உதாரி அபேசிங்க
அண்மையில் எனக்கு விஷ்னு வாசு அவர்கள் எழுதிய ‘சாரி எந்தபு பிரிமி’
(சாரி அணிந்த ஆண்கள்) நூலை வாசிக்கக் கிடைத்தது. இந்நூல்
இலங்கையில் வாழும் பால்புதுமையினர் குறித்த வாழ்வனுபவங்களின் மீது
வெளிச்சத்தை பாய்ச்சியது. எமது நாட்டில் வழக்கொழுங்காக காணப்படும்
ஈரின பாலியல்பு நடத்தைக்கு இயைபாக இராத காரணத்தாலேயே தத்தமது
குடும்பங்கள், சமூகம் மற்றும் நாட்டின் சட்ட வரைபு ஆகியவற்றால்
புறக்கணிக்கப்பட்டு அமைப்புரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும்
மக்களை குறித்த நெஞ்சை பிளிகின்ற பதிவே இந்நூலாகும்.
வெளித்தள்ளல் எனும் இக்கருத்து ஏற்கனவே 20 ஆவனி, 2024 அன்று
எழுதப்பட்ட ரம்யா குமார் அவர்களின் “நிகழ்பாலுறவாளர்கள் கவனிக்கப்பட்ட
வேண்டியவர்கள்: பல்கலைக்கழகங்களில் நேர்மறையான தளங்களை
உருவாக்குதல்” எனும் குப்பி ஆக்கத்தில் கையாளப்பட்டுள்ளது. இந்த
ஆக்கத்தில் ரம்யா குமார் அவர்கள் பல்கலைகளில் நிகழும் பகிடிவதை,
கட்டுப்பாடான ஆடைக் கலாசாரம், பால்மை அடிப்படையில்
வகைப்படுத்தப்பட்டுள்ள ஓய்வறைகள் போன்ற விடயங்கள் எவ்வாறு
நிகழ்பாலுறவாளார்களை புறக்கணிக்கின்றன எனவும் எவ்வாறு
இவர்களுக்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட ஆதரவு அம்சங்கள்
பல்கலைக்கழகங்களில் அறவே இல்லாமல் இருக்கின்றன என்பதையும்
விவரிக்கின்றார். பால்மை பல்வகைமை, அது எப்போது நிகழ்கின்றது போன்ற
விடயங்கள் பொதுவாக பேசப்படுவதிலிருந்து நிராகரிக்கப்பட்டும்
சிறுமைப்படுத்தப்பட்டும் வருகின்றன.
வாசு அவர்களின் நூல் மற்றும் ரம்யா குமாரின் ஆக்கத்தை ஒட்டி இந்த
ஆக்கத்தை நான் எவ்வாறு பாலியல்பு மற்றும் பால்மை ஆகியவற்றை ஒரு
நிரல் என்ற வகையில் அணுகலாம் என்பதை பல்கலைக்கழக ஊழியர்கள் இதனை வாசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வரைகின்றேன். மிக
முக்கியமாக, இந்த ஆக்கம் எழுதப்படுவதன் நோக்கம், இந்த கலந்துரையாடல்
மூலம் பல்கலைக்கழக சுற்றாடலை மேலும் உள்ளீர்க்கத்தக்கதாகவும் ஆதரவு
வழங்கத்தக்கதாகவும் மாற்றுவதோடு இதன் மூலம் சமூகங்களில் வாழும்
பல்வகைப்பட்ட அடையாளங்களும் பல்கலைக்கழகங்களில் தமக்கான
இடத்தை அடைய முடியுமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்ற
நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
பால்மை மற்றும் பாலுணர்வை நிரலென பார்த்தல்
எமது வழமையான சிந்தனையின் படி பால் மற்றும் பால்மை ஆகியவை
இருபடித்தானவை: அதாவது, ஆண் அல்லது பெண் எனவும் ஆண்மை
அல்லது பெண்மை எனவுமே நாம் எதையும் வரையறுக்கின்றோம்.
இருப்பினும் இவ்வாறான இருபடித்தான விடயங்கள் தொடர்ந்தும்
சவாலுக்குட்படுத்தப்படுகின்றன. உடலியல் பார்வைக் கோணத்தில் கூட
உடல்கள், அவற்றின் மாதிரிகள் என்பன சம்பிரதாயமான இருபடித்தான
“ஆண்”, “பெண்” என்ற நிலைகளிலிருந்தும் சிலபோது வேறுபடுவதை நாம்
காண்கின்றோம். இடைநிலைப்பாலின மனிதர்கள் உடலியல்ரீதியாகவும்
வழமையான இருபடித்தான பார்வைகளைத் தாண்டி இடைப்பட்ட நிலைகளில்
வாழ்வதை நாம் காண்கின்றோம்.
சமூகவியல் பார்வையில் ஆண் பெண் என்ற இருபடிமநிலையில் இன்னும்
பல கோணங்களை காணலாம். இருப்பினும் நாம் சமூகரீதியில் இவ்வாறான
இருபடித்தான நிலைகளுக்கான மாதிரிகள், அமைப்புகளை வரையறை
செய்கின்றோம். அதாவது, ஆணாக இருந்தால் கிரிக்கட் போன்ற
விளையாட்டுகளிலும் பெண்ணாக இருந்தால் பொம்மைகள் போன்றவற்றிலும்
அலங்கரிப்பு, உணவு தயாரிப்பு போன்றவற்றிலும் ஈடுபட விரும்புவதாக
வரையறை செய்கின்றோம். இருப்பினும், நடைமுறையில் நாம்
வெளிப்படுத்தும் பால்மை இயல்புகள் தனிநபர்க்கு தனிநபர் வேறுபடுவதுடன்
அந்த இயல்புகள் எவ்வகையிலும் சமூக அங்கீகாரங்களுடன் ஒன்ற
வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதில்லை. உதாரணமாக, சில ஆண்கள் சமையலில் ஈடுபடுவதை விரும்புவதுடன் சில பெண்கள் கிரிக்கட்
பார்ப்பதிலும் ஆடுவதிலும் விருப்பம் செலுத்துகின்றனர். இன்னொரு
வகையில் சொல்வதாயின் பால்மை அடையாள் என்பது வெறுமனே
இருபடித்தான அடையாளமாக இல்லாமல் மனப்பான்மைகள், தேர்வுகள்
மறறும் அடையாளாங்களில் தஙியிருப்பதுடன் அவை காலத்துக்கேற்ப
மாற்றமுறும் அம்சங்களாகவும் காணப்படுகின்றன.
பால்மை அடையாளம் எனும் நிரல் ஆண்மை பெண்மை எனும்
விடயங்களைனிரு துருவங்களாக கட்டமைத்திருக்கின்றது. ஆண்கள்
பெண்கள் எனும் தனிநபர்கள் தமது வாழ்க்கை கட்டங்களில் இவ்வெவ்வேறு
த்ருவங்களை வித்தியாசமான வகையில் தமது வாழ்க்கையில்
ஒன்றிக்கின்றனர். அதாவது, ஒருவரின் அனுபனங்க மற்றும் பால்மை சார்ந்த
அவற்றின் வெளிப்பாடுகள், அவர்களின் வாழ்க்கையில் வெவ்வேறு
காலகட்டங்களில் தனிநபர் வளார்ச்சி, கலாசார செல்வாக்கு மற்றும் சமூக
நிலைமைகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
சிலருக்கு இது முழுமையாகவே பால்மை வகிபாங்களை துறக்கவும்
சிலருக்கு இதன் வெளிப்பாடு ஆண்மை பெண்மை ஆகியவற்றின்
அம்சங்களை மெதுவாக தமது மாதிரிகளில் இணைப்பதாகவும் இருக்கின்றது.
இதுபோலவே, தமது இணைகளை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் மாத்திரமன்றி,
தமது நடத்தை, தம்மை விளங்கப்படுத்த பயன்படுத்தும் மொழி மற்றும் தமது
உடல்களை உறவுப்படுத்தும் விதம் ஆகியவற்றின் மூலமும் பலர் தமது
பாலியல் பல்லினத்தன்மையை வெளிப்படுத்துகின்றனர். இவ்வகையான
பாரியளவிலான வெளிப்பாட்டு நிரல்கள் “இருபடித்தான பாலியல்
நிலையையும்” அதனோடு ஒன்றிய, அதனை “வழமை” எனக்கருதும்
நிலையையும் சாவாலுக்குட்படுத்துகின்றன. உண்மையில், இருபடித்தான
பாலியல்பு என்பது மேலே குறிப்பிட்ட பாரியளவிலான வெளிப்பாட்டு
நிரல்களின் ஒரு பகுதியேயாகும். தன்பால்சேர்க்கைப் பெண், தன்பால்சேர்க்கை
ஆண், இருபால்சேர்க்கை நபர், திருநங்கையர், தனிப்போக்காளர்,
இடைநிலைப்பாலினம் மற்றும் ஏனைய அடையாளங்கள் இந்த பால்மை
மற்றும் பாலியல்பு சார்ந்த நிரல்களில் காணப்படும் பல்படித்தான நிலையையும் அவை ஒவ்வொன்றும் தன்னகத்தே வெவ்வேறுபட்ட அனுபவ
நிலைகளையும், சவால்களையும் கொண்டியங்குகின்றன.
இலங்கை போன்ற இருபால்நிலை மற்றும் இருபால் வழமைகள் கண்டிப்பாக
பின்பற்றப்படும் நாடுகளில் பால்மை பல்வகைமைத்தன்மை முக்கியமான
எதிர்ப்புடனேயே எதிர்நோக்கப்படுகின்றது. பழமைசார் பாரம்பரிய அம்சங்கள்
பால்மையின் இருமைநிலையையும், அதனை சூழவுள்ள, இருபடித்தான்
பாலுறவுகள், அவற்றின் வெளிப்பாடான ஆண்மையுடம் பலம் மற்றும்
தலைமைத்துவத்தை இணைப்பதும் பெண்மையுடன் குடித்தனம், குழந்தை
வளர்ப்பு என்பவற்றை இணைப்பதும் காணப்படுகின்றது. இவ்வகையான
மிகவுமே வரையறுக்கப்பட்ட பால்மை பாத்திரங்கள் இதன் எதிர்பார்ப்புகளை
பூர்த்தி செய்யாத அடையாளங்களைக் கொண்டவர்க்கு மிக வரையறுக்கப்பட்ட
இடத்தையே வழங்குகின்றன.
வழமையாக, நிகழ்பாலுறவாளார்கள் குறித்த கலந்துரயாடல்களில்
இலங்கையின் பாரம்பரியங்கள் மற்றும் கலாசார அம்சங்கள் குறித்த
கருத்தாடல் மேலோங்கி இருந்தாலும் கூட, காலனித்துவத்துக்கு முந்தைய
இலங்கையில் பால் பல்வகைமையை தாராளவாதத்துடன் அணுகிய
நிலையே காணப்பட்டது. வரலாற்றின் அடிப்படையில், காலனித்துவத்துக்கு
முற்பட்ட கண்டிய சட்டத்தில் பலகணவர்மணம்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததோடு அது நிறுவனமயப்பட்டும் காணப்பட்டது.
இருப்பினும், காலனியாதிக்கத்தின் பின்னர் கொண்டுவரப்பட்ட குற்றவியல்
சட்டக்கோவையின் 365ஆம் உறுப்பின் படி தன்பால் சேர்க்கைத் திருமணங்கள்
தடுக்கப்பட்டுள்ளதோடு இதன் காரணமாக இவ்வாறான அடையாள
வெளிப்பாடுகள் பல்கலைக்கழகங்கள் உட்பட சமூக நிறுவனங்களில் அவை
களங்கங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
பல்கலைக்கழகங்களில் காணப்படும் பாகுபாடுகள்
பல்கலைக்கழகங்கள் போன்ற தளங்கள் வித்தியாசமான பாலியல்
அடையாளாங்கள் மற்றும் சார்நிலைகளை சேர்ந்த பலர் ஒன்றுகூடும், இதன்
மூலம் புரிந்துணர்வு, மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளல் போன்ற பாங்குகளை வெளிப்படுத்தும் தளங்களாகவும் காணப்படுகின்றன. இருப்பினும்,
இலங்கையின் ஏனைய நிறுவனங்களை போல பல்கலைக்கழகங்களிலும்
தனித்து ஏற்றுக்கொள்ளப்படும் பாலியல் அடையாளமாக இருபடித்தான
பாலியல் அடையாளமே காணப்படுகின்றது. இதன் காரணத்தால் இப்பாலியல்
சார்நிலையை வெளிப்படுத்தாத நபர்கள் மற்றும் அதன் எதிர்பார்ப்புகளை
பூர்த்தி செய்யாதவர்கள், ஒன்றில் தம்மை வெளிப்படுத்தாதவர்களாகவோ
அல்லது அவமதிப்புக்கு ஆளாக்கப்படுபவர்களாகவோ இருக்கின்றனர்.
நிகழ்பால்புதுமையாளர்களாக காணப்படும் பல்கலைக்கழக மாணவர்களும்
ஊழியர்களும் வகுப்பறைகளில் எதிர்நோக்கப்படும் கிண்டல்கள்
முதற்கொண்டு பல்கலைக்கழக வளாகங்களில் மேற்கொள்ளப்படும்
பகிடிவதை உட்பட பலவாறான பாரபட்சங்களையும் சிக்கல்களையும்
அனுபவிக்கின்றனர். உதாரணமாக ஒருவரின் ஆடை அமைப்பை வைத்து
அந்நபரின் பெறுமானம் மற்றும் கல்வியியல் அடைவை மதிப்பிடுவதானது,
அந்நபர் உண்மையில் கொண்டுள்ள திறன்களுக்கான மதிப்பை கண்டுணர
முடியாதவாறு மாற்றுகின்றது. தன்னை தன்பாலியல்புள்ள ஆணாக
அடையாளப்படுத்தும் பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி ஒருவர் தனது
இளமானி பட்டப்படிப்பு நாட்களில் அனுபவித்த சமூகரீதியான பாகுபாடுகளை
நினைவுறுத்தினார். “எனக்கு ஒரு காதலி இல்லாமலும் மதுபானம் அருந்தும்
வழக்கம் இல்லாமலும் இருந்தது. எனது ஆண் நண்பர்களைக் காட்டிலும்
பெண் நண்பர்களுடன் இருப்பது ஆறுதலளிப்பதாக இருந்தது. இது குறித்து
என்னைப் பற்றி வித்தியாசமாக பல ஆண் நண்பர்கள் பேசியதோடு அவர்கள்
என்னை ஒரு பொருட்டாக கருதவே இல்லை”. இது மாதிரியான நுண்ணிய
தாக்குதல்கள் பல்கலைக்கழக மாணவர்களை “கூட்டத்தில் பொருந்த
வேண்டிய தேவை நிமித்தம்” ஒன்றில் தமது அடையாளத்தை மறைக்கவோ
அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளங்களுக்கு தம்மை
ஒப்புக்கொடுக்கவோ தள்ளியிருக்கின்றது.
திருநங்கைகள் இன்னும் பல சவால்களை அனுபவிக்கின்றனர். பேராதனை
பல்கலைக்கழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் விடுதிகள் பெறுவதில் தான் அனுபவித்த சிக்கல்கள் குறித்து
பேசினார். இவ்விடுதிகள் பால்நடுநிலைப்பாடுகள் கொண்ட ஓய்வறைகளை
கொண்டிருப்பதில்லை எனக் கூறினார். இதனால், பல்கலைக்கழகத்துக்கு
வெளியில் விடுதி அறையைப் பெற வேண்டி இருந்ததுடன் இதனால்
பொருளாதாரரீதியாக பல சிக்கல்களை அனுபவிக்க நேர்ந்ததாகக் கூறினார்.
அண்மையில் நான் கலந்துகொண்டிருந்த ஒரு கலந்துரையாடலில் ஒரு
மூத்த பல்கலைக்கழக கல்வியியலாளர் ஒருவர் “வழமையான”
பாலியல்புகளை வெளிப்படுத்தாத மாணாவ்ர்கள் மருத்துவ உதவிகளை நாட
வேண்டுமென குறிப்பிட்டதோடு இதன்மூலம் குறிப்பால் திருநங்கையர்
மருத்துவ ஆதரவை பெற வேண்டும் என உணர்த்தினார்.
இவ்வகையான வெளித்தள்ளல்களின் விளைவுகள் பாரியவை.
நிகழ்பால்புதுமையாளர்கள் தமது அடையாளங்களை மூடி மறைப்பதனால்
அவர்கள் தனிமைப்படுதல், மன அழுத்தம் போன்ற மனநலம் சார்
சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இதை போல பால்புதுமையாளார்கள்
மீதான பாகுபாடு பல்கலைக்கழக சட்டக்கோவைகள் மற்றும்
பாடத்திட்டங்களில் அவர்களை குறித்த விடயங்கள் பொடுபோக்காக
விடப்படும் நிலையின் மூலமும் வெளிப்படுகின்றன. பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியத்தின் ஆதரவு இல்லாமை, பால்புதுமையாளர்கள் தம்மை
வெளிப்படுத்தல், அதன் மூலமான ஏற்பு, மதிக்கப்படுதல் மற்றும் ஆதரவு
பெறுதல் போன்ற அடிப்படை அம்சங்களிலிருந்து ஒதுக்கப்படுவது இதனை
மேலும் சிக்கலாக்கி இருக்கின்றது.
முன்னோக்கிய வழி
பல்கலைக்கழக உறவுகள் தமக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளும் உறவை
வலுப்படுத்தும் வகையில் நிகழ்பால்புதுமையாளர்கள் உட்பட அனைவரின்
பல்வகைமையையும் ஏற்றியங்கும் கலசாரமொன்றை ஏற்படுத்த வேண்டி
இருக்கின்றது.
இதன் முக்கிய அடைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்
(UGC) பால்மை சமநிலை மற்றும் சமத்துவத்துக்கான நிலையம் (SGEE)
பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உருவாக்கியிருக்கும்
“பல்வகைமையோடு வாழ கற்றுக்கொள்ளுதல்” எனும் பாடநெறி
முக்கியமானதாகும். இந்த 15 மணித்தியால பாடநெறியில் முக்கிய இரு
தலைப்புகள் பால்மை பல்வகைமை மற்றும் பாலியல் அடையாளங்கள்
குறித்து பேசுகின்றன. இத்தலைப்புகள் தொடர்பான ஆழமான அறிவை
வழங்குவதன் மூலமும் வெளிப்படையான கலந்துரையாடல்கள் மூலமும்
காலப்போக்கில் ஏற்படும் மனப்பாங்கு மாற்றத்தை இந்த பாடநெறி
உறுதிசெய்யும் இயலாற்றலை கொண்டுள்ளது. இந்த பாடநெறியை
செயற்படுத்தும் பொருட்டு பயிற்சியாளர்களுக்கான பயிற்சியை (ToT)
நாடளாவிய அரச பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டதன் மூலம்
பொருத்தமான உள்ளடக்கம் பாடநெறியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்
என்பதை பால்மை சமநிலை மற்றும் சமத்துவத்துக்கான நிலையம் (SGEE)
உறுதிசெய்துள்ளது.
கலாசார பழைமைவாதத்தை எதிர்கொள்ளும் முக்கிய வழிமுறை
தொடர்ச்சியான வெளிப்படையான கலந்துரையாடல்களே.
“பல்வகைமைத்தன்மையோட வாழப் பழகுதல்” போன்ற பாடநெறிகள்
இத்தேவையை மிகவும் அறிதல்கொண்ட வகையிலும்
மரியாதைக்குரியதாகவும் மேற்கொள்கின்றன. இவ்வாறான
கலந்துரையாடல்கள் பொருத்தமான உள்ளடக்கங்களை பாடத்திட்டங்களில்
இணைப்பதன் மூலம் வகுப்பறைகளிலும் மேற்கொள்ளலாம். முக்கிய
பல்கலைக்கழக பீட உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக
உறுப்பினர்களை பால்புதுமையாளர்களின் உள்ளீர்ப்புக்கான உதவியாளர்கள்
மற்றும் முன்னுதாரணர்களாகவும் ஆக்குவதன் மூலம் பல்கலைக்கழகங்களில்
அதிகமான உள்ளீர்க்கும் தளங்களையும் அதற்கான மனப்பான்மையையும்
வளப்படுத்தலாம். சமவயது கற்றல் குழுக்கள் மற்றும் கலந்துராயடல்கள்
மூலம் பால்புதுமையினரான மாணவர்கள் (மற்றும் ஊழியர்கள்) தமது
அனுபவங்களை பகிர முடிவதோடு தமக்கான ஆதரவுத்தளத்தை சமவயது
குழுக்களுக்கிடையே ஏற்படுத்தவும் வாய்ப்பாக அமைகின்றது.
நிறுவனமயப்பட்ட தடைகளை தாண்ட வேண்டும் என்றால்,
பல்கலைக்கழகங்கள் பாலியல் மற்றும் பால்மை வேறுபாடுகளை
அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பாகுபாடுகளுக்கு எதிராக
வெளிப்படையான கொள்கைகளை கைக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழக
தலைமைகள் இவ்வாறான கொள்கைகளை கருத்தில் எடுத்து
நடைமுறைப்படுத்துவதுடன் பல்கலைக்கழக நிர்வாக அங்கத்தவர்கள்
வெளிப்படையாக கலந்துரையாடகளில் ஈடுபடுவதோடு உள்ளீர்ப்பை
போதிப்பவர்களாக இருப்பது மேலும் இயல்பாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறான முயற்சிகள் பல்கலைக்கழகங்களில் மிகவும் ஆரோக்கியமான
சூழலை உருவாக்குவதோடு அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழக
ஊழியர்களும் தமது அடையாளங்களை எவ்வித அச்சங்களும், பாகுபாடுகளும்
இன்றி முழுமையாக வெளிப்படுத்தும் சூழல் உருவாகும்.