எதிர்க்கட்சியிலிருந்து மாற்றுத்தீர்வுக்கு ‘அரகலய’வின் இயலாற்றலும் அதன்போக்கும்

சசிந்து படபிந்தகே

நான் இப்பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது ‘போராட்டம்’ அல்லது
‘கிளர்ச்சி’ என‌ (தவறாக) மொழிபெயர்க்கப்படும் ‘அரகலய’வானது,
‘ஜனநாயகவாதி’ என்றும் ‘தாராளவாதி’ என்றும் கூறிக்கொண்டிருக்கும்
ஜனாதிபதியின் நடப்பு அரசாங்கத்தால் நசுக்கப்பட்டும் பல வழிகளால்
கூறுபோடப்பட்டும் வருகின்றது. இப்பத்தியின் நோக்கமாவது, தற்போதைய
இடையாட்சிக்காலம் தொடர்பான எமது கூட்டு எதிர்காலத்துக்கு
தேவைப்படத்தக்க வகையிலான சில சிதறலான அவதானிப்புகளை
மேற்கொள்வதாகும்.

‘கல்வி வட்டங்களில்’ இருக்கும் ‘நாங்கள்’ (எத்தகைய முற்போக்கானவர்களாக
இருப்பினும்) ‘முன்னோடித்துவ’ மற்றும் ‘மேலிருந்து கீழ் நோக்கும்’
மனப்போக்குகளிலிருந்து ‘எம்மை’ காக்கும் பொருட்டு “வீதிக்கிறங்கும்
செயற்பாடானது கருத்தியலை விட இரு படி முன்னோக்கிய
செயற்பாடென்பதை’ மனதிலிறுத்த வேண்டியுள்ளது. அதேநேரத்தில்
வீதிக்கிறங்கிவதை பொதுமைப்படுத்திவதும் மிகைப்படுத்துவதும்
பிறழ்சொல்வழ‌க்குகளுக்கும் மிகைஇலகுபடுத்தலுக்கும் இட்டுச்செல்லும்
வாய்ப்பும் அதிகமாகும். அதாவது ‘ஆளும் வர்க்கத்தின்’ வல்லமையை
குறைத்து மதிப்பிடுவதும் அதே நேரத்தில் ‘மக்களை’ மிகையாக
மதிப்பிடுவதோடு பொதுமைப்படுத்துவதும் மிகவும் ஆபத்தானது. அதே
சமயத்தில், வீதிக்கிறங்காதவர்களை தவறானவர்களாக பார்ப்பதும்
மறக்கடிப்பதும் வசதியான செயலாக மாறியுள்ளது. மேலும் பல
கீழைமாந்தர்கள் மற்றும் கீழைமாந்தர்களாக மாற்றப்பட்ட பலர் போராட்ட
தளங்களுக்கு செல்லும் வசதியோ சக்தியோ இன்றி காணப்படுவதும்
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இச்சூழ்நிலையில் தவறாக
பார்க்கப்படுவதும் மறக்கடிக்கப்படுவதும் வசதியானதும் இலகுவானதுமான விடயமாகும். வீதி எனும் உருவகமான உண்மையானது நியாயமானதும்
போராட்டத்துக்கானதுமான தளமன்று. தவிர, ‘அரகலயவின்’
பன்முகத்தன்மையானது, பல குழுக்களதும் வர்க்கமாக்கப்பட்ட
தன்னலங்களதும் கூட்டாக இருப்பதோடு அது அதிகமாக
கேள்விக்குட்படுத்தப்படும் புள்ளியாகவும் இருக்கின்றது. இருப்பினும் இது
எந்த வகையிலும் ‘வீதிகளின்’ இயலாற்றலை கேள்விக்குட்படுத்துவதாக
இருக்காது.

ஆழுறைந்துள்ள நெருக்கடியானது அமைப்பு சார்ந்த சிக்கல்களை
சிக்கல்களென வாசிக்கக்கூடிய (குறைந்தபட்சம் அல்லது சிலவேளைகளில்
சிறப்பான முறையில்) இயலுமையை (‘சாதாரண’ சூழலில் அவ்வாறான
சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை) அளித்துள்ளது. ஆனாலும் இச்செயற்பாடானது
பல தந்திரங்களும் பொறிகளும் காணப்படும் செயற்பாடாக இருப்பதை மறுக்க
இயலாது. உதாரணமாக ‘சாதாரண ‘ சூழலில் இராணுவமானது நாயக
வழிபாடு வழியாக போற்றப்படுவதோடு இராணுவத்தினர் (பௌத்த சிங்கள)
அரசை காக்கும் இரட்சகர்களாக மதிக்கப்படும் ஆதிக்க கருத்தியல்
நடைமுறையே காணப்படுகின்றது. இராணுவத்தின் செயற்பாடுகள் (மற்றும்
அவர்களது வருகை) கேள்விக்குட்படுத்தப்படாததாகவும் வழிபாட்டுக்கு
உரியதாகவுமே நோக்கப்படுகின்றது. இராணுவத்தினரின் பணிநோக்கம்
‘தேசத்தையும்’ ‘மக்களையும்’ காப்பதே என்பது வெறும் கட்டுக்கதையே.
இராணுவம் எப்போதுமே தனது/ தமது நலனுக்காகவே (அதிகாரத்தில்
தனக்குரிய முக்கிய பங்கிற்காக) செயற்படும் ஒரு அமைப்பாகும். இதன்
நிமித்தமாகவே ஒரு வர்க்கமாக இணைந்து அதிகாரத்தோடு நடக்கும் நடப்பு
அரசாங்கங்களையும் அரசியல்வாதிகளையும் இராணுவம் பாதுகாக்கின்றது.
சாதாரண நேரங்களில் இராணுவத்தை கட்டுக்கதையாக சொல்வது
இருக்கட்டும், அவ‌ர்களை எதிர்ப்பதும் அவர்களின் போலித்தனங்களை
அம்பலப்படுத்துவது கூட மிக ஆபத்தான விடயமாகும். இவ்வெதிர்மறையான
சிந்தனை கூட ‘அரகலய’ காலங்களில் சில வேளைகளில் (?) எதிரொலிப்பதை
நாம் பார்க்கின்றோம். இக்காலங்களில் இந்த கேள்விக்குட்படுத்தாத விடயம்
கூட ‘பொதுமக்கள் தளத்தில்” கேள்விக்குட்படுத்தப்பட்டதை (இன்னும்
கேள்விக்குட்படுத்தப்படுவதை?) நாம் பார்க்கின்றோம்.

இந்நிகழ்வுகள் எத்தகைய பலம்வாய்ந்தவையாக இருப்பினும் இவை வெறும்
கணநேர விடயங்களாகவே இருக்கின்றன. ‘இக்கணநேர’ விடயங்களை
‘மனங்களின் பழக்கமாக’ மாற்ற வேண்டியதே நான் மேற்கொள்ள வேண்டிய
செயற்பாடாகும். இதுவே குப்பி குழுமம் எதிர்பார்க்கும் மற்றும்
நடைமுறைப்படுத்தும் செயற்பாடாகும். இது வெறுமனே கற்பித்தல்
இயந்திரங்களுக்கும் கற்றல் இயந்திரங்களுக்குமிடையே நடக்கும்
நுட்பம்சார்,கோட்பாட்டுசார் (பெரும்பாலான நேரங்களில் இது பரிமாறலாகக்
கூட அன்றி வெறுமனே மேலிருந்து கீழான கொட்டுதல் ஆகவே
தொழிற்படுகின்றது) பரிமாறல் அல்ல. அரகலயவின் நீண்ட நாள்
செயற்பாட்டுக்கு கல்வி ஒரு முக்கிய கருவியாகும். அரகலய எனும்
சிக்கலான தளம் மீதான வாசிப்பு மற்றும் கற்றல், அதன் கோரிக்கைகள்
மீதான மீள்வாசிப்பு மற்றும் அதனை விரிவுபடுத்தும் செயற்பாடு,
‘கணநேரங்களை’ ‘மனங்களின் பழக்கங்களாக’ மாற்ற வேண்டிய தேவை
என்பனவே குறிப்பான ஒரு வகையான கல்வியின் குறிகாட்டிகளாக
நோக்கப்பட வேண்டியவை. இன்னொரு வகையில் கூறுவதாயின் கல்வியே
இதற்கான அனைத்துமாகிய சொல்லணியாக இருக்கின்றது.

இராணுவம் எனும் கட்டுக்கதையிலிருந்து ஆரம்பித்த நாங்கள் இப்போது,
தம்முள்ளே ஒத்து விளையாடும் இராணுவம், அரசியல்வாதிகள் மற்றும்
அதிகாரத்திலுள்ளோர் + பெருநிறுவன கூட்டு எனும் சமூக வகுப்பு
மாதிரியான‌ நிறுவகங்கள் ஆகியவற்றின் மீதான வாசிப்புக்கு நகர்வோம்.
முதலில் இராணுவம் மற்றும் அரசியல்வாதிகள் மீதான பார்வையை
செலுத்தலாம். இங்கு நான் நியூட்டன் முனசிங்கவின் “சங்கவின் அடையாள
அர்த்தமுள்ள பங்கு” (நான் பயன்படுத்தியுள்ள வகையில் பார்த்தால் இது
உருத்திரிபு கொண்டது) எனும் படைப்பின் சிறந்த ஆய்கோளொன்றை
குறிப்பிடுகின்றேன், இதில் அவர் ‘சங்க’வை “கருத்தியல்ரீதியான
இசைவிணக்கமற்ற” “வர்க்கரீதியாக இயங்காத‌ ஒரு பிரிவாக”
குறிப்பிடுகின்றார். இது “வர்க்கரீதியாக இயங்காத அமைப்பாக” இருப்பதாக
தன்னை நிலைநிறுத்தவும் ஏனையோர் அவ்வாறே நிலைநிறுத்திக்கொள்ள தூண்டவும் காரணம், மோட்சமடையும் பாதையாக உள்ள ‘சங்க’வானது
“குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டும் சேர்ந்த பிரதிநிதிகளை கொண்டிராத”
“ஓர்மையான விழுமியக் குழுவாகும்” எனக்கருதப்படுவதனாலாகும்.
இருப்பினும் ‘சங்க’வானது பல வழிகளிலும் பிரிவடைந்திருக்கும்
அமைப்பாகும். இருப்பினும், இந்த “உண்மையை” (ஏனெனில் ஏனைய
உண்மைகள் இக்கலந்துரையாடலுக்கு அவசியமில்லை) விடுத்து ‘சங்க’வில்
“கருத்தியல்ரீதியான இசைவிணக்கம்” காணப்படுவதோடு, அது ஒரு
கருவியாக இருந்து அமைப்பின் நலன்களை காப்பதோடு நன்மைகளை
அடையவும் செய்கின்றது. இது “வெளிப்படையாவகே வர்க்கரீதியில்
ஒழுங்கமையாததாக காணப்படினும்” வர்க்கமுறை மாதிரியான
நடத்தைகளையே வெளிப்படுத்துகின்றது. அதைப்போலவே ஆளும் ‘உயர்’
வர்க்கமும் (அரசியல்வாதிகளும் கூட) ராணுவமும் தமக்கு ஏற்ற வகைகளில்
வர்க்கமுறை மாதிரியான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றன. இவை
குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தாவிடினும் தமது
வர்க்கநலன்களுக்காக வர்க்கமுறை மாதிரியான நடத்தைகளை
வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன. நான் இங்கு விளக்கவரும் விடயம்
மார்க்சியத்தின் ‘ஆளும் வர்க்கம்” தொடர்பான தொன்மையான
கருத்துருவாக்கத்தை விட வித்தியாசமானது. அரசியல் ‘உயர்குடியும்’
அரசியல்வாதிகளும் பல கட்சிகளாக சிதறுண்டு இருப்பதோடு, அவர்களின்
அரசியல் பார்வை/ நிகழ்ச்சிநிரலை, இனத்துவத்தை, மதத்தை, சாதியை,
மொழியை மற்றும் ஊரை அடிப்படையாகக் கொண்டு பல குழுக்களாகவும்
பிரிவுகளாகவும் பிரிந்து காணப்படுகின்றனர். அவர்களில் சிலர் மற்றோரை
விட முற்போக்கானவர்களாக (குறைந்தது சில வேளைகளிலாவது)
இருக்கின்றார்கள். இருப்பினும், சில வெளிப்படையான வழிகளில் அவர்கள்
“கருத்தியல்ரீதியான இசைவிணக்கத்தை” காப்பாற்றி நடப்பதோடு அவர்களின்
வர்க்கநலன் சார் அம்சங்களை நோக்கி செயற்படுகின்றார்கள். இராணுவம்
கூட படித்தரங்களை கொண்டதும் உட்பூசல்கள் அதிகம் கொண்டதுமான
அமைப்பாக இருந்தாலும் அவர்களை பிரிக்கும் காரணிகளை விடுத்து தமது
சொந்த நலன்களுக்காக இணைந்து செயற்படுபவர்களாக இருக்கின்றார்கள்.
இவ்விரு ஒரே வர்க்க பிரதிநிதித்துவமற்ற, ஆனால் வர்க்கமுறை மாதிரியில் நடக்கும் அமைப்புகளும் தத்தமது நலன்களை காப்பாற்றும் பொருட்டு
ஒருவருக்கொருவர் ஆதரவாக நடப்பதோடு, முக்கியமாக அதனை நெருக்கடி
காலங்களில் வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றார்கள்.

இப்பத்தியின் கடைசி விடயமாக இவ்வாறான ஆதிக்க வர்க்க மாதிரியான
அமைப்புகளின் திறமையை பற்றி பேசலாம். ‘அரகலய’ எனும்
இவ்வொருபடித்தான அமைப்பானது ஆளும் அமைப்புக்கு கடும் சவாலாக
மாறியிருப்பதோடு முன்னெப்போதும் இல்லாதளவு பலமான எதிரணியாக
விருத்துயடைந்திருக்கின்றது. ( விருத்தியடைந்து கொண்டிருக்கிறதா?)
இருப்பினும் தற்போது அதனை ஒரு பலமான எதிரணியாக அன்றி ஒரு
மாற்று அமைப்பாக (?) மாற்றும் முயற்சிகள் பலமாக இடம்பெற்று
வருகின்றன. அரகலயவானது தொடர்ச்சியாக அரசியல்வாதிகளதும்
ராணுவத்தினதும் வர்க்க மாதிரி சார் அமைப்புகளால் களவாடப்பட்டும்
சிதறடிக்கப்பட்டும் வருகின்றது.

இச்செயற்பாடுகள் உட்பூசல்களை உருவாக்குதல், ஊடுருவுதல், சட்டத்தை
மீறுதல், வன்முறையை கட்டவிழ்த்தல் மற்றும் ஏனைய வழிமுறைகளால்
ஏற்படுத்தப்படுகின்றன. அரசியல் அமைப்பின் இந்ததிறமையானது கட்டாயம்
பேசுபொருளாக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இது மார்க்சியம் மற்றும் இலக்கியத்தில் ரேமன்ட் வில்லியம்ஸ் பேசுவது
போல ஆதிக்க, எஞ்சிய மற்றும் எழுச்சிபெறும் விடயங்களுக்கிடையிலான
ஒருங்கிணைவின் போதான ஆதிக்க கருத்தியலின் எதிர்க்கும் விடயங்களை
மாற்றும்/ பலமிழக்கச்செய்து மாற்றீடுகளாக மாற்ற இயலுமான தன்மையை
காலம் படிப்பினையாக தருகின்றது. இதில் ‘எதிரணி’ மற்றும் ‘மாற்றீடு’ ஆகிய
இரு விடயங்களும் ஒன்றுக்கொன்று முரணாகவே பார்க்கப்படுகின்றன. இதில்
நான் காணும் முரண் யாதெனில், எதிரணி எனும் போது அதில் ஆளும்
தரப்புக்கு எதிராக தொடர்ந்தும் இயங்கும் தன்மை வெளிப்படுவதோடு
மாற்றீடு எனும் போது அது ஆளும் தரப்புக்கு எதிரான ஒரு தெரிவு அல்லது
விருப்புரிமையாகவே (அது செயலற்றதாகவோ குறை
பயன்பாடுடையதாகவோ இருக்கலாம்) பார்க்கப்படுகின்றது. இதனால் தொடர்ந்தும் இயங்கக் கூடிய எதிரணியை களவாடுவது ஆளும்தரப்புக்கு
கடினமான காரியமாக இருப்பதோடு செயலற்றதாகவோ
குறைபயன்பாடுடையதாகவோ காணப்படும் மாற்றீடை களவாடுவது
ஆளும்தரப்புக்கு இலகுவானதும் அவர்களின் கோரிக்கைகளை தவிர்க்க
முடியக்கூடியதுமாக இருப்பதுமாகும். வில்லியம்ஸின் இந்த கருத்தியல்
விருத்தியடையும் முதலாளித்துவ அமைப்புகளின் ஆதிக்கத்தை குறிப்பதாகும்.
இருப்பினும், இது ராஜபக்ஷ அரசியலைப் பற்றிய புரிதலை பெறுவதற்கான
மற்றும் அவர்களின் அரசியல் செல்வழியை நோக்குவதற்குமான
படிப்பினையாகக் கொள்ளலாம்.

எதிர்க்கட்சியின் (வலிந்து) மேற்கொள்ளப்படும் மாற்றீடாக்கும் முயற்சி
குறித்தான புரிதலை மேற்கொள்ள முற்படுகையில் இந்த ‘எதிர்கட்சி’
எக்காலத்திலும் முற்போக்கானதாகவோ (அப்படியொரு விடயம்
இருந்ததாகவே இல்லை) ஒன்றுபட்டோ இருக்கவில்லை என்பதை
மனதிலிறுத்த வேண்டும். இது எப்போதுமே நடுநிலையாகவோ ஒன்றுபட்டோ
இருக்கவே இல்லை. இது பல நலன்களையும் நிகழ்ச்சிநிரல்களையும்
கொண்ட பாரிய (குழுக்களையும் “தனிநபர்களையும்) தொகுதியாகும்.
போராட்ட அமைப்பும் கூட தம்முள் பழைமைவாத, தேசியவாத, அன்னியரை
வெறுக்கு மனப்பான்மையுடைய, தன்பால்மேன்மையியம் கொண்ட மற்றும்
ஆணாதிக்க- ஈரிணை தன்மை கொண்ட நிலைப்பாடுகளை கொண்டிருப்பதை
காணலாம் (உதாரணமாக,கொழும்பு கோட்டா கோ கமவில் LGBTIQ+
பால்புதுமையினருக்கு ஏற்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள்). இருப்பினும்
கோட்டா கோ கமவானது சிலரால் மிகைப்படுத்தப்பட்ட வகையில் சிறு
கம்யூனிச குழுவாக பார்க்கப்படுகின்றது. எழுச்சிபெறும் எதிரணிகள் கூட
ஆதிக்கதரப்பை விடுத்தும் (முழுதும்) சுதந்திரமாக இயங்கவில்லை.
களவாடுவதற்கும் விலைபோவதற்குமான வாய்ப்புகள் அதிகம்
இருந்தவண்ணமே இருக்கின்றன. அவை இடம்பெறும்போது
களவாடுவதாகவோ விலைபோவதாகவோ உணரப்படுவதே இல்லை.
இருப்பினும், தற்போதைய போராட்ட இயக்கங்களில் (அல்லது இயக்கத்தில்)
விமர்சனங்களுக்கான மற்றும் சீர்திருத்தங்களுக்கான வினைத்திறனான‌
தளங்கள் அதிகமாகவே இருப்பதை மறுக்க முடியாது. இந்தத்தளமும் அதன் எல்லைகளுடனேயே இயங்குவதே அரகலயவின் இயலாற்றலின்
கணித்ததர்கரிய தன்மையாகும்.

இந்த பத்தியை நான் ஒரு வெளிப்படையான தொடக்க அறிக்கையோடு
முடிக்கிறேன். ஆதிக்க தரப்பின் எதிரணியை வெறுமொரு மாற்றீடாக
முன்வைப்பதர்கான இயலுமை என்பது எதிர்த்தலுக்கான தளம்
இல்லாமலாக்கப்பட்டதாகவோ எவ்வித எதிர்ப்பும் இல்லை என்பதாகவோ
ஆகிவிடாது. இருப்பினும் ஆதிக்கதரப்பின் தலையாய வேலை எதிரணிய
மாற்றீடாக சுருக்குவதன் மூலம் அதன் எதிர்ப்பிற்கு பதிலளிக்க வேண்டிய
கடப்பாட்டை இல்லாமலாக்குவதாகும். எதிர்ப்பினூடாக வெளிப்படுத்தப்படும்
கோரிக்கைகள் கட்டாயம் காணப்படவே வேண்டும் (அதற்கான எல்லைகள்
மீள சிந்திக்கப்படவும் விரிவாக்கப்படவும் வேண்டும்). அவசர அல்லது
உடனடியான சீர்திருத்த முயற்சிகள் கட்டாயம் நீண்ட கால அடிப்படையில்
சிந்திக்கப்பட வேண்டும். இந்நீண்ட கால செயற்றிட்டம் என்ற வகையிலேயே
‘மனப்பாங்குகளை மாற்றும்’ நடவடிக்கையில் கல்வியின் தேவை
உணரப்படுகின்றது. மேலும் காயத்ரி சக்ரவோதி ஸ்பிவாக்கின்
வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்பதர்கான அழைப்பில் கூறுவதை
மறவாதிருப்போம்: “லெனினின் செய்யப்பட வேண்டிய அம்சங்கள் கட்சியை
மையமாகக் கொண்டிருந்தன. எமது ‘செய்யப்பட வேண்டிய அம்சங்கள்’
வாக்காளர் தொகுதியின் மனப்பாங்கை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்”