பொதுக் கல்வி சீர்திருத்தங்கள்: மொழி மற்றும் இனம் பற்றி ஒன்றுமில்லையா?

ரம்யா குமார்

இன்னொரு புதிய அணி மாணவர்கள் எமது பீடத்துக்கு வந்துள்ளனர். கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிருந்தும் வந்துள்ள இம் மாணவர்கள் எம் பல்கலைக்கழகங்களிலே சமூக மற்றும் இன ஒருங்கியைதலை முன்னேற்ற எமக்குள்ள மகத்தான வாய்ப்பை பற்றி எனக்கு இன்னொருமுறை ஞாபகப்படுத்துகின்றனர். இருப்பினும் கவலைக்கிடமாக, முதல் சில அரையாண்டுகளில் பல மாணவர்கள் ஏனையோரோடு தொடர்புபட்டு செயற்படுவதில்லை. இதன் காரணம் ஒருவர் இன்னொருவர் மொழியை பேசாமலிருப்பது மட்டுமில்லை. எமது சமுதாயத்தின் சமூகங்களிடேயே இன்னமும் தொடரும் ஒருவரை ஒருவர் பற்றியதான பயமும் நம்பிக்கை இல்லாத்தன்மையும் இதற்கு காரணமாகின்றன.

சமூக மற்றும் இன ஒருங்கியைதலை முன்னேற்றுவதற்கான வழிகளை ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பை பொது கல்வி சீர்திருத்தம் வழங்குகிறது. ஒரு பாடசாலை பாடத்திட்டத்தால் சமூக கற்கைகள் மற்றும் குடியுரிமை கல்வி என்பவற்றினூடாக பொதுவான விழுமியங்கள், மற்றார் உளமறிதல், விமர்சன சிந்தனை என்பவற்றை வளர்க்கவும், உள்வாங்கும் மொழிக் கொள்கைகளை அமுல்படுத்தவும், எமது கூட்டு வரலாறுகளை பற்றி விமர்சன விழிப்புணர்வை கொண்டுவரவும் முடியும். இருப்பினும் அரசாங்கத்தின் புதிய கொள்கை ஆவணமான இலங்கையின் பொத்துக்கல்வியை நிலைமாற்றம்  (Transforming General Education in Sri Lanka – 2026) இவ்வகையில் நாம் எதனையும் எதிர்பார்ப்பதை சாத்தியமில்லாமலாக்குகிறது.

பின்வருவன உள்ளடங்கலாக அதனுள் காணப்படும் பல “முக்கிய” அம்சங்களை கொள்கை ஆவணம் குறிப்பிடுகிறது. 1) கற்றலை எண்ணளவிடும் ஒரு பாடசாலை கிரெடிட் முறைமை 2) தவணை இறுதி பரீடசைகளுக்கு பதிலாக பாடத் தொகுதி அடிப்படையிலான அமைப்பு (formative) மற்றும் கூட்டு (summative) கணிப்பீடுகள்; 3) 9 ஆம் தரத்தில் ஒரு “எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பரீட்சை” மற்றும் ஒரு “தொழில் ஆர்வத் தேர்வு” என்பவற்றை கொண்ட ஒரு திறன் மதிப்பாய்வு; 4) கல்வியின் பல்வேறு கட்டங்களை உள்ளடக்கும் ஒரு சராசரி புள்ளி (GPA) அடிப்படையிலான மொத்த அறிக்கை முறைமை; 5) மாணவர்கள் விரும்பும் தொழில்ப் பாதைகளை அவர்கள் தெரிவு செய்ய வழிகாட்டும் கற்றல் அலகுகள்; 6) தொழில்நுட்ப பாடத் தொகுதிகள்; 7) புத்தாக்க பரிசோதனைக்கூடங்கள்; மற்றும் 8) ஆரம்ப சிறுவர் கல்வி (Early Childhood Education – ECE). கவனிக்கத்தக்க வகையில் சமூக மற்றும் இன ஒருங்கியைதல் இந்த பட்டியலில் இல்லை. NPP இன் 2024 ஆம் ஆண்டு தேர்தல் கட்சி அறிக்கையிலே அவர்கள் “அனைத்து இன மதக்குழுக்களின் பாதுகாப்பு, பரஸ்பர புரிதல், நம்பிக்கை மற்றும் உரிமைகள்” என்பவற்றை கொண்டுவர அவர்கள் எடுத்த உறுதிமொழியோடு எவ்வாறு முன்மொழியப்பட்ட பாடத்திட்ட சீர்திருத்தங்கள் ஒத்துபோகின்ற (ஒத்துப்போகவில்லை) என்பதை இக்கட்டுரையில் ஆராய்கின்றேன்.

தற்போது நடைமுறையுள்ள பாடத்திட்டத்தில் மொழி/ இனம்

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடமானாலும் இனக் குழுமங்களை ஒன்று சேர்க்க பொதுக்கல்வி முறை கிட்டத்தட்ட ஒன்றுமே செய்யவில்லை. உண்மையை சொல்லப்போனால், கூடுதலான மாணவர்கள் இன்னமும் “இரண்டாவது தேசிய மொழியை” (Second National Language) பேச முடியாதவர்களாக உள்ளனர். பாடப் புத்தங்கங்கள் சிறுபான்மை இனத்தவர்களை பற்றிய எதிர்மறை படிவார்ப்புக்களை மீள் வலுப்படுத்தவாத உள்ளதோடு எமது சுதந்திரத்துக்கு பின்னரான வரலாற்றின் முக்கிய அம்சங்களை பற்றி குறிப்பிடவும் தவறுகிறது.

1990 களில் இருந்தே இரண்டாம் தேசிய மொழி ஒரு கட்டாய பாடமாக இருந்துவந்துள்ளபோதும் இப் பாடத்துக்கு ஒதுக்கப்படும் மணித்தியாலங்கள் குறைவாக காணப்படுகிறது. இதன் பாடத்திட்டம் நன்றாக வடிவமைக்கப்படாமலுள்ளது. இதற்க்கென பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் சரியான குறைவாகவுள்ளனர் (Perera 2025). தாமே அறியாத பாரபட்சம் மற்றும் கருத்தியல் காரணங்களாலேயோ தெரியவில்லை, பெற்றோராலும் பொதுவாக பாடசாலை சமூகங்களாளிலேயும் இரண்டாம் தேசிய மொழி பெறுமதியானதாக பார்க்கப்படுவதில்லை. எமது பீடத்திற்கு வரும் மாணவர்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே கல்வி கற்ற முஸ்லிம் மற்றும் தமிழ் மாணவர்களை தவிர ஏனைய மாணவர்களில் பெரும்பாலானோருக்கு இரண்டாம் தேசிய மொழியிலே வெறும் அடிப்படை வாசித்தல்/ எழுதுதல் திறன்கள் மட்டுமே காணப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியிலே கற்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களும் இரண்டாம் தேசிய மொழியை தமது சூழலினூடாகவே கற்றுக்கொள்கிறார்கள்; பாடத்திட்டத்தினால் அல்ல.

இன ரீதியான பின்னணி வேறுபாடின்றி கூடுதலான இள நிலை மாணவர்கள் எமது நாட்டின் இன முரண்பாட்டின் வரலாற்றின் முக்கிய அம்சங்களை பற்றி அறியாதவர்களாகவே தென்படுகிறார்கள். சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதி பற்றி ஒரே அத்தியாயத்தை கொண்ட தரம் 11 வரலாற்று பாடப்புத்தகத்தில், உள்நாட்டு யுத்தத்தை பற்றியோ அல்லது அதற்க்கு இட்டுச் சென்ற நிகழ்வுகள் பற்றியோ ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. தனிச் சிங்களச் சட்டத்தை காலனித்துவத்திற்கு எதிரான ஒரு கொள்கையாக போற்றும் இப்புத்தகம் (11 ஆம் பக்கம்) அதற்க்கு பிற்பட்ட காலத்தை பற்றி பேசுகையில் தமிழருக்கெதிரான கலவரங்கள், ஆயுதக் குழுக்களின் எழுச்சி, உள்நாட்டு யுத்தம் தீவிரமடைதல், ஜே.வி.பி கிளர்ச்சிகள் போன்றவற்றை குறிப்பிடவில்லை. “தேசிய மறுமலர்ச்சி” எனும் அத்தியாயத்தில் “தமிழ்” மற்றும் “முஸ்லிம்” எனும் வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே அத்தியாயம் வியப்பூட்டும்வகையில் “சிங்கள – முஸ்லிம் கலவரங்களை” அதாவது மனநிலை இயக்கத்தை (Temperance Movement) குறிப்பிடுகிறது (57 ஆம் பக்கம்). மலையக தமிழரின் வாக்குரிமை பறிப்பு மற்றும் அவர்களின் வரலாறு முற்றுமுழுதாக புறந்தள்ளப்பட்டுள்ளன.

சுதந்திரத்திலிருந்து எமது மக்களில் பலர் போரினதும் புறந்தள்ளப்பப்படுவதினும் உக்கிர அனுபவங்களை கொண்டவர்களாக இருப்பதாலும் தமது இன ரீதியான “வேற்றாள்” (“Other”) இல்லாத தனி ஒரு இனத்தை சார்ந்தவர்களே கற்கும் பாடசாலைகளில் மாணவர்கள் பலர் கல்வி கற்பதாலும் எமது இள நிலை மாணவர்கள் ஏனைய மொழி பேசும் சமூகங்களோடோ அல்லது ஏனைய இனத்தவரோடோ கலந்து பழகுவதில் சிரமம் காண்பது வியப்பளிக்கும் விடயமில்லை. மாணவர்கள் பல்கலைக்கழத்தில் நுழைந்தவுடன் அவர்களை மேலும் பிரித்து ஒதுக்கிவைக்கும் துருவமுனைப்படுத்தும் சொல்லாடல்கள்களுக்கு ஏற்ற இடங்களை இச் சூழல் உருவாக்கவும் செய்கிறது.

மேலும் அதேதானா?

இலங்கையின் பொத்துக்கல்வியை நிலைமாற்றம் இப் பிரச்சினைகளை எவ்வாறு பார்க்கிறது? ஒரு நேர்மறையான குறிப்போடு அதன் அறிமுகம் ஆரம்பிக்கிறது: “முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புக்கள்  இனம், மதம், பால் நிலை, இயலாமை மற்றும் வேறுபாட்டின் பிற பகுதிகலின் அடிப்படையில், தங்களை சுற்றி காணும் பல்வகைமையை மதிக்கும் மற்றும் பாராட்டும் பகுத்தறிவு உணர்வு  கொண்ட பிரஜைகளை  உருவாக்கும்” (1 ஆம் பக்கம்). தேசிய கல்வி இலக்கு இலக்கம் 8 சற்றே பிரச்சினைக்குரிய வகையில் “கலாச்சார பல்வகைமையை மதிக்கும் அதேவேளையில், தேசிய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, மற்றும் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் தேச பக்தியுடன்கூடிய இலங்கைப் பிரஜையைகளை உருவாக்குதல்” நோக்கம் கொண்டதாக இருந்தாலும் (2 ஆம் பக்கம்) “சமத்துவம், உட்படுதல், சமூக நீதி” (12 ஆம் பக்கம்) போன்ற பண்புகளை கல்விக்கூடாக நாட்டுவதையே பாடத்திட்ட சீர்திருத்தங்கள் நோக்கமாக கொண்டுள்ளன. இவ்வாறான கனமான வார்த்தைகள் அறிமுகம் முழுவதுமாகவே காணப்படுகின்றன. ஆனால் சீர்திருத்தங்களில் அவை வெளிப்படுத்தப்படவில்லை.

இரண்டாம் தேசிய மொழியை கற்பது மொழி மற்றும் எழுத்தறிவு எனும் வகைக்குள் (கற்றல் துறை இலக்கம் 1) “சமரசம் மற்றும் சக வாழ்வுக்கான ஒரு முக்கிய வழிமுறை” என உள்ளடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது. உதாரணமாக ஆரம்பப் பாடசாலையில் (தரம் 1 தொடக்கம் 5 வரை) ஒரு வாரத்துக்கு வெறுமனே 0.3 தொடக்கம் 1 மணித்தியாலம் இரண்டாம் தேசிய மொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இளநிலை இரண்டாம் மட்டத்தில் (தரம் 6 தொடக்கம் 9 வரை) 35 கிரடிட்கள் மொத்தமாக உள்ளன. இதில் 30 கிரடிட்கள் இரண்டாம் தேசிய மொழி, வரலாறு, குடியுரிமை கற்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 15 கட்டாய பாடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதை விட 3 கிரடிட்கள் வேறு கற்றல் தொகுதிகளுகும் 2 கிரடிட்கள் பலதுறைகளில் பயன்படக்கூடிய திறன் பாடத் தொகுதிக்கும் வழங்கப்பட்டுள்ளன (17 -18, 24 ஆம் பக்கங்கள்). ஆனால் இரண்டாம் தேசிய மொழிக்கு ஒரு தவணைக்கு கிடைப்பது வெறுமனே 1 கிரெடிட், அதாவது 10 மணித்தியாலங்கள் ஆகும். ஏனைய கட்டாய பாடங்களை போன்றே இரண்டாம் தேசிய மொழியும் வடிவமைப்பு மற்றும் கூட்டு கணிப்பீடுகள் வழியாக பாடத்தொகுதிகளுள்ளே மதிப்பிடப்படும். தரம் 9 க்கான திறன் கணிப்பீடு பற்றிய விபரங்கள் அவ் ஆவணத்தில் குறிப்பிடப்படாததால் இரண்டாம் தேசிய மொழிக் கணிப்பீடுகள் “எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பரீட்சையில்” உள்ளடக்கப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை. உயர் இரண்டாம் கட்ட கல்வி மட்டத்தின் முதலாம் கட்டத்திலே (தரங்கள் 10-11 க்கு நிகரானவை) இரண்டாம் தேசிய மொழி ஒரு தொகுதிப் பாடமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

புத்துயிரூட்டும் வகையிலே மானிட மற்றும் சமூக விஞ்ஞான கற்கைகளுக்கு நிதி வளங்களை குறைப்பதன் தீய விளைவுகளையும் “சமூக- பொருளாதார பிளவுகள் மற்றும் எற்றத்தாழ்வுகளை ஒழிக்க” உதவக்கூடிய அறிவை உருவாக்குவதற்கு அவற்றின் முக்கியத்துவத்தையும் கொள்கைப்பத்திரம் ஏறுக்கொள்கிறது (8 ம் பக்கம்). தொடர்ந்து கற்றல் துறை இலக்கம் 6 இன் கீழ் (பக்கம் 16) மானிட மற்றும் சமூக விஞ்சான கற்கைகள் சிறப்பை குறிப்பிடுகிறது:

“மாணவர்கள் தங்கள் அண்மித்த சமூகங்கள் மற்றும் தேசத்தில் தங்கள் பங்கை பற்றிய விழிப்புணர்வை பெற, பல்வேறு வகையான வளர்த்துக்கொள்ளவும், அவற்றை விமர்சிக்கவும்  மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான கல்வி மிக முக்கியமானது. இத்தகைய விழிப்புணர்வு, அமைது மற்றும் நல்லிணக்கத்துக்குத் தேவையான ஜனநாயகம் மற்றும் சமுகங்களுக்கு இடையேயான உரையாடலை வலுப்படுத்த பங்களிக்க அவர்களை அனுமதிக்கும். மேலும் மானுடவியல் மற்றும் சமுக விஞ்ஞானத்தின் வலுவான அடித்தளம், சாதி, இயலாமை, பாலினம் மற்றும் சமுக அடுக்கின் பிற அம்சங்கள் தொடர்பான சமத்துவம் மற்றும் சமுக நீதிக்கு வழிவகுக்கும்.”

கவலைக்கிடமான வகையில், கொள்கைகளை வழிநடத்தும் முற்போக்கானதாக தென்படும் சித்தாந்தம் புது பாடத்திட்டத்தை வடிவமைக்கவில்லை. சமூக/ இன ஒருங்கியைதலை தீர்க்க வல்லமையுள்ள பாடங்களான சுற்றாடல் கற்கைகள், வரலாறு, குடியுரிமை கல்வி போன்றன ஆரம்பக் கல்வி மட்டத்தில் கற்க வேண்டிய பாடப்பரப்புக்களாக பட்டியலிடப்படவில்லை. இரண்டாம் கட்ட கல்வியின் இளம் பிரிவினரான தரம் 6 தொடக்கம் 9 வரையான நான்கு வகுப்புக்களை சேர்ந்தவர்களுக்கு வரலாற்று பாடத்துக்கு 20 மணித்தியாலங்கள் — 2 கிரடிட்கள்) ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் வெறுமனே 10 மணித்தியாலம் (1 கிரெடிட்) குடியுரிமைக் கல்விக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சாதாரண தர (O/L) மாணவர்கள் 5 கட்டாய பாடங்களையும் (தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், மற்றும் சமயமும் விழுமியக்கல்வியும்) 2 தெரிவுப் பாடங்களையும் கற்க வேண்டும். இரண்டாம் தேசிய மொழி, வரலாறு குடியுரிமைக் கல்வி என்பன தொழில்முனைவு போன்ற பாடங்களோடு தெரிவுப் பாடங்களுடன் விடப்பட்டுள்ளன. கட்டாய பாடங்களுக்கு இரண்டு வருடத்துக்கு மொத்தமாக 140 மணித்தியாலங்கள் அதாவது 14 கிரடிட்கள் (ஒரு வருடத்துக்கு 70 மணித்தியாலங்கள் — 7 கிரடிட்கள்) ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் வரலாற்றையோ அல்லது குடியுரிமைக் கல்வியையோ தெரிவு செய்யும் ஒரு மாணவர் அதனை வெறும் 20 மணித்தியாலங்கள் (2 கிரடிட்கள்) கற்கப்போகின்றார். உயர்தரம் அல்லது ஒரு தொழில்ப் பாதையை தெரிவு செய்வதற்கு முன்பதாக மாணவர்கள் தம் ஆர்வங்களை ஆராயும் வண்ணம் 14 கிரடிட்கள் கொண்ட மேலதிக கற்றல் தொகுதிகளும் உள்ளன.

பல பாடங்களுக்கு கிரடிட்களை பிரித்து வழங்குவதில் இரண்டாம் தேசிய மொழி, வரலாறு, குடியுரிமைக் கல்வி போன்றவற்றுக்கு ஒரு சில கிரடிட்களே வழங்கப்படுவதால் சமூக/ இன ஒருங்கியைதல் முக்கியமற்றத்தாகவே இருக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப கல்வியில் கண்டுகொள்ளப்படாமல், இள நிலை இரண்டாம் கல்வியிலே அரிதாகவே எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், மேற் தரங்களிலே தெரிவுப்பாடங்களாக்கவும்படுகின்றன. எம்மைப் போலவே இரண்டாம் மொழியிலே மிகவும் அடிப்படையான திறன்களுடனும் வரலாற்றை பற்றிய அறிவே கிட்டத்தட்ட இல்லாமலும் மாணவர்கள் தமது பாடசாலை காலத்தின் முழுப்பகுதியையும் முடிக்கும் நிலை உள்ளது.

முன்னோக்கி செல்லுதல்

இக் கொள்கையில் எதிர்நோக்குவதைப்போல இவ் பாடத்திட்டத்தில் கற்கப்போகும் மாணவர்களால் “சமூக நல்லிணக்கம் மற்றும் பல் கலாச்சார சகவாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மேலாதிக்க பிளவுபடுத்தும் சக்திகளை எதிர்த்துப் பதிலளிக்க” (13 ஆம் பக்கம்) முடியுமா என்பது கேள்விக்குரிய விடயம். சமூக மற்றும் இன ஒருங்கியைதலானது பாடத்திட்டத்தில் இருக்கவேண்டுமென கல்விக்கொள்கை வகுப்போரும் ஏனையோரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் அரசியலமைப்பு மாற்றம், பயங்கரவாத தடை சட்டம் (மற்றும் அதன் பதிலிகள்) போன்ற கொள்கைகளை ஒழித்தல், ஏனைய அரசியல் மாற்றங்கள் போன்றவற்றோடு சேர்ந்து பாடத்திட்ட மாற்றம் வந்தாலே அது அர்த்தமுள்ளதாகவிருக்கும். தற்போதைக்கு இனத்தாலும் மதத்தாலும் எமது பாடசாலை முறை பிரிந்த நிலையிலுள்ளது. தனி ஒரு இன மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் வெவ்வேறு கலாசாரங்கள் இடையிலான முகங்கொள்ளுதல் இல்லாத நிலைமையானது, அறியாமை, பாரபட்சம், அரசியல் மற்றும் தேசிய அடையாளத்தில் துருவப்படுத்தப்பட்ட நிலைகள் என்பவற்றுக்கு இட்டுச்செல்கிறது என மோதல்கள் நிறைந்த சமூகங்களில் செய்யப்பட்டன ஆய்வுகள் கூறுகின்றன. சிறுபான்மை அடையாளங்களை பாதுகாக்கவும் செய்யும் அகண்ட கல்வி சீர்திருத்தத்தில் அப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாகவுள்ள நிலையிலே இச் செய்நிரலை முன்னோக்கி கொண்டு செல்ல இந்த புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்கள் சரியான தருணத்தை தருகின்றது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன