சிறப்புப் பகுதி

“தனியார் பல்கலைக்கழகங்களென இலைங்கையில் ஒன்றுமில்லை” – உயர் கல்வி சீர்திருத்தம் தொடர்பாக கருத வேண்டிய சில விடயங்கள்

கௌசல்யா பெரேரா இலங்கையில் தனியார் பல்கலைக்கழகம் என்று ஒன்றுமில்லை என கல்விக் கொள்கை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள கல்வியலாளர்கள் கூற விரும்புவார்கள். நாட்டிலுள்ள “பல்கலைக்கழகங்கள்” அனைத்துமே அரச பல்கலைக்கழகங்கள்; பட்டங்களை வழங்கும் ஏனையவை அனைத்துமே தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் (Higher Education Institutions – HEI க்கள்). சட்ட வரைவிலக்கணங்களின்படி இந்த கருத்து துல்லியமானது. இருப்பினும் மக்களின் சொல்லாடலிலும் மன விம்பத்திலும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒரு வலுவான யதார்த்தம் — மக்கள் அவற்றில் கற்பிக்கிறார்கள்; மாணவர்கள் அதில் […]

“தனியார் பல்கலைக்கழகங்களென இலைங்கையில் ஒன்றுமில்லை” – உயர் கல்வி சீர்திருத்தம் தொடர்பாக கருத வேண்டிய சில விடயங்கள் Read More »

விமர்சன நோக்குடைய‌ மானுடவியல் அறிஞரின்சுமையும் வலிமையும்

நந்தக மதுரங்க கலுகம்பிட்டிய ஒரு விமர்சன நோக்குடைய‌ மானுடவியல் அறிஞர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்னவெனில், தன்னை ஒரு சமூக உயிரியாக வரையறுக்கும் அதே யதார்த்தங்களையே விமர்சன ரீதியாக அணுக வேண்டிய கட்டாயமாகும். தாம் ஆய்வு செய்யும் பொருளைப் பற்றிக் கருத்துரைக்கத் தொடங்கும் அந்தக் கணமே, அதன் அதிர்வலைகள் ஏதோ ஒரு வடிவில் அவருடைய சொந்த இருப்பையும் தாக்காமல் இருக்காது. மானுடவியல் துறைகளில் இயங்கும் அறிஞர்கள், அவர்கள் ஆய்வு செய்கின்ற உலகின் ஓர் அங்கமாகவே பல

விமர்சன நோக்குடைய‌ மானுடவியல் அறிஞரின்சுமையும் வலிமையும் Read More »

கல்விசார் ஆட்சேர்ப்பிலுள்ள குறைபாடுகளும் விலக்கல்களும்

மகேந்திரன் திருவரங்கன் ஒரு அரசுப் பல்கலைக்கழகம், சமூகத்திற்கான தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதன் கல்வியாளர்களையே பெரிதும் சார்ந்துள்ளது. கற்பித்தல், கல்விசார் பணியாளர்களின் முதன்மைப் பொறுப்பாக இருந்தாலும், அவர்கள் ஆய்வுப்பணிகளையும் முன்னெடுப்பதோடு, வகுப்பறைக் கற்றலைத் தாண்டி சமூகத்தின் பரந்த பிரச்சினைகள் குறித்த உரையாடல்களில் தாமும் மாணவர்களும் சுதந்திரமாகப் பங்கேற்கக்கூடிய உயிரோட்டமிக்க அறிவியல் வெளியாக பல்கலைக்கழகத்தை நிலைநிறுத்துவதிலும் மையப்பங்கு வகிக்கின்றனர். எனவே, ஒரு பல்கலைக்கழகத்தின் அறிவுசார் பண்பாடும் கல்விசார் நேர்மையும் அதன் கல்வியாளர்கள் தங்கள் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுகின்றனர் என்பதிலேயே

கல்விசார் ஆட்சேர்ப்பிலுள்ள குறைபாடுகளும் விலக்கல்களும் Read More »

ஆழ்ந்த தேடல் முக்கியத்துவம் பெறும் தருணம்: கல்வியும் அதன் பிளவுகளும்

சிவமோகன் சுமதி இலவசக் கல்வி எமது சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்து எண்பது ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அது இலங்கையின் அரசியல் சுதந்திரத்திற்கும் முந்தைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மிகத் தெளிவான நோக்கங்களில் ஒன்று, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு சமமான கல்வி வாய்ப்பை வழங்குவதாகும். இன்று எமது பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியான நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் ஏற்றுமதிப் பயிர்களைச் சார்ந்திருந்த பொருளாதாரம், தற்போது நிலையற்ற உற்பத்தித் துறையையும் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் ஏற்றுமதியையும் பெரிதும் சார்ந்திருக்கிறது.

ஆழ்ந்த தேடல் முக்கியத்துவம் பெறும் தருணம்: கல்வியும் அதன் பிளவுகளும் Read More »

பல்கலைக்கழகக் கட்டமைப்புகள் தோல்வியடையும் போது: பாலியல் தொந்தரவு வழக்கொன்றில் உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலையீடு

ரம்யா குமார் தனது ஆய்வு மேற்பார்வையாளருக்கு எதிராக பாலியல் தொந்தரவு தொடர்பான ஆரம்ப முறைப்பாட்டை முன்வைத்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தின் பின்னர், அன்றைய தற்காலிக விரிவுரையாளரும் இன்றைய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி உதாரி அபேசிங்க அவர்களுக்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது. 2026 மே 8 ஆம் திகதி, உதாரியின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. “1) முதலாவது, பிரதிவாதி [அவரது ஆய்வு மேற்பார்வையாளர்], ஊதியத்துடனோ அல்லது

பல்கலைக்கழகக் கட்டமைப்புகள் தோல்வியடையும் போது: பாலியல் தொந்தரவு வழக்கொன்றில் உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலையீடு Read More »

பிராந்தியப் பல்கலைக்கழகங்கள்

அகிலன் கதிர்காமர் தேசியக் கற்பனையாக்கத்தில் கிராமப்புறங்களும் நாட்டின் விளிம்புநிலைப் பிராந்தியங்களும் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை பிராந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்துகின்றது. அவை உயர்கல்வி அமைப்பின் ஒரு ஓரங்கமாக மட்டுமே கருதப்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் பிராந்திய அரசியல் தேவைகளை சமாளிப்பதற்கான நிறுவனங்களாகவே உருவாக்கப்பட்டன. கிராமப்புற உலகமும் அந்தப் பிராந்தியங்களில் இயங்கும் நிறுவனங்களும் தேசிய அபிவிருத்தி நோக்கிலிருந்து விலக்கப்பட்டமை தற்செயலானதோ தவிர்க்க முடியாததோ அல்ல. மாறாக, வளங்களை உறிஞ்சிக்கொள்ளும் மற்றும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ஒழுங்கின்

பிராந்தியப் பல்கலைக்கழகங்கள் Read More »

எதிர்காலம் பெண்பாலுக்குரியது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், “எதிர்காலம் பெண் பாலுக்குரியதா?” எனும் தலைப்பில்
ஒரு கட்டுரையை குப்பி தளத்தில் வெளியிடுவதற்காக எழுதினேன். எமது இளநிலை
மாணவர்களில் அநேகமானோர் பெண் பாலினத்தவராக இருந்தாலும், சமூகத்தில் உள்ள
வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கு பல்கலைக்கழக முறைமை அவர்களை
போதுமான அளவு தயார்படுத்துவதற்கு எவ்வாறு தவறுகிறது என்பதை அதில் கதைத்தேன்.

எதிர்காலம் பெண்பாலுக்குரியது Read More »

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள் Read More »

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல்

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல் Read More »

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை
பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கை
வெளிப்படுகின்றது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கும்
போது, நான் நாள்தோரும் சிந்தனை வயப்படும் பல அன்றாட சமூக
சிக்கல்களை அவை பிரதிபலிக்காமை வெளிப்படும், உதாரணமாக,
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின்
அன்றாட சவால்களை இவ்விஞ்ஞாபனங்கள் பிரதிபலிப்பதாயில்லை.

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல் Read More »