இலங்கையில் கலைப்பிரிவுக் கல்வி
ஃபர்ஸானா ஹனிஃபா Image: கொழும்பில் வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் அண்மையில் தேசிய தணிக்கைக் காரியாலயத்தினால் உயர் கல்வி தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையொன்று கலைப்பிரிவுக் கல்வியையும் பட்டதாரிகளின் வேலையின்மையையும் தொடுக்க முற்பட்டது. எமது இன்றைய பகுதி இவ்வறிக்கை தொடர்பாக பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் சிலர் முன்வைத்த மறுமொழியினை அடிப்படையாகக் கொண்டதாகும். கல்வி ரீதியான கொள்கைகள் பெரும்பாலும் பற்றாக்குறையான ஆய்வுகள், தவறான முன்னுரிமைகள், குறைபாடுள்ள பகுப்பாய்வுகளால் உந்தப்படுவதால் இவ்வறிக்கையின் சில கருத்துக்களை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. இலங்கையின் கலைப்பிரிவுக் கல்வியைப் பொறுத்தவரையில் …