சுமதி சிவமோகன்
உண்மையில் தற்போதைய நிலை புதியது. நாடு கொண்டாட்ட மனநிலையில்
இருக்கும் சூழல். நாம் ஒரு புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை
பெற்றிருக்கின்றோம். ஏற்கனவே ஊகிக்கப்பட்ட அவர்களின் பாராளுமன்ற
பெரும்பான்மை பல எதிர்பார்ப்புகளை சுமந்து நிற்கின்றது. நமது
ஜனாதிபதிக்கு அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி கிடைக்காவிடினும்
இவ்வருட ஜனாதிபதித்தேர்தல் பல புதினங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதேநேரத்தில் நாம் வாழும் காலசூழலும் கவனத்தில் கொள்ளப்பட
வேண்டியது. 2022ல் ஏற்பட்ட “அரகலய- போராட்டம்- ஸ்ட்ரக்ல்’ன்” பின்னர்
நடத்தப்பட்ட முதலாவது தேர்தல் இதுவேயாகும். இலங்கையின்
சுதந்திரத்தின் பின்னர் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சி ஆகியவற்றினதும் அவற்றின் கூட்டணிகள் பிளவுக் கட்சிகள்
என்பவற்றினதும் மேடையாகவே இலங்கையின் அரசியல் களம்
காணப்பட்டது. திசாநாயக்க அவர்களின் மூலம் நாம் புது முகம், புது சமூக
வகுப்பொன்றின் முகம், எதிர்பார்க்கப்படும் ஊழலற்ற ஆட்சி என புதிய பல
அம்சங்களை எதிர்கொள்கின்றோம்.
பிரதமரும் கல்விக்கான உத்வேகமும்
அனுர குமார அவர்கள் புதிய அரசியல் மரபாண்மையின் (இருக்குமாயின்)
முகமாம காணப்பட்டால் பிரதமர் அதை விட குறிப்பானதாக கருதப்படுவார்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் முனைவர் பட்டம் பெற்ற
திறந்த பல்கலைக்கழகத்தின் முன்னால் கல்விசார் ஊழியராக இருக்கும்
பிரதமர் ஹரினி அமரசூரியவின் நியமனம் உண்மையில் கொண்டாடத்தக்கது.
இவர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக காணப்படுவதோடு முதல்
இருவரும் இலங்கையின் அதிகாரமிக்க குடும்பமான பண்டாரநயக்க
குடும்பத்தை சேர்ந்த தாயும் மகளுமாக இருக்கின்றனர். எமது பிரதமரின்
பால்மை, பெண்ணுரிமை மற்றும் இதர விடயங்களிலான பல்வேறுபட்ட செயற்பாடுகள் அவரின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கின்றன.
இவர் ஆட்சி மேசைக்கு ஒரு செயற்பாட்டாளரென்ற அதுவும் குறிப்பாக
கல்விச் செயற்பாட்டாளரென்ற வகையில் வந்து அமர்கின்றார். மேலும்
அவரே எமது புதிய கல்வி அமைச்சர். இதன் முக்கியத்துவத்தை என்றும்
மெச்சிவிட முடியாது.
அமசூரியவின் முக்கியமான செயற்பாடுகள் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்
சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) கூட்டியக்கத்தின் முக்கியமான நாட்களில்
அதிகம் வெளிப்பட்டன: 2012ல் இக்கூட்டமைப்பு கல்விக்காக மொத்த
உள்நாட்டு உற்பத்தியின் 6% விகிதத்தை ஒதுக்கக்கோரி 100 நாட்கள்
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த நிகழ்வுகளுக்கு
முன்னிருந்தே அமரசூரியவும் நானும் இன்னும் பலரும் ஒன்றாக
செயற்பட்டிருக்கின்றோம். முறைசாரா தனிக்கோள் செயற்பாட்டாளார்களின்
கூட்டியக்கமொன்றான ஜனநாயகம் மற்றும் கருத்துப்பகிர்வுக்கான
பல்கலைக்கழக ஆசிரியர்களின் அமைப்பின் வழியாக நாங்கள்
கல்வித்துறையில் முதல்தடவையாக அரச பல்கலைக்கழகங்களை
பாதுகாப்போம் என்ற தலைப்பில் அழிந்துவரும் இலவசக்கல்வியை
பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்பட்டோம். எமது செயற்பாடுகள்
நவதாரளவாத நிகழ்ச்சிநிரல்களின் வேகமான செயலூக்கத்தை கொணரும்
உலக வங்கி வழிநடத்தும் ஆளும் கட்சிகள், நிர்வாகிகள் மற்றும் கொழும்பின்
சிந்தனைப்பள்ளிகளை நோக்கி இருந்தது.
2012ல் நடைபெற்ற FUTAவின் தொழிற்சங்க இயக்கத்தின் பிற்பாடு அதன்
செயலாளராக பதவியேற்ற அமரசூரிய அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின்
2014- 15 ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளில் மாற்றத்தை
வேண்டி அதிகம் செயற்பட்டார். 2015ல் புதிய யாப்பை வரையும் நோக்கில்
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தகவலறியும் குழுவின் முக்கிய உறுப்பினராக
இவர் காணப்பட்டார். இந்தக்குழு மக்களின்ன் சமூக மற்றும் பொருளாதார
உரிமைகளை அரசியல் யாப்பில் இணைப்பதை குறிக்கோள்களில் ஒன்றாக
வழங்கியது. இந்த பின்னணியில் வைத்து பார்க்கும் போது எமது பிரதமரிடம் இலவசக்கல்வியின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தலாம்.
மக்கள் தீர்ப்பு
கல்விசார் செயற்பாட்டு வட்டத்தில் இருக்கும் நாங்கள் இலவசக்கல்வியை
பாதுகாத்தல் எனும் கடினமான மற்றும் தனிப்பட்ட போராட்டமொன்றை
அதன் தூய வடிவை காட்டிலும் மக்களிடம் சிறு அளவிலாவது எதிர்பார்ப்பை
ஏந்தும் வகையில் முன்னெடுக்கின்றோம். ‘குப்பி’ எனும் கூட்டியக்கத்தை
சேர்ந்த நாங்கள் இலவசக்கல்வியை பாதுகாப்பதில் முன்னெடுக்கும்
முயற்சிகளுக்கு முக்கிய காரணம், நாங்கள் இந்நாட்டிலுள்ள வறிய மற்றும்
உழைக்கும் மக்களுக்கான ஒரே சமூக முன்னேற்றத்துக்கான வழி கல்வி
என்பதே என்ற புரிதலில் இருப்பதாலாகும். இதே எதிர்பார்ப்பிலேயே நாங்கள்
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நோக்குகின்றோம்.
இலவசக்கல்விக்கான இவர்களின் ஈடுபாடு விஞ்ஞாபனத்தின் ஆரம்ப
பக்கங்களிலேயே புலப்படுகின்றது. இது, கல்வியின் முக்கியத்துவம் மற்றும்
இந்நாட்டின் ஆன்மா மற்றும் நல்வாழ்வுக்கு கல்விக்கான அதீத தேவை
குறித்த குறிப்போடு ஆரம்பிக்கின்றது.
பொதுவாக, இவர்களின் கொள்கைகளில் முன்னைய அரசாங்கங்களின்
கொள்கைகளைக் காட்டிலும் எவ்வித வெளிப்படையான வேற்றுமைகளும்
இல்லை. ஆனால், அவர்கள் எதிர்பார்க்கும் சமூகத்தின் முழுமையான
பார்வை ஒன்றை பார்க்ககூடியதாக உள்ளது. ஆரம்ப மற்றும்
இரண்டாம்நிலைக் கல்வி ஆகியவற்றில் பேணப்பட வேண்டிய சமூக
சமத்துவக் கொள்கை இவர்களின் விஞ்ஞாபனத்தில் பாராட்டத்தக்கது.
பாடசாலைகளை போதிய அணுகல் கொண்டதாகவும் சமூகத் தேவைகளை
சரியான நிவர்த்தி செய்யத்தக்கதாகவுமான கொள்கைகள் இதில்
காணப்படுகின்றன. மாகாண மற்றும் கிராமிய பாடசாலைகள் மீதான அதீத
கவனம் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கல்வியை பொருத்தவரையில் அதனை
மிகவும் அணுகல் கொண்டதாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம்
இருக்கும் போது அதனை விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதானது, மிகவும் வரவேற்கத்தக்கது. வயதுக்கேற்ற பாலியல் கல்வி என்பது பலராலும் பல
காலமாக கூறப்பட்டு வந்த விடயமாகும். குடியியய்ல் கல்வி எனும் போது
தமது மதத்தை மட்டும் பற்றி பயிலும் நிலையிலிருந்து அனைத்து மதங்கள்
குறித்த பார்வையும் மாணவர்களுக்கு இருப்பதனூடாக பல்வகைமையை
ஏற்படுத்தும் முயற்சி மிகவும் சிறப்பானது. ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு
பற்றிய குறிப்பு சமூக மட்டங்களில் மறைந்து வரும் ஆசிரியர்கள் மீதான
கண்ணியத்தை நிலைநிறுத்த மிகவும் வாய்ப்பாகி இருக்கின்றது. இதன் மூலம்
ஆசிரியர்கள் குறித்த விழிப்புணர்வு மாத்திரமன்றி கல்வி எனும் துறை
எத்தகைய முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்பல வேண்டியது என்பதும்
புலனாகின்றது.
இலவசக்கல்வி எனும் வீட்டில் ஏற்பட்ட சிக்கல்
தேசிய மக்கள் சக்தியின் பல மாற்றங்கள் திருப்திப்படுத்துவதாக இருந்தாலும்
சில விடயங்கள் அதிருப்தியை ஏற்படுத்தின; இவை அரசாங்கத்தின்
நிகழ்ச்சிநிரல் குறித்து எம்மை மீள சிந்திக்க வைத்தன. இலவசக்கல்வி
என்பது நாம் எல்லாருக்கும் தெரிந்தது போல ஜனநாயக நடவடிக்கைக்கு
அச்சாணியாகும். இந்த வகையில் பார்க்கும் போது தேசிய மக்கள் சக்தியின்
பிரகடனங்கள் பொத்தாம் பொதுவாக இருப்பதோடு அவை கூட ஒரே
விடயத்தில் செயலிழக்கக்கூடியதாகவும் இருக்கின்றன. கல்வித்துறையின்
இயங்கியல் என்ற வகையில் இலவசக்கல்வியை பாதுகாத்தல் எனும் மகுடம்
தேசிய மக்கள் சக்தியின் கடந்த இரு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட
பிரச்சாரமான ஊழலற்ற ஆட்சி எனும் விடயத்தால் முக்கியத்துவம்
இழக்கப்பட்டிருக்கின்றது. இதே விடயத்தால் சர்வதேச நாணய நிதியத்தின்
மூலம் வழங்கப்படும் உதவித்தொகைக்கு பொறுப்பெடுத்தல் போன்ற இன்னும்
பல பொருளாதாரம் சார்ந்த விடயங்களையும் பின் தள்ளிக்கொண்டே
ஊழலற்ற ஆட்சி எனும் விடயம் மகுடமாக்கப்பட்டிருக்கின்றது. ஊழலற்ற
ஆட்சி எனும் ஒற்றைக் கவனக்குவிப்பு மக்களுக்கு இடையிலும் பெரும்
வரவேற்பு பெற்றுள்ளதோடு இந்த ஒரு மருந்தின் மூலம் முழு பொருளாதார
நெருக்கடி நிலையையும் சரிசெய்து விடலாம் என்ற சிந்தனை
மேலோங்கச்செய்யப்பட்டு இருக்கின்றது. இது, தேசிய மக்கள் சக்தியின் உயர்கல்விக்கான சீர்திருத்தங்கள் குறித்த விடயங்களிலும் வெளிப்படுவதோடு
குறிப்பாக இலவசக்கல்வி எனும் கொள்கை அறியப்படுவதிலும்
எதிர்பார்க்கப்படுவதிலும் வெளிப்படுகின்றது.
பல்கலைக்கழகக் கல்வி என்பது தனியார்மயமாக்கல் எனும் செயற்பாட்டால்
பாதிப்படையும் நிலையில் இருக்கும் போது தேசிய மக்கள் சக்தியின்
கொள்கைகள் அதனை இல்லாமலாக்கும் எவ்வித எடுத்துரைப்புகளையும்
மேற்கொள்ளவில்லை. உயர்கல்வி, முன்னேறும் நாடு, அழகான வாழ்க்கை
(பக்கம்.13, https://www.npp.lk/up/policies/en/npppolicystatement.ப்ட்ஃப்) ஆக்கத்திலும் கூட
முதல் இரு வரிகளிலேயே தனியார்மயமாக்கம் நோக்கிய நகர்த்தல்
புலப்படுவதாக இருக்கின்றது. மங்கலான விளக்கமாக இருந்தாலும் தேசிய
மக்கள் சக்தியின் உயர்கல்வி குறித்தான சட்டகமானது ஆக்கத்தின் முதல்
வரியிலேயே புலப்படுவதாக இருக்க்ன்றது:
புதிய பல்கலைக்கழகங்கள் உயர்நிலையான கோட்பாடுசார் மற்றும்
செயன்முறைசார் கல்வியை வழங்கும் களங்களாக காணப்படும். சர்வதேச
அளவிலான உயர்நிலை தொழில்வாண்மை கற்கைகளை வழங்கும்
நிறுவனங்களாக பல்கலைக்கழகங்கள் காணப்படுவதற்கான ஏற்பாடுகளும்
மேற்கொள்ளப்படும்.
இவ்விடயம், இலவசக்கல்வி மற்றும் தனியார் கல்வி எனும் இரட்டை
நிலையை புலப்படுத்துவதாகவும் இலவசக்கல்வி என்பது நாம் அறியும்
விதத்திலும் தனியார் கல்வி என்பது அரச ஆதரவு மற்றும் அரசுக்கு
உரித்துடைய அமைப்புகள் மூலம் முன்னெடுக்கப்படுவதாகவும்
அறியப்படுகின்றது. 200 அளவிலான மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்
பரிசில்கள் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக வரும்
குறிப்புகள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. (பக்கம். 14)
என்னை இரவில் விழித்திருக்கச்செய்த இன்னொரு விடயம் மாணவர்களை
13-14 வயதுக்கிடையில் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்புகளுக்கு ஏற்ப
நெறிப்படுத்தும் செயற்பாட்டை மேற்கொள்ளும் விடயமாகும் (பக்கம். 11).
தொழிற்பயிற்சி மற்றும் திறன்விருத்தி என்பது கல்வித்துறையில் ஏற்படுத்தும் அபிவிருத்தி என்பது அண்மைய காலங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்த
விடயங்களாகும். பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களால் ஆன இன்றைய
அரசியல் கலாசாரத்தில் சமூக நீதி எனும் அரசியல் பணிக்கான
தகுதியாக்கத்தை சூழ அதிகம் இயங்குவதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தேசிய
மக்கள் சக்தியின் இவ்வாறான கொள்கைகள் மக்களின் கவனத்தை அதிகம்
ஈர்க்கும் காரணம் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி காரணமாக
தொழில்வாய்ப்புகளில் ஏற்படும் குறைபாடுகளால் மக்களின் வாழ்வாதாரத்தில்
ஏற்படும் சிக்கல்கள் மேலும் தொடராமல் இருக்க வேண்டி மக்கள்
ஏற்படுத்தும் எதிர்பார்ப்பாகும். எமக்கு தேவை திறனுள்ள தொழிற்படையே
அன்றி தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் அல்ல என்பதாகவே நிலைமை
நகர்கின்றது. சிலர் இந்த பார்வையை மறுதலித்தாலும் நான்
மறுப்பதாயில்லை. இருப்பினும் இவ்வாறான பார்வைகள் சமூக பிளவுகள்
மற்றும் சமூக வகுப்புகள் குறித்த இலகுவான அங்கீகாரத்தை வழங்குவதை
நாம் மறுப்பதாயில்லை. இதில் யார் தொழிற்பயிற்சி நோக்கி நகர்வார்
என்பதும் கல்விப்பாதையில் “முன்னேற்றம்” நோக்கிய திசையில்
நிறுத்தப்படுவார் என்பதும் கேள்விக்குட்படுத்த வேண்டிய விடயம்.
புதுப்பித்தல்
நாம் இலவசக்கல்வி எனும் குறுக்கு வீதிகளில் இல்லை என்பது தின்னம்.
தனியார்மயமாக்கம் என்பது வெளிவாரி சக்தியாக பல்கலைக்கழக
அமைப்புகளுக்கு இனிமேலும் இருக்கப்போவதில்லை. அது ரகசியமாகவும்
பரகசியமாகவும் எம்மோடு இருக்கின்றது. நான் ஹரினி அமரசூரிய அவர்கள்
குறித்த குறிப்புகளுக்கு மீள வருகின்றேன், நாம் SAITMக்கு எதிராக
மேற்கொண்ட போராட்டம், தனியார் மற்றும் அரச கூட்டாண்மை மற்றும்
அதன் விளைவான அரச பல்கலைக்கழகங்களின் நலிவுற்றநிலை
என்பவற்றை நினைவு கூர்கின்றேன். இலவசக்கல்வி எதிர்நோக்கியிருக்கும்
இருண்ட காலத்தில், அது மேலும் இருள் சூழும் நிலை மூண்டிருக்கின்ற
காலத்தில், நாம் தைரியத்துடன் செயற்பட வேண்டும், இலவசக்கல்வி மீதான
எமது ஆதரவை முழுமையாக வழங்க வேண்டும்; இந்த இருண்ட காலம்
வேண்டும் தீவிர செயற்பாட்டாளராக நாம் மாற வேண்டும்.