மனங்களை விடுவித்தல்: ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு

அனுஷ்க கஹந்தகமே

“தனியார் படிப்பகங்கள், தனியார் பாடசாலைகள், கட்டணத்துக்கு பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவங்கள் என அனைத்துமே சமூக வர்க்கங்களிடையே பெரிதாகும் ஏற்றத்தாழ்வுகளில் முக்கியமான பங்களிப்பு செய்கின்றன.”

மெய்யாகவே கல்வி இலவசமாக/ சுதந்திரமாக இருக்கவேண்டும். தனியார்மயப்படுத்தலில் இருந்து சுதந்திரமாக இருப்பது மட்டுமன்றி ஒடுக்குமுறை கட்டமைப்புக்களிலிருந்து மாணவர்களை விடுவித்து அவர்களை வலுவாக்குவதாக இருக்க வேண்டும். விமர்சன சிந்தனை செய்ய, நடப்புநிலையை சாவால்ப்படுத்த, முக்கியமாக தம்மை ஒடுக்குமுறை செய்யும் கடடமைப்புக்களில் இருந்து விடுவிக்க தேவையான அறிவையும் உபகாரங்களையும் கல்வி வழங்க வேண்டும்.

ஓர் ஒடுக்கும் கட்தமைக்கப்பாக காணப்படும் கல்வி

 விமர்சன சிந்தைக்கும் ஒடுக்குமுறையை எதிர்க்கவும் நியாயமான சமத்துவமான ஒரு உலகை தொலைநோக்காக கற்பனை செய்யவும் கல்வியானது மாணவர்களை பலப்படுத்த வேண்டும். இருப்பினும் அதன் இன்றய நிலையை பொறுத்த வரையில் விடுவிக்கும் கருவியாக இல்லாமல் ஒரு ஒடுக்குமுறை கருவியாகவே கல்வி செயல்பட்டுவருகிறது. சுதந்திரமான சிந்தனை, மாற்றம் என்பவற்றை வளர்க்காமல் ஏற்கனவே உள்ள அதிகார நிலைகளையும் சமூக படிநிலைகளையும் இன்றய கல்வி முறைமை மீள் வலுப்படுத்துகிறது. விமர்சன சிந்தனையையும் மாற்றத்தையும் கற்பிப்பதை விட, அனுசரித்து நடத்தலையும் பணிந்துசெல்லலையும் கற்பிப்பதன்மூலம் தற்போதைய நிலையை அது பேணுகிறது. பொருளாதார, இன, சமூக பாகுபாடுகள் உட்பட பல அசமத்துவங்கள் இதனால் ஏற்படுவதோடு ஏற்கனவே உள்ள சமூக பிரிவினைகளை இன்னும் பெரிதாக்குகிறது. இதன் விளைவாக தனியாள் மற்றும் சமூக வலுப்படுத்தலின் உந்து விசையாக இருப்பதற்கு பதிலாக, கல்வியானது விழிப்புணர்வு இல்லாமல் அநீதிகளிலும் அசமத்துவங்களிலும் பங்கெடுக்கும் அமைப்புக்களையே நிலைநிறுத்துகிறது.

கல்வி வர்க்க கட்டமைப்பை பேணுதல்

கல்வி பரந்துபட்ட அளவில் தனியார் மயப்படுத்தப்படுவதால் கட்டமைப்பு தொடர்ந்தும் ஏற்கனவே உள்ள வர்க்க அமைப்புக்களை  பாதுகாத்து மீள் வலுயுறுத்தி வருகின்றது. தனியார் படிப்பகங்கள்  தனியார் பாடசாலைகள் கட்டணத்துக்கு பட்டபடிப்புக்களை வழங்கும் நிறுவங்கள் என அனைத்துமே சமூக வர்க்கங்களிடையே பெரிதாகும் ஏற்றத்தாழ்வுகளில் முக்கியமான பங்களிப்பு செய்கின்றன.

            இவ் தனியார் நிறுவனங்கள் பொதுவாகவே சமூகத்தின் அதிக வசதிபடைத்த குழுக்களுக்கே சேவை செய்வதோடு அவர்கள் தரமான கல்வி மற்றும் வளங்களை பெற்றுக்கொள்ள வழி செய்து கொடுக்கிறது. இதற்க்கு எதிராக குறைந்த அனுகூலங்களான பின்னணிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு குறைந்தளவான வாய்ப்புக்கள் கிடைப்பதோடு தரமான கல்வியை பெறும் சாத்தியம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. செல்வந்தருக்கும் வசதி வாய்ப்பற்றோருக்கும் (underprivileged ) இடையிலான பிரிவு இதனால் இன்னும் மோசமாக்கப்படுகிறது. கல்வியை பெற்றுக்கொள்வதில் பெரிதாகி வரும் இந்த இடைவெளியானது சமூக நகர்திறனை மட்டுப்படுத்துகிறது. அத்தோடு தமது சமூக பொருளாதார நிலையால் ஏற்படும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட வசதி குறைந்தோர் கடினமாக முயற்சிக்கையில் ஈடுபட, வசதி படைத்தோர் தொடர்ந்தும் சிறந்த வாய்ப்புக்களை தக்கவைக்கும் வகையிலான ஒரு வட்டச் செயல்முறை கல்வி தொடர்ந்து செயல்படுத்துகிறது.

பால்நிலை ஒடுக்குமுறை

படிவார்ப்புக்களை (stereotypes) மீள்வலுப்படுத்தல், பால்நிலை சார் அசண்டையீனம் (insensitivity) ஊக்கமளிக்கப்படல் மற்றும் பால்நிலை சார் நுண்ணணர்வு கொண்ட ஒரு கல்வி முறையை உருவாக்க தவறியதன் காரணமாக, கல்வியானது மறைவாக பால்நிலை ஒடுக்குமுறையை நிலைநிறுத்துகிறது. சில கொள்கை வகுப்பாளர்களும் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதன்மூலம் இந்த பால்நிலை விடயத்தில் அசண்டையீனமான கல்வி முறையை நிலைநிறுத்துகிறது. பால்நிலை சார் கற்கைகள் மாணவர் மத்தியில் நோய் பரப்புவதாக அண்மையில் இடம்பெற்ற ஒரு ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார். 2025 ஆம் ஆண்டில் கூட பால்நிலை கற்கைகள் பற்றிய இவ்வாறான அபத்தங்களை நாம் இன்னும் பார்க்கிறோம். குறிப்பாக உலகளாவிய ரீதியில் சமூகங்கள் பன்மைத்துவத்தையும் உட்சேர்த்தலையும் ஆதரிக்கும் வேளையில் காலம் சென்ற பிற்போக்கு கருத்துக்களை பிரமுகர்கள் கூறுவது வருத்தமளிப்பதாகவே உள்ளது. இக்கருத்துக்கள் ஒரு கல்வியல் துறையாகவுள்ள பால்நிலை கற்கைகள் முக்கியத்தை மழுங்கடிப்பது மட்டுமன்றி பாரம்பரிய பால்நிலை எதிர்பார்ப்புக்களை விட வித்தியாசமாக இருப்போரை விளிம்புநிலைக்கு தள்ளும் பாரதூரமான படிவார்ப்புக்களை மீள் வலுப்படுத்துகின்றன. சமூக ரீதியில் அதிக முன்னேற்றத்தை கொண்ட இந்த யுகத்தில் நாம் முன்னேறும்போது இப்படியான பழங்கால சிந்தனைகள் பால்நிலை பாராபட்ச்சமின்றி சமத்துவத்தையும் புரிந்துணர்வையும் அனைவர் மத்தியிலும் வளர்ப்பதற்காக தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகளை தடுப்பதகாகவே அமையும்.

            தமது அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக அல்லாமல் ஒரு புறக்காரணியாக பால்நிலை பயன்படுத்தும் ஒரு கல்வியல் சொல்லாடலில் பாடசாலை மாணவர்களானாலும் சரி பல்கலைக்கழக மாணவர்களானாலும் சரி அமிழ்த்தப்படுகிறார்கள். இந்த சட்டகத்தில், ஆண்கல்லாதோருக்கே பால்நிலை முக்கிய விடயம் என சித்தரிக்கப் படுவதால் பால்நிலை சார் பிரச்சனைகளின் பரந்துபடட சமூக தாக்கங்கள் ஓரங்கத்திடப்படுகின்றன. ஒருவரின் பால்நிலை அடையாளம் எதுவாக இருந்தாலும் சரி பால்நிலை விடயங்கள் எல்லோரையும் பாதிக்கின்றது என்பதும் பால்நிலை அசமத்துவங்களை விளங்கிக்கொள்வதும் தீர்ப்பதும் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் முக்கியமான விடயம் என்பதும் இக்கருத்தில் விளங்கிக்கொள்ளப்படவில்லை.

          அண்மையில் கவலைதரும் வகையில் இடம்பெற்ற வைத்தியர் ஒருவர் தொடர்புபட்ட பாலியல் துஸ்பிரயோகம் இதற்கு உதாரணம் ஆகும். பொதுமக்கள் இந்த விடயத்தை பற்றி உரையாடிய முறை, அதிலும் குறிப்பாக பாதிக்கப்படடவரின் இரகசிய வாக்குமூலத்தை வெளிப்படுத்த ஊடகம் எடுத்த முடுவு, மிகவும் பாரதூரமாகவுள்ளது. ஒருவரின் தனி வெளிகளையும் நுண்ணுணர்விற்கும் மதிப்பளிக்காமை பால்நிலை பிரச்சினைகள் சார்பான சமூகத்திலுள்ள பிறழ்வான புறக்கணிப்பை காட்டுகிறது.

          இங்கே ஊடகத்தின் நடத்தை வெறுமனே தனித்த நிகழ்வு இல்லை. பால்நிலை நுண்ணறிவு பொதுவாக புறந்தள்ளிவிடப்படும் அல்லது கவனிக்கப்படாத ஒரு சமூகத்தில் ஊடகத்தின் பொதுவான நடத்தையே இது என்பது இன்னும் அச்சம்தருகின்றதாக விடயமாகவுள்ளது. பல வட்டங்களில் பால்நிலை சமத்துவம் மற்றும் நுண்ணறிவை ஆதரிப்பது இழுக்காக பார்க்கப்படுவதோடு அதனை ஒரு “நோய்” அல்லது நடப்பு நிலையை பாதிக்கும் இடையூறுசெய்யும் விசையாக பார்க்கப்படுகிறது. பாரதூரமான பால்நிலை படிவார்ப்புக்கள் நிலவிவருவதோடு பால்நிலை சமபங்கு பற்றிய முக்கிய உரையாடல்கள் புறந்தள்ள அல்லது உருக்கெடுக்க அல்லது புறந்தள்ளப்படும் ஒரு கலாச்சாரத்தில் இவ்வகையான நடத்தைகள் அங்கம் வகிக்கின்றன. பால்நிலை நுண்ணறிவோடு  அதிகம் பொருந்திப்போவதும் மாணவர்கள் முகங்கொடுத்து வாழப்போகும் உலகை வடிவமைக்க அதனுடைய முக்கிய பங்கை விளங்கிக்கொள்ளும் ஒரு கல்வி முறைமைக்கான ஆழ்ந்த சமூக தேவை இருப்பதையே இது இறுதியில் பிரதிபலிக்கிறது.

          இவ்வகையான பால்நிலை படிநிலைகளிருந்து வெளிவர பால்நிலை கற்கைகை வெறுமனே ஒரு அரையாண்டிற்கோ அல்லது ஒரு பாடமாகவோ கற்பிக்கும் கல்விமுறை போதுமானதல்ல. வேறு விடயங்களோடு பால்நிலைசார் நுண்ணறிவான கல்வி இதற்கு அத்தியாவசியமானது.

பகிடிவதை

வர்க்க மற்றும் பிரதேச அதிகார முறைமைகளில் (கொழும்பு மற்றும் ஏனைய இடங்கள் எனும் பிரிவு) காணப்படும் சமத்துவம் பல்கலைக்கழகங்களிலும் வந்துவிடுகின்றன. புதுமுக மாணவர்களை பல்கலைக்கழக முறைமைக்கு உள்வாங்கும் நடவடிக்கையாக பகிடிவதை பரவலாக பார்க்கப்படினும் அது சமூகத்திலுள்ள வர்க்கம்சார் மற்றும் இன மத பிரிவினைகளிலேயே வேரூன்றியுள்ளது.

          சில பீடங்களில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் பெண் மாணவர்களை பொதுவாக வீடுகளில் அணியப்படும் குறிப்பிடட துணிகளை (சீட்டை துணிகள்) அணிந்துவருமாறும் அவர்கள் முடியை இரட்டை பின்னல் பின்னுமாறும் கேட்கக்கூடும். அதேவேளை ஆண்மாணவர்கள் நீண்ட கைகளுள்ள சேர்ட்களை அணிந்துவருமாறும் இடுப்புப்பட்டி அணியக்கூடாதென்றும் கூறப்படுகிறது. இரு பாலருமே கழிப்பறை செருப்புக்களை அணிய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். வர்க்க பாகுபாடுகளின்றி அனைவரையும் சமமாக்கும் முயற்சிலேயே இது இடம்பெறுவதாக சித்தரிக்கப்படுகிறது. இருப்பினும் பால்நிலை சார் நியாப்படுத்தப்பட்ட செயற்பாடுகளானவை சமமற்ற ஒடுக்குமைசெய்யும் வர்க்க கட்டமைப்புக்களிருந்தே தோன்றுவதோடு ஒடுக்குமுறை கருவிகளாக கல்வி நிறுவனங்களையும் முக்கியமாக பல்கலைக்கழக கலாச்சாரத்தையும் படிப்படியாக ஊடுவுகின்றன.

          வெளிப்படையான வர்க்க குறியீடுகளை நீக்கி மாணவர்கள் மத்தியில் சமத்துவமான ஒரேமாதிரியான வித்தியாசமற்ற உணர்வை ஏற்படுத்தும் பகட்டு நோக்கில் இவ் செயற்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இருப்பினும் இயல்பாக ஓடுக்குமுறை செய்யும் நன்கு ஆழமாக பதிந்த சமத்துவ சமூக கட்டமைப்புக்களிருந்தே இந்த செயற்பாடுகள் தோன்றுகின்றன  என்பது கண்டுகொள்ளப்படுவதில்லை. இவை சமத்துவத்தை வளர்ப்பதில்லை. பதிலாக இன்னொரு ஒடுக்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் வகையில் பகிடிவத்தையில் ஆழமாக பதிந்த ஒடுக்குமுறை மற்றும் வன்முறையால் எதிர்கொள்ளப்படும் படிநிலை அதிகார நிலைகளை கொண்ட ஒரு கடடமைப்பை மீள் வலியுறுத்துகிறது. இந்த படிநிலை அதிகார நிலைகள் வர்க்க, பால்நிலை மற்றும் பிரதேச விடயங்களில் வேரரூன்றியவையாக இருக்கும்.

விமர்சன சிந்தையற்ற மாணவர்கள்

இலங்கையிலும் சரி இந்த பிராந்தியத்தின் வேற நாடுகளிலும் சரி விரிவுரையாளர்களை “சேர்” அல்லது “மேடம்” என அழைப்பது வழக்கம். இது வெறுமனே பணிவை காட்டும் விடயமல்ல. நிலமானிய மற்றும் காலனித்துவ காலங்களை சேர்ந்த சமூக நியமங்கள் ஆழமாக  பதிந்திருப்பதன் ஒரு பிரதிபலிப்பாகும்.  அதிகாரம் சவாலுக்கு உட்படுத்தப்படாத, மாணவர்கள் ஆசிரியர்களுக்கு  கௌரவமளிக்க எதிர்பார்க்கப்படும் கல்வி முறைமையிலுள்ள படிநிலைகளை இவ்வாறான பெயர்களால் அழைப்பது மீள் வலியுறுத்துகிறது.

          வரலாற்று ரீதியாக பார்க்கும்போது காலனித்துவ காலத்திலேயே ஐரோப்பிய மாதிரிகளை அடிப்படையாக வைத்தே கல்வி முறைமை வடிவமைக்கப்பட்ட்து. இந்த ஐரோப்பிய மாதிரிகள் கடுமையான சமூக வேறுபாடுகளையும் தலைமையிலுள்ளோரின் அதிகாரத்தையும் முக்கியத்துவப்படுத்துபவையாக இருந்தன. மதிக்கப்படவேண்டிய மற்றும் அரிதாகவே சாவால்ப்படுத்தப்படக்கூடிய அதிகாரமுள்ளவர்களாக விரிவுரையாளர்களை நிறுத்தி இவ்வாறான கட்டமைப்பை தூக்கிநிறுத்த “சேர்” “மேடம்” போன்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. காலனித்துவ காலத்தின் பின்னரும் கலாச்சாரத்தின் ஒரு அம்சமாக வருமளவில் சாதாரணமாக்கப்படும்வகையில் இவ்வகையான முறைகள் கல்வி முறையில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகின்றன.

          இவ்வகையான வழக்கம் விமர்சன சிந்தையை, கேள்வி எழுப்புதலை விரும்பாத கலாச்சாரத்தையும் அதிகாரத்துக்கான மதிப்பையும் நிலைநிறுத்துகிறது. இச்சூழலில் தமது விரிவுரையாளர்களை கேள்வி கேட்கமுடியாத அதிகாரிகளாக பார்ப்பதற்கு பார்க்கவைப்பதோடு உரையாடல், மாற்றுக்கருத்து, நடப்புநிலையை சாவலுக்குட்படுத்தல் என்பன ஊக்கக்கேடு செய்யப்படுகின்றன. இவ் படிமுறை நிலைகள் அறிவு வளர்ச்சியை மட்டுப்படுத்துவதோடு கல்வி மற்றும் பொதுவாக சமூகத்தில் முன்னேற்றகரமான மாற்றத்தை கொண்டுவரக்கூடிய திறந்த விமர்சன உரையாடல்களில் பங்கெடுப்பதை ஊக்கக்கேடு செய்கிறது.

மனங்களை விடுவித்தல்

கல்வியாளர்கள், மாணவர்கள், சமூகம், கொள்கை வகுப்பாளர்கள் உட்பட பல சாரரின் கைகளில் இவ் கடடமைப்புக்களின் உருமாற்றம் தங்கியுள்ளது. கொள்கை வகுப்போர் கல்வியை தனியார் மயமாக்கலை ஊக்கக்கேடுசெய்யும் கோள்கைகளை வகுத்து கட்டாயப்படுத்த வேண்டும். அத்தோடு வர்க்க, பால்நிலை ஏனைய வேறுபாடுகளின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமகாக கல்வி பொய்சேர்வதை உறுதி செய்ய வேண்டும். கல்வி அனைவரினுடைய அடிப்படை உரிமையாக பார்க்கப்படவேண்டும், ஒரு சிலரின் வசதியாக அல்ல. பெண்கள் LGBTQ+ நபர்கள் மற்றும் ஏனைய விளிம்புநிலைப்படுத்தப்பட்ட பால்நிலைகளை உடையோர் கல்வியை பெற்றுக்கொள்வதில், அதில் வெற்றி பெறுவதை தடுக்கும் சவால்கள் தீர்க்கப்படும் வகையில் பால்நிலை சமத்துவம் மற்றும் உட்சேர்ப்பு என்பவற்றை அவ் கொள்கைகள் ஊக்குவிக்க வேண்டும். பால்சார் அகங்காரம், பாகுபாடு மற்றும் பால்நிலை சார் வன்முறை போன்ற பால்நிலை அசமத்துவத்தை நிலைநிறுத்தும் செயற்பாடுகள் நேரடியாக தீர்க்கப்பட வேண்டும். பால்நிலை வேறுபாடின்றி அனைவரும் பாதுகாப்பாகவும் பெறுமதியானவர்களாகவும் உணரக்கூடிய ஒரு மதிப்பும் புரிந்துக்கொள்ளலும் சேர்ந்த ஒரு சூழலை உருவாக்கும் நோக்கில் பால்நிலை கற்கைகள் மற்றும் நுண்ணறிவு பயிற்சி போன்றவற்றை கல்வி நிறுவனங்கள் முதன்மைப்படுத்த வேண்டும்.

          காலஞ்சென்ற அதிகார கட்டமைப்புக்கள் மற்றும் சமூக பிரிவினைகளை பேணி பாதுகாத்தல் போன்ற கல்வி நிறுவனங்களுக்குள்ளே காணப்படும் படிநிலை நுண் சூழல் அமைப்பு முழுமையாக பரிசீலிக்கப்பட்டு சவாலுக்குட்படுத்த படவேண்டும். வர்க்கங்கள் பால்நிலைகள் போன்ற விடயங்களில் விமர்சன சிந்தனை சமரச மரியாதை மற்றும் உட்சேர்ப்பு முக்கியம்பெறும் சூழல்களை பல்கலைக்கழகங்கள் வளர்க்க வேண்டும். ஆழமாக வேர்விட்டுள்ள படிநிலைகளில் தடங்கல்களிருந்து விடுபடக்கூடிய வகையில் எல்லோரின் மனங்களும் செழிப்படையக்கூடிய வெளிகளை உருவாக்குவதன் மூலம் சமூக பின்னணி வேறுபாடுகளின்றி அனைத்து மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரக்கூடிய அதிக நியாயமான மற்றும் அறிவார்ந்த ரீதியில் துடிப்பான கல்விமுறையை நாம் கட்டமைக்கலாம்.