்தவர்களின்
விருப்புகளுக்கு தலைசாய்ப்பதாக பொருள்கோடல் செய்திருக்கின்றோம். இந்த

மனநிலையே நாங்கள் எமக்கு கீழே உள்ளவர்களை- அவர்கள் சக
ஊழியர்களாக அல்லது மாணவர்களாக இருக்கட்டும்- எவ்வாறு நடத்துவது
என்ற நடைமுறையின் மீது செல்வாக்கு செலுத்துகின்றது.
இவர்களின் விண்ணப்பங்களை நாங்கள் மறுக்காமலிருக்க மற்றுமொரு
காரணம் உண்மையாகவே அப்பொறுப்புகளை செய்யும் இயலுமை எமக்கு
இருக்கின்றது என்ற நம்பிக்கையிலாகும். ஆனால் இது குறித்து நிற்பது
இன்னொரு முக்கியமான ஆனால் எம்மிடம் இல்லாத திறனையாகும்,
அதாவது இப்பொறுப்புகளை பூரணமாக முடிக்கக்கூடிய யதார்த்தமான
இயலுமையும் எமக்கேயுரிய இயலாமையைக்கொண்டு இப்பொறுப்புகளை
முடிக்க முடியுமா என்பதை விளங்கிக்கொள்ளக்கூடிய இயலுமையுமாகும்.
எமது முயற்சிகளுக்காக பெறப்படும் பாராட்டுகளின் பூரிப்பு எங்களின்
உய்த்துணரும் இயல்பை மங்கச்செய்வதோடு எமது தொழில் வளார்ச்சியும்
அதனால் பிரதிபலிக்கும் எமது சேவைசார்ந்த செயற்பாடுகளும் எவ்வாறு நாம்
சேவை புரியும் அமைப்புடன் இணைந்தே வளர்ச்சியடைகின்றது (அல்லது
வீழ்ச்சியடைகின்றது) என்பதும் கவனத்திலெடுக்க வேண்டிய விடயமாகும்.
உதாரணமாக, ஒரு இளம் விரிவுரையாளரின் கற்றல்/ கற்பித்தல், ஆய்வுகளில்
ஈடுபடல், நிர்வாக விடயங்களில் ஈடுபடல் குறித்த எவ்வித அர்த்தபூர்வமான,
தெளிவான வழிகாட்டல்களும் வழங்கப்படவில்லை. இவ்வமைப்பில்
காணப்படும் அனைத்து வழிகாட்டல்களுமே பதவியுயர்வை எப்படி அடைந்து
கொள்ளலாம் என்பதைப் பற்றியதாக காணப்படுவதோடு அவை சிறந்த
சுய‍விசாரணை மற்றும் வளார்ச்சியை நோக்காகக் கொண்டவையல்ல.
இவ்வாறு சுயவிழிப்புணர்வற்று உருவாக்கப்படும் ஆளுமைகள்‍- அதாவது
குறித்த அமைப்பின் சமநிலைத்தன்மையை பேணவல்ல பதவிகளில்
இருப்பவர்களால் மேற்கொள்ளப்படும் தவறான தீர்மானங்கள் அவ்வமைப்பின்
மீதும் அதனில் பங்காளர்களாக இருப்பவர்கள் மீதும் நீண்டகால பாதிப்புகளை
ஏற்படுத்தவல்லன.
சிலவேளைகளில் நாங்கள் பொறுப்புகளை துறக்கத் தயங்குவதற்கான
காரணம் நாம் வாழும் போட்டித்தன்மையான சூழலாகும். ஒரு சிறந்த
பல்கலைக்கழக சூழலில் தனிப்பட்ட மற்றும் சமூக ஆளுமைத் திறன்கள் என

இரண்டுமே போற்றப்பட வேண்டியநிலையில், இலங்கை
பல்கலைக்கழகங்களில் சமூக ஆளுமைத் திறன்கள் மந்தை
மனப்பான்மையாக வெளிப்படுவதோடு அதற்கு மாறாக தனிநபர்
ஆளுமைத்திறன்கள் அம்மந்தைகளை தனிப்பட்ட முறையில் வென்று
முன்செல்லக்கூடிய மனப்பான்மையாக வெளிப்படுகின்றன. தனிப்பட்ட
முறையில் தான் மட்டும் வெல்ல வேண்டும் என்ற மனநிலையின்
வெளிப்பாடே நிறைய பொறுப்புகளை தனதாக்கிக் கொண்டு அவற்றை
நிறைவேற்றுவதன் மூலம் பாராட்டுகளைப் பெறுவதும் தன்னை
நிலைநிறுத்திக்கொள்வதுமாகும். இம்மனநிலை கற்றலில் காணப்படவேண்டிய
ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை வளர்க்க முடியாத அமைப்பின்
தோல்வியாகவே நான் பார்க்கின்றேன். இதனை அறியாமல் நாங்களும்
தனிமனித நலன்களை மட்டுமே கருத்திற்கொண்ட தனிநபர்களின்
வளர்ச்சியையும் செயலூக்கத்தையுமே மையப்படுத்தும் செயற்பாடுகளை
எவ்வித கேள்விப்பார்வையுமின்றி ஏற்றுக்கொள்வதன் மூலம்
இச்சூழ்நிலைக்குள் ஒருவராக மாறிவிடுகின்றோம்.
இப்பதிவை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக இறுதியாக ஒரு வினாவை
தொடுக்கின்றேன்‍ ஒரு பொறுப்பை உங்களால் சுமக்க முடியாதென்பதை
முழுமையாக அறிந்திருக்கும் நிலையில் நீங்கள் எவ்வாறு முடியாது
என்பீர்கள்? உயர்பதவிகளை வகிப்பவர்களிடம் முடியாதென சொல்வது
இலகுவான காரியமல்ல. இது இயங்கும் படிநிலையை தகர்க்கும் செயற்பாடு
எப்போதுமே எட்டமுடியாத விடயமாக ஊதிப்பெருப்பிக்கப்பட்டுள்ளதோடு
கேள்விப்பார்வையின்றி பொறுப்புகளை ஏற்கும் ஊழியர்கள் இருக்கும்
அமைப்பொன்றில் பொறுப்புகள் வழங்கப்படும் போது நிறைவேற்ற முடியாத
நிலையில் முடியாதென சொல்லும் ஒருவர் பொதுநிலையில் இருந்து
விலகியவராக பார்க்கப்படுகின்றார். இவ்வாறான ஒரு சூழலில் முடியாது
எனக்கூற முடிந்து நீண்டகாலமாக வசிக்கும் என்னைப்போன்ற ஒருவருக்கு
இந்த அமைப்பை சீர்திருத்தக்கூடிய பொறுப்பை தோள்களில்
சுமந்திருப்பதாகவும் ஆரோக்கியமற்ற இந்நடைமுறைகளை தகர்க்கக்கூடிய
தகுதியை பெற்றுவிட்டதாகவும் தோன்றுவது இயல்பானது. இது ஒரு
வகையில் உண்மையாக இருந்தாலும் இந்நிலையை அளவுக்கதிகமாக

சோடனைகள் செய்வது யதார்த்தத்துக்கு பொருந்தாது. எனவே, எமது தொழில்
வளார்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நாங்கள், ஒரு பொறுப்பு
சுமத்தப்படும் போது வெறுமனே முடியாதென சொல்ல வேண்டும்
என்பதற்காக அதனை சொல்லாது அம்முடிவை தூண்டிய காரனிகளை அலசி
ஆராய்ந்து பார்த்து அதன் பின்விளைவுளை கணிப்பீடு செய்து தெளிவான
மனதோடு சொல்ல வேன்டும்.
இவ்வாறான முடிவுகள் சில வேளைகளில் அடுத்தவரின் உண்மையான
முயற்சிகளுக்கான தடைக்கல்லாக அமைந்து விடவோ அல்லது
தலைமைக்கு கட்டுப்படாதபடியான பொருளை வழங்கவோ கூடும். இது
தொழில்வளர்ச்சியின் ஆரம்பப் படிக்கட்டுகளில் இருக்கும் ஒரு
கல்வியியலாளரின் வாழ்க்கையில் சில தடங்கல்களை ஏற்படுத்தவும் கூடும்.
மூத்த கல்வியியலாளார்கள் மத்தியில் நேர்மையான
கலந்துரையாடலொன்றை கொண்டுவருவதன் மூலம் இவ்விளைவுகளை
குறைக்க முடிந்தாலும் அவ்வாறு நடைபெறுவது அரிதான விடயமாகும்.
இவ்வாறான நிலையில் நான் கடைபிடிக்கும் பழக்கம் என்னவெனில், எந்த
நடவடிக்கை நாம் இருக்கும் அமைப்புக்கும் தனிமனிதனான நமக்கும் நன்மை
பயக்குமே அந்நடவடிக்கைக்கு முக்கியத்துவமளிப்பதாகும். நான் இன்று
சொல்லப்போகும் “முடியாது” என்ற வார்த்தை நாளை வரவிருக்கும் புதிய
கல்வியியலாளர்களை அணுகுவதில் மூத்த கல்வியியலாளர்களுக்கு
மத்தியில் ஒரு மாறுதலை ஏற்படுத்துமாயின் எனது “முடியாது” என்பதற்கான
விலை மிக அற்பமானதெனவே நான் கருதுவேன்.