கடன் மறுசீரமைப்பும் குருதி வழியும் கல்வித்துறையும்

அகிலன் கதிர்காமர்

இலவசக்கல்வி என்பது எமது சமூகத்தின் முக்கியமான தூண்களில்
ஒன்றாகும். இன்றைய பத்தியில் நான், இலங்கையில் அதன்
வெளிவாரிக்கடன்கள் மீதான‌ முதலாவது தாமதம் மற்றும் நாட்டின்
வெளிவாரிக்கடன் பற்றாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு குறித்த சர்வதேச
நாணய நிதியத்தின் மத்தியஸ்தத்தை தொடர்ந்து கல்வித்துறை
முகங்கொடுத்துள்ள சிக்கல்கள் பற்றி அலசப்போகின்றேன்.

இலங்கையில் 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி வருகையில்
ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியின் காரணமாக வெளிவாரிக் கடன்
மீளச்செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் ச‌ர்வதேச நாணய
நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை வெளிவாரிக் கடனையும்
தாண்டி நாட்டின் நாணய அலகிலான உள்நாட்டுக்கடனில் தங்க்யிருக்கும் நிதி
வரவுசெலவுத்திட்டத்தையும் மறுசீரமைப்பதாக இருக்கின்றது. நவதாராளவாத
அமைப்பின் கருதிச்செய்யும் இவ்விரு களங்களை இணைக்கும்
இக்குழப்பகரமான செயற்பாடானது கடன் பற்றாளர்களின் பணம்
எவ்வாறாயினும் உயர்ந்துசெல்லும் வரிப்பணம் அல்லது குறைந்து செல்லும்
பொதுமக்களுக்கான செலவீனங்களின் மூலம் மீளச்செலுத்தப்படுவதை
உறுதிசெய்வதற்காகும். இதனால் நாடானது இரட்டைப் பற்றாக்குறை
காரணமாக‌ சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சிக்கல்கள் எனும் அதள
பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கின்றது. இரட்டை பற்றாக்குறை என்பது,
முதலாவது அந்நிய செலாவணியில் தங்கியிருக்கும் மற்றும் இறக்குமதியை
விட ஏற்றுமதிகள் அதிகரிப்பினாலேயே மீள வழங்க முடியுமான‌
வெளிவாரிக் கடன் மற்றும் இரண்டாவதாக முன்னையதை விட
அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகமுள்ள (ஏனெனில் இந்நிலையை அரசாங்கம்
உள்நாட்டு பண அலகினை கொள்வனவு செய்வதன் மூலம் நிவர்த்திக்கலாம்) அரசாங்கத்தின் செலவுகள் வருமானத்தை விட அதிகரிக்கும் சூழலில்
உள்நாட்டு பண அலகால் முன்வைக்கப்படும் உள்நாட்டுக் கடனால் ஏற்படும்
நிதிப் பற்றாக்குறை ஆகியவை ஆகும்.

இந்த இணைப்புச் செயற்பாடு, அது சார்ந்த கொள்கைகள் மற்றும் இரட்டைப்
பற்றாக்குறை நிலைகளை நிகழ்த்தும் கருவிகளாக உலக வங்கியின்
ஆதரவில் இயங்கிவரும் சர்வதேச நாணய நிதியம் காணப்படுகின்றது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின்
நிகழ்ச்சிநிரலும் உலக வங்கியின் இலங்கையுடனான கூட்டாண்மை
சட்டகமும் இலங்கையின் பொதுமக்கள் மீதான செலவீனம் மற்றும்
பொருளாதாரக் கொள்கைசார் செல்நெறியையும் தீர்மானிப்பதாயுள்ளது.
கல்வித்துறையைப் பொருத்தளவில், முறையான சம்பளம் வழங்குவதை
உறுதிப்படுத்தும் தொடரும் செலவீனம் மற்றும் கட்டடங்கள், உட்கட்டமைப்பு
வசதிகள் உட்பட ஏனைய அபிவிருத்தி அமைப்புகளை மேற்கொள்ள
பயன்படும் முதலீட்டுச் செலவீனம் ஆகிய இரண்டும் இனி வரும்
காலங்களிலும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவில்
மேற்கொள்வதற்கும் ஆவன செவ்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின்
நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சிக்கன நடவடிக்கைகள்
மற்றும் வர்த்தகமயமாக்கல் நடவடிக்கைகள் ஆகியன இலவசக்கல்வியை
மேலும் வலிதற்றதாக்குகின்றன.

முன்னுரிமைகளும் செலவுக் குறைப்புகளும்

2023ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இலங்கை கைச்சாத்திட்ட சர்வதேச
நாணய நிதியத்துடனான ஒப்பந்தமானது அதன் தொடர்ச்சியான
நிகழ்ச்சிநிரல்களூடு இரட்டை முகங்கொண்டதாக காணப்படுகின்றது. சர்வதேச
நாணய நிதியமானது மக்கள் இந்நெருக்கடியால் பாதிக்கப்படும் நிலை குறித்து
அக்கறை கொள்வதாக காட்டிக்கொண்டாலும் இந்நிகழ்ச்சி நிரலால்
நடைமுறைப்படுத்தப்படும் பருப்பொருளியல் கொள்கைகள் வித்தியாசமான
தர்க்கத்தையே கொண்டிருக்கின்றன.

பொருளாதார மற்றும் நிதிக் குறிப்பேட்டின் படி இலங்கை ஜனாதிபதி மற்றும்
மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் பின்வரும் விடயத்தில் சர்வதேச நாணய
நிதியத்துடன் உடன்பட்டிருக்கின்றனர்:
“ஆரம்பத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் வருமான அடிப்படையிலான நிதி
ஒருங்கிணைப்பு செலவு சீராக்கத்தினால் மறுசீரமைக்கப்படுவதோடு
முன்னுரிமை வழங்கப்ப‌டும் துறைகளுக்கான செலவீனங்களும் பேணப்படும்.
இந்நிகழ்ச்சி நிரலின் காலகட்டத்தில் பணவீக்கத்தை அதிகரிக்கும்
நோக்கத்துடனும் இந்நிகழ்ச்சி நிரலின் அடிப்படை சமநிலை இலக்காக
தொடர்ச்சியான செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பொதுத்துறையில்
மேற்கொள்ளப்படும் சம்பளத்தை கட்டுப்படுத்தவும், பொதுத்துறையில்
வழங்கப்படும் ஓய்வூதியத்தை கட்டுப்படுத்தவும், அதேநேரத்தில்
சம்பளக்குறைப்பை கட்டுப்படுத்தவும் அதிகரிக்கும் சம்பள மற்றும் ஓய்வூதிய
வழங்கலை கட்டுப்படுத்தவும் ஆவன செய்யப்பட்டுள்ளது. மூலதன
செலவீட்டில் ஏற்படும் இட நெருக்கடியை கட்டுப்படுத்த 2018ஆம் ஆண்டின்
சர்வதேச நாணய நிதியத்தின் பொது முதலீட்டு முகாமைத்துவ
கணக்காய்வின் பரிந்துரைகள் பயன்படுத்தப்படும். செலவுச் சீராக்கம் நிதி
ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதால் செலவீடுகள் சுகாதாரம், கல்வி மற்றும்
சமூக பாதுகாப்பு ஆகிய துறைகளுக்காக ஒதுக்கப்படும்.” பக்கம் 89, சர்வதேச
நாணய நிதியத்தின் உடன்படிக்கை, மார்ச் 2023
“சுகாதாரம் மற்றும் கல்வித்துறை மீதான செலவீட்டுக்கான” உத்தவாதத்தை
வழங்கும் அதேநேரம் “சம்பள வெட்டை [தவிர்த்தல்]” மற்றும் “மூலதன
ஒருங்கிணைப்பை” ஏற்படுத்தும் “செலவுச் சீராக்கத்தை உறுதிப்படுத்தும்”
செயற்பாடு போன்ற விடயங்கள் ஒரே நேரத்தில் சம்பள வெட்டு மற்றும்
செலவீட்டை உறுதிப்படுத்தல் போன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான
விடயங்களை வெளிப்படுத்துகின்றன. பெரும்பாலான சர்வதேச நாணய நிதிய
உடன்படிக்கைகளில் இவ்வாறான விடயங்களையே காணக்கூடியதாக
இருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நிகழ்ச்சி நிரல்கள் பொதுச்சமூகத்தின்
மீதான செலவீனங்களை உறுதிப்படுத்தினாலும் 2023ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சின் ஆண்டறிக்கையில் காணப்படுவதன் படி, அவை தவிர்க்க
முடியாபடி அளவீட்டுரீதியில் பொதுச்சமூக துறைகள் மீதான குறைவான
செலவீனங்களையே காட்டுகின்றன. 2021 மற்றும் 2023 ஆண்டுகளுக்கிடையில்
இலங்கையில் வாழ்க்கைச்செலவு நூறுவீதத்தால் அதிகரித்துள்ளதோடு,
டொலர் பெறுமதியின் படி இலங்கை நாணயத்தின் பெறுமதி ஐம்பது
வீதத்தால், அதாவது ரூபாய் 300இலிருந்து 200ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
இருப்பினும் இக்காலகட்டத்தில் கல்வித்துறை மீது மேற்கொள்ளப்பட்டுள்ள
பெயரளவிலான செலவீனம் வெறுமனே 22.5% ஆகவே இருப்பதோடு
உயர்கல்வித்துறையில் 13.1% மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியமானது மூலதன ஒருங்கிணைப்பினை பொதுச்சமூக
செலவீனத்தை பணவீக்கத்தினை அதிகரிப்பதனூடு மேற்கொள்வதானது அதன்
மீதான உண்மையான செலவீனத்தை, அதாவது மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் அதன் சதவீதத்தை குறைப்பதாக இருக்கின்றது. இந்த
வருடத்தில், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு
காரணமாக அவர்களின் சம்பளத்தில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு
தற்போது பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு
கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கின்றார்கள். வாழ்க்கைச்செலவு
அதிகரிப்பதன் காரணமாக சம்பள அதிகரிப்புக்கான கோரிக்கைகள்
நியாயப்படுத்தப்பட வேண்டி இருப்பதோடு, உடன்படிக்கையின் படி
பல்கலைக்கழகங்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட முடியாமையினால்
இக்கோரிக்கைகளுக்கான பதிலளிப்புகள் ஏற்கனவே ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளவைகளில் இருந்தே வழங்கப்பட வேண்டி இருக்கின்றது.
இன்னொரு வகையில் பார்ப்பதாயின், பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பள
அதிகரிப்பினால், மூலதன மற்றும் ஏனைய செலவீடுகள் சமரசம்
செய்யப்பட்ட நிலையை போல பல்கலைக்கழகங்களுக்கான செலவீனங்கள்
சம்பள அதிகரிப்பினால் சமரசம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

நிதியீட்டத்தை கட்டுப்படுத்தல் மற்றும் தனியார்மயமாக்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சிநிரல் மற்றும் அரசாங்கத்தின்
வியூகங்களின் அதிகப்படியான அளவு அரசாங்கம் கல்வித்துறை மீதான
நிதியீட்டத்தை குறைக்கவும் கல்வித்துறை மீது மேற்கொள்ளப்படும் தனியார்
சுரண்டலை அதிகரிக்கவும் கூடிய வகையில் கல்வித்துறை மீது
நிதியீட்டத்தை குறைப்பதும் அதனை தனியார்மயப்படுத்துவதும் ஆகும்.
உதாரணமாக, பல்கலைக்கழகங்கள், இலவசக்கல்விக் கொள்கையை விடுத்து
கட்டணம் அறவிடப்படும் கற்கைநெறிகளை வழங்கி தமக்கான
செலவீனங்களை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை கூடிய விரைவில்
பொதுக்கல்வித்துறையையும் பாதிக்கும் நிலை காணப்படுகின்றது. J.R.
ஜெயவர்த்தன அவர்கள் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய
நிதியத்துடனான‌ கட்டமைப்பு மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் திறந்த
பொருளாதார கொள்கைகளின் வழி 1980களில் அடைய முடியாத இலக்குகள்
தற்போதைய சூழலில் கடன் நிலைபேற்று நிலையை காரணம் காட்டி
அரசாங்கத்தால் இலகுவாக அடையப்ப‌டுகின்றன.

பல வருடங்களாகவே இலங்கை அரசாங்கங்கள் கல்வித்துறை மீதான
செலவீனங்களை குறைத்தே வருகின்றன. உண்மையில், உலகளவில் மிகவும்
குறைவாக கல்வித்துறை மீதான செலவீனங்களை மேற்கொள்ளும் நாடுகளில்
ஒன்றாக இலங்கை தற்போது காணபப்டுகின்றது. 1970களில் 5%மாக
காணப்பட்ட நிதியீட்டம் 2022ல் 1.2% என்ற மிகத்தாழ்ந்த நிலையை
எட்டியுள்ளது. இருப்பினும், உலகில் இலவசக்கல்விக் கொள்கையை
மூன்றாம் நிலைக்கல்வி வரைச் எயற்படுத்தும் வெகு சில நாடுகளில்
ஒன்றாக இலங்கை காணப்படுகின்றது. தற்போதைய பொருளாதார
நெருக்கடியானது, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும்
இலங்கையின் உயர்குடி தரகர் வர்க்கத்துக்கு கல்வித்துறையை
பணமுள்ளவர்களின் நுகர்வுப்பொருளாகவும் பணத்தை கரக்கும்
வர்த்தகமாகவும் மாற்றும் வாய்ப்பை அள்ளி வழங்கியிருக்கின்றது.

இதற்கு என்ன செய்யலாம்? கல்வியியலாளார்களின் கைகளில் உள்ள
பொறுப்பு எங்கிருக்கின்றதெனில், கடன் நிலைத்தன்மையை சமூக நலன்புரியை சமரசம் செய்யாது எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை
காட்டுவதும் இதனை ஏற்கனவே கடனுக்கான வட்டி என்ற பேரில்
பத்திரதாரர்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ள தொகைகளை சுட்டிக்காட்டி
வெளிவாரி கடனை இல்லாமலாக்குவதில் அல்லது குறைப்பதில்
இருக்கின்றது. எமக்கேயியுரிய கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை ()
மேர்கொண்டு பத்திரதாரர்கள், கடன் வழங்குனர்களின் நிதி நன்மைகளை
கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள
கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை சட்டபூர்வமற்றதாக்குவது அவசியமாகும்.
இவ்வாறான கலந்துரையாடல்கள் எதிர்வரும் தேர்தலகள் த்டொஅர்பான
விவாதங்களில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதோடு இவை தேர்தல்களின்
பின்னர் எமது பொருளாதார செல்நெறியை மாற்றும் நிலையையும்
உறுதிப்படுத்துவதும் அவசியமானதாகும். அரசாங்கத்தின் கல்வித்துறை
மீதான வர்த்தகமயமாக்க செயற்பாடுகள் பாரியளவில், வீதிகளை போராட்டக்
களாங்களாக வரிந்து எதிர்க்கப்படுவதோடு, சொத்து வரிகளைக் கொண்டு மீள்
பங்கீடு செய்வதன் ஊடாக கல்விக்கான நிதியீடு பாரியளவில்
அதிகரிப்பதற்கான குரல்கள் பலமாக எழுப்பப்பட வேண்டும்.