ஐக்கிய மக்கள் சக்தியின் கீழான கல்விச் சீர்திருத்தங்கள்

மகேந்திரன் திருவரங்கன்

2026 ஆம் ஆண்டு தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி  (NPP) வெற்றியடைந்தபோது நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்தமுடியும் எனும் பெரும் நம்பிக்கை காணப்பட்டது. நல்லாட்சி மற்றும் முறைமை மாற்றம் பற்றிய வாக்குறுதிகளை NPP வழங்கியிருந்ததுடன், இலவச பொதுக்கல்வியை வலுப்படுத்த முன்னிலையில் நின்ற, மொத்த தேசிய உற்பத்தியின் 6% கல்விக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற முனைப்பியக்கத்தில் மும்முரமாக பங்குபற்றிய ஒரு கல்வியாளரை கல்வி அமைச்சராக நியமித்தமை இவ்நம்பிக்கை வலுப்பெற்றதுக்கு ஒரு காரணமாகும்.

கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் நடந்துகொண்டுள்ளது. இதில் உற்சாகப்படுத்தும் வகையில், பாடசாலை பாடத்திட்டத்தில் தொழில்சார் கல்வியை பிரதானப்படுத்தும் ஒரு நகர்வு முக்கியமானது. கல்விக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகளில் ஒரு குறைந்தளவான அதிகரிப்பு உள்ளது. சில பல்கலைக்கழகங்களில் புதிய உட்கட்டுமான வசதிகள் கொண்டுவரப்படவுள்ளன. ஆட்சேர்ப்பில் இருந்த முடக்கங்கள் மெதுவாக தளர்க்கப்படுகின்றது. இருப்பினும் இந்த அரசாங்கத்தின் இறுதி ஆண்டின் செயற்பாடுகள் போதாதவையாகவே உள்ளன. கல்வி மற்றும் ஆட்சி முறை சீர்திருத்தங்களுக்கான தற்போதைய அணுகுமுறையில் சட்டத்தின் படி ஆட்சி, வெளிப்படைத்தன்மை, மற்றும் கலந்தாய்வு போன்ற அடிப்படை விடயங்களுக்கே உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. கல்விக்கு அதிக நிதி வழங்கல், தனியார் மயப்படுத்தல் நோக்கிய நவதாராளவாத உந்துதலை எதிர்த்தல், அரச பல்கலைக்கழக முறைமைக்குள் காணப்படும் வள ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல் போன்ற அதிக தாக்கம் செலுத்தும் முறைமை ரீதியான மாற்றங்களை NPP அரசாங்கம் செய்யத் தவறுகிறது என்பது பற்றி சொல்லவே தேவையில்லை. இக் குப்பி கலந்துரையாடல் கட்டுரையானது பொதுக்கல்வி சீர்திருத்தத்தங்கள் மற்றும் அரச பல்கலைக்கழக முறைமையில் தேவையான நிறுவனம்சார் சீர்திருத்தங்கள் பற்றி பேசுகிறது.

பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள்

கல்வியில் என்றாலும் சரி வேறு துறை என்றாலும் சரி எந்தவொரு சீர்திருத்த முறைமையும் பொதுமக்களின் கருத்துக்களால் வடிவமைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். ஒரு நாட்டின் கல்வித் துறையானது தான் சீர்திருத்தங்களை வடிவமைக்கும்போது, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்விசார் நிர்வாகிகள், தொடர்புபட்ட ஒன்றியங்கள் மற்றும் பொது மக்களின் பார்வைகளை முக்கியமானதாக எடுத்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக அரகலய/ போராட்டம் இடம்பெற்றதன் பிறகு, நாடு ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தை சந்தித்தது. ஊழல், தமக்கு தெரிந்தோரின் நலனுக்காக செயற்படல், இனவாதம், தமக்கே நன்மை பயக்கும் செயல்நிரல் போன்றவற்றில் சிக்கியிருந்த பாரம்பரிய அரசியல் மேட்டுக்குடிகளை பற்றிய ஒரு புரிதல் விரக்தி NPP ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. அப்படியான ஒரு சூழலில் எந்த ஒரு சீர்திருத்தமும் மக்களோடு தொடர்பு பட்டதாகவும், அதிலும் முக்கியமாக கொள்கை வகுத்தல் மற்றும் ஆட்சி நடத்துதல் போன்றவற்றிலிருந்து முறைமை ரீதியிலேயே அப்புறப்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தோரோடு, தொடர்புபட வேண்டும் என பெரியளவான எதிர்பார்ப்பு உள்ளது.

கவலைக்கிடமாக, அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் மக்களை பற்றியும் கல்வித்துறை பற்றியும் என்னத்தை சொன்னது என்பதை பற்றி பெரிதளவு கலந்தாலோசிக்காமல் எழுந்தவையாக இவ்வருடம் கொண்டுவரப்படவுள்ள பொதுக்கல்வி சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. 2026 இல் இச்சீர்திருத்தங்களை அவசரமாக புதிய அரசாங்கம் கொண்டுவந்திருக்க தேவையில்லை என பலர் உணர்ந்தனர். தற்போதைய நிலவரங்கள் சுயபரிசீலனை செய்ய அழைத்து நிற்கின்றது. தேசிய கல்வி நிறுவகத்துடன் (NIE) தொடர்புபட்ட அங்கத்தவர்களாக கலந்தாய்வு, ஆழ்ந்தாய்வு மற்றும் மதிப்பீடு செய்வதற்கு அதிக நேரம் வழங்கப்படவேண்டுமென நாம் எல்லோரும் சேர்ந்து வற்புறுத்தி இருக்க வேண்டும் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

பாடசாலை நேர அதிகரிப்பு தொடர்பில் ஆசிரியர் ஒன்றியங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள், தரம் 10 மற்றும் 11 களில் இருந்து வரலாற்று பாடத்தை கட்டாய பாடமாக இல்லாமல் செய்வதற்கு வரலாற்று ஆசிரியர்கள் காட்டும் எதிர்ப்பு, தரம் 6 வகுப்புக்கள் பாட எண்ணிக்கைகள் (இப்போது பாட தொகுதிகளாக கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன) அதிகரிப்பு பற்றிய அதிருப்தி போன்ற பிரச்சினைகள் போதியளவு நேரம் ஆலோசனையில் செலவழித்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

தற்போதைய சீர்திருத்தங்களுக்கு வந்துள்ள எதிர்ப்பை அவதானத்தில் எடுத்து, வரும் வருடங்களில் கொண்டுவரக்கூடிய மாற்றங்கள் பற்றி அனைத்து கரிசனையுள்ள/ தொடர்புள்ள நபர்களினரோடு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். கருத்துக்களை மாற்ற மறுக்கும் நிலை, விட்ட பிழைகளை கணக்கில் எடுக்காமல் விடுதல் போன்றன தவிர்க்கப்படவேண்டும். பதிலாக, சீர்திருத்த முறைமையை உயிருள்ளதாக வைக்கவும், விமர்சனத்தை ஏற்றுக்கொள்வோராக இருக்கவும் அரசாங்கத்துக்கும் NIE உடன் தொடர்புபட்ட அங்கத்தவராக எமக்கும் கடமை உள்ளது. அதேபோல், இறுதியாக வந்த கொள்கை சட்டகம், பரீட்சை மற்றும் கணிப்பீடு முறைகள், பாடத் தொகுதிகளையும் ஆக்கபூர்வ பின்னூட்டல் மற்றும் பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் மேம்படுத்தக்கூடியனவாக உயிருடன் வைத்திருக்கவும் எமக்கு கடமை உள்ளது..

தத்துவமும் உள்ளடக்கமும்

கடைசி குப்பி கலந்துரையாடலில் ரம்யா குமார் கூறியது போலவே, கல்வி சீர்திருத்தம் பற்றிய கடைசியாக வந்த கொள்கை பத்திரத்தில் பல புத்துயிரூட்டும் கல்வித் தத்துவவியல் எண்ணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த கொள்கை எப்படி பாட உள்ளடக்கத்தில் தாக்கம் செலுத்தும் என பாடத்திட்ட வடிவமைப்பாளர்களுக்கு சிந்திக்க சாத்தியமாகவில்லை. ஏனெனில் கொள்கைப் பத்திரம் மக்களுக்கு வெளியிடப்பட்ட முன்னரே இந்த பாட தொகுதிகளில் பல அச்சிடுவதற்கு சென்றுவிட்டன. ஒரு நீண்டகால உள்நாட்டு யுத்தத்தை கடந்துவந்த, தொடர்ந்தும் ஆழமான இன, மத பிரிவினைகளை முகங்கொள்ளும் ஒரு நாட்டில், முக்கியத்துவம் வழங்கப்படவேண்டிய பாடங்களுக்கும் துறைகளுக்கும் முன்னுரிமை வழங்குவதற்கு முன்மொழியப்பட்ட கல்வி நோக்கம் பற்றிய பொதுமக்களுடனான பெரியளவான கலந்துரையாடல் உதவியிருக்கும்.

கல்வி அமைச்சர் சிறுபான்மை சமூகங்களின் வரலாறு புது பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என பாராளுமன்றத்தில் கூறியதை நான் மதிப்புயர்த்தினாலும், சீர்திருத்தங்கள் பற்றிய ஒரு பரந்துபட்ட கலந்துரையாடல் இரண்டாம் தேசிய மொழி போன்ற பாடங்களுக்கு அதிக நேரத்தை வழங்கவும், வரலாறு அல்லது சமூக விஞ்ஞானத்தை கட்டாய பாடமாக்கவும் அரசாங்கத்தை தள்ளியிருக்கக் கூடும். இப்போது ஒரு விரிவான கொள்கைப்பத்திரம் பொதுவெளிக்கு விடப்பட்டிருப்பதால், சீர்திருத்தத்தின் தத்துவத்தின் முற்போக்கான விடயங்களை எப்படி சிறந்த வகையில் பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்திலும், அதன் நடைமுறைப்படுத்தலிலும், கற்பித்தல் முறையிலும் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்த வைக்கலாம் என கரிசனையான கலந்துரையாடல் இடம்பெற வேண்டும்.

பல்கலைக்கழக சீர்திருத்தங்கள்

அரசாங்கம் வேகமாக கொண்டுவர முற்படும் இன்னொரு சீர்திருத்த முறைமை பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதாகும். சட்டங்கள் மீள்பார்வையிடப்படவும் தேவைப்படும்போது மாற்றங்கள் கொண்டுவரப்படவும் வேண்டியது சரி என்றாலும் புதிய சட்டம் வரும்வரை ஏற்கனவே உள்ள சட்டமே தொழிற்பட வேண்டும். பல்கலைக்கழக சட்டம் தொடர்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அமுலுக்கு வரும்வரை துறைத்தலைவர்களை அல்லது பீடாதிபதிகளை நியமிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு அண்மையில் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு (UGC) ஒரு சுற்றுநிருபத்தை வழங்கியிருந்தது. UGC செய்யும் அவ்வகையான இடையீடு சர்வாதிகார பாங்காகவுள்ளது. அது பல்கலைக்கழக முறைமையின் கல்வியியல் மற்றும் நிறுவனரீதியான கலாச்சாரத்தை வலுவற்றதாக்குவதோடு சட்டத்தின் ஆட்சி எனும் கொள்கைக்கும் எதிராக செல்கிறது.

நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டி நீண்டகாலமாக கோரிக்கைகள் இருந்துள்ளன. அரச பல்கலைக்கழகங்களில், அவை அங்கத்தவர்களை நியமிக்கும் முறைமையில் வெளிப்படைத்தன்மை, துணைவேந்தர் மற்றும் கல்வியாளர்களை ஆட்சேர்ப்பதிலும் தெரிவுசெய்வதிலும் உள்ள விதிமுறைகளில் சீர்திருத்தம், சட்டம் கற்பிப்போர் சட்டத்தரணிகளாக வேலை செய்ய முடியாது எனும் சுற்றுநிருபத்தை மீளப்பெறல், போன்ற கோரிக்கைகளை இப்படியான பல கோரிக்கைகளுக்கு உதாரணமாக கூறலாம்.

அண்மைக்கால தெரிவு முறைமைகளில், தனிப்பட்ட அளவுமுறைகள் அடிப்படையிலே (உதாரணமாக தலைமைத்துவம், நேர்மை) சில விண்ணப்பிவர்களுக்கு நியாயமாற்றமுறையில் அதிக புள்ளிகளோ அல்லது குறைந்த புள்ளிகளோ வழங்கப்பட்டதக கூறப்படுகிறது. எனவே, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்போரை மதிப்பீடு செய்கையில், அவை அங்கத்தவரால் சூழ்ச்சியுடன் கையாள முடியாத ஒரு முறைமை வேண்டும் என்பது உறுதியாக உணரப்படுகிறது. அதே போல வெவ்வேறு துறைசார்/ துறைகளுக்கிடையிலான பின்னணியை கொண்ட புலைமையாளர்களை கல்வியியல் ஆட்சேர்ப்பு தண்டிப்பதாகவுள்ளதோடு இறுக்கமாக பூட்டப்பட்ட எல்லைகளுக்குள் அறிவை தனித்தனி பிரிவுகளாக்குகின்றது. ஆட்சேர்ப்பு விதிகளிலுள்ள “பாடம்” மற்றும் “துறை” போன்ற வார்த்தைப் பிரயோக்கங்களை சுற்றியுள்ள கடுமையான துறைசார் வரையறுப்புக்களும் தெளிவின்மைகளும் சிறந்த புலமைப் பிரசுரங்களை கொண்ட தமது இடத்துக்கு ஆபத்தாக காணப்படக்கூடியோரை புறந்தள்ள பயன்படுத்தப்படுகிறது. இவ் விடயங்களிலும் அரசாங்கம் சீர்திருத்தங்களை கொண்டுவரும் நோக்கில் செயல்படவேண்டும். ஆனால் அது போதுமான ஆழ்ந்தாய்வுகள் மற்றும் கலந்துரையாடல் மூலம் இடம்பெற வேண்டும்.

வினைத்திறன் வெறியிலிருந்து அமைதியான ஆழ்தாய்வுகளுக்கு

பொதுமக்களின் கருத்தை கேட்பதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டாத நிலையில் 2026 ஆம் ஆண்டு கல்வியலாளர்கள், தொழில் சங்கங்கள், மாணவர்கள் வெளிப்படைத்தன்மைக்கும் கலந்தாய்வுகளுக்குமான தமது போராட்டத்தில் அதிக முனைப்போடு இருக்கவேண்டும். கல்வி, மேம்பட்ட உட்கட்டுமானம், அதிக ஆட்சேர்ப்பு, மேம்பட்ட வேலைச் சூழல் என்பவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கவைப்பதற்காக நாம் தொடர்ந்து செய்யும் போராட்ட்ங்களோடு இப்போராட்டம் இடம்பெற வேண்டும். NPP அரசாங்கம், UGC, NIE, எமது பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை பொறுப்புக்கூறுவனவாக வைத்திருப்பது இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இப்புதுவருடம், டித்வா பேரழிவு இடம்பெற்ற சூழ்நிலையையும் கருத்தில்கொண்டு, கல்வியிலே சமூக நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி புது வழிகளிலே சிந்திக்க எம்மை பணிக்கிறது. மூன்றாம் தவணை பரிட்சைகளை நிறுத்த எடுத்த முடிவு, பாதிக்கப்பட்ட பாடசாலைகளை எப்போது திறப்பது எனும் அதிகாரத்தை உள்ளூர் கல்வி அமைப்புக்களிடமும் அதிபர்களிடமும் வழங்குதல், டித்வா புயலால் ஏற்படட இன்னல்களால் பாடசாலை நேரத்தை மாற்றாமலிருப்பது என்பன பாராட்டத்தக்க நகர்வுகள். ஆனால் டித்வா புயலால் பாதிக்கப்பட்டோரின் நடைமுறைத் தேவைகளை தீர்ப்பதிலும் கல்வியை சமூகநீதியாக நாம் சட்டகப்படுத்துவதில் இந்த பிரச்சினை தரும் உட்ப்பொருட்களை விளங்குவதிலும் நாம் இன்னும் அதிகம் வேலை செய்ய வேண்டியுள்ளது.

டித்வா மற்றும் அது போன்ற மற்ற பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் விசேட தேவைகள் பற்றி எந்தளவுக்கு எமது கல்விக் கொள்கை வடிவமைப்புக்கு தெரிந்துள்ளது? கல்வி மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் வழியாக இவ்மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி எந்தளவுக்கு அதிகாரிகளுக்கு தெரியும்? இந்த முக்கிய புள்ளியில் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விடயங்களையும் கல்வி சீர்திருத்தம் பற்றிய அவர்களின் விளக்கத்தையும் அறிய நாம் என்ன முயற்சிகள் செய்துள்ளோம்? காலநிலை அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சமூகங்களுடன் கலந்தாலோசிப்பதற்கு கடந்த காலத்தில் என்ன நடவடிக்கைகளை எடுத்தோள்ளோம்? மலையகம் போன்ற பிரதேசங்களில் வர்க்கம், பால், இனம், பிரதேசம் போன்ற வரலாற்று அசமத்துவங்களால் பாதிக்கப்பட்டநிலை நிகழ்கால காலநிலை பிரச்சனைகளை மோசமாக்கும் நிலையானது சீர்திருத்த முறைமையின் வேகத்தை குறைக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தால் அதையே நாம் செய்ய வேண்டும். முக்கியமாக ஆழ்ந்தாய்வுகள் காணப்படாத ஒரு சூழலில் இது செய்யப்படவேண்டியதாகும். பொதுமக்களின் கருத்தை, முக்கியமாக விளிம்புநிலைகளிலுள்ளோரின் கருத்தை, கணக்கிலெடுக்காது கண்மூடித்தனமான வினைத்திறன் நோக்கத்துக்கும், சீர்திருத்த முறைமைகளின்போது நவதாரளாவாத நிதி வழங்குனர் நிர்ப்பந்திக்கும் வேகத்துக்கும் எதிராக, ஒரு வேகத்தை குறைக்கும் ஒரு நகர்வாகவும் ஒரு எதிர் நடவடிக்கையாகவும் சீர்திருத்த வேலைகளின் வேகத்தை குறைக்க இந்த கட்டுரை அழைக்கிறது. வெளிப்படைத்தன்மை, பொறுமை, பொறுப்புக்கூறல், தாழ்மை, தற்பரிசோதனை மற்றும் சுய திருத்தம் செய்யும் மனம் போன்றவற்றை புதுவருடத்தில் அதற்கு அப்பாலும் கல்வி சீர்திருத்தங்களை கற்பனை செய்யவும் நடைமுறைப்படுத்தவும் எமது வழிகாட்டியாக அவ்வாறான சட்டகப்படுத்தல் பார்க்க உதவும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன