மதச்சார்பின்மை: முஸ்லிம் அமைப்பு மற்றும் சிங்கள-பௌத்த அரசியல்
டீல நுசயனெமைய னந ளுடைஎய

எரந்திகா த சில்வா

இந்த சிறு பகுதியானது பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தில் உள்ள ஒரு
குறிப்பிட்ட வகுப்பறையில் எனக்குக் கிடைத்த ஒரு நினைவகத்தின் கதையை அடிப்படையாகக்
கொண்டது. இந்த குறிப்பிட்ட வகுப்பறையை நான் ஒவ்வொரு முறையும் கடந்து செல்லும் போது,
அதே நினைவை மீண்டும் மீண்டும் தூண்டுகிறது. நான் இந்த நினைவகத்தை சுயவிமர்சனமாக
திரும்பிப் பார்ப்பதோடு, இந்த சம்பவத்தின் போது என் சுயத்தைப் புரிந்துகொள்வதற்கும் எனது
சிந்தனை செயல்முறையை பகுப்பாய்வு செய்வதற்கும் முயற்சி செய்கிறேன். சுமார் ஒன்பது
ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்த விரிவுரை அறையைக் கடந்தபோது, ஒரு இளங்கலைப்
பட்டதாரி மாணவி அபாயா அணிந்து, உள் மூலையின் இரண்டு சுவர்களை எதிர்கொண்டு நின்று
கொண்டிருப்பதைப் பார்த்தேன். இது ஒரு வழக்கத்திற்கு மாறான காட்சியாகும். ஆகவே நான்
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு மீண்டும் பார்ப்பதற்காக ஒரு சில படிகள் பின்னோக்கி
நடந்தேன். அந்தப் பெண் அங்கே பாயை விரித்து அதில் முழங்கால்படியிட்டு பிரார்த்தனை
செய்வதைப் பார்த்தேன். ஒரு விரிவுரையாளர் அந்த வகுப்பறையில் விரிவுரைக்காகச் சென்றால்
என்ன நடக்கும் என்று ஒரு நொடி யோசித்தேன். இந்தப் பெண் தன் பிரார்த்தனையை முடிக்கும்
வரை விரிவுரையாளர் காத்திருப்பாரா? அல்லது அந்த இளம் பெண் தன் பிரார்த்தனை முடியும்
வரை விரிவுரையாளரைக் கவனிப்பாரா? மக்கள் வெறுமனே ஒரு விரிவுரை அறைக்கு சென்று
பிரார்த்தனை செய்ய முடியுமா? பல்கலைக்கழகம் மதச்சார்பற்ற இடம் இல்லையா? போன்ற
கேள்விகள் என்னுள்ளே எழுந்தன. இந்தச் சம்பவத்திற்கான எனது எதிர்வினை ஒரு நவீன
பிரச்சனையின் ஒரு பகுதியாகவே நான் உணர்ந்தேன்.

பௌத்த வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்கும் ஒரு இளங்கலை பட்டதாரி ஆகிய நான் இந்த
செயற்பாட்டை ஏளனத்துடன் பார்த்தேனா என்பது அந்த நேரத்தில் எனக்கு ஒருபோதும்
ஏற்படாத கேள்வியாகவே இருந்தது. இந்த செயற்பாட்டை நான் மீட்டுப்பார்க்கையில் நான்
உணர்வது யாதெனில் ஒரு சமயத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வழிபாட்டை செய்தது எனக்கு
பிரச்சினையாக இருக்கவில்லை மாறாக பௌத்த மதமல்லாத ஒருவர் தனது மத வழிபாட்டை
மேற்கொண்டதுதான் எனக்கு பிரச்சினையாக இருந்தது. இஸ்லாமிய வழிபாட்டின்
நடைமுறையானது பௌத்தமல்லாத ஒரு மதம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஹெகலின்
மொழியில், இது மதத்தை பகிரங்கமாக கடைப்பிடிக்கக் கூடாது என்று பொருள் கொள்ளும் என
நான் கூறுவேன். இது பௌத்த மதத்திற்குப் பதிலாக இஸ்லாம் சார்ந்த விடயமாக இருந்ததால்
நான் “மதச்சார்பற்ற” என்று கருதிய அதே பல்கலைக்கழக வெளியில் சிங்கள-பௌத்தம் – ஒரு
பிரச்சனையாகப் பார்க்கப்படாத போது இஸ்லாம் – ஏன் (எனக்கு) ஒரு பிரச்சனையாக இருந்தது என்பதே என் கேள்வி. முஸ்லீம் என்பதை ஒரு”நவீன” பகுத்தறிவுள்ள தனிநபராக நான் புரிந்து
கொள்ளத் தயாராக இல்லை என்பதே இங்கு நிதர்சனமான உண்மை.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இஸ்லாமியப் பெண் மாணவியின் பிம்பத்தை (ஒருவேளை)
அவிழ்க்கக்கூடிய சில உள்நோக்க மற்றும் அறிவுசார் புனரமைப்பு ரீதியான செயற்பாட்டிற்கு நான்
பங்களிக்க முயல்கிறேன். நான் இந்த சம்பவத்தை மீட்டி பார்க்கையில், இது எவ்வளவு
பாலினமானது என்பதையும் உணர்கிறேன். இந்த செயற்பாட்டில் ஒரு ஆண் மாணவனாக
இருந்திருந்தால், அது பயங்கரவாதியின் உருவமாக இருந்திருக்கும், ஆனால் இந்த பெண்
மாணவியின் விடயத்தில் அவ்வாறு இருக்கவில்லை. மாறாக இது ஒரு தர்க்க சிந்தனை இல்லாத
படிப்பறிவில்லாத பெண்ணின் செயற்பாடாக கருதப்பட்டது. பிரச்சனை என்னவென்றால்,
சிங்கள-பௌத்த உடலமைப்பானது, சிங்கள-பௌத்தம் அல்லாதவற்றின் சீரழிவு இல்லாமல்
இருக்க முடியாது என்பதே ஆகும்.

இந்த முஸ்லீம் மாணவர் ஏன் பல்கலைக்கழக பள்ளிவாசலில் தொழாமல் விரிவுரை அறையில்
தொழுவதைத் தேர்ந்தெடுத்தார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். இது பல்கலைக்கழகத்தின்
மதச்சார்பற்ற இடம் என்று கூறப்படும் கலாச்சார-அரசியல் ஒழுங்கின் மாற்று வடிவத்தை
வழங்குகிறதா அல்லது ஒரு மாணவர் பொதுவில் பிரார்த்தனை செய்ய பாதுகாப்பான இடமாக
இருக்கிறதா? அல்லது பல்கலைக்கழகம் என்பது சிங்கள-பௌத்த அடையாளமாக இயைபாக்கம்
செய்யப்பட்ட நிலைக்கு முஸ்லீம் மாணவியின் எதிர்ப்பா? அல்லது சிங்கள பௌத்த ஆதிக்க
பல்கலைக்கழகத்தின் அரசியல் ஒழுங்கா? அல்லது வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் கலை
பீடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதா? அல்லது பீடத்தில் உள்ள பிரார்த்தனை அறைகளில்
ஒரே நேரத்தில் ஐந்து பேர் மட்டுமே தங்க முடியும் என்பதாலா? போன்ற கேள்விகள் என்னுள்ளே
எழுந்த வண்ணம் இருந்தன. எனது பார்வையில், பிரார்த்தனை செய்யும் மாணவி, தனது மதம்
மற்றும் பாலினத்தின் வரம்புகளால் தனக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வழிபடும்
யோசனையை எதிர்த்தோடு, சிங்கள-பௌத்த ஆதிக்கம் செலுத்தும் பல்கலைக்கழகத்தின்
நெறிமுறை கலாச்சார-அரசியல் ஒழுங்கையும் எதிர்த்திருக்கலாம்.

இங்கு அவளின் சொந்த வழிபாட்டு விதிமுறைகளை அவள் இங்கே வெளிப்படுத்தியிருக்கிறாள்.
சில்வியா வின்டர் என்பவர் குறிப்பிடும் “ஆன்டாலஜிக்கல் இறையாண்மை” என்று அழைக்கும்
ஒரு வடிவத்தையே இந்தப் பெண் இங்கு பயன்படுத்துகிறார். அவள் இறையாண்மையின்
பிரச்சினையை அறிந்திருப்பதோடு சிங்கள-பௌத்த அரசியலின் கலாச்சார ஒழுங்கைக்
கடைப்பிடிப்பதன் மூலம் எழும் சீரழிவிலிருந்து வெளியே வர தன்னை மாற்றிக் கொள்கிறாள்.
அவள் பொது இடத்தில் பிரார்த்தனை செய்வதென்பது அனைத்து இலக்கியங்கள், மற்றும்
வரலாறு போன்றவற்றிலிருந்து எழும் சீரழிவிலிருந்து வெளிவருவதற்கான ஒரு வழியாகும்.

இங்கு இந்த பெண்ணின் மத உடை மற்றும் மதச்சார்பற்றதாகக் கருதப்படும் பொது இடத்தில்
மதத்தை கடைப்பிடித்ததால்இ கொள்கையளவில் இந்த பிரார்த்தனை செய்யும் பெண்ணின்
உடல் “முஸ்லிம் உடல்” என்று குறிக்கப்பட்டுள்ளது. “நாங்கள்” மற்றும் “அவர்கள்” என்ற
இயங்கியலில் அவளது உடல் ஒரு பிரச்சனையாகிறது, அது அவளை மற்றவராகக் குறிக்கிறது.
அவர் ஒரு அரசியல் சமூகம் மற்றும் சமூக உறவுகளின் தொகுப்பிற்குள் இருக்கிறார், அதில் அவள் எப்போதும் எதிர்மறையாக அறியப்படுகிறாள். அவளது அடையாளம் நவீன மனிதனின்
பார்வையில் இருந்து கட்டமைக்கப்பட்டுள்ளது, இது முஸ்லீம் உடலை எதிர்மறையான
ஸ்டீரியோடைப்களை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் வடிவமைக்கிறது. இந்த நிலையில்,
இங்கே அவளது அடையாளமானது, முஸ்லிம் உடலின் கீழ்ப்படிதலை அங்கீகரிக்கும் மற்றும்
விரும்பும் எனது சிங்கள-பௌத்த பார்வையின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் நான்
தர்க்கம் என்கின்ற ஐரோப்பிய கட்டமைப்பு வாதத்தை பின்பற்றுகின்ற ஆண்களினுடைய
உலகத்திற்கு அனுசரணை வழங்குகின்ற ஒருவராக இருக்கின்ற படியால் நானும் ஆண் என்ற
பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறேன். அதேவேளை, அவள் “மதச்சார்பற்ற” வெற்றிக்கு அடிபணிய
வேண்டிய “பகுத்தறிவற்ற” பிறர் ஆகிறாள். உலகின் பார்வையில், இனம், மற்றும் பாலின
உடலால் நான் அவளைப் போலவே பகுத்தறிவற்றவள். இருப்பினும், “மதச்சார்பற்ற” மற்றும்
“பகுத்தறிவு” என்பது எந்த ஒரு சூழலிலும் இனம் சார்ந்த பிறரை அடிபணியச் செய்வதற்குப்
பயன்படுத்தப்படும் கட்டுமானங்களாக இருப்பதால், பிரார்த்தனை செய்யும் முஸ்லீம் பெண்
இப்போது பகுத்தறிவற்ற பெண்ணாக (மற்றைய) இருக்கிறார். ஒரு வகையான மதச்சார்பின்மை
அல்லது பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்ட மதச்சார்பின்மையை ஊக்குவிப்பதற்காக
நவீன அரசியல் மதச்சார்பின்மையைப் பயன்படுத்துகிறதா என்பது கேட்கப்படவேண்டிய ஒரு
கேள்வியாகும். உதாரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சூழலில், இது சிங்கள-பௌத்த
அரசியலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதச்சார்பின்மையாகும். இந்த மதச்சார்பின்மையானது,
அதன் சிங்கள-பௌத்த அடித்தளம் அச்சுறுத்தப்படும்போது மட்டுமே மதச்சார்பற்றதாக
இருகின்றது என்பதை நினைவுறுத்துகின்றது..

மதச்சார்பின்மை விதிமுறை என்பதால் பொதுவில் மதத்தை கடைப்பிடிப்பது ஒரு
பிரச்சனையாகிறது. அப்படியானால் மதம் மற்றும் கலாச்சாரம் என்பன நடைமுறைக்கு
மாறானதா? என்ற கேள்வி எழுகின்றது. பெரும்பான்மை அரசியலானது ஜனநாயக பிரதிநிதித்துவ
அரசாங்கத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதால், மக்கள் மீது ஆபத்தான விளைவுகளை
உருவாக்குகிறது. பெரும்பான்மைவாதமானது வேறுபாடுகளை களைந்து சிறுபான்மையினரை
சமூகத்தில் பங்கேற்பதற்கு சிறிதும் இடம் வழங்காமல் அவர்களை ஒதுக்குகின்றது.
மதச்சார்பின்மை என்ற விடயம் வலிமைப்படுத்தபடும் போது, மதம், பழக்கவழக்கங்கள், மரபுகள்
மற்றும் மொழி போன்ற கலாச்சாரத்தின் அம்சங்கள் சிக்கலாகி, நவீனத்துவத்தில் பதட்டங்களை
உருவாக்கியது.

இலங்கைச் சூழலில், சிங்கள-பௌத்த மக்கள் தொகுதி எனும் கட்டமைப்பில் “முஸ்லிம் உடல்” ஒரு
குழப்பத்தை உருவாக்குகிறது. இதற்கான இரு காரணங்களாகஇ உலகளாவிய ரீதியில்
இடம்பெறும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் மற்றும் முஸ்லீகள் அதிகளவான
மக்கள்தொகை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற கட்டுக்கதை போன்றனவே
அமைகின்றது. அண்மைக் காலங்களில், சிவில் மற்றும் அரசியல் ஒழுங்கைப் பேணுவதற்கான
சாக்குப்போக்கில் ‘ஒரே நாடு, ஒரே சட்டத்தை’ நிறுவுவதற்கு இலங்கை வெறித்தனமாக
செயற்பட்டது. ஆயினும்கூட, பெரும்பான்மைவாதமும் பெரும்பான்மைவாத அரசியலும், சிங்கள-
பௌத்தர் அல்லாத பிற மத மற்றும் சட்ட அமைப்புகளை இல்லாதொழித்து சிங்கள பௌத்த
அரசியலுக்கு அனுகூலமான ஒரு சட்டத்தை நிறுவ முயற்சிப்பதில் தெளிவாக உள்ளது. இது மதச்சார்பின்மை, பகுத்தறிவு மற்றும் முன்னேற்றம் பற்றிய ஐூரோப்பிய-அமெரிக்க சிந்தனையின்
மகத்தான கதையை ஒரு வழியாக பின்பற்றுகின்றது. இலங்கையை மதச்சார்பின்மையாக்கும்
ஐரோப்பிய-அமெரிக்க யோசனையை ஏற்றுக்கொள்வது முன்னேற்றத்திற்கு ஒருபோதும்
உத்தரவாதம் அளிக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மதச்சார்பின்மை எவ்வளவு அடக்குமுறையாக இருக்கிறதோ, அதே போல் மத மற்றும் பிற
கலாச்சாரத் திணிப்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களும் காணப்படுகின்றன. இன்று, எனது
மாணவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பற்றி கவலைப்படும் ஒரு ஆசிரியராக நான்
இதனை எழுதுகையில் பின்வரும் எண்ணங்களுடன் இந்த சிறு பகுதியை முடிக்க விரும்புகிறேன்:
பிரார்த்தனை செய்வது அல்லது பிரார்த்தனை செய்யாமலிருப்பது இங்கு கேள்வி அல்ல
பிரார்த்தனை செய்வதோ அல்லது பிரார்த்தனை செய்யாமல் இருப்பதோ எனது
மாணவர்களுக்கும் அனைவருக்கும் உள்ள உரிமையாகும். மாறாக ஆதிக்கம், திணிப்பு,
நிர்ப்பந்தித்தல் மற்றும் பிறரின் கேள்விக்கு நாம் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில்
பதிலளிக்கப்போகின்றோம் என்பதுதான் இங்கு கேள்வி. இங்குதான் நாம் பதிலளிக்கத்தொடங்க
வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அடையாளப் பிரச்சினையை ஒரு கலாச்சார கேள்வியாக
அல்லாது ஒரு அரசியல் கேள்வியாக அணுகும் நிலையிலிருந்து நாம் தொடங்க வேண்டும். இந்த
விசாரணை எங்கள் பல்கலைக்கழக வெளிகளில் நடக்கலாம் என்று நம்புகிறேன்.