அகிலன் கதிர்காமர்
இலங்கையில் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கு சமமாகவுள்ளது என்பது மலையகத்துக்கு பொருந்தாது. ஏனெனில் சுதந்திரத்திற்கு பின்னர் மூன்று தசாப்தங்களாக அவர்களுக்கு ஒரு சமூகமாகவே இலவசக்கல்வி மறுக்கப்பட்டது என ஒரு தொழில்ச் சங்கவாதி அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற மலையக தமிழ் ஆசிரியர்களுடலான கலந்துரையாடலில் கூறினார். கன்னங்கராவின் 1944 ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள் தொடங்கி இலவசக்கல்வியின் எட்டு தசாப்த மரபுப் புகழை பற்றி நாம் பெருமை கொண்டாலும்கூட, 1980 கள் வரை அரச பாடசாலைகளற்று காணப்பட்ட தப்பிக்கமுடியாத கருங்குழிகளாகவிருந்த பெருந்தோட்ட்ங்கள் எமது வரலாற்றின் இருண்ட இழையாக நிற்கிறது.
இளம் ஆய்வாளர் வலையமைப்பின் (Young ரெசீர்சேர்ஸ் Network) இளம் ஆய்வாளர்களாக தற்போதுவுள்ள ஹட்டனை சேர்ந்த எனது முன்னைய மாணவர்கள் சிலரின் சிந்தனைகளை பயன்படுத்தி இந்த கட்டுரையில் மலையகத்தில் கல்வியின் இக்கட்டான நிலை பற்றி பேசுகிறேன். அவர்கள் மூலமாக பாடசாலைகளில் காணப்படும் கல்விப்பிரச்சனைகள் பற்றி விளக்கிய ஒரு இளம் தலைமுறையை சேர்ந்த மலையக ஆசிரியர்களோடு தொடர்புகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களுடைய மன்றங்களிலும் செமினார்களிலும் சுதந்திரத்தின் பின்னர் மலையகத்தில் கல்வியின் தன்மையை மாற்றுவதற்கான போராட்டங்கள் பற்றி எமக்கு கற்பித்த அந்த சமூகத்தை சேர்ந்த முன்னோடி கல்வியாளர்களை நாம் சந்தித்தோம். கடந்த ஒரு வருடமாக தென் மாகாணத்திலுள்ள தனிமைப்படுத்தப்படட மலையக தமிழ் சமூகங்கள் மத்தியில் YRN ஆய்வுகளை செய்துள்ளது. நான் இந்த கட்டுரையில் கூறுவதைப்போல மலையக சமூகத்தை விலக்கிவைத்த வாக்குரிமை பறிப்பு மற்றும் நிலஉரிமையின்மை என்பவற்றை கருத்தில் கொள்ளாமல் மலையகத்தில் கல்வி பற்றி விளங்கிக்கொள்ள முடியாது.
குடியுரிமை, வேலைவாய்ப்பு, நிலம்
மலையக தமிழரின் குடியுரிமை பறிப்பு எமது நாட்டின் சென்ம பாவம். அவர்களில் பலர் இங்கே தலைமுறைகளாக வாழ்ந்திருந்தபோதிலும் கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது அவர்கள் சமூகத்தினை மேலும் சூறையாடியது. குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. வலுக்கடடாயமாக இந்தியாவுக்கு இடம்பெயர செய்யப்படல், பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அடிக்கடி இடம்பெறும் படுகொலைகள், பெருந்தோட்ட துறையில் வேலையின்மையோடு கூடிய பஞ்சம் போன்ற காரணங்களால் பல மலையக தமிழ் சமூகத்தினர் நாட்டின் வேறு பாகங்களில் தஞ்சம் தேடினர். ஆனால் நாட்டுப்புற குடியிருப்புகளிலேயும் கடன் அடிமைத்தன நிலையிலே அவர்கள் வாழ்க்கை முடிந்தது. இந்த வேதனைக்குரிய வரலாறானது மொத்த மலையக தமிழ் சமூகத்தையும் தமக்கு குடியுரிமை வழங்குமாறு கோரிக்கை எழுப்ப ஒன்று சேர்த்தது. இதில் சமூகத்தின் போராட்டங்கள் பற்றி வேறுபட்ட அரசியல் நிலைகளையும் அர்ப்பணிப்பையும் கொண்ட அவர்களின் அரசியல் தலைமைகளும் உள்ளடங்குவர். அந்த நீண்ட போராடடம் 2000 ஆம் ஆண்டு இலங்கை வாழ் மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்கியத்தோடு முடிவுக்கு வந்தது.
ஆனால் இரண்டு நூற்றாண்டுகளாக பொருளாதார சமூக அப்புறப்படுத்தலை சகித்த இந்த சமூகத்திற்கான மேம்பாட்டை எதிர்காலம் வெருமனாக வழங்கப்பட்ட குடியுரிமை உறுதிசெய்யவில்லை. கவலைக்குரியவகையில் பெருந்தோட்டங்களில் கடினமாக உழைத்த மலையக தமிழ் சமூகத்தினர் இந்த நாட்டின் செல்வ உருவாக்கத்தில் முதன்மையான பங்காற்றினாலும் பொருளாதார வளர்ச்சியினதும் இலங்கையில் குவிக்கப்பட்ட சொத்தினதும் நன்மைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்ட்து. அவர்களுக்கு ஏற்புடைய வேலைகளும் பணிகளும் இல்லை. அவர்களுக்கென்று நிலமுமில்லை. ஒரு சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்கள்தொகைமீது முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டவையாக பெருந்தொட்ட கம்பெனிகளை சில புலமையாளர்கள் சித்தரித்துள்ளனர். இந்த பெருந்தோட்டங்களின் “மொத்த தொகுதியானது” சுரண்டும் கீழ்மட்ட ஊதியங்களுடனும் வேறு வேலைவாய்ப்புக்களுக்கான சாத்தியங்கள் இல்லாமலும் இந்த உழைக்கும் மக்களை வெறுக்கத்தக்க லைன் வீடுகளில் சிக்கவைத்துள்ளது. குறிப்பாக தொண்ணுறுகளில் பெருந்தொட்ட வேலைவாய்ப்பு குறைவடைய தொடங்கியமை தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இன்னொரு பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால் கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களில் முறைசாரா மற்றும் சேவை துறை வேலைகளை தேடவும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வேலைசெய்யவும் நேரிட்டது.
இந்த பொருளாதார ரீதியான இக்கட்டானநிலைக்கு அடிப்படையுமான காரணம் இந்த சமூகத்தின் பெரும்பாலானோருக்கு நில உரிமை இல்லாமையாகும். தோட்டப்புறங்களில் அதிகளவான தரிசு நிலம் இருந்தாலும் அதனை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு அமைப்புரீதியிலே மறுக்கப்பட்டுள்ளது. ஏனைய விளிம்புநிலை சமூகங்களுக்கு நாட்டுப்புறத்தில் அரசினால் வழங்கப்படும் நில மானியங்கள்கூட மலையக தமிழர்களை சென்றடையவில்லை. இந்த மறுப்பானது அடுத்தடுத்து வந்த அரசுகளால் தெரிந்தே மேற்கொள்ளப்படட தீர்மானமாகும். ஏனெனில் பெருந்தொட்ட முறையை பேணுவதற்கு கடடாயமானதாக காணப்படும் இவர்களின் அடிமைத்தனத்துக்குரிய சமூக பொருளாதார வாழ்க்கையை நிலஉரிமையானது உடைத்தெறிந்திவிடும்.
தசாப்தங்களாக பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்கள் மரக்கறி பயிரிடலை மேற்கொண்டு வருகின்றபோதிலும் உத்தியோகபூர்வமான நில உரிமை இல்லாமலிருப்பதால் அவர்களால் விவசாயத்திணைக்களத்திடமிருந்து எந்தவொரு உதவியையும் பெறவோ சலுகைக் கடன்களை அரசிடமிருந்து பெறுவதற்கான தகுதிபெறவோ, வங்கிகளிடமிருந்து கடன்களை பெறவோ முடியாதுள்ளது. அவர்கள் குடியுரிமை பற்றிய தீர்மானம் மற்றும் கீழே விபரிக்கப்பட்டுள்ள கல்வித்துறை மேம்படுத்தல்களுக்கு அடுத்து, நில உரிமையே அவர்களின் முக்கிய கோரிக்கையாக வந்துள்ளது. அரசியல் விருப்பம் இருந்தால் மலையக தமிழ் மக்களுக்கான நிலத்தை வழங்குவது NPP அரசாங்கம் செய்யக்கூடிய அதி ஆழமான சமூக பொருளாதார மாற்றமாகும்.
கல்வியும் தற்ப்போதையை பிரச்சனையும்
விலக்கல் மற்றும் சுரண்டலான வேதனைக்குரிய வரலாற்றின் மத்தியில் அதன் கல்வி கற்ற புதிய தலைமுறையினர் ஒரு சிறு நம்பிக்கையாகவுள்ளனர். சில தலைமுறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் உருவாகியுள்ளதோடு அவர்கள் மலையக சிறுவர்களின் கல்வி எய்தல்களை முன்னெடுத்துச்செய்துவருகின்றனர். உண்மையாகவே, உள்ளூர் ஆசிரயர்களாலேயே மாணவர்களுடன் அவர்களின் வாழ்க்கைச் சூழலில் முழுமையாக ஈடுபட முடியும். பெருந்தொடடத்தில் வசிக்கும் ஒரு ஆசிரியரை அணுகுவது இலகுவாக உள்ளதோடு அவர் உயர்தர பாடங்களை தெரிவுசெய்வதிலும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதிலும் வழிகாட்டுவதோடு ஆதரவும் வழங்க முடியும். இருப்பினும் பாடசாலை கட்டடங்கள், மலசல கூடங்கள், ஆசிரியர் தங்குமிடங்கள் போன்ற வசதிகள் காணப்படாததோடு பல தொலைவிலுள்ள பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதியின்மை போன்றன உட்கட்டமைப்பு குறைபாடுகளாகவுள்ளன. மேலும் விஞ்ஞான பாட ஆசிரியர்களின்மை மற்றும் ஆசிரியர்கள் தொலைவான இடங்களுக்கு கற்பிக்க செல்ல விரும்பாமையால் சிறுவர்களின் அர்த்தமுள்ள கல்வி கீழறுக்கப்படுகிறது. மதிய நேர உணவு திட்டத்தையும் இரண்டாம் நிலையில் கற்கும் மாணவர்களுக்கான (உதாரணமாக விஞ்ஞான துறை மாணவற்களுக்கான) விடுதி வசதிகள் ஏற்படுத்தல் போன்ற ஏனைய ஆதரவையும் விஸ்தரிக்கவேண்டிய தேவையுள்ளது.
இந்த சூழலில் அண்மைக்கால பொருளாதார பிரச்சனையும் அதிகரிக்கும் வறுமையும் முன்னெப்போதுமில்லாத அளவில் பாடசாலை இடைவிலக்கல்களையும் ஒழுங்கான வரவின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. தென் மாகாணத்தில் குறைந்த எண்ணிக்கையிலும் தூரத்தூரமாகவுமே தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் காணப்படுவதால் அதிக தூரம் பயணிக்க வேண்டிய தென் மாகாணத்தில் வசிக்கும் மலையக மாணவர்களின் நிலையும் அவ்வாறே காணப்படுகிறது. தென் மாகாண சமூக பொருளாதார நிலையை பார்ப்போமானால் அங்கெ முறைசார் தொட்டத்தொழில் இன்னும் குறைவாக காணப்படுவதோடு பெரிய கம்பெனிகளுக்காக பயிர்செய்து கொடுத்தல் (out-grower cultivation ) உள்ளடங்கலான துறைகளில் தொடர்ச்சியற்ற ஒப்பந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு இந்த சிதறிப்போன சமூகங்களின் பொருளாதார சமூக சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்பட்டு சிறுவர்களின் கல்வி சீர்கெடுகின்றது.
மலையக சமூகத்தினர் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை பார்க்கும்போது நில உரிமைக்காகவும் நிலைபேறான வாழ்வாதாரத்துக்குமான போராட்டம் கல்வி முன்னேற்றத்தொடு தொடர்புபடுத்தபட வேண்டும். சொந்த நிலம் வைத்திருப்பதே உணவுப்பாதுகாப்பையும் வருமானத்துக்காக மாற்று வழிகளையும் சிறுவர்கள் கற்பத்ற்கு உகந்த முறையான அகச்சூழலையும் வலுப்படுத்தும். இது உலகம் முழுவதிலும் விளிம்புநிலைப்படுத்தப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவாலாகும். உண்மையில் MST எனப்படும் பிரேசிலிலுள்ள காணியற்ற உழைப்பாளர்கள் இயக்கமானது ஒரு விரிவான கல்வி திட்டத்தை கொண்டுள்ளது. அந்தக்கல்வி முறையானது நில உரிமை போராட்டத்தை வலுப்படுத்தவும் ஆதரவளிக்கவும் முனைகிறது. அவ்வாறான பல நாடுகளில் நில உரிமை போராட்டங்களின் வெற்றிக்கு காரணம் பயன்படுத்தா நிலங்களை ஆக்கிரமித்தல் மற்றும் நிலங்களை தொடர்ந்து பிடித்து இருத்தல் போன்ற வழிகளில் மக்கள் முன்னெடுத்தமயே, அரசிடமிருந்து மேலிருந்து கீழ் வந்த சீர்திருத்தங்களல்ல. MST யின் பலம் என்னவென்றால், அக்குடியிருப்புக்களில் பாடசாலைகளை உருவாக்கியதோடு அங்கெ குடும்பங்களை கல்வி நடவடிக்கைகளிலும் வாழ்வாதாரத்திலும் ஈடுபட வைத்தமையாகும். மலையகத்தில் தற்போதைய சவால் என்னவெனில் இலவசக் கல்வியை நில உரிமை போராட்டத்தோடு இணைப்பதாகும்.
அதிக எண்ணிக்கையில் காணப்படும் மலையக தமிழ் ஆசிரியர்களிடம் சமூகங்களை நிலை மாற்றும் சக்தி உள்ளபோதிலும் அரச கல்விமுறையினூடாக ஆட்சி அதிகாரநிலைக்குட்படக்கூடிய வாய்ப்புமுள்ளது. ஆசியர்களின் சமூக பொருளாதார நிலையை பார்க்கும்போது, நகரங்களில் குடியேறுவதோடு தமது சமூகத்தை சார்ந்த உழைக்கும் மக்களிடமிருந்து விலகிச்சென்று தமக்கே மட்டுப்படுத்தப்படட ஒரு வகுப்பினராக உருவாக வாய்ப்புக்களுள்ளது. இங்கேதான் நிலம் மற்றும் வீடு கோரிய போராட்டத்திலும் சமூகத்தின் ஏனைய அரசியல் பாகங்களிலும் ஆசிரியர்களின் வகிபாகம் முக்கியமாகிறது. நிலம், வீடு, வாழ்வாதாரம் பற்றிய போராட்ட்ங்களுக்காக முறைசார் கல்வியின் தடைகளையும் பாடசாலை சுவர்களையும் தகர்ப்பது மலையகத்திலுள்ள இளந்தலைமுறையை சார்ந்த ஆசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்குமான சவாலாகும். கல்வியில் செயற்பாடும் முன்னோக்கிய மாற்றங்களின் அறிகுறிகளும் மலையகத்தை மாற்றுவது மொத்த நாட்டிலுள்ளவர்களுக்குமே நாட்டின் இலவசக்கல்வியை மீள் வடிவமைக்க உத்வேகமாகலாம்.



