மகேந்திரன் திருவரங்கன்
பாடசாலை என்பது வெறுமனே முறைசார் வகுப்பறைக் கற்றலுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. விளையாட்டு, இலக்கியம், மற்றும் கலைகளிலே மாணவர் தமது ஆர்வத்தை ஆராய்வதற்கும், வழற்பதற்கும் கூர்மையாக்குவதற்க்குமுரிய இடமுமாக அதுவுள்ளது. பொழுதுபோக்கு தேவைகளுக்கு இணைபாடவிதான செயற்பாடுகள் முக்கியமானவை என்பதால் அவை பற்றி பாடசாலைகள் விசேட கவனம் செலுத்துகின்றன. இணைபாடவிதான செயற்பாடுகளிலே பங்குபற்றுவதன்மூலம், ஆக்கத்திறன் மீதான ஒரு நீண்ட கால தாகத்தயும் ஏனையோரோடு இணைந்து செயற்படுவதில் ஒரு ஆழமான ஆர்வத்தையும் மாணவர்கள் வளர்க்கிறார்கள். இவ் அனுகூலங்களை இணைபாடவிதான செயற்பாடுகள் வழங்கினாலும்கூட, பல பாடசாலைகள் மற்றும் கல்வித் திணைக்களம் அவற்றை நடத்தும் விதம், முக்கியமாக, யாழ்ப்பாண மாவட்டத்திலே, பிரச்சனைக்குரியதாகவும் எமாற்ற மழிப்பதாகவும் எனக்கு தென்படுகிறது. இந்த குப்பி கலந்துரையாடல் கட்டுரையானது இச் செயற்பாடுகள் நடாத்தப்படும் விதம் மற்றும் (வேளைகளில் வகுப்பறை கல்வியை குறைப்பதன் மூலம்) அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தின் அழவில் அதிகரிப்பு பொன்றன விரும்பிய பலனை கொண்டுவருகின்றனவா எனும் கேள்வியை எழுப்புகின்றது. தற்பொது இணைபாடவிதான செயற்பாடுகள் போட்டி எனும் குறுகிய விடயமாக பார்க்கப்படுவதை இக்கட்டுரை அவதானிப்பதொடு, அப் போட்டிகள் சிலவற்றுக்கு அடிப்படயாகவிருக்கும் காலனித்துவவாத கருத்தியலை வெளிப்படுத்துகிறது. அத்தோடு, ஆக்கத்திறன் மற்றும் சேர்ந்து செயற்படுதல் பொன்றவற்றிக்கு முக்கியம் வழங்கும் ஒரு புது முறையை கொண்டுவரும்படி இக்கட்டுரை அழைக்கிறது.
வகுப்பறை கற்றல் குறைவடைதல்
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளிலே இணைபாடவிதான செயற்பாடுகள் நடாத்தப்படும் விதம் முக்கிய மாற்றங்களுக்கு உட்படுவதை கடந்த இரண்டு தசாப்தங்களிலேயே அவதானித்துள்ளேன். நான் மாணவனாக இருந்தபோது, கிரிக்கட் போன்ற விளையாட்டுக்கள் குறிப்பிட்ட பருவகலாத்துக்குரியவையாக காணப்பட்டன. முதல் தவணை கிரிக்கட்டுக்குரியதாகவும் மூன்றாம் தவணை காற்பந்துக்குரியதாகவும் காணப்பட்டன. பாடசாலைகள் பங்குபற்றும் சுற்றுப் போட்டிகளினதும் நட்பு ரீதியான போட்டிகளினதும் எண்ணிக்கை கடந்த காலங்களிலே கணிசமான உயர்ந்துள்ளது. கல்வி திணைக்களத்தால் நடாத்தப்படும் ஆங்கில தின போட்டிகளின் எண்ணிக்கையும் உயர்வாகியுள்ளது. இப் போட்டிகளிலே பலது ஒழுங்கமைப்பதற்கு பெரியளவான நேரத்தை எடுத்துக்கொள்வன. பாடசாலை மட்டத்தில் அவை ஆரம்பித்து தேசிய மட்டம் வரை செல்வன. இவை ஆண்டுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றன. இத்தனை பல போட்டிகளும் சுற்ருப்போட்டிகளும் உண்மையிலேயே எமக்கு தெவைதானா? எல்லாப் போட்டிகளும் தேசிய மட்டமளவுக்கு செல்லத்தான் வெண்டுமா? மாணவர்கள் ஒன்றோ இரண்டோ இணைபாடவிதான செயற்பாடுகளிலே நீண்ட காலத்தை செலவழிப்பதற்கு பதிலாக, பல வகையான செயற்பாடுகளில் ஈடுபடும்வண்ண்ம், ஏன் இப் போட்டிகளில் சிலவற்றை மாகண அல்லது வலய மட்டத்தில் முடிவுக்கு கொண்டுவரக்கூடாது?
யாழ்ப்பாணத்தில் முன்னிலை வகிக்கும் சில பாடசாலைகளில், கிழமை நாட்களில் பாடசாலை நேரத்திலே மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுதல், போட்டிகளில் விளையாடுதல் போன்றன காணப்படுகின்றன. சில வெளைகளில், காலை 9 மணியில் இருந்து கூட அவ் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்கள் வகுப்பிற்கு வருவதில்லை என ஆசிரியர்கள் முறைப்பாடு செய்கிறார்கள். இணைபாடவிதான செயற்பாடுகள் அதிக நேரத்தை எடுக்கும்பொது கற்பிப்பதும் பாதிக்கக்கபடுகிறது. போட்டிகளுக்காக மாணவர்களை பயிற்றுவிக்க, ஏனைய பாடசாலைகளிலே அல்லது தொலைவில் இடம்பெறும் போட்டிகளுக்கு மாணவர்களுடன் கூட செல்வதன் காரணமாக, பாடசாலை நேர கற்பித்தலை நிறுத்தும்பொது, பாடத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தினுள் பாடங்களை கற்பித்து முடித்தல் சிரமமாகிறது. ஆசிரியர்கள் இணைபாடவிதான செயற்பாடுகளில் நேரம் செலவழிக்கும்பொது ஆசிரியர்கழின்றி காணப்படும் வகுப்புக்களை கவனிப்பதற்கு பாடசாலை நிர்வாகங்கள் இடர்படுகின்றன.
இது பரந்துபடாமல் வெறுமனே ஆங்காங்கே காணப்படுமாகவிருந்தால் ஒருவர் இதை பற்றி பெரியளவுக்கு கவலைப்பட தேவையில்லை. இருப்பினும் நான் இன்று பார்ப்பது (வேறெங்கு இல்லையெனிலும் யாழ்ப்பாணத்தில்) என்ன வென்றால், இவ்வகையான நிலைகள் தினசரியாகவும் பொதுவாகவும் வந்துகொண்டுள்ளன. இந்த நிலமையை குறைக்க, இணைபாடவிதான செயற்பாடுகளை குறைக்கவேண்டும். அல்லது, அவற்றில் சிலவற்றை பாடத்திட்டத்தில் முக்கியமான முறையில் கொண்டுவந்து பாடத்திட்டத்தினுள் அவற்றுக்கு அதிக நேரம் வழங்கப்படவேண்டும். இந்த இரண்டாவது முறையானது, முறைசார் வகுப்பறைக் கற்றலுக்கு அப்பாலாக, மாணவர்களின் பல்வகையான ஈடுபாடுகள், திறமைகளை வழப்படுத்தி கல்வியை அதிகமானோரை உள்வாங்குவாதாக மாற்றும்.
இணைபாடவிதான செயற்பாடுகளிலே செலவழிக்கும் நேரம் அதிகரிப்பதன் காரணமாக பாடத்தை கற்கவும் கற்பிக்கவும் செலவிட்ட பாடசாலை மணித்தியாலங்கள் குறைவடையும்பொது, இச் செயற்பாடுகளிலே பங்குபற்றும் மாணவர்கள் முறைசார் கல்விக்காக தனியார் கல்வி நிறுவனங்களை அணுகவேண்டிய நிலையுள்ளது. இன்னொருபக்கம் பார்த்தால், மாணவர்களும் பெற்றோரும் பாடசாலைகளைவிட தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், பாடசாலை நேரத்தின் பின்னர் இடம்பெறும் இணைபாடவிதான செயற்பாடுகளில் பங்குபற்ற தயக்கம் காட்டுவதோடு பாடசாலை நேரத்தில் பயிற்சிகள் இடம்பெறும் பட்சத்திலேயெ அவற்றில் இணைய சம்மதிக்கிறார்கள். மாணவர்களின் தனியார் வகுப்பு நேரங்களோடு முரண்படாத வகையில் பாடசாலை நேரத்தில் அல்லது இரவுநேரத்தில் அவர்களின் பயிற்சிகளை ஒழுங்கமைக்கக்கூட பாடசாலைகள் முன்வருகின்றன. இவ்வாறான வழக்கங்கள் யாழ்ப்பாணத்தில் தனியார் படிப்பக தொழிற்சாலை தழைக்க உதவி செய்கின்றன.
காலனித்துவ கால விடய உள்ளடக்கம்
கல்வி அமைச்சால் நடாத்தப்படும் ஆங்கில தின போட்டிகளால் பல நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆங்கிலத்தில் பேச, எழுத, ஆக்கபூர்வ நடைமுறைசார் வழிகளில் அதனை பயன்படுத்த என பல சந்தர்ப்பங்களை அப் போட்டிகள் உருவாக்குகின்றன. இருப்பினும், இப் போட்டிகளின் பின்னுள்ள முன்கருதல்கள் மற்றும் கருத்தியல்கள் காலனித்துவாதம் சார்பாகவும் மேட்டுக்குடி மனநிலை சார்பாகவுமுள்ளன. இப் போட்டிகளிலே மாணவர்கள் செய்ய வேண்டிய விடயங்கள் அவர்களின் சமுக கலாச்சார சூழல்களிலிருந்து விடுபட்டவையாக காணப்படுகின்றன. மறைமுகமாகவும் வெளிப்படையாகவும், அவை ஆங்கிலத்தை ஒரு அந்நிய அல்லது மேட்டுக்குடி மொழியாகவும் அதனால் அந்நிய அல்லது மேட்டுக்குடி அனுபவங்களையே பரிமாற முடியும் என சித்தரிக்கின்ரன. உதாரணமாக, ஒரு கல்வி வலயத்திலே, உள்நாட்டு விடயங்களைகொண்ட நாடகத்தை மேடையேற்ற வேண்டாம் என ஒரு கல்வி அலுவலர் கூறியுள்ளார். உள்நாட்டு பாணியிலே ஆடைகளைகூட அணியவேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். கடந்த வருடம், பொருளாதார பிரச்சினை மற்றும் அரகலய போராட்டம் பற்றி கவனம் செலுத்திய ஒரு நாடகம் அதிகமாக அரசியல் பேசுவதாக நிராகரிக்கப்பட்டது.
கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட சுற்றறிக்கை தமிழ் மற்றும் சிங்கள மொழி வார்த்தைகளை நாடகங்களில் பயன்படுத்துவதை தடை செய்கிறது. இதன் ஒரு விளைவாக, உறவுமுறை வார்த்தைகளை கூட மாணவர்களால் தமது சுதேச மொழியிலே பயன்படுத்த முடிவதில்லை. மொழிகளுக்கிடையிலான ஊடாட்டத்தின் வழியாக ஆங்கிலத்தை ஜனரஞ்கப்படுத்தவும் உள்ளூர் மயமாக்குவதற்கும் நாம் அர்பணித்துள்ளோம் என்று எமது கல்வியளாளர்கள் கூறினாலும், மேலிடத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்கள் மொழித் தூய்மையை தூக்கிக் கொண்டாடுவதோடு ஆக்கத்திறனை தடுக்கிறது.
2024 ம் ஆண்டுவரை, தரம் 12 மற்றும் 13 மாணவர்கள் அமெரிக்க ஜனாதிபதிகளான ஜோன் f கென்னடி மற்றும் ரொனால்ட் ரீகன் போன்றோரின் உரைகளை இப்போட்டிகளுக்காக மனப்பாடம் செய்ய வெண்டிய நிலை இருந்தது. ஏகாதிபத்திய விடயங்கள் கொண்டதாகவும், அகில தெற்கின் சமுகங்களை கீழ்வாக நடாத்துவதாகவும் பங்குபற்றும் மாணவர்களின் வாழ்க்கை அனுபவங்களோடு தொடர்பு படாததாகவும் இவ்வுரைகள் காணப்பட்டன. நல்ல வேளை, இவ்வுரைகள் இப்போது சுற்றாறிக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு, சமுகங்களை பற்றிய வார்ப்புக்களை சவாலுக் குட்படுத்துதுதல் மற்றும் சூழல் பாதுகாப்பு போன்ற எண்ணக்கருக்களை கொண்ட மேம்பட்ட உரைகள் அவற்றிற்க்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆரோக்கியமற்ற போட்டிகள்
பாடசாலைகளும் கல்வி அதிகாரிகளும் இணைபாடவிதான செயற்பாடுகள் மாணவர்களில் கொண்டுவரக்கூடிய பெறுமதிமிக்க விடயங்களை கருத்தில் கொள்ளாமல், அதன் போட்டித்தன்மையை மட்டுமே கவனத்தில் எடுப்பது பாரியளவில் கவலைக்குரிய விடயமாகும். அனைத்து நாடக போட்டிகளுமே வெளியொருவருக்கும் திறந்து விடப்படுவதில்லை. பங்குபற்றும் பாடசாலைகளிருந்து ஒரு ஆசிரியர் மட்டும் அவரின் பாடசாலையின் நாடகம் இடம்பெறும் நேரத்தில் மட்டும் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றார். வெற்றியாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் எனும் தேவையற்ற ஊகங்களை தவிர்க்கலாம் எனும் காரணத்தை ஒழுங்கமைப்பாளர்கள் இதற்கு கூறுகிறார்கள். ஒரு மாணவரின் ஆற்றுகையை இன்னொருவர் பார்ப்பதை தடுப்பது ஏனையோரின் திறமைகளை பாராட்டுவதையும் ஒருவரிலிரிந்து இன்னொருவர் கற்றுக்கொள்வதையும் ஊக்கக்கேடு செய்கிறது. பங்குபற்றுவதன் முக்கிய நோக்கம் வெற்றியே என மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலைகள் சிந்திக்க வைக்கபடுகிறார்கள். முடிவுகள் அறிவிக்கப்படும்போது வெளிப்படைத்தன்மை மற்றும் பக்கச்சார்பு தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. வெற்றியாளர்கள் எவ்வாறு ஆற்றுகை செய்துள்ளனர் என பார்க்க வாய்ப்புக்க் கிடைக்காத வெற்றி பெறாத பாடசாலைகளும் மாணவர்களும் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் காணப்படுகின்றனர். இந்த வெளிப்படைத் தன்மையின்மை, சகிப்புத்தன்மையின்மையும், தீவிர போட்டித்தன்மையயும் ஊக்குவிக்கின்றது.
பல பாடசாலைகள் தமக்கு ஒரு பெயரை உருவாக்கவும் ஏனைய பாடசாலைகளை விட ஒரு பெரிய இடத்தை பெறவும் ஒரு வழியாகவெ இப் போட்டிகளை பார்க்கின்றன. எப்படியாவது வென்றுவிடவேண்டுமென பாடசாலை நிர்வாகமும் பழைய மாணவர் சங்கங்களும் மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் அழுத்தம் வழங்கும் நிலையும் காணப்படுகிறது. கவலைக்கிடமான வகையில், இச் செயற்பாடுகளை அழகியல் நயத்துக்கான அல்லது கூட்டு செயற்பாட்டுக்கான வாய்ப்புக்களாக சட்டகப்படுத்த ஈடுபாடு காணப்படுவதில்லை. மாணவர்கள் தமது சொந்த வாழ்விலே ஏற்படும் பின்னடைவுகளை தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளை செய்யாத வகையில் முகங்கொள்ள இப் போட்டிகள் உதவும் எனும் உண்மை கவலைக்கிடமானவகையில் கண்டுகொள்ளாப்படுவதில்லை.
ஆக்கத்திறனை தொடர்பாடலாக பார்த்தல்
ஆக்கத்திறன் இணைப்புக்களை ஏற்படுத்த வேண்டும். வெறுமனே சில பாடசாலைகளுக்கு இடையிலான இணைப்பாக இருக்காமல், பாடசாலைக்கும் அதனை சுற்றியுள்ள சமுகத்திற்கும் இடையேயான தொடர்பாடலாக இருக்க வேண்டும். இந் நாட்களில் பல பாடசாலைகளில் நாடகம் மற்றும் நடனம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டாலும் அதில் கூடுதலானவை மாணவர்களை போட்டிகளுக்கு தயார்ப்படுத்தும் நோக்கிலேயே இடம்பெறுகின்றன. பாடசாலைக்கு வெளியிலுள்ள சமுகம் பார்வையிடக்கூடிய கலாச்சார செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதில் பாடசாலைகளுக்கு ஆர்வமில்லை. வருடாந்த ஆங்கில தினம் மற்றும் தமிழ்த் தினம் பொதுவாக பாடசாலை கற்றல் நேரத்திலேயே இடம்பெறுகின்றன. இவற்றில் பங்குபற்றும் மாணவர்களின் பெற்றோர் கூட இன்நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடிவதில்லை. கலைகளும் ஆக்கத்திறனும் கலை நயத்திலிருந்து பிரிக்கப்படும்பொது இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதில் என்ன அர்த்தம்? இணைபாடவிதான செயற்பாடுகள் தொடர்பான நிகழ்வுகளை சமுகத்தை சேர்ந்தோர் பார்வையிட முடியாவிட்டால் ஏன் அவ்வாறான செயற்பாடுகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரியளவு நேரத்தை செலவிட வேண்டும்?
இலங்கையிலும் சரி உலகளாவிய ரீதியுலும் சரி தமது பாடசாலை நாட்களில் பாடல், நடிப்பு, நடனம், உரையாற்றுதல் பொன்றவற்றில் திறம்பட செயற்பட்டோர் பின்னர் அத்துறைகளிலே பிரசித்திபெற்ற கலைஞர்களாக வந்துள்ளனர். நல்ல மன உணர்ச்சி நிலைக்கும் அவர்களின் மனப்பாங்கு / எதிர்காலம் முழுமையாக இருக்கவும் மாணவர்களுக்கு இணைபாடவிதான செயற்பாடுகள் தேவை என்பதில் ஐயமில்லை. இருப்பினும், இச் செயற்பாடுகளை ஜனநாயகப்படுத்த, அவற்றின் சுமையை குறைக்க, மாணவர்கள், பாடசாலை மற்றும் சமுகத்துக்கு அர்த்தமுள்ளதாக அவற்றை மாற்ற முயற்சி செய்யப்படவேண்டும். இச் செயற்பாடுகளின் காரணமாக முறைசார் கல்வி பாதிக்கப்படல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வேலைப்பழு அதிகரித்தல், பாடசாலைக்களுக்கு இடையிலான உறவுகள் பாதிக்கப்படுதல் போன்ற விடயங்கள் இடம்பெறாமலிருப்பதை அரசாங்கங்கள் உறுதிசெய்யவேண்டும். கல்விச் சீர்திருத்தங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெறும் இவ்வேளையிலே, இக் கேள்விகள் முன்னிலைப்படுத்தப்படவேண்டும். ஏனெனில், எமது கல்வி முறைமையினால் வழங்கப்படும் கல்வியின் தரத்தில் இவ் இணைபாடவிதான செயற்பாடுகள் முக்கிய பங்கை கொண்டுள்ளன.



