சுமதி சிவமோகன்
ஏன் புத்தகங்கள் ஏமாற்றுகின்றன?
ஏன் அகரவரிசையில் ஒவ்வோர் எழுத்தும் சங்கிலியிடப்பட்டிருக்கிறது
எல்லா மனித வாய்களும் கடிவாளமிடப்பட்டுள்ளன?
அதோனிஸ் எழுதிய கான்சர்ட்டோ அழ-குட்ஸ் எனும் புத்தத்தில் “பாலஸ்தீனம் பற்றி” எனும் கவிதையிலிருந்து (ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தவர் காலீத் மட்டவா)
இந்தக் கவிஞர் கெட்டப்பதைப்போல் ஏன் அகரவரிசையில் எல்லா எழுத்துக்களும் சங்கிலியிடப்பட்டிருக்கின்றன? இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முயன்றால் இதனை நான் ஒரு அறிதலியல் மற்றும் கற்பித்தலியல்சார் பிரச்சனையாக எழுப்பவேண்டும். அத்தோடு நான் இதனை பாலஸ்தீனம் பற்றிய கேள்வியாக எழுப்பவேண்டும். ஏனெனில் அறிவுருவாக்கத்தின் தொகுதிகளில் சிக்கியும் அவற்றின் வரைகூறுகளால் வடிவமைக்கப்பட்டதுமான எமது வாழ்க்கையானது நாம் பங்குகொள்ளும் பொது உலக வரலாற்றின் மிகப்பெரிய அரசியல் அபகீர்த்தியை எதிர்கொள்ள வேண்டும். இந்த மிகப்பெரிய அரசியல் அபகீர்த்தியே பாலஸ்தீனம்.
காஸாவில் இடம்பெறும் போரை நாம் பயக் கோரத்தோடு பார்க்கின்றோம். அமெரிக்கா ஈரானில் குண்டு வீசுவதும் இரான் திருப்பி தாக்குவதுமென நடந்துகொண்டிருக்கும் போரை பற்றியும் அப்போரின் உயர்வடையும் நிலை பற்றியும் நாம் பதட்டத்துடன் இறுக்கின்றோம். உக்ரைனில் போய்க்கொண்டிருக்கும் யுத்தம் மூன்றாம் உலகயுத்தக்கு கொண்டு செல்லலாம் எனும் பயத்தையும் கிளப்பியுள்ளது. ஒரு போர் இன்னொரு போருக்கு இட்டுச்செல்வதென தொடர் போர்கள் அண்மைக்காலமாக எமது வாழ்வின் அம்சமாக எப்போதும் இருந்துள்ளன. உலக அரசியலுக்கும், தான் விரும்புமாற்போல் உலக ஒழுங்கை ஆதிக்கம் செலுத்தி மாற்ற நினைக்கும் மேற்குலகின் தேவை என நாம் அதனை எப்போதும் விமர்சித்துள்ளோம். இதற்கு பாலஸ்தீனம் எப்போதுமே மையமாக இருந்துள்ளது. இவ்விளக்கமானது முக்கியமானதாக இருக்குமாற்போல், பாலஸ்தீனம் பற்றிய ஒரு கொட்பாடுசார் பொருட்குறி விளக்கத்தோடு பெரியளவில் பொருளாதார வார்த்தைகளில் சேர்க்கப்பட்டதாக அது இருக்கவேண்டும். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால், அதன் மக்கள், அந்த நிலத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு அபகரிப்புக்கள், போரினதும் வன்முறை குழப்பத்தினமும் கோரம், இன்டிபாடாக்களின் எதிர்ப்பு என வரலாற்று மற்றும் அரசியல் நோக்கில் இருக்க வேண்டும். இதனை நாம் காட்டும் ஆதரவு நிலையின் மற்றும் வியூகத்தின் ஒரு செயலாக நாம் செய்ய வேண்டும். ஏனெனில் எமது “புத்தகங்கள் ஏமாற்றுபவை”.
காலனித்துவம், நவகாலனித்துவம், மற்றும் நவதாராளவாதம்
வழியாய்வுரீதியில், இன்றய அரசியல் மற்றும் பொருளாதார கணமாகிய நவதாராளவாத்தோடு தொடங்குகின்றேன். நவீனத்தின் (மற்றும் முன்னேற்றத்தின்) ஒரு பொருளாதார மற்றும் கலாச்சார உண்மையாக நவதாராளவாதமானது எமது பொருளாதார அரசியல் கட்டமைப்பின் ஒரு கேள்விக்குட்படுத்தப்படாத அடித் தூணாகவும், காலனித்துவத்தை மிகக்கூடிய பொருளாதார பிடுங்குதல் மற்றும் மோசடியோடு சேர்க்கும் ஒரு பொருளாதார அரசியல் உலக ஒழுங்காகவும் இயல்பாக்கபப் பட்டுள்ளது. நவதாராளவாதம் ஒரு நவகாலனித்துவத்தின் தருணம். இத்தருணத்தில் உலகின் உழைக்கும் சனத்தொகையானது உலகளாவிய மூலதனத்துக்காய் ஒரு சுரண்டப்படும் தொழிலாளர் படையாக (இருப்பாக) மாற்றப்படுகின்றன. காலனித்துவ மூலதனத்தை உலகளாவிய மூலதனமாகவும் நிதிச்ச சந்தைகளாகவும் மீளுருவாக்கி அவை உலகத்தில் பல இடங்களிற்கு பாய்வதாய் நாம் பார்க்கிறோம். இந்த நிலை உலகத்தின் புது ஒழுங்காகவும் விடுவிக்கும் மெஸாயாகவும் பாசாங்கு செய்கின்றது. ஆனால், பாலஸ்தீனம் சொல்லுகிறது இல்லை!
மூன்றாம் உலகிலும் காலனித்துவத்துக்கு உட்பட்ட உலகிலுள்ள இடங்களிலும் மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களை அபகரித்தல் செயல்முறையின் பிரதான குறியீடாக நிலம் காணப்படும் முறையானது நவதாராளவாத தருணத்திலுள்ள நீடிக்கும் காலனித்துவ குணாம்சங்களில் ஒன்றாகும். நிலத்தை பண்டமாக சந்தைப்படுத்துவன் மூலம், பூகோள மூலதனம் அதனை மீள் காலனித்துவப்படுத்துகிறது. நிலம், நிலத்தை கட்டுப்படுத்தல், நிலத்தின் மக்களை கட்டுப்படுத்தல், நில சுரண்டல், அதன் மக்களின் உழைப்பை சுரண்டல் என்பன பற்றியதாகவே காலனித்துவம் எப்போதுமே இருந்து வந்துள்ளது.
நாம் வாழும் நவகாலனித்துவ நவதாராளவாத உலகினிலே வெறும் கேலிக்கூத்தாக மாத்திரமின்றி துன்பியல் நகைச்சுவையாகவும் காலனித்துவத்தின் மரபு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது. அத்தோடு பாலஸ்தீனின் அவல நிலை. காலனித்துவ அவல நிலையின் ஆழமான இழிவாக்கமாக நவதாராளவாதத்தை விளங்கிக்கொள்ளலாம். நவகாலனித்துவத்துக்கு உட்படுத்தவர்களாக, பூகோள வடக்கின், பூகோள உலக ஒழுங்கின் அரசியல் மற்றும் கொள்கைகளின் அப்பட்டமான வலியுறுத்தல்களாக வந்துள்ள கல்விசார் கொள்கைகளை எமது கல்விசார் கொள்கைகளாக மகிழ்வோடு தழுவுகின்றோம், மாற்றுகின்றோம், உருவாக்குகின்றோம். செயற்குழுக்கள், ஆணைக்குழுக்கள், இணை வேலைகள் என்பன இந்த கொள்கைகளை சந்தைப்படுத்த இணைகின்றன. புத்தகங்கள் தொடர்ந்தும் ஏமாற்றுகின்றன.
அறிவை காலனித்துவநீக்கம் செய்தல்: வெளியாள்
பின்காலனித்துவ உலகில், முக்கியமாக அறிவுருவாக்கம் மற்றும் கல்வி போன்ற பரப்புக்களில், அறிவை காலனித்துவ நீக்கம் செய்தல் ஓரளவு பலத்தை பெற்றுள்ளது. காலனித்துவத்தின் முன்னேற்றம் தொடர்பான கட்டுமானங்களுக்கு எதிராக ஒரு வல்லமையான சவாலை இது விடுக்கிறது. இருப்பினும், அரசியல் ரீதியாக கடின உழைப்பை வேண்டும் இந்த சுவாரஸ்யமான போக்கின் அதிக பகுதியின் கூடுலதான கவனம் வெறுமனே கிழக்கு/ மேற்கு அல்லது வடக்கு/ கிழக்கு இருமைகளை உருவாக்குவதில் சிக்கிவிட்டது. பெரும்பான்மையாக காலனித்துவ நீக்கமானது வெறுமனே காலனித்துவ சட்டகங்களை தேசியவாத வடிவங்களில் மீண்டும் கூறுகின்றது. இந்த ஆபத்து பற்றி பரம காலனித்துவ எதிர்ப்பாளர் பிரண்ட்ஸ் பாணன் தனது Black Skins White Masks (கறுப்பு தோல்கள் வெள்ளை முகமூடிகள்) மற்றும் Wretched of the Earth (உலகின் இழிவானோர்) போன்ற புத்தகங்களில் எச்சரித்துள்ளார். பாலஸ்தீனத்தில் ஐரோப்பிய யூதர்களின் குடியேற்றத்தை ஆரம்பித்துவைத்த அப்பட்டமாகவே இனவாதம் நிறைந்த காலனித்துவவாத பெல்பார் பிரகடனம் இடம்பெற்று ஒரு நூற்றாண்டு கடந்துவிட்ட இந்நிலையில், பாலஸ்தீனத்தில் கட்டவிழ்க்கப்படுபவற்றை நாம் பயத்தின் திகைப்போடு பார்க்கும் இவ்வேளையில், காலனித்துவ நீக்கம் பற்றிய உரையாடலில் ஈடுபடுவதற்கு பாலஸ்தீனம் ஒரு ஆரம்ப புள்ளியாக அமையலாம். பாலஸ்தீன் எவ்வாறு இருந்தது, இன்று எவ்வாறு உள்ளது எனும் இவ் மீள் ஆய்வில் பூகோள அரசியலை ஒரே ஒரு நுழையும் புள்ளியாக பாவிப்பதை விடுத்து, பதிலாக காலனித்துவ நாட்டங்களை மற்றும் இணங்கல்களை எமது முதன்மை கவனமாக மீள் மையப்படுத்தலாம்.
மேற்கு ஆசிய பகுதியில் (இது ஐரோப்பிய பார்வையிலிருந்து மத்திய கிழக்கு என அழைக்கப்படுகிறது) எப்போதுமே பொருளரீதியாகவும் உருவகமாகவும் ரசியா, சீனா, இந்திய உபகாண்டம் போன்ற ஆசிய நிலப்பரப்புக்களுக்கு பாதையாக இருந்துள்ளது. அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும், ஐரோப்பாவின் முக்கிய வெளியாளை உருவாக்கி ஐரோப்பிய அடையாளத்தை உருவாக்கிய புடைக்கலன் இதுவாகும். சிலுவை யுத்தங்கள் இதன் ஆரம்ப அறிகுறி. ஆரம்ப நவீனத்துவத்துவ காலத்தில் எல்லைகள் இன்னும் வலுப்பெறுகின்றன. கொலம்பஸ் பகாமாஸில் தரையிறங்கி உலகின் அந்தப் பக்கத்தில் இன அழிப்பை செய்ய ஆரம்பித்த வருடமாக 1492 லியே முஸ்லிம்களும் யூதர்களும் ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பதை நான் மறக்கலாமா? ஒதெல்லோ நாடகத்தில் எமிலியா தேஸ்திமோனாவிடம் “அவனுடைய (லோடோவிக்கோவினுடைய) அடி உதட்டினால் ஒரு முறை தொடப்பட பாலஸ்தீனம் வரை வெறுங்காலால் நடக்கக்கூடிய வெனிஸை சேர்ந்த ஒரு பிரபுத்துவ பெண்ணை எனக்கு தெரியும்” என கூறுவயதிலிருந்தே ஷேக்ஸ்பியரின் ஐரோப்பாவின் தோற்றநிலையின் காலனித்துவ புனைவிலிலே பாலஸ்தீனம் கொண்டிருந்த மைய பாத்திரம் எமக்கு உடனடியாக தெரிந்து விடுகிறது. இனம் பற்றிய ஷேக்ஸ்பியரின் சிறப்பான நாடகமானது ஒதெல்லோவை வேற்றுமைப்படுத்துவதை ஐரோப்பிய கிறிஸ்தவருக்கு எதிராக ஐரோப்பாவை சாராத கிறிஸ்தவர்கள் உள்ளடங்கலாக ஏனைய அனைவரையும் வேற்றும்மைப்படுத்துதல் பற்றிய கேள்வியாக உடனடியாக மையப்படுத்துகின்றது. இந்த நாடகம் வெறுமனே இனம் பற்றியதல்ல. அது இனமும் பால்நிலையும் தொடர்பானது. இந்த விடயமானது, உத்தேசமான ஒழுக்க மேன்மை எனும் பெயரில் காலனிடத்துவ அபகரிப்புக்களை வடிவமைக்க உதவிய ஐரோப்பிய உள்ளத்தின் உருவாக்கும் பதற்றங்களில் ஒன்றாகும். சில வேளைகளில், நாம் அனைவரும் நவீனத்துவத்தின் ஆரம்ப காலத்தில் சிக்கியுள்ளோம் போன்று தென்படுகின்றது. காலனித்துவ கற்பனை படத்தில் பாலஸ்தீனத்தின் இடத்தை தேடுவது எந்தவொரு அறிவு சார் காலனித்துவ நீக்க திடடத்துக்கும் முக்கியமானது.
அறிதலியல் ரீதியாகவும் கற்பித்தல் ரீதியாகவும் பாலஸ்தினம் பற்றிய கேள்வியானது எமது தேசியங்கள் பற்றியதும் தேசிய அரசு சிறப்புரிமைகள் பற்றிய கேள்விக்கும் எம்மை இட்டுச் செல்ல வேண்டும். பாலஸ்தீனத்தில் நக்பா இடம்பெற்ற வருடமான அதே 1948 ஆம் ஆண்டு, அதாவது இந்திய மற்றும் பாகிஸ்தானின் சுதந்திர காட்டுத் தீ இடம்பெற்று வெறும் ஒரு வருடம் பிறகு, இலங்கையில் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இவை ஒன்றும் தற்செயலானவை இல்லை. இவ்வகையான தொடர் அபகரிப்புக்கள் பற்றி நாம் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான கதைகளை சொல்லிக்கொண்டே போகலாம். தன்னுடைய Neither Settler Nor Native (வந்தேறியுமில்லை சுதேசியுமில்லை) எனும் புத்தகத்தில் மஹ்மூத் மம்தானி பாலஸ்தீனம் பற்றி வற்புறுத்துவது போல, தேசத்துக்கும் தேசிய வாதத்துக்கு அப்பாலே சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. பாலஸ்தீனத்தில் இடம்பெறும் முரண்பாடு மற்றும் போரின் தனித்தன்மைகளுக்கு அப்பால் நாம் பொதுவாக கொண்டிருக்கும் காலனித்துவ மரபுகளை ஆராய்வதிலிருந்தே பாலஸ்தீனத்தினத்துடனான எமது ஆதரவு நிலை தொடங்க வேண்டும். அது இன்றய உலகில் சர்வதேச மூலதனத்தின் சமூக அரசியல் ஒழுங்கு பற்றிய அதி தூரம் கொண்டு செல்லும் வினவல்களுக்கு எம்மை இட்டுச் செல்லும். அரசியல் கட்டமைப்பு, இரண்டு தேசியங்கள் மற்றும் தேசிய அரசுகளின் தொடர் ஜனநாயக மயமாக்கல் செயற்பாட்டின் மையமத்தின் காலனித்துவ நீக்கம் காணப்படுகிறது. அதே நேரத்தில் அது உலக ஒழுங்கையும் சாவாலுக் குட்படுத்துவதாகவுமுள்ளதுனு. எமது அறிவுக்கட்டமைப்புக்களை ஆராயும் எந்த ஒரு திட்டமும், கல்வியை காலனித்துவநீக்கம் செய்வதற்கான எந்த ஒரு உத்தேசமாக முயற்சியிலும், நாம் அதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய தேவை இருக்கலாம்.
கவிஞர், எழுத்தாளர், மற்றும் கோட்பாட்டாளருமான அதோனிஸ் சொன்னது போல அகர வரிசையின் ஒவ்வொரு எழுத்துமே சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேச வேண்டும். 2025 இல் பாலஸ்தீனம் எமக்கு பாதையை காட்ட வேண்டும். பாலஸ்தீனத்தின் நண்பர்கள் இந்த சவாலுக்கான தொனியை அமைக்க வேண்டும். இதனை செய்ததன் பிறகு மாத்திரமே, 1996 இல் செம்மணியில் நடந்ததையும், படுகொலையின் ஆழமற்ற புதைகுழிகளில் சிறுவர்கள் புதைக்கப் பட்டத்தையும் பயந்து விலகாமல் ஆனால் அதே வேலை பொறுப்பேற்றபடி திரும்பிப் பார்க்கலாம்.
ஜெருசலேமில் அதாவது அதன் பண்டைய சுவர்களினுள்
ஒரு யுகத்திலிருந்து இன்னொன்றுக்கு வழிகாட்ட ஒரு நினைவுமின்றி
நான் நடக்கின்றேன். அங்கேயுள்ள தீர்க்கதரிசிகள் புனிதத்தின் வரலாற்றைப்
பரிமாறிக்கொள்கின்றனர்… வானத்துக்கு ஏறி
ஊக்கக்கேட்டின் தளர்ச்சி குறைந்தவர்களாக இறங்குகிறார்கள். ஏனெனில் அன்பும்
சமாதானமும் புனிதம், அவை இரங்கி வருகின்றன.
மஹ்மூத் டார்விஸின் “In Jerusalem” (“ஜெருசலேமில்”) எனும் கவிதையில் இருந்து



