நிகோலா பெரேரா
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), பல்கலைக்கழகம்,
பல்கலைக்கழக பீடங்கள் ஆகியன பாலியல் மற்றும் பால்மை சார்ந்த
வன்முறைகளை (SGBV) கையாள்வதற்கான பல விதிமுறைகளை
கொண்டுவந்தாலும் அவை சமூகத்தில் ஊறித்திளைத்திருப்பதால்
பாதிக்கப்பட்டவர்- பிழைத்தவர்கள் நீதியை கோரும் நடவடிக்கையில்
அவர்கள் தாம் சார்ந்தவர்களால் உணர்வுபூர்வமான ஆதரவை
அனுபவிக்காமல் பெரும்பாலும் தடைகளையே முகங்கொடுக்கின்றனர்.
பொதுவாக உடனிணைபணியாளர்களும் நண்பர்களும் பாதிக்கப்பட்டவர்களை
காப்பாற்ற களத்தில் குதிப்பது உத்தேசிக்கப்படும் குற்றவாளியின்
பொதுமதிப்பையும் அவர் சார்ந்த அமைப்பின் பொதுமதிப்பையும்
பாதுகாப்பதற்கே. பால் மற்றும் பால்மை ஏற்றத்தாழ்வுகள் ஒருவர் சார்ந்துள்ள
சமூக வகுப்பு, இனம், மதம் மற்றும் பிரதேசம் போன்ற வெவ்வேறு
காரணிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்
ஆகிய இரு தரப்புகளின் அடையாளங்களையும் நிர்ணயிக்கும் அதேவேளை,
மிகைப்படுத்தப்பட்ட அதிகாரப்படிநிலையைக் கொண்ட பல்கலைக்கழகங்கள்
போன்ற அமைப்புகள் இவ்வாறான வன்முறைகளை இயலச்செய்வதோடு
அவற்றை மறைக்கவும் செய்கின்றன. பெண்கள் மட்டுமே இவ்வாறான
வன்முறைகளில் பாதிக்கப்படும் தரப்புகள் அல்ல என்பதோடு ஆண்கள்
மற்றும் சிறுவர்களும் வன்முறை இயக்கவியலில் பாதிக்கப்படுவதையும் நாம்
மனதிலிருத்த வேண்டும்.
வீடு, குடும்பம் போன்ற நெருங்கிய சமூக அமைப்புகளில் மேற்கொள்ளப்படும்
நெருங்கிய துணையின் வன்முறையை போல, பல்கலைக்கழகங்களில்
ஏற்படும் பால் மற்றும்பாலியல் சார்ந்த வன்முறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட
குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம் பொதுவாக அறிக்கையிடப்படுவதில்லை. பல்கலைக்கழகங்களில் காணப்படும்
பல்வகைப்பட்ட அதிகார சமநிலையின்மை- ஊழியர்களுக்கும்
மாணவர்களுக்கும் இடைப்பட்டது; கல்விசார் மற்றும் கல்விசாரா
உறுப்பினர்களுக்கு இடைப்பட்டது; மூத்த கல்வியியலாளர்கள் மற்றும் இளம்
கல்வியியலாளார்கள்; அல்லது, மூத்த மாணவர்களுக்கும் புது
மாணவர்களுக்கும் இடைப்பட்டது, போன்ற நிலைகளும் தொழில்ரீதியான
அல்லது தனிப்பட்ட எதிர்விளைவுகளை அஞ்சி பாதிக்கப்பட்டவர்களை நீதி
கோரி செயற்படுவதிலிருந்து தடுக்கின்றது. 2015ஆம் ஆண்டு பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு (UGC) பல்கலைக்கழக ஆசிரியர்
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புடனும் (FUTA), CARE சர்வதேச
அமைப்புடனும் இணைந்து மேற்கொண்ட ஆய்விலும், அண்மையில் 2021ஆம்
ஆண்டு யுனிசெப் (UNICEF) நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலும் கல்வி கற்கும்
மற்றும் தொழில்புரியும் இடங்கள் என்ற வகையில் பல்கலைக்கழகங்கள்
பற்றிய பல அசௌகரியமான உண்மைகள் வெளிப்பட்டன. தற்போது
காணப்படும் வழிமுறைகளை கைக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின்
அந்தரங்கத்தை பாதுகாக்கும் போதிலும், இதன் மூலம் அவ்வாறான
ஒருவரின் பெயரை வெளியிடுவதில்லை என்ற போதும், அவ்வாறான ஒருவர்
பல்கலைக்கழக அமைப்பை எவ்வகையிலேனும்
பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருப்பாராயின் (அமைப்பை நேரடியாக
பிரதிநிதித்துவம் செய்யாவிடினும் அதில் பாகம் வகிக்கும் உறுப்பினர்களுடன்
தொடர்புடையவராக இருப்பாராயின் கூட) அமைப்புக்கு அபாயமாகவே
கருதப்படுவார்.
மறுதலையாக, குற்றஞ்சாட்டப்பட்டவர் பல்கலைக்கழகம்-
தொழில்வழங்குனரால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டிய
நிலையில் இருப்பதோடு, அரசினால் குற்றவியல் வழக்கு தாக்கல்
செய்யப்படுபவராகவும் இருக்க வேண்டும். இலங்கையின் குற்றவியல்
சட்டக்கோவை மற்றும் குடும்ப வன்முறை சட்டம் (2005) ஆகியவற்றில்
SGBVயானது பல சூழ்நிலைகளிலும் அதேநேரத்தில் தனிப்பட்ட மற்றும் சமூக
தளாங்களிலும் நடைபெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. (SGBVயின்
குற்றப்படுத்துகையானது பெண்கள் மற்றும் சிறுவர்களின் இருப்பு, பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான வாக்குறுதியாக
இருப்பதோடு இதன் நிலவுகை பல சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும்
சட்டங்களின் அடிப்படையிலுமே வரையப்பட்டுள்ளது. அவையாவன;
பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின்
உடன்படிக்கை, பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்கும் வியன்னா
உடன்படிக்கை, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள், தொழில்வாய்ப்பில்
பாகுபாட்டை இல்லாமலாக்குதல் தொடர்பான சர்வதேச தொழிலாளர்
அமைப்பினால் வரையப்பட்டுள்ள உடன்படிக்கைகள் மற்றும் பல.
பல்கலைக்கழகங்களை பொருத்தவரையில் பகிடிவதைக்கு எதிரான சட்டம்
(1998ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் ஏனைய
வகையான வன்முறைகளை தடுக்கும் சட்டம் மற்றும் பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழுவின் 2010ஆம் ஆண்டின் 919ஆம் இலக்க
சுற்றறிக்கை ஆகியன) யை தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கின்றன.
பகிடிவதையானது SGBV வன்முறை தெளிவான வெளிப்பாட்டை ஏற்படுத்தும்
இடமாகும், ஆனால் இது மட்டும் அதற்கான இடமல்ல: இது எமது
மாணவர்கள் மட்டும் சார்ந்த சிக்கலுமல்ல.
இலங்கையின் உயல்கல்வித் துறையை நிர்வகிக்கும் உயர் அமைப்பான
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), SGBV வன்முறையானது
பல்கலைக்கழகங்களில் உயிர்களை, உரிமைகளை, மாணவர்களின்,
பல்கலைக்கழக ஊழியர்களின் (மற்றும் ஏனையோரின்) செயற்பாடுகளை
பாதிக்கும் விடயமாகும் என்பதில் பொடுபோக்காக இருந்துவிடவில்லை.
UGCயில் பால்மை சமத்துவம் மற்றும் நியாயத்துக்கான அமைப்பு எனவும்
ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் பால்மை தளங்கள்/ குழுக்கள் என்ற
வகையிலும் வியாபித்திருக்கின்றது. பல்கலைக்கழகங்களும் ஒவ்வொரு
துறை சார்ந்த பீடங்களும் கூட பால்மை அடிப்படையிலான மற்றும் பால்
அடிப்படையிலான துன்புறுத்தல் மற்றும் பாலியல் அத்துமீறல் தொடர்பான
தமக்கான கொள்கைகளையும் கிளை சட்டங்களையும் வகுத்திருக்கின்றன.
இவ்வாறான கொள்கைகளும் கிளை சட்டங்களும் வித்தியாசமான
வடிவங்களில் விவரிக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் பின்வரும்
விடயங்களை உள்ளடக்குவதாக இருக்கின்றன: சம்மதிப்பு தொடர்பான விடயங்கள்; பால் அல்லது பால்மை சார்ந்து ஒருவரின் அல்லது ஒரு
விரோதமான சூழலில் உள்ள உயிரினை பாகுபடுத்திப் பார்த்தல்; வன்முறை/
அத்துமீறல் என வரையறுக்கப்படும் செயற்பாடுகள் (தொழில்நுட்பத்தின்
துணையுடன் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் உள்ளடக்கப்படும்);
கல்வியியல் அல்லது தொழில் முன்னேற்றம் சார்ந்து மேற்கொள்ளப்படும்
கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது தன்னார்வ பாலியல் சார்ந்த கொடுக்கல்
வாங்கல்கள்; SGBV முறையீடுகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகள்; ஒரு
விசாரணையின் போதான சாட்சிகளுக்கான பாதுகாப்பு; வழங்கப்பட்ட
முறையீட்டுக்கும் முறையீட்டை மேற்கொள்பவரின் பாலியல் வரலாற்றுப்
பின்னணிக்குமான பொருத்தமற்ற நிலை போன்றன. இப்பொழுது இவ்வாறான
கொள்கைகளுக்கும் அவற்றின் நடைமுறைகளுக்கும் அவற்றால் விளையும்
விளைவுகளுக்கும் இடையிலான தவிர்க்க முடியாத கதைகளை இப்போது
பார்ப்போம்.
ஒரே பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் புதிய மாணவர்களுக்கான
ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளின் போது SGBV விழிப்புணர்வு/ பயிற்சியை
வழங்குவதையும் சில பீடங்கள் வழங்காமல் இருப்பதையும் நாம்
பார்க்கின்றோம். வித்தியாசமான பீடங்களில் வழங்கப்படும் வித்தியாசமான
மாணவர் கையேடுகளில் சிலவற்றில் SGBV கொள்கை தொடர்பாக மூன்று
மொழிகளில் ப்ரேயில் முறையிலும் தகவல்கள் வழங்கப்படுவதையும்
சிலவற்றில் அவை இல்லாதிருப்பதையும் பார்க்கின்றோம். ஊழியர் திறன்
விருத்தி நிலையங்கள் புதிய ஊழியர்களை இணைக்கும் போது விளைவு
அடிப்படையிலான கல்வியில் மற்றும் எதிர்பார்க்கப்படும் கற்றல்
திறன்களிலும் சிலபோது கல்வி சார்ந்த அரசியல், SGBV கூறுகள்
போன்றவற்றை தமது மனிதவள தொகுப்புகளில் இணைப்பதோடு சிலபோது
அதனை மேற்கொள்ளாத நிலை காணபப்டுகின்றது. பல்கலைக்கழகங்கள்
சிலபோது SGBV தொடர்பான ஊழியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளில்
கல்வியயலாளர்கள் தொடங்கி, பல்கலைக்கழக நிர்வாக ஊழியர்கள், மார்ஷல்
உறுப்பினர்கள், பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் வரை
அனைவரையும் இணைப்பதையும் சில பல்கலைக்கழகங்களில்
விடுபடுவதையும் நாம் பார்க்கின்றோம்.
சில பயிற்சிப் பட்டறைகள் பெண்கள், இளைஞர்கள் போன்ற மிகவும்
குறிப்பிட்ட பங்கேற்பாளார்களாஇக் கொண்டே இயங்குகின்றன. பகரமாக, சில
ஆண் கல்வியியலாளர்கள் (சில போது பெண் சக தொழிலாளர்களால்
உதவப்படுவர்) அவர்களின் தொழில்சார் வளர்ச்சிக்கு தனிப்பட்ட அவமதிப்பாக
கருதி சில பால்மை சார் கொள்கைகளை எதிர்த்து களமிறங்குவார்கள்.
அதிலும், குரல் எழுப்பும் பெண் செயற்பாட்டாளார்களே அதிகம்
சிக்கலானவர்களாக காட்டப்படுவார்கள். தற்போதைய கொள்கைகள்
இவ்வாறான சூழ்நிலைகளுக்கேற்ப வரையப்படவில்லை என்பதோடு பால்மை
மற்றும் இனத்துவ அடிப்படையிலான சிறுபான்மையினர் முகங்கொடுக்கும்
ஏனைய சிறு வன் தாக்குதலகள் மற்றும் நுட்பமான துன்புறுத்தல்கள்
கொள்கை வகுப்பின் போது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. உண்மையில்,
பால்மை சார்ந்த கொள்கைகளின் முறையான நடைமுறையானது ஒரு
தனியரின் (தவிர்க்க முடியாமல் ஒரு பெண்ணின்) முக்கியமான இடத்திலும்,
அதிகாரத்தின் மூலமுமே சாத்தியமாக்கப்படுகின்றது. பல்கலைக்கழகங்களில்
பாலியல் சமத்துவம் என்பது எந்தத் தரமானாலும் பெரும்பான்மையாக
பெண்களின் உழைப்பிலும் ஆழ்ந்த உறுதிப்பாட்டிலுமே தங்கியிருப்பதாக
இருக்கின்றது.
விளைவாக நேர்வது என்னவென்றால், மாணவர்களும் ஊழியர்களும் வதியும்
ஆண்மைய தளங்களில், அத்தளங்களை நாம் அவ்வாறு கொண்டாலும்
கொள்ளாவிடினும் கூட, ஒதுக்கப்பட்டவ்ர்களை நோக்கிய வன்முறை சார்ந்த
அபாயங்களுடனேயே அவை காணப்படுகின்றன. இதன் விளைவே முன்னைய
பத்தியில் ரம்யா குமார் எழுதுவதை போல, பால் புதுமையராக இருக்கும்
மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் சிலரை விடுத்து தமது உண்மையான
வெளிப்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலையாகும். SGBV தொடர்பாக
பதியப்படும் குறைவான முறைப்பாடுகள் அவை அரிதாகவோ அல்லது
இல்லாமல் இருப்பதையோ காட்டுவதல்ல, இம்முறைப்பாடுகளை ஏற்கும்
எமது அமைப்புகளும் ஊழியர்களும் எந்தளவு பால்மை சார்ந்த புரிதல்களோடு
இருக்கின்றார்கள் என்ற கேள்வியையே எழுப்புகின்றன. எனவே, இவ்வாறான
முறைப்பாடுகளை முன்வைக்கும் ஒரு பெண் வெறுக்கப்படுபவராக பார்க்கப்படுகின்றார்: துன்புறுத்தல் என்பது இருதரப்பும் சார்ந்த சம்மதத்துடன்
நடைபெறுவதாகவும், சிறந்த சித்திகள் அல்லது தொழில்தரத்தில்
வழங்கப்படும் உயர்நிலைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல்
வாங்கலாகவுமே பார்க்கப்படுகின்றது. முறைகேட்டுக்கான சூழ்நிலை எவ்வாறு
வரையபப்டுகின்றதென்றால், ஒரு பெண் மற்றையவரை மயக்கி பணிய
வைத்த நிலையில், எதிர்பார்த்துப் போன விளைவு அல்லது நன்மை
எட்டப்படாத சூழலில் தமது குரலை உயர்த்தி துன்புறுத்தல் அல்லது
கற்பழிப்பு என பழி சுமத்தும் நிலையாகவுமே பார்க்கப்படுகின்றது. ‘மீ டூ’
இயக்கத்துக்கு வந்த எதிர்வினைகளை பார்க்கும் போதும் பெரும்பாலானவை
‘தவறான குற்றஞ்சாட்டல்களாகவே’ வரையப்பட்ட நிலையில், அவற்றில் பல
ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டதும் சில வெற்றிகரமாக வழக்காடப்பட்டதும்
உண்மையாகும். பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் அவர்களின் பால்
தொடர்பான வெறுப்பு ஆகியவை நாட்டின் எந்த பிரஜைக்கும் அல்லது
நீதிமன்றத்துக்கும் இருப்பது போலவே பல்கலைக்கழகங்களில், பீட
வாரியங்களில், குறைகேட்பு குழுக்களில், செனட் சபைகளில் மற்றும்
ஒன்றியங்களும் காணப்படுகின்றன. இவ்வாறான சபைகள் பாதிக்கப்பட்டவர்-
மீண்டு வந்தவரை தமக்கு ஏற்பட்ட வன்முறையை சாட்சியமக்க
ஆவணப்படுத்தும் சுமையை வழங்குவதோடு அவை பின்னர் ஒரு திரளை
தாண்டியே ‘நடுநிலையான’ ‘பார்வையாளர்களுக்கு’ கொண்டு செல்லப்படும்
நிலை காணப்படுகின்றது.
இறுதியில், பால்மை அமைப்புகளுக்கான நியமனங்கள் எந்தவித சலசலப்பும்
ஏற்படுத்தாதவர்களாகப் பார்த்து பொறுக்கி எடுக்கப்பட்டதாக இருப்பதோடு,
எந்த பல்கலைக்கழக அமைப்புமே ஒரு SGBV சார்ந்த முறையீட்டை சாதாரண
ஒரு சட்ட நுணுக்கத்தை வைத்து விலக்கி விடும் நிலையிலும் மிகவும்
பலமான கொள்கைகள் கூட வெறும் காகிதக்கூழாக மாறும் நிலையில்,
பல்கலைக்கழகங்களில் அன்றாடம் மாணவர்களோடும் ஏனைய துணைநிலை
பணியாளார்களோடும் புழங்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை மாற்றுவதிலும்
தான் மாற்றம் தங்கியிருக்கின்றது.