ரம்யா குமார், ஷாமல குமார், சுமதி சிவமோகன்
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: “academic freedom” எனும் ஆங்கில வார்த்தை இந்த கட்டுரையில் பல்கலைக்கழத்தில் கற்றல், கற்பித்தல், விமர்சன சிந்தை போன்றவற்றின் சுதந்திரத்தை சுற்றிய ஒரு எண்ணக்கருவாக சித்தரிக்கப்படுகிறது. எனவே இந்த பதத்தை “அறிவுச் சுதந்திரம்” என மொழிபெயர்த்திருப்பது பல்கலைக்கழக சூழலை மனதில் வைத்தே ஆகும். அதுபோலவே, “அறிவுப் பொறுப்புக்கூறல்”, “அறிவுசார் பணியாளர்கள்” என நான் மொழிபெயர்த்திருப்பது “academic accountability”, “academic” எனும் ஆங்கில பதங்களாகும்.
“சுதந்திரத்தை நடைமுறைப் படுத்தும் ஒரு செயற்பாடாக கல்விக்கு எம்மை அர்ப்பணிப்போமானால், புத்திஜீவிகள் எனும் பதத்தின் முழுமையான, ஆழமான அர்த்தத்தை ஏற்று நிற்கும் புத்திஜீவிகளாக நாம் இருக்கக்கூடிய ஒரு கல்வியால் சமூகத்தை உருவாக்குவதில் பங்களிப்பு செய்கிறோம்.- பெல் ஹுக்ஸ் (1989)
பாரம்பரிய விளக்கத்தின்படி அறிவுச் சமூகங்ககள் கற்பிப்பதற்கான, கற்பதற்கான, ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான, புலமை விசாரணைக்கான, தலையீடுகள் இல்லாத சுதந்திரத்தை அறிவுச் சுதந்திரம் என்ற சொல் குறிப்பிடுகிறது. நிறுவனரீதியான தணிக்கையின்றி பல்கலைக்கழக உள்ளக விடயங்கள் பற்றியும் சமூக பிரச்சினைகள் பற்றியும் கருத்துக்கூறும் சுதந்திரத்தை இது உள்ளக்கியது. கற்றலுக்கு விமர்சன கலந்துரையாடல், விசாரணை என்பவற்றை ஊக்குவிக்கும் புலமைக்குமான இடமாக பல்கலைக்கழகங்கள் தொழிற்பட இச் சுதந்திரங்கள் முக்கியமானவை. பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்கலைக்கழக சமூகங்கள் பொறுப்புக்கூற வைக்கும் சக்தியை கொண்டிருக்க அவை உதவுவதோடு அவ்வகையில் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அண்மையில் அறிவுச் சுதந்திரம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற திறந்த கருத்தரங்கு ஒன்றின் திறந்த கலந்துரையாடல் நேரத்திலே முதலாவதாக கேள்வி எழுப்பிய ஒரு பல்கலைக்கழக ஆசிரியர் கூறுகிறார்: “அறிவுச் சுதந்திரத்தின் அர்த்தம் வேலை செய்யாமலிருக்கும் சுதந்திரமாக உள்ளதா?” என்று. பல்கலைக்கழக அதிகார படிமுறையிலே உச்சத்தில் உள்ளவர்கள் கற்பித்தல், ஆய்வு, கருத்துக்களை தெரிவித்தல் போன்றவற்றில் கணிசமான அறிவுச் சுதந்திரத்தை கொண்டுள்ளனர் என்ற பொதுவான கருத்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் இருந்தாலும், ஏனையோர், முக்கியமாக கீழ் மட்டங்களிலுள்ளோர், ஆசிரியர்களால் இடம்பெறும் அறிவுச் சுதந்திரத்தின் துஸ்பிரயோகம் என தாம் நம்பிய விடயங்கள் பற்றி கவலை தெரிவித்தனர். அவ்வகையான துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் ஆசியர்களாக ஒழுங்காக பணிக்கு சமூகமளிக்காதோர், கட்டாயமாக பூர்த்திசெய்ய வேண்டிய கற்பித்தல் நேரத்தை பூர்த்தி செய்யாதோர், இளைய ஆசிரியர் மீது கற்பித்தல் சுமைகளை தள்ளிவிடுவொர் ஆகியோரை சுட்டிக்காட்டினார். இந்த கட்டுரையில் அரச பல்கலைக்கழக கட்டமைப்பிலே அகாடெமிக் சுதந்திரம் எவ்வாறு சட்டகப்படுத்தப்படுகிறது, அதனை விளங்குவதில் எமக்குள்ள போதாமைகள் மற்றும் அதன் உட்கோள் விளைவுகள் போன்றவற்றை பார்வையிடுகிறோம்.
அரச பல்கலைக்கழகங்களும் அறிவுச் சுதந்திரமும்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் பல்கலைக்கழ நிர்வாகங்கள் தமது கொள்கைகளிலும் வழிகாட்டல்களிலும் அறிவுச் சுதந்திரம் தொடர்பாக வெறும் ஆழமற்ற குறிப்பிடுதல்களையே மேற்கொள்கின்றன. UGC மற்றும் COPE (பொதுநிர்வாணங்கள் பற்றிய செயற்குழு) போன்றவற்றால் கண்காணிக்கப்பும்/ கட்டுப்படுத்தப்படும் அறிவுசார் பொறுப்புக்கூறலுக்கு எதிரான விடயமாகவே அறிவுச் சுதந்திரம் சித்தரிக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டை சேர்ந்த UGC உடைய அறிவுசார் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய ஒரு கொள்கை பாத்திரம் “பல்கலைக்கழக ஆசிரியர்கள் இடையூறின்றி கற்பிப்பதற்கும், ஆய்வுகளை நடத்தவும், தமது அறிவுச் செயற்பாடுகளில் திறந்த நிலையிலும் இளக்கமாகவும் இருக்கவும், தமது அறிவையும் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும், தமது வேலைக்கு அப்பாற்படட செயற்பாடுகளில் ஈடுபடவும் அறிவுச் சுதந்திரம் இருக்க வேண்டும்” என கண்டுணர்கிறது. இருப்பினும் அரிவுசார் பணியாளர்கள் பொறுப்புக்கூற வைக்கும் நோக்கில் இந்த பத்திரம் ஒரு “வேலைப்பளு மற்றும் வேலை நியமங்கள் மாதிரியை” அமுலாக்க முன்மொழிகிறது. ஏற்கனவே வரைவிலக்கணப்படுத்தப்பட்ட சில தராதரங்களின் அடிப்படையிலே பணியை இது அளவிட வினைக்கிறது. தமது ஆகக்குறைந்த/ கட்டாய வார வேலைச்சுமையிலிருந்து, ஊதியம் பெரும் நாட்டங்கள் உள்ளடங்கலாக, தமக்கு விரும்பிய நாட்டங்களில் ஈடுபட ஆக்கக்கூடுதலாக ஏழு மணித்தியாலம் ஒதுக்க பரிந்துரைக்கிறது.
அப்படியான நெறிமுறைகள் இப்போது பல்கலைக்கழகங்களுக்கு வடிகட்டப்படுகின்றன. இப்போது பல்கலைக்கழகங்களில் அறிவு பொறுப்புக்கூறல் பற்றிய (அறிவுச் சுதந்திரம் பற்றி அல்ல) கொள்கைகளே காணப்படுகின்றன. உதாரணமாக 2021 ம் ஆண்டை சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் “அறிவுச் பொறுப்புக்கூறல் பற்றிய கொள்கை” எனும் பத்திரம் கூறுகிறது: “தனி நபரின் அறிவுசார் அடைவுக்கு அறிவுச் சுதந்திரம் தேவையெனினும் ஒரு பல்கலைக்கழக அறிவுப் பணியாளர் நிறைவேற்ற படவேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.” இதை தொடர்ந்து, அறிவு விழுமியங்கள், புலமை சாரி தகுதிநிலை/ திறமை மற்றும் ஈடுபாடு, மாணவர்களையும் சக பணியாளர்களையும் மதித்தல் போன்ற விடயங்கள் தொடர்பான கொள்கைகள் பற்றி நீண்ட பட்டியலில் கூறப்பட்டுள்ளது. இவ் விடயங்களில் புதிராகவுள்ள ஒன்று என்னவெனில் “பல்கலைக்கழகத்தின் பணி, குறிக்கோள்கள், கொள்கைகள், நடைமுறைகள் எதிர்பார்ப்புக்களை” ஆதரிக்கும் “பல்கலைக்கத்திற்கான புலமை சார் மதிப்பும்” கூறப்பட்டுள்ளது. UGC நெறிமுறைகள் அடிப்படையிலே பல்கலைக்கழகங்கள் கொண்டுவந்த இன்னொரு விடயம் பல்கலைக்களத்துக்கு அவமரியாதை ஏற்படுத்தும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை கட்டுப்படுத்துவது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பணியாளர்க்களுக்கான சமூக வலைத்தள வழிகாட்டல்களில் ஒரு அடிப்படை கொள்கையாக “ஒரு நிறுவனமாக பல்கலைக்கழகத்தின் கௌரவத்தை மீறாதிருத்தல்” குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான கொள்கைகளயும் வழிகாட்டல்களயும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களும் எதிராக பயன்படுத்தக் கூடிய நிலை இருப்பினும், பீட அவைகளும் செனட் அவைகளும் அவற்றின் உட்கோள் விளைவுகள் பற்றி விமர்சன ஆய்வோ கலந்துரையாடலோ இன்றி கண்மூடித்தனமாக ஏறுக்கொள்கின்றன.
சில வேளைகளில் அறிவுச் சுதந்திரத்தின் மேலான தாக்குதல்கள் அவ்வளவு வெளிப்படையானதல்ல. உதாரணமாக UGC தர உறுதியளித்தல் சட்டகம் பல்கலைக்கழகங்களை பீடங்களை துறைகளை தரத்தை மேம்படுத்துவதாக எதிர்பார்க்கப்படும் மேலிருந்து கீழான தேர்வுபெட்டி செயற்பாடுடை செய்ய கட்டாயப்படுத்துகிறது. அப்போது, கைத்தொழில் துறை சார் தேவைப்பாடுகளோடு பட்டதாரிகள் ஒத்துப்போகவேண்டும் என கட்டாயப்படுத்தும் பாடத்திட்ட வடிவமைப்புக்கான, ஒரு மட்டுப்பாடான வெளியீடு அடிப்படையிலான சட்டகத்தை சாதாரணமயப்படுத்துகிறது. தேசிய மற்றும் பல்கலைக்கழக ஆய்வு மானியங்களிலே STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகள்) ஆய்வுகளுக்கு சலுகை செய்வது மற்றும் வர்த்தக மயமாக்கலின் மீது முக்கியத்துவம் வளங்கல் என்பன சமூக விஞ்ஞானங்களிலும் மானிட கற்கைகளிலுமுள்ள சமூக நீதி சார் விசாரணை மற்றும் புலமையின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்கின்றன. மேலும், எமது அடையாளங்களாக “இருப்பதையோ” அல்லது வெளிப்படுத்துவத்தையோ எமது பல்கலைக்கழகங்கள் கட்டுப்படுத்துகின்றன. உடை, பாலியல் செயற்பாடு, போன்றவை மீதான கட்டுப்பாடு மற்றும் சில வாழ்க்கை முறைகளை அழித்தல் (உதாரணமல்- LGBTQ+, சிறுபான்மை இனங்கள்) என்பன சில உதாரங்களாகும்.
பல்கலைக்கழக அதிகார படிமுறையிலே கீழ் மட்டத்தில் இருப்போர் உள்ளடங்கலாக அறிவுச் சுதந்திரம் பல்கலைக்கழக சமூகங்களின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் நீட்டிக்கப்படவேண்டும். இருப்பினும் அச் சுதந்திரம் திறமைக்காண் விரிவுரையாளர்கள், குறிப்பிட்ட காலத்துக்குரிய பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரியளவில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த படிமுறை நிலை அறிவுச் சுரண்டல், பாலியல் சேவகம், ஏனைய துர் நடத்தைகளுக்கு ஏற்ற சூழலை கொண்டுவருகின்றன. சில துறைகளில், இள நிலை பணியாளர்கள் கற்பிப்பதன் பெரிய பகுதியை பெறுகின்றனர். இதனால் ஆய்வுகள் மேற்கொள்ளவோ தமது தொழில் அந்தஸ்தை மேம்படுத்தவோ அவர்களுக்கு நேரமில்லாமல் போகின்றது. அவர்களுக்கு தஞ்சமாக பாதுகாப்பான சுதந்திரமான முறையீட்டு பொறிமுறை இல்லாமலுள்ளதோடு ஏனைய பல நிறுவனம் சார் தடைகள் தகுதிகாண் மற்றும் குறிப்பிடட காலத்துக்குரிய பணியாளர்களை அறிவுசார் வாழ்க்கையில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கின்றன. உதாரணமாக செயற்குழுக்களிலே பங்குபற்றுவதத்தில் கட்டுப்பாடுகள், கூட்டங்களிலே பங்குபற்றவும் பேசவும் உற்சாகப்படுத்தப்படாமை, அறிவுசார் மன்றங்களிலே பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்படாமை என பல விடயங்களை குறிப்பிடலாம். பலமட்டங்களிடமிருந்து அனுபதி பெறாமல் இப் பணியாளர்களோ மாணவர்களோ நிகழ்வுகளை அல்லது கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாது. பேராதெனிய பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்வை நடத்துவதற்கான அனுமதியை பெற மானவர்கள் எட்டு கையெழுத்துக்களை பெற வேண்டியுள்ளது. அண்மையில் உலக நாணய நிதியத்தை (IMF) பற்றி விமர்சிக்கும் ஒரு நிகழ்வு தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அறிவுச் சுதந்திரத்தை கோரி நிற்கும் ஒரு முற்போக்கு விசையாக மாணவர்கள் இருக்கக்கூடினாலும் இலங்கையிலே பல்கலைக்கழக நிர்வாகங்கள் மாத்திரமல்ல மாணவர்களும் அறிவுச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகவுள்ளனர். பகிடிவதை, உடைக்க கட்டுப்பாடு உள்ளடங்கலாக சிரேஷ்ட மாணவர்கள் ஏற்படுத்திய சட்டங்களுக்கு அமைவாக இருத்தல், பின்பற்ருத்தலுக்கான தேவை போன்றன இந்நிலைக்குரிய தெளிவான எடுத்துக்காட்டுகளாகும். மாணவர் ஒன்றியங்கள் மாணவர்கள் நடாத்தும் நிகழ்வின் தன்மைகளை கட்டுப்படுத்துவதோடு ஏனையோரின் அறிவுச் சுதந்திரத்தையும் தடுக்கிறது. அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்று பேச்சாளரின் மாற்று அரசியல் கருத்தை எதிர்த்த மாணவர் ஒன்றியத்தின் அழுத்தத்தால் ரத்துசெய்யப்பட்டது. இருப்பினும் விவாதிக்கக்கூடியவகயில், அறிவுச் சுதந்திரத்துக்கெதிரான ஆகக்கூடிய ஆபத்துக்கள் பல்கலைக்கழகத்துக்கு வெளியே அரசியல் பொருளாதாரத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
அறிவுச் சுதந்திரத்துக்கு வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள்
அறிவுச் சுதந்திரத்துக்கு மிக முக்கியமானவகையில் பதவி (பதவிக்காலம்) மற்றும் கல்லூரி ஆட்சியால் வழங்கிய பாதுகாப்பு அபாயத்திலுள்ளது. அரசாங்கங்கள் பல்கலைக்கழகங்களை நிதியிழப்பு செய்து அவற்றை வர்த்தகங்களாக மறுபெயர் வளன்குகின்றன. இதனால் விமர்சன சிந்தைக்கும் விசாரணைக்கும் மத்திய ஸ்தலமாக விளங்கும் அவற்றின் தொழில்ப்பாடு முடங்குகின்றன. தமக்குரிய நிதியை தாமாகவே உருவாக்க வேண்டிய நிலையில் படிப்புக்கான கட்டணங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை அதிகரித்துவருவதோடு மாணவர்களை ஈர்க்க அவை ஒன்றோடு ஒன்று போட்டி போடவேண்டிய கட்டாயமுள்ளது. பல்கலைக்கழக நிதியில் ஏற்பட்டுள்ள குறைப்புக்களோடு பதவி (பதவிக்கு காலம்) வழங்கப்படாத ஆசிரியர்களின் விகிதம் அதிகரிப்பட்டமை சேர்ந்து வந்துள்ளது. இதற்க்கு சமாந்தரமாக பீட அவைகள் மற்றும் செனட் அவைகள் போன்ற அறிவுசார் அவைகளிருந்து நிர்வாகத்தினர் மற்றும் நிதி வழங்குவோருக்கு அதிகாரம் திடமாக கை மாறியுள்ளது. இந்த நிதி வழங்குவோரில் கூட்டுத்தாபனங்களும் உள்ளடக்கம். கைத்தொழில் துறையுடனான கூட்டுச்செயல்பாடு, ஆய்வு நிகழ்ச்சி நிரல்களை பெரிய அளவு பாதிக்கின்றது. இதனால் சில வகையான ஆய்வுக் கேள்விகள் பொறுத்தமற்றதாக ஆக்கப்படுகின்றன. வெளியீடு அடிப்படையிலான, அதாவது வேலை சந்தைக்காக மாணவர்களில் ஆற்றல்களை வளர்ப்பதை முக்கியத்துவப்படுத்தும் கல்வியானது விமர்சன மற்றும் பகுப்பாய்வு சிந்தனை தேவைப்படும் பாடப்பரப்புக்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு கொன்டுசென்றுல்லது.
அறிவு நாடலை ஒரு தன்னிலை நன்மையாக பார்க்காமல் உயர்கல்வியில் முக்கிய குறிக்கோள் கைத்தொழில்ச்சாலைக்கு, பணிவான தொழிலாளர்களை உருவாக்குவது போல தென்படுகிறது.
இலங்கையிலும் இந்த பல்கலைக்கழகத்தை ஆட்சி செய்யும் இந்த முகாமைத்துவ மாதிரி தடம் பதித்துள்ளது. அறிவுசார் அவைகளை இணக்கத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ள தர நிர்ணய செயன்முறையூடாக இது முக்கியமாக இடம்பெற்றுள்ளது. பொருளாதார பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட ஆட்செர்ப்பு நிறுத்தத்தால் தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையிலான பணியாளர்களில் நம்பியிருப்பது அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக படிநிலையில் கீழ் படிகளில் பல்கலைக்கழக கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களின், முக்கியமாக அறிவுச் சுதந்திரத்தில் ஏர்ப்பட்டுள்ள மாற்றங்களின், பிரதிபலன்கள் அதிக தீவிரமாக உணரப்படுகின்றன. முன்னெப்போதையும்விட பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு அதிகமாக காணப்படும்போதிலும் போதிய தங்குமிட வசதியின்மை, உணவு விலை அதிகரிப்பு, இலவசக் கல்வி கொள்கையின் பொதுவான ஒரு பலவீனமாக்கப்பட்டால் போன்றவற்றின் காரணத்தால் உயர் கல்வி மெலும் மெலும் கட்டுப்படியாகாதாக வருவதால் மாணவர்கள் இடர்கலை முகங்கொடுக்கிறார்கள்.
இறுதியாக
அறிவுச் சுதந்திரம் தொடர்பான கலந்துரையாடல்களில் பொறுப்புக்கூறல் பற்றிய வலியுறுத்தல்கள் தவறான இடத்தில் கூறுவதாக இருக்கலாம். நிதிகளை குறைத்தல், தீவிர தனியார் மயமாக்கல் என்பவற்றால் அரச பல்கலைக்கழகங்கள் பலவீனமாக்கப்பட்டுவரும் இவ்வேளையில் அறிவுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காக UGC ம் பல்கலைக்கழக நிர்வாகங்களும் கொள்கைகளை கொண்டுவருகின்றன. வேலைச்சுமையை அளவிடுவதல் அல்லது அறிவுசார் செயற்பாடுகளை கண்காணிக்கும்/ கட்டுப்படுத்தும் மதிப்பீட்டு படிவங்களை அறிமுகப்படுத்தவற்க்கு பதிலாக பொறுப்புக்கூறல்களில் இருக்கும் குறைபாடுகளுக்கான தீர்வு அறிவுச் சுதந்திரத்தியிலேயே காணப்படலாம். அனைத்து மட்டங்களிலுள்ள பணியாளர்களும் மாணவர்களும் பெறுமதி மிக்கவர்களாக உற்சாகமூட்டப்பட்டவர்களாக உணர்ந்து பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதில் பங்கு கொள்ளக்கூடிய வகையில் அதிகாரம் மீள்விநயோகம் பண்ணப்படட சமத்துவ பல்கலைக்கழக வெளிகளை உருவாக்க முனையவேண்டும். அறிவுச் சுதந்திரம் வலுப்படுத்தப்படும்போது, நடைமுறைப்படுத்தப்படும்போது பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் உள்ளேயிருந்தே தோன்றும். அதாவது யாருடைய அறிவுச் சுதந்திரம் இன்று காலால் மிதிக்கப்படுகின்றதொ அந்த மட்டங்களில் இருப்போரிடமிருந்தே அக்குரல்கள் எழும்பும்.



