இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு

விஷ்விகா செல்வராஜ்

மகேந்திரன் திருவரங்கனின் “மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை
நிகழும் காலத்தில் கற்றல் செயற்பாடு (15.01.2024)” குப்பி ஆக்கத்தில்
பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு விமர்சன சிந்தனையை வளார்க்கும்
கூடங்களாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியிருந்தார். உயர்கல்விக்
கூடங்கள் மாணவர்கள் விமர்சன நோக்கோடு சிந்திக்கும் தளத்திலிருந்து
வெறுமனே செயற்பாடுகளை பூரணப்படுத்தும் குறிப்பெட்டியாக
மாறியிருப்பதை ஆயாசத்தோடு குறிப்பிட்டார். மாணவர்களை அவர்கள் என்ன
கூற விளைகின்றார்கள் என்பதை கேட்பதை விடுத்து அவர்களின் மொழியை
சரிசெய்யும் செவ்கையையும் நான் இதே போன்றதொடு நிலையில் இருந்து
காண்கின்றேன். மாணவர்களின் கருத்துகளை விளங்கிக்கொள்ள
முயற்சிக்கையில் ஆங்கில பயிற்றாசிரியர் என்ற வகையில் மொழியின்
நியமங்களுக்குக் கட்டுப்பட வேண்டிய சூழல் எமக்கு காணப்படுகின்றது.
இங்கே நான் மொழியின் நியமங்கள் எனக் குறிப்பிடும் போது விளக்க
முனைவது, ஒரு மாணவனின் வெளிப்பாட்டை சரியாக படமெடுத்துக்
காட்டும் மொழிப்பிரயோகம் அன்றி உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழித்
திறமை மீது உருவாக்கப்பட்டிருக்கும் சீரியல்பான வழிகாட்டுதல்களன்று.
இவ்விரு நியமங்களுக்கு மத்தியிலும் ஒரு சமரசத்தை அடைய முடியாத
நிலையில், நாங்கள் “ஏற்புடையது” எனக் கருதும் வழிகாட்டலை நோக்கி
நெறிப்படுத்துகையில் மெதுவாக ஆனால் திடமாக அவர்களை இழப்பதோடு,
அவர்களை பலமற்றவர்களாக மாற்றுகின்றோம்.

சுய கருத்து வெளிப்பாட்டுக்கான கூறாக அன்றி மொழியென்பது ஏது?
மொழியை அதன் சாராம்ச அளவில் பூரண நிலையை பேணுவதற்காக
வாயில் காப்பு செய்தல், குறிப்பாக அதன் சட்டகத்தை வாயில் காப்பு செய்யும்
நடவடிக்கையானது அதன் உட்கூறுகள் செழிக்கச்செய்வதிலிருந்து
தடுக்கின்றது. போலோ ப்ரேயர் கூறுவதை போல, “மொழியை சட்டகம் அனுமதிக்காவிடின், சட்டகம் மாற்றப்பட வேண்டும்”. ஆங்கிலத்தில்
வெளிப்பாடுகளுக்கான கூறுகள் என்ற அடிப்படையில் வைத்து இலங்கையில்
அத்தகையதொரு மாற்றத்தை மொழியியல் அறிஞர்கள் எமக்கு
முன்வைத்துள்ளனர். காலனித்துவப் பிடியுடன் ஆங்கிலத்துக்கு நிலவும்
சிறப்புரிமை காரணமாக எமது இலவசக் கல்விக் கொள்கையில் சமமற்ற
வளாப்பகிர்வு நடைபெறுவதோடு இலங்கையில் பெரும்பாலானோருக்கு
ஆங்கிலக்கல்வி மாயமானாகவே இருக்கின்றது. எம்மிடம் சிறிதளவு பரீச்சயம்
எழுத்தளவில் சிறுவயதிலிருந்து காணப்பட்டாலும் சரியான
அடித்தளமில்லாமல் இலங்கையில் பெரும்பாலானோர் தாம் கற்றதை
பயன்படுத்துவதிலிருந்து இயலாத நிலையிலேயே இருக்கின்றனர்.
இவ்விடைவெளியை நிவர்த்திக்க முயற்சிக்கும் ‘நிபுணர்கள்’ எமக்கான, எமது
நாட்டுக்கும் மக்களுக்கும் உகந்த பாணியிலான இலங்கை ஆங்கிலத்தை (SLE)
கொண்டுவர சிரமப்படுபவர்களாகவே இருக்கின்றனர். இருப்பினும்,
பெரும்பாலான இலங்கையர்கள் இவ்வாறான முயற்சிகள் குறித்தோ தமது
இயலுமையை தமக்கேயுரிய மொழியின் பாணியில் முழுமையாக
வெளிப்படுத்தக் கூடிய சாத்தியத்தை அல்லது உள்ளமையைக் கூட
உணராதவர்களாகவெ இருக்கின்றனர்.

கடந்த அரையாண்டு பருவத்தில் நான் எனது மூன்றாம் வகுப்பு
மாணவர்களுக்கு ஒரு பாடத்தை சுருக்கவுரை செய்வதை கற்றுக்
கொடுத்தேன். சுருக்கவுரை மேற்கொள்வதற்கான ஆரம்ப சட்டக அமைப்பை
கற்றுக்கொடுத்த பின்னர் நாம் கற்கும் பாடமான மெனிக் குணசேகரவின்
இலங்கை ஆங்கிலம் தொடர்பான ஆக்கத்தை நோக்கி கவனம்
செலுத்தினோம். எமது கருத்தாடல்களில் புலப்பட்ட விடயம் யாதெனில்
மாணவர்கள் (SLE) எனும் இலங்கை ஆங்கிலம் குறித்து அறிவது இதுவே
முதல் முறை என்பதாகும். அவர்கள் பாடத்தை விளங்கிக் கொண்டாலும் (SLE)
குறித்த படிவளார்ச்சியை அடையாளம் காண அவர்களால் முடியவில்லை.
இலங்கை ஆங்கிலம் குறித்த கருத்தாடல்களில் எனது மாணவர்கள்
ஈடுபட்டிராவிடினும் சில காலங்களாக தமது கருத்து வெளிப்பாட்டிற்கேற்ப
ஆங்கிலத்தை நயப்புப்போக்கோடு உருவாக்கும் செயற்பாட்டில் அவர்கள்
ஈடுபட்டதனால் தானாகவே (SLE)யின் இருப்புக்கு அவர்கள் பங்களித்திருக்கின்றனர். இருப்பினும், (SLE) குறித்த சரியான வரைவிலக்கணம்
வழங்கப்படாத கொள்கைவகுப்பாளர்களும் ஆசிரியர்களும் எவை இலங்கை
பாணியிலானவை என பொறுக்கியெடுக்கும் பணியில் ஈடுபட
விளைகின்றனர். ஒரு ஒட்டுவேலை பார்ப்பதைப் போல “னோ” “அனே”
போன்ற வெளிப்பாடுகளை எவ்வாறு இலங்கைமயப்படுத்துவது என
முடிவெடுக்கின்றனர். குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், நாம் அனைவரும்
இலங்கையர்களாக இருந்தும், எமக்கானவை என பாத்தியதை கொள்ளும்
விடயங்களில் எம்மிடம் இருக்கும் இலங்கைக்கான அம்சங்களில் நாம்
குழப்பநிலையில் இருப்பதாகும். எமது குழப்பநிலையுடனான மகிமையில்
நாம் பேசும் அனைத்துமே (SLE) தானே?

இலங்கையில் பாடசாலை காலங்களில் சரியான ஆங்கிலக் கல்வியை
புகட்டாத அமைப்பு சார்ந்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் அரச
பல்கலைக்கழகங்கள் இளங்கலை மாணவர்களுக்கு கட்டாய ஆங்கில
பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள்
பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் போது வைக்கப்படும் பரீட்சைகளை
அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆங்கிலப் புலமை அடிப்படையில்
ஆரம்ப‍-அடிப்படை அலகு முதல் உயர்தர அலகு வரை பிரிக்கப்பட்டு
மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களை மொழியை
ஒரு வெளிப்பாட்டுக் கருவியாக பயன்படுத்த ஊக்கப்படுத்தும் பொருட்டு நாம்
ஆங்கிலத்தை அவர்களின் பாணியில் வெளிப்படுத்த ஆவன
செய்திருக்கின்றோம். இது முடியாத காரியமாக இல்லாவிடினும், சிங்கள
அல்லது தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு
ஏனைய பாடநெறிகளுக்கு மத்தியில் வருடக்கணக்கான கற்றுவந்த
மொழியொன்றை மீளக்கற்பது கடினமானதாகும். பல்கலைக்கழகங்களில்
நிலவும் பரீச்சயமில்லாத சூழலும் கற்றல் மாதிரியும் இதனை மேலும்
சிக்கலுக்குள்ளாக்குகின்றன. கிழமைக்கு நான்கு முதல் ஆறு
மணித்தியாலங்களுக்கு நடக்கும் இப்பாடநெறியில், அதுவும் ஒரு நாளின் மிக
சோர்வான நேரத்தில் நடைபெறும் பாடநெறிகளில் மாணவர்கள் கவனத்தை
ஈர்ப்பதென்பது கழைக்கூத்தாடினாலே அன்றி நேராது. மேலும், 30
மாணவர்களை கொண்ட வகுப்பில் தனித்தனி மாணவர்களுக்காக கவனத்தை செலுத்தி பாடம் கற்பிப்பது, அதுவும் ஆங்கில அகரவரிசை அல்லது சொல்
வகையினங்களை கற்பிக்கும் போது மாணவர்களின் கவனத்தை
ஈர்ப்பதென்பது கடினமான செயல். பொதுவான பாட அலகை நிறைவு செய்ய
அனைத்து வகையான மாணவர்களையும் இணைத்துப் பயணிக்கும்
அதேவேளை வரையறுக்கப்பட்ட கால அலகுக்குள் முன்னேற்றமொன்றை
நிகழ்த்திக் காட்டும் செயல் பாராட்டப்பட வேண்டியதாகும்.

ஆங்கிலத்தை எமக்குரியதாக மாற்றல் மற்றும் இடைவெளிகளை நிரப்புதல்
என எத்தனை தான் கூறினால் பரீட்சை என வரும்போது
பயிற்றாசிரியர்களான நாங்கள் மீண்டும் “வரையளவுப்படுத்தும் வேர்களை”
நோக்கியே மீள வேண்டி இருக்கின்றது. மாணவர்கள் வார்த்தைப்
பிரயோகங்களுக்காக திணறுதல், அவர்களின் வார்த்தைப் பிரயோகங்களில்
தேர்வுகள், அதன் மூலமான வெளிப்பாடுகளில் நாம் ஊமையாக இருக்கும்
வரை மொழியை வரையளாவுப்படுத்துவதன் ஊடாக அதன் வளர்ச்சி
தடைப்படுகின்றதென்ற எமது கருத்தாடல்கள் பொருத்தமற்ற விடயங்கள்
தாம். உதாரணமாக ஒரு மாணவனின் கலையுணர்ச்சியுடன் கூடிய ஆங்கில
மொழி மூலமான வெளிப்பாட்டின் இயலுமை, ஆங்கிலத்தை தாய் மொழியாக
பிரயோகிக்கும் ஒருவரின் தரத்தோடு சரியாக படம்பிடிக்க முடியாத
விடயமாகும். மேலும், எழுதப்பட்ட ஒரு வார்த்தையை பொருத்தளவில்,
பரீட்சை திருத்துனர்களுக்கே வழங்கப்பட்டிராத பிரத்தியேகமான
மிகச்சிலருக்கே வாய்த்துள்ள வரையளாவுப்படுத்தும் நடைமுறைக்கே நாம்
மீளச் செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. பரீட்சையாக இருக்கட்டும்,
அல்லது வகுப்பறையின் ஒரு சிறிய பயிற்சியாக இருக்கட்டும், வசனங்களின்
ஒவ்வொரு அடுக்கிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் அது
அவர்களின் சொந்த வசனமாகவே ஆக மாட்டாது. “இலக்கணம்”,
“எழுத்துக்கோர்வை” மற்றும் “அலங்கோலமான” விடயங்களை முற்படுத்தி
மாணவர்களின் மொழியை ஆளுகை செய்வதோடு அவர்களின் தகுதியை
கட்டுப்பாடான அளவிடப்பட்ட ஒரு கால எல்லைக்குள்
வகுக்கப்பார்க்கின்றோம். எனது நண்பர் ஒருவருடனான கலந்துரையாடலை
நினைத்துப் பார்க்கின்றேன், தொழிநுட்பக் கையேடுகளின் வாசிப்பு குறித்தான‌
அந்த கலந்துரையாடலில் சிறப்பான இலக்கணத்தை தவிர எனக்கு வேறு எதுவும் விளங்கவில்லை. அதனை வாசித்துக் கொண்டிருக்கையில் யாராவது
நாம் என்ன செய்ய வேண்டுமென கூறவேண்டுமே என எதிர்பார்த்து
பாதியிலேயே நாங்கள் களைத்துப் போய்விட்டோம். இன்னொரு வகையில்
ஒரு மாணவன் இலக்கணப் பிழையோடு “பறவை பழங்களை உண்டது”
என்பதை தேவையான வார்த்தைகள் கொண்டு வெளிப்படுத்தி விட்டார்.
வசனத்தில் எதிர்பார்க்கப்படும் தரம் இல்லாவிடினும், சூழ்நிலைக்கேற்ப
மாணவரிடம் எதிர்பார்க்கப்படும் விளங்கிக் கொள்வதற்கான‌ அனுபவமானது
தெளிவாகவும் உண்மையாகவும் வெளிப்பட்டது.

சில வார்த்தைப் பிரயோகங்களை நினைவிலிருத்தும் மாணவர் ஒருவருக்கு,
பொதுவிதிகளின் பயன்பாடு அலல்து செயப்பாட்டுவினை- செய்வினை
போன்ற விடயங்கள் அவர்களின் மொழி வெளிப்பாட்டு ஆற்றலைக்
காட்டிலும் இரண்டாம்பட்சமான விடயமே. மாணவர்களை அவர்களின்
உள்ளடக்கத்துக்காக அன்றி முறையான ஆங்கில தரத்துக்காக புள்ளிகள்
வழங்கப்படும் நிலையிலேயே அவர்கள் சரிகின்றார்கள். இத்தரப்படுத்தல்
செயற்பாட்டில் மாணவர்களின் ஆக்கத்திறன் வெளிப்பாடு
மழுங்கடிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். நாம் வருடங்களாகப்
பெற்ற அனுபவத்தை மாணவர்களில் எதிர்பார்ப்பதோடு அதன்
அடிப்படையிலேயே அவர்களை மதிப்பிடுகின்றோம். புறநிலையான‌ புள்ளி
வழங்கும் திட்டத்தினால் உந்தப்பட்டு, மாணவர்களின் மொழிநடை
பொருத்தமான இலக்கியச் சாதனங்களை கொண்டிருக்கவில்லையென
இறுக்கமான புள்ளி வழங்கல் திட்டத்தின் காரணமாக எம்மால் எதையும்
செய்ய முடியாமல் இருக்கின்றது. நாம் மாணவர்களை முழுமையாக
விளங்கிக்கொள்வதாக கூறிக்கொண்டாலும் மொழியை அதன் ஏற்கனவே
சட்டகமாக்கப்பட்ட மதிப்பீடுகள் காரணமாக இலக்கணக் கடவுள்களை
வஞ்சிக்காமல் மாணவர்களுக்கு மொத்தப் புள்ளிகளை வழங்குவது
சாத்தியமற்றதாகின்றது. அந்த நேரத்தில் மாணவர்களில் ஏற்படும் உந்துதல்
மற்றும் அவர்களின் சுயவெளிப்பாட்டை முழுமையாக எழுத்தில்
வெளிப்படுத்துவது காணாமலாக்கப்படுகின்றது.

எட்டமுடியாத அளவீடுகளை பூர்த்தி செய்ய விளையும் எமது தேவையின்
காரணமாக மாணவர்களின் ஆங்கிலம் தொடர்பாக விருத்தியடையும்
அனுபவங்களில் இருந்து நாம் குருடாக்கப்படுகின்றோம். அருவமான
அளவீடுகளால் வேலியமைக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவதால் நாம்
மாணவர்களை மேலும் ஆங்கிலத்தை வெளிப்பாட்டுக்கான அலகாக
பயன்படுத்துவதில் இருந்து அவர்களை அந்நியப்படுத்துகின்றோம்.
விடயங்களை உள்ளூர்மயப்படுத்தி இலங்கைக்கான சொற்களை பயன்படுத்த
ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் எண்ணவோட்டங்களை யதார்த்தமாக்க
முயன்றாலும் நாம் SLEயை பேசுவதை ஏற்பதற்கு தயாரா? மாணவர்களை
செவிமடுக்க மொழியின் விதிகள் நம்மை ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது.
மாறாக, மொழியை சுயவெளிப்பாட்டுக்கான கருவியாகப் பாவித்து, அதன்
சட்டகத்துக்கு வெளியில் நின்று அவதானித்து, ஆங்கில மொழியை
பேசுபவர்களான நாம் என்ன பேசுகின்றோம் என்பதனை வைத்து எம்மை
செவிமடுப்பவர்களிடம் எமது குரலை வெளிப்படுத்துவதற்கான வழியை காண
முயல வேண்டும். நாம் உயர்கல்வி அமைப்புகள் மூலம் யாரை உருவாக்க
எத்தனிக்கின்றோம்? அருவமான கருத்துருக்களைக் கொண்ட மொழியின்
அறிவை பெற்ற ஆனால் அதனை வாழ்க்கையில் மொழிபெயர்க்க முடியாத
நபர்களையா?