இலவசக்கல்வி எனும் ஆரம்ப அபாய மணி

நிகோலா பெரேரா

ஆவணி 21, 2022ல் தேசிய தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர், பெருந்தொற்று
மற்றும் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
பல்கலைக்கழக நிர்வாகத்தரப்பில் மாணவர்களை மீண்டும்
பல்கலைக்கழகங்களுக்குள் எடுப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக்
கூறப்படுவதாகவும் அதுவரை நிகழ்நிலை கற்கை முறைகளை இடைக்கால
தீர்வாக முன்கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். நிகழ்நிலை கற்கைகளை
மேற்கொள்வதர்கான தொலைத்தொடர்பு கட்டணங்கள் தொடர்பில்
மாணவர்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், தொலைத்தொடர்பு
நிறுவனங்களுடன் சமிக்ஞை அலைகளை பலப்படுத்தும்
கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதுவரை மாணவர்கள்
சமிக்ஞை கிடைக்கக்கூடிய இடங்களில் நிகழ்நிலை கற்கைகளை
மேற்கொள்ளும்படியும் வேண்டினார். இக்கருத்து, மூன்றாம் வருடமாக
நிகழ்நிலை கற்பித்தல்களில் தொடரும் எனது வகுப்பறைகளில் எவ்வாறு
விளங்க‌ப்படுகின்றதென்பதை நான் கூறுகின்றேன்.

நிகழ்நிலை கற்கைக்கான மிக குறைந்தபட்ச அளவிலான அடிப்படைகளாக
ஒரு கணினியும் நிலையான தொலைத்தொடர்பாடல் வசதியுமாக
இருப்பதோடு, இயன்றவரை, மாணவர்களின் கல்வியில் மாற்றமுறும்
நிகழ்நிலை வகுப்பறைகளினால் பௌதீக மற்றும் உளமார்ந்த ரீதியிலான
தடங்கல்களும் இயல்பானவையாக இருக்கின்றன. இலங்கையில்,
பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில், ஆரம்ப மற்றும் மூன்றாம்
நிலைக்கல்வி பயின்ற அல்லது தற்போது பயின்றுகொண்டிருக்கும், அதிலும்
பரீட்சைகளுக்கு தேற்றும் மாணவர்கள் உள்ளடங்கலாக பெருவாரியாவனர்கள்
ஒரு தொலைபேசி திரை மூலம் தமது கல்வியை தொடர்கின்றார்கள் என்பது
தவிர்க்கமுடியாத உண்மையாக மாறியிருக்கின்றது. தொலைபேசி திரை மூலமான கற்றல் எத்தகைய கடினமான செயலென்பது நாம் சொல்லித்தெரிய
வேண்டியதில்லையாயினும், பல்கலைக்கழக மாணவர்களை விடுத்து ஆரம்ப
மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி மாணவர்கள் இதனை
செய்யவேண்டியிருப்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

பல குடும்பங்கள் இன்னமும் ஒரு திறன்பேசியையோ தொலைத்தொடர்பு
கட்டணங்களுக்கான செலவுகளைத் தாங்கும் நிலையில் இல்லை. ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகள் பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் கற்கும்
குடும்பங்கள் தம்மிடம் இருக்கும் ஒரே திறன்பேசியை வைத்து ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகளின் பாடங்களை கற்கவைப்பதென்பது மிகவும்
கடினமான விடயமாக மாறியிருக்கின்றது. நாட்கூலி மற்றும் ஏனைய சிறு
உழைப்புகளில் ஈடுபடும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள், குறிப்பாக
பாடசாலை செல்லும் பிள்ளைகள், தமது வறுமைநிலை காரணமாக
பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் நிகழ்வுகள் வாடிக்கையாகி
வருகின்றன. குழந்தைகள் வயதுக்கு வருமுன்னரே ஊழியப்படையில்
இணைந்து வரும் அவலம் காரணமாக பாடசாலைகளிலிருந்து இடைவிலகும்
தன்மை அதிகரித்துள்ளது. எனது வகுப்பரையிலும் கூட கடந்த மூன்று
வருடங்களாக நிகழ்நிலை கற்பித்தலில் மாணவர்களின் வருகை
தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதை அவதானித்து வருகின்றேன்.
தனிப்பட்ட ரீதியில் பேசும் மாணவர்கள் தாம் ஆடைத்தொழிற்சாலைகளிலும்,
வெதுப்பகங்களிலும், வண்டிக்கொட்டில்களிலும், சுதந்திர வர்த்தக
வலயங்களில் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் தொழில்புரியும்
அவலங்களையும் மேற்காசிய மாணவர்கள் தாம் தமது கல்வியில்
செலவிடும் நேரத்தை விடுத்து குடும்பத்துக்காக உழைக்க நேரும்
அவலங்களையும் கூறுகின்றனர்.

நிலையான இணைய இணைப்பு குறித்தான சிக்கல்களை கவனிக்கலாம். UGC
தலைவர் எதிர்பார்ப்பது போல, பெருந்தொற்றின் ஆரம்பத்தில் மாணவர்கள்
கற்பதன் நிமித்தம் இணைய சமிக்ஞைகளுக்காக கூரைகளிலும், மரங்களிலும்
தொங்கியிருந்த நிலையை நாம் கண்டோம். எனது வகுப்புகளும் கூட தொடர்ச்சியான மின்வெட்டுகளுக்கு மத்தியிலும் நிலையான இணைய
இணைப்பினூடாக நிகழ்நிலை கல்வியை தொடர முடியுமான பிரதேசங்களில்
வசித்த மாணவர்கள் மட்டும் இணையக்கூடிய நிலையில் வருகை
குறைந்துகொண்டே வந்தது. ஏனைய மாணவர்கள் என்ன ஆனார்கள்?
மரங்களிலும் கூரைகளிலும் ஏரியும் தூர இடங்களுக்கு சென்றும் கல்வியை
தொடர வேண்டியிருந்த, நிகழ்நிலை பரீட்சைகளில் அமர வேண்டியிருந்த
மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளும் கூட கணக்கெடுக்கப்படாத
நிலைக்கு வந்துவிட்டதா? இந்நிலையே, அதிகமாக பேசப்படும் மிகவும்
அருவருக்கத்தக்க “புதிய இயல்புநிலை” என்ற பதத்தின் மூலம்
விளங்கப்படுத்தப்படுவதாகும். என்னால் முடியுமானவரை, மாணவர்களை
தொலைபேசியில் அழைத்தாவது கற்பிக்கும் நிலைக்கு நான் வந்துள்ளதோடு,
மாணவர்களில் பெரும்பாலானோர், பல்கலைக்கழகங்களிலிருந்து
இடைவிலகாதவர்களாக இருப்பின், குறைந்த அல்லது அறவே கற்காத
நிலையில் பரீட்சைகளில் தோற்ற வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.

அரச கல்வியில், அது ஆரம்ப அல்லது மூன்றாம் நிலைக்கல்வியாக
இருக்கட்டும், அதிலும் குறிப்பாக மானுடவியல் மற்றும் சமூகவியல்
கற்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் சமூக பொருளாதார ரீதியில்
ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வருபவர்களாக காணப்ப‌டுவதோடு
அவர்களின் கல்வியின் தரமும் அவர்களுக்கு கற்பதற்காக வழங்கப்பட்டுள்ள
வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்தளவான
வாய்ப்புகளாலும் சிறப்புரிமைகளாலுமே அடையாளப்படுத்தப்படுகின்றன.
இலவசக்கல்வியானது, ஒரு ஜனநாயகப்படுத்தலுக்கான செயன்முறை என்ற
வகையில் இந்நாட்டில் பின்காலனிய அமைப்பில் வைகறையாக திகழ
வேண்டிய ஒன்றாகும். இதன் இலக்கு, நாட்டு பிரஜைகளை ஒரு ஜனநாயக
சூழலில் தாம் அனைவரும் ஒரே தரத்திலுள்ளோரென எண்ணி கருமமாற்றும்
நிலைக்கு இட்டுச்செல்வதாகும். இலவசக்கல்வியானது, அனைத்து
குழந்தைகளுக்கும், அவர்களின் வறுமை ஒரு காரணமாக மாறாதிருக்க,
கல்விக்கான அணுகலை வழங்குவதோடு அதன் மூலமாக சமூக
பொருளாதார ஏற்றத்தை உறுதிசெய்கின்றது. இருப்பினும் ஏற்பட்டுள்ள
பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியானது, இலவசக்கல்வியின் தேய்வினை அதிகப்படுத்தியுள்ளதோடு பொதுமக்களின் ஈடுபாட்டையும்
குறைத்துள்ளாதோடு இலவசக்கல்வியின் உண்மையான
நல‌ன்பெறுனர்களான, பாதிக்கப்பட்ட மாணவர்களில் கல்விக்கான அணுகலை
தூரமாக்கியுள்ளது. எமது கல்வி அதிகாரிகளின் நிகழ்நிலை கற்கை
தொடர்பான மோசமான குறிப்புகளாக அவை எதிர்கால வளார்ச்சிப்படியின்
தற்போதைய முயற்சிகளாக காட்ட முனையும் செயற்பாடுகளில் நாம் கடந்த
வருடங்களில் எவ்வாறான கல்வி அனுபவத்தை மாணவர்களுக்கு
வழங்கினோம் என்பதி தொடர்பான கலந்துரையால்களுக்கு எவ்வித
பெறுமானமும் வழங்கப்படுவதில்லை. குறுகலாக்கும் அன்னியப்படுத்தும்,
மனதளவில் ஊக்கமிழக்கச்செய்யும் இச்செயற்பாடுகள் விரிவாக்கப்பட
வேண்டிய அறிவுத்திறன் எல்லைகள், சுய உணர்வுத்திறன், மற்றும் தனியார்,
கூட்டு பலமாக்கல் முயற்சிகளை நீர்க்கச்செய்கின்றன. நிகழ்நிலை காரணமாக
வரையறுக்கப்பட்டுள்ள நிலை, தொலைத்தொடர்பு உட்கட்டுமான
அமைப்புகளின் போதாமை, தொடர்ச்சியான மின்வெட்டுகள், பொருளாதார
நெருக்குவாரங்களால் கல்வியானது வெறுமனே மாணவர்களுக்கு
கொடுக்கப்படும் தகவல் தொகுப்புகளாக மாறியுள்ளதோடு, பல்கலைக்கழக
கல்வியால் எதிர்பார்க்கபடும் அறிவார்ந்த, அரசியல் சார், சமூக எழுச்சிக்கான
கல்வி சாத்தியமற்றதாக மாறியிருக்கின்றது.

இது எம்மை எங்கே கொண்டுசெல்லும்? பல்கலைக்கழக சமூகமாக இருக்கும்
நாங்கள், மாணவர்களின் தேவை குறித்து கரிசனையாக இருக்க வேண்டி
இருப்பதோடு ஆவ்ர்களின் தேவைகளுக்காக குரல்கொடுக்கவும் UGC எவ்வித
பொருத்தமான கலந்துரையாடல்களோ எமக்கிருக்கும் அடிப்படையான
வளங்கள் குறித்தான கரிசனையோ இன்றி எழுந்தமானமாக கொண்டுவரும்
கொள்கைகளை கவனமாக எதிர்க்க வேண்டும். தேசிய கொள்கைகள்
ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிப்புக்குள்ளாகிய பிரஜைகள் குறித்த பகைமையான
உணர்வை பேணும் வேளை இதனையே எமது தேசமும் தொடர்ச்சியாக
பாதிக்கப்பட்டவர்களுக்கெதிரான நிலையில் செயற்படுவதையும் அதற்கே
உடந்தையாக இருப்பதையும் நாம் காண்கின்றோம். வீதிகளில் இறங்கி
இலவசக்கல்விக்காக போராடும் மாணவர்களின் மீதான நேற்றைய
தாராளவாத மத்தியதர மற்றும் உயர்வர்க்கங்களின் காழ்ப்புணர்ச்சியே, இன்றைய நிலையில் ஜனநாயக மாற்றத்துக்காக வீதிகளில் இறங்கிப்
போராடும் மாணவ செயற்பாட்டாளர்களின் அரச அடக்குமுறையை கண்டும்
அமைதியாக செல்லும் மனநிலையாக வெளிப்படுகின்றது. இலவசக்கல்வியே
இலங்கை மக்களது ஜனநாய இருப்பிற்கான முதலாவது பலிக்கடாவாக
மாறியிருக்கின்றதென்பது சந்தேகற விளங்கும் உண்மையாகும். இதன்
காரணமாகவே, இலவசக்கல்வியை பாதுகாப்பதற்கான போராட்டம், நாம் எட்ட
முயலும் ஜனநாயகம் மற்றும் சமூக பொருளாதார நீதிக்கான போராட்டத்தின்
அடிப்படையாக மாறியிருக்கின்றது.