உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல்

அவங்க பெர்னான்டோ

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை
பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கை
வெளிப்படுகின்றது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கும்
போது, நான் நாள்தோரும் சிந்தனை வயப்படும் பல அன்றாட சமூக
சிக்கல்களை அவை பிரதிபலிக்காமை வெளிப்படும், உதாரணமாக,
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின்
அன்றாட சவால்களை இவ்விஞ்ஞாபனங்கள் பிரதிபலிப்பதாயில்லை.
இச்சவால்கள் கல்வியியலாளர்களின் முடிவுறாத ஆசைகளான தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய ஆய்வை மேற்கொள்ளும் வேலைகளுக்கிடையே அவற்றை
‘உருவாக்கி’ ‘பதிப்பிக்கும்’ அழுத்தத்துக்கு உள்ளாகுதல், மிகப்பாரியளவிலான
நிர்வாகம் சார்ந்த வெலைகளை கற்றல் மற்றும் ஆய்வுச்செயற்பாடுகளுக்கு
இடையே மேற்கொள்ளுதல், மாணவர்களின் எண்ணற்ற சிக்கல்களை
அடையாளப்படுத்தல், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும்
நிர்வாக உறுப்பினர்களுடனான தவிர்க்க முடியாத அன்றாட
இடைவினைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அர்த்தமுள்ள கற்றல்
அனுபவங்களை சாத்தியபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுதல் என்பனவாகும்.
இவ்வாறான எண்ணற்ற வேலைகளுக்கு மத்தியில் நான் மேற்கொள்ளும்
முக்கியமான செயற்பாடுகளில் என் மனதுக்கு நெருக்கமானதும் நான் மிகுந்த
நம்பிக்கை வைத்திருக்கும் விடயமானது அனுபவம் சார்ந்த கற்பித்தலாகும்.
பத்து வருடங்களுக்கும் மேலான எனது இலங்கை மக்களுடன் மற்றும்
மாணவர்களுடனுமான இடைவினைகளின் விளைவான அனுபவத்தின்
ஊடாக, இந்த ஆக்கத்தில் நான் எனது அண்மைய கள அனுபவம் ஒன்றை
குறித்தான அனுபவத்தை பகிர்கின்றேன்.

அனுபவம் சார்ந்த கற்றல் என்பது நான் பகுதியாயுள்ள கொழும்பு
பல்கலைக்கழகத்தின் முக்கியமான அம்சமொன்றாகும். சமூகவியலை சிறப்புப் பாடமாக கற்கும் மாணவர்கள் தமது மூன்றாம் ஆண்டு கற்றலில்
செறிவான களாப்பயிற்சியின் இதனை மேற்கொள்கின்றனர். இதற்கு
மேலதிகமாக, நான்காம் வருடத்தில் சுதந்திரமான ஆய்வுப்பணியொன்றை
முன்னெடுப்பதோடு, அண்மைக்காலத்தை பொருத்த வரையில்
உள்ளிருப்புப்பயிற்சியையும் மேற்கொள்கின்றனர். பொதுப்பட்டத்தை
மேற்கொள்ளும் மாணவர்கள் கூட நடைமுறைப் பயிற்சியை
மேற்கொள்கின்றனர். இவ்வாறான களப்பயிற்சிகளின் மூலம் மாணவர்கள்
மாணவர்கள் கற்ற ஆய்வுப்பயிற்சிகளை வித்தியாசமான கள நிலவரங்களில்
செயற்படுத்திப் பார்த்தல், பல்வகைமையான சமூகங்களுடன்
இடைவினைகளை மேற்கொள்ளல், இலங்கை மக்கள் முகங்கொடுக்கும்
அன்றாட சிக்கல்களை அனுபவ அடிப்படையில் பார்த்தல், மற்றும் இலங்கை
அரசின் நிர்வாக கிளைகளான பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர்கள்,
பொது சுகாதார உத்தியோகத்தர்கள், சமூக உத்தியோகத்தர்கள், நிர்வாகிகள்,
பொலிசார், சமித்தி மற்றும் கிராமிய சபை உறுப்பினர்கள் போன்றோருடன்
இடைவினைகளை மேற்கொள்ளல் போன்ற திறன்களை பெறுகின்றனர்.
இருப்பினும், தற்போது, இவ்வாறான அனுபவ அடிப்படையிலான கற்றலின்
நிலைபேற்றில் பல சவால்கள் ஏற்பட்டுள்ளன. களப்பயிற்சிகள் பாதீட்டு
சிக்கல்களால் குறைக்கப்பட்டுள்ளதோடு இவ்வாறான நிர்வாக
அடிப்படையிலான சிக்கல்கள் அனுபவ அடிப்படையிலான கற்றலில் பாரிய
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பெறுபேறு அடிப்படையிலான
கற்றல் மீதான அதீத அழுத்தம் மற்றும் மிக இறுக்கமாக வடிவமைக்கப்பட்ட
பாடத்திட்டங்கள், மாணவர்களை சிக்கல்களை தீர்த்தல் மற்றும் பிரதிபலித்தல்
போன்ற திறன்களை சார்ந்து வளர விடாமல் வாய்ப்புகளை குறைக்கின்றன.

கற்றல், கற்றதை கைவிடல் மற்றும் மீளக்கற்றல் போன்ற செயற்பாடுகளை
உள்ளடக்கிய கற்றல்

அண்மையில் நாம் நிறைவு செய்த களப்பயிற்சி திட்டத்தில் மாணவர்களும்
ஆசிரியர்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் சிங்கள மக்கள் வாழும்
கிராமங்கள், தமிழ் பேசும் பெருந்தோட்ட மக்கள் வாழும் கிராமங்கள்,
அனைவரும் கலந்து வாழும் பிரதேசங்கள் (சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள்) என ஐந்து கிராமங்களில் களப்பயணங்களை மேற்கொண்டோம்.
மாணவர்கள் காலை வேளைகளை ஆய்வு முறைமைகளை (உதாரணமாக,
வினாப்பட்டியல்கள், நேர்முகங்கள், அவதானங்கள், கூட்டுக்குழு
கலந்துரையாடல்கள் மற்றும் சமூக பங்கேற்பு முறைமைகள்) பரீட்சிப்பதிலும்
மாலை வேளைகளை தாம் அடைந்த பிரதிபலித்த விடயங்களை
முன்வைப்பதிலும் கடத்தினர்.

முதல் நாள் பயிற்சி வகுப்புகள் மாணவர்கள் முதலாம் கருத்துப்பதிவுகள்
பற்றிய கலந்துரையாடலாக இருந்தது. இவ்வாறான முதலாம்
கருத்துப்பதிவுகள் தனிப்பட்ட தனிநபர் மீதான தீர்ப்பு நிலையிலானதாகவும்
வார்ப்பு வகைமைகளை பிரதிபலிப்பதாகவும் இருந்தன. மாணவர்கள்
சமூகங்கள், சமூக கட்டமைப்புகள் மற்றும் மக்கள் மீதான லட்சியமிக்க
முடிவுகளை முன்வைத்தனர். ஆரம்பத்தில் மாணாவ்ர்களின் வகைபிரிப்பின்
படி கிராம மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் (துப்பத்),
கல்வியறிவற்றோர் (நூகத்) மற்றும் கஷ்ட நிலைகளில் வாழ்பவர்கள் (துஷ்கர)
என பிரிக்கப்பட்டிருந்தனர். உண்மையில், கஷ்ட நிலைகளில் வாழ்வோராக
வரையறுக்கப்பட்டோர் தமது கிரானக்களில் போக்குவரத்து சேவைகளில்
குறைபாடுகள், கல்வி வளங்களில் குறைபாடுகள், மற்றும் சுகாதார சேவைகள்
பெறுவதில் அதிக சிக்கல்களை முகங்கொடுப்பவர்களாக இருந்தனர்.
ஊர்களுக்குள் செல்லும் பாதைகள் மோசமாக இருந்தமை, வீடுகள் மிக
மோசமான நிலைகளில் இருந்தமை மற்றும் மாதாந்த பராமரிப்பு
செலவீனங்களை வழங்கினாலும் அரசியல்வாதிகளால் போலி நம்பிக்கைகள்
வழங்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் எவ்வித அபிவிருத்தியும்
மேற்கொள்ளப்படாமல் இருந்த கிராமங்களில் வசித்தனர். அனுபவக்கற்றலில்
முக்கிய பகுதியாக ஆசிரியர்கள் மாணவர்களின் முன்வைப்புகளின்
பின்னரான கருத்துகள் தெரிவித்தல் மற்றும் அடிக்கடி மாணவர்களை
அவதானிப்புகள் மற்றும் தோற்றப்பாடுகளுக்கு மேலால் ஆழமாக சென்று
பார்த்து ஆய்வு மேற்கொள்ள வேண்டி அறிவுறுத்தும் செயற்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டன.

நாட்கள் செல்லச்செல்ல மாணவர்கள், கற்றல், கற்றதை கைவிடல் மற்றும்
மீளக்கற்றல் ஆகிய செயற்பாடுகளில் முன்னேறி வருவதை காணக்கூடியதாக
இருந்தது. உதாரணமாக, இந்த பயிற்சித் திட்டத்தின் மூன்றாம் நாளில் ஒரு
மாணவர், இச்சமூகங்கள் ‘கல்வியறிவற்றோர்’ மற்றும் ‘ஏழைகள்’ என
வரையறுக்கப்பட முடியாதவர்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். இவர்
இந்த சமூகங்களில் முறையான கல்வித்திட்டத்தின் கீழ் பாடம் கற்கும்
மாணவர்கள் இருப்பதையும் அவர்களின் எதிர்கால திட்டங்களையும்,
இச்சமூகத்தவர் மத்தியில் வித்தியாசமான அறிவுகள் காணப்படுவதாகவும்
முன்வைத்தார். இம்மாணவர்கள் வித்தியாசமான செயன்முறைகளை
பிரதிபலிப்பதும், வித்தியாசமான அணுகுமுறைகளை வடிவமைப்பதையும்,
மக்கள் குறித்த கருத்தியல்களை கலந்துரையாடுவதையும், பெரும்பாலான
மனிதர்களுக்கு முக்கியமாக உள்ள அடிப்படையான விடயங்கள் குறித்து
கருத்தாழத்துடன் அவதானித்து பிரதிபலித்து கலந்துரையாடுவதையும் காண
மனதளவில் திருப்தியாக இருந்தது.

சமூகத்தில் கற்றல் மற்றும் பிரதிபலித்தலில் ஒருசேர ஈடுபடுதல்

அனுபவ கர்ரல் மூலம் மாணவர்களை தனிநபர் மையக் கற்றலில் இருந்து
சமூகங்களை கற்கும் நிலைக்கு மாற்றலாம். மாணவர்கள் தமது சூழலை
கற்கும் அதே நேரத்தில் தமக்கிடையேயும் அதிகமாக கற்கின்றனர். பல
வகுப்பு மாணவர்களை கள ஆய்வுக்கு அழைத்துச் சென்றாவ்ர்கள் என்ற
வகையில் ஆசிரியர்களான நாங்கள் தற்போதைய, அதிலும் குறிப்பாக
இலங்கயில் பெருந்தொற்று மற்றும் அதற்கு பின்னரான நெருக்கடிகளின்
பின்னர் பல்கலைக்கழத்துக்கு வந்த மாணவர்களிடம் இருந்து வரும்
அவதானிப்புகள் மற்றும் பதில்கள் எம்மை சிறிது கலக்கமடைய
வைத்திருக்கின்றன. இம்மாணவர்கள் களங்களில் செல்பிகள் எடுப்பதும்,
தம்மை சுற்றியே அதிகம் சிந்திப்பதும், ஈடுபாட்டில் காட்டும்
அக்கறையின்மையும், இவர்களின் முன்வைப்பில் வெளிப்படுவதை
காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான அவதானங்கள் அவர்கள் வெறுமனே
‘ஜென் ஸீ’ தலைமுறையை சேர்ந்தவர்கள் என வரையறுப்பதுடன் நிறுத்திவிட முடியாது. மாறாக, இவர்களின் வித்தியாசமான வெளிப்பாடுகள்
எமது சரியான கற்பித்தலுக்கான அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

வகுப்பறைகளில் மாணவர்களின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கான
இடையீடுகளை குறைவாகவே பெறுகின்றனர். இருப்பினும் களக்கற்கைகளில்
அதிகார இயக்கவியல் மாற்றமடைகின்றது. களக்கற்கைகளில் ஆசிரியர்கள்
போல மாணாவ்ர்களும் திறந்த வாய்களுடன் ஆச்சரியமான கற்கைகளில்
ஈடுபடுவதோடு, அட்டைகள் நிரைந்த ஓடைகளை ஒன்றாகவே கடக்கின்றனர்.
பலர் பகல் வேளைகளில் கிராமங்கள் வெளியே வெருங்கால்களில்
உலாவருவதோடு, அவர்களின் பண்டிகைகளிலும் மத வழிபாடுகளிலும்
ஒன்றாக இணைந்து செயற்பட்டு, கொண்டாடி வருகின்றனர். இவ்வாறான
விடயங்கள், விரிவுரையாளார்களை “மன்றங்களில் இருக்கும் கடவுளர்கள்’
என்ற நிலையில் இருந்து ‘அருகில் இருக்கும் வழிகாட்டிகளாக’
மாற்றுகின்றன. இவ்வாறான மனப்பதிவுகள் மாணவர்களுடன் இணைந்து
நடப்பதும் கற்பதும் அவர்களின் கருத்துகளை சவாலுக்கு உட்படுத்துவதும்
என்பதில் இருந்து அவர்களின் புகைப்படங்களில் இணைவதுடன் ஊடாக
விரிவடைவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இன்னொரு முக்கியமான விடயம் சமவயது கற்றல் மற்றும்
கூட்டுசெயற்பாடுகளில் ஈடுபடுவதன் நன்மைகளாகும். முதலில் அதிக
தன்னம்பிக்கையான சொலவயப்பட்ட மாணவர்கள் முன்னணியில் வருவதை
காணலாம். இருப்பினும் இவ்வாறான மாணவர்கள் களக்கற்றல் மூலம்
தனிநபர் கற்றலுக்கு அதிகமாக குழுக்கற்றலில் ஈடுபடும் நன்மைகளை
கண்டுகொள்கின்றனர். அனைத்து மாணவர்களதும் கூட்டு முயற்சிகளின்
வெளிப்பாடாகவே ஆய்வு முறைமைகளை சரியாக பயன்படுத்தி, அவர்களின்
அடைவுகள் மற்றும் அறிவை முன்வைப்பதோடு அதன் மூலமே
கற்றலுக்கான சமூக அம்சங்களை உருவாக்கவும் முடிவதாக இருக்கின்றது.

அனுபவக் கற்றல் எனும் பரிணாம செயற்பாடு

போலோ ப்ரேயார் (1974) அவர்களின் கருத்துப்படி, கற்றல் என்பது
“பரிணாமத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் உலகத்தின் மீதான பிரதிபலிப்பு” என்பதாகும். அனுபவ கற்றல் மூலம் மாணவர்கள், ஆய்வுத்
திறன்களை நடைமுறைப்படுத்தல், மென் திறன்களை நடைமுறைப்படுத்தல்,
கூட்டுசெயற்பாடுகளில் ஈடுபடல் மட்டுமன்றி இதன் மூலம் பிரதிபலிப்புள்ள
சிந்தனை மற்றும் சிக்கல்களை தீர்க்கும் திறன்களையும் அடைகின்றனர்.
நமது அண்மைய களப்பயிற்சியின் மூலம் மாணாவ்ர்கள், சிக்கல்களை
அடையாளம் கண்டு கூட்டாக தீர்வுகளை அடையும் செயற்பாடுகளில்
ஈடுபடுத்தப்பட்டு அதனை நடைமுறைப்படுத்தவும் வழியேற்படுத்தப்பட்டனர்.
சமூகத்தலைவர்களுடனான கலந்துரையாடல் மூலம் மாணவர்களும்
பல்கலைக்கழக பீடமும் எவ்வாறான இடைவினைகளில் ஈடுபடலாம் என்ற
அடைவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் இணைந்து களப்பயிற்சி திட்டங்களை எவ்வாறு கட்டமைக்கலாம்
என்பதையும் நடைமுறை பயிற்சிக்கான ஒதுக்கீடுகள், ஆய்வு முறைமைகள்
மற்றும் கருத்தியல்களில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும்
கலந்துரையாடினர்.

முடிவாக, உயர்கல்விக்கான நம்பிக்கையை நோக்கும் அனைவரும்
அனுபவக்கற்றல் மூலமான நன்மைகளை ஏற்றுக்கொள்வதோடு,
பரிணாமத்தை ஏற்படுத்தும் கற்றலை பாடத்திட்டங்களில் இணைப்பதையும்
குறிப்பாக கொண்டு செயற்பட வேண்டும். ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல,
அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் இலட்சியவாத கருத்துகள்
களநிலவரங்களையும் பல்கலைக்கழகங்களின் களச்செயற்பாடுகளையும்
பிரதிபலிக்காதவையாக இருப்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
இவ்வாறான விஞ்ஞாபனங்களை வாசிக்கும் போது எனக்கு முதலில் ஏற்பட்ட
அலுப்பு, எவ்வாறு இவ்வாறான யதார்த்தத்திலிருந்து தூரமான விடயங்களாஇ
இலட்சியபூர்வமாக முன்வைக்க முடிந்திருக்கின்றது என்பதாகும். தேர்தல்கள்
மற்றும் இவ்வாறான விஞ்ஞாபனங்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பது
காணப்பட்டாலும் கூட இந்நிலை எம்மை யதார்த்தத்தில் இருந்து தூரமாக்கி
விடக்கூடாது.

அனுபவக்கற்றலானது, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களுக்கு
அடிப்படையிலான விடயங்களில் கவனக்குவிப்பு, சமூக பலம் மற்றும் அதன்
வளங்கள் மீதான கவனக்குவிப்பு என்பதை அடிப்படையாக கொண்டதாகும்.
இருப்பினும், அனுபவக்கற்றலில் முதலிடுவதன் அடிப்படை, தற்போதைய
ஆழமான பிளவுகள் கொண்ட சமூகங்களில் அவற்றின் ஆற்றநிலையை
மற்றும் சாதாரண மக்களை பலப்படுத்தல், தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளைக் கடந்து அனைவருடனும் இணைந்து செயலாற்றுதல்,
அவதானமாக கேட்டல், அடுத்தவரிடம் இர்நுது பிரதிபலித்தல் மற்றும் கற்றல்
என்பதேயாகும். இதன் மூலமே கற்றல் பரிணாமத்தை ஏற்படுத்துகின்றது.