கல்வியை பாதுகாத்தல்: “அதோ வானத்தில் இருக்கின்றது! அதுவொரு
பறவை! அதுவொரு விமானம்! அதுவொரு சூப்பர் மனிதன்!

ஷாமலா குமார்

கல்வி நெருக்கடியில் இருக்கின்றது. நிதிப்பற்றாக்குறையால்
பாதிக்கப்பட்டுள்ள கல்வி போன்ற அமைப்புகளுக்கு பாரிய நிதிக்
கருவூலங்களும் தான தர்மம் வழங்குகின்ற நாட்டமும் அதிகமுள்ள தம்மிக
பெரேரா போன்றவர்கள் பெரும் ஆறுதலாக இருப்பார்கள். உண்மையில்
உலகளாவிய ரீதியில் 1970களில் இருந்தே நலன்புரி அமைப்புகளுக்கான
அரசாங்க நிதியொதுக்கீடுகள் பாரியளவில் குறைந்து வருவதோடு
இலங்கையில் 1950- 1960களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4%மாக
குறைந்திருந்த கல்விக்கான நிதியொதுக்கீடு 2022ஆம் ஆண்டு 1.2%மாக
ஆக்கப்பட்டிருக்கின்றது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும்
நிகழ்ச்சிநிரல்களை நிறுத்திவிட்டு அந்த இடைவெளிகளில் மூலதன குவிப்பை
ஊக்குவிக்கும் நிகழ்ச்சிநிரல்களை முன்வைப்பதை நியாயப்படுத்தும் நிழல்
பொருளாதார உலகத்தில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருக்கும் மூலதனங்கள்
நிழல் பொருளாதாரம் மூலம் கசியவிடப்பட்டு சமூகத்தின் அடிமட்டத்தில்
இருக்கும் மக்களுக்கு வினைத்திறனான வகையில் செல்லும் வாய்ப்புகள்
இருப்பதாக முறைப்படுத்தும் விவாதங்களை முன்வைக்கின்றார்கள்.
இந்தவகையில் பார்ப்பதாயின், தட்சர் வகை “தங்கியிருக்கும்”” நோய்
குணமடையக்கூடும் என்பது அவர்களின் விவாதமாக இருக்கின்றது.
இவ்வகையான அணுகுமுறைகளைக் கொண்ட கொள்கைகள் சொத்துரிமை
இடைவெளிகளை மேலும் அதிகரித்துள்ளதோடு தம்மிக பெரேரா
போன்றோரின் மீதான பொது அபிமான‌த்தையும் அதிகரித்துள்ளது.
நவதாராளவாதம் நோக்கிய வளைவானது கருத்தியல் மற்றும் அமைப்பியல்
சார்ந்த பாரதூரமான சூனியநிலையை மேலும் அதிகரித்துள்ளதோடு அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள சூனியநிலைக்குள் மிகப்பாரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்
உட்புகுந்திருக்கின்றன.

வெற்றிடம்- நவதாராளவாத தளங்கள்

நவதாராளவாதம் என்பது மனித வளர்ச்சியானது சந்தைகளுக்கு வாய்ப்பான
நிறுவன அமைப்புகளின் வெற்றியில் தங்கியிருக்கிறதென்ற அனுமானத்தின்
அடிப்படையில் வினைத்திறன், பயனுறுதிறன் மற்றும் புத்தாக்கம் என்ற
பேரில் தனிநபர் போட்டித்தன்மைக்கு வசதி செய்தல் மற்றும் தனியார்
தொழில்முனைவுகளுக்கு ஆதரவளித்தலுமாகும். ஹார்வீ (2005) அவர்கள்
கூறுவது போல, நவதாராளவாத பெறுமானங்கள் என்பது சந்தை மூலமான
கொடுக்கல் வாங்கல்களை “தன்னளவில் நன்னெறி சார்ந்த அமைப்பாக
கட்டமைப்பதோடு, முழு மொத்த மனித சமுதாயத்துக்குமே வழிகாட்டியாக
இயங்கும் திறனுடைய வழிகாட்டியாக தன்னை முன்னிறுத்துகின்றன”. அவர்
மேலும் குறிப்பிடும் போது, “இது சந்தைகளில் நிகழும் உடன்படிக்கைகள்
சார்ந்த உறவுகளின் முக்கியத்துவத்தை பேசுகின்றன. அதாவது, சந்தை
கொடுக்கல் வாங்கல்களை அதிகரிப்பதன் மூலம் சமூகத்தில் நல்லெண்ணம்
அதிகரிப்பதாக காட்டப்படுவதோடு இதன் மூலம் அனைத்து மனித
செயற்பாடுகளும் சந்தை என்கிற புள்ளிக்குள் அடக்கப்படுகின்றன”.

உலகம் நவதாராளவாதமயமாக மாறும் போக்கில் ஜனநாயகம் தொடர்பான
கருத்தாக்கம் மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வகிபாகம்
தொடர்பான அம்சங்களும் மாற்றமுறுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக,
ஜனநாயகம் என்பது குளறுபடியானதும் வினைத்திறனற்றதுமாக இருப்பதோடு
அரச நிறுவனங்களின் ஆக்கினைகளும் ஆக்கவினைகளும் பாரம்பரியமாகவே
சுதந்திர சந்தை அமைப்புடன் ஒத்திசைவற்ற அம்சங்களாகவே இருக்கின்றன.
சந்தைகள் மனிதர்களின் வருவாய்களை அதிகப்படுத்தும் நோக்கில்
இயங்குவதால் மனிதர்கள் வெறுமனே தனிப்பட்ட வருவாய்க்காக
வரையறுக்கப்பட்டுள்ள வளங்களுக்காக சண்டையிடும் தனிநபர்களாகவே
கட்டமைக்கப்படுகின்றார்கள். தனிமனிதர்கள் ஒரு சமூக இயக்கத்தின்
தவிர்க்க முடியாத அங்கங்களாக பார்க்கப்படுவதையிட்டு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் சந்தை அமைப்பில் வாழும்
தன்மெய்ம்மையாக்கத்தில் கரிசனமுள்ள தனி அலகுகளாகவே
பார்க்கப்படுகின்றார்கள். தனிநபர்கள் அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும்
பொருட்டு தெரிவு செய்து உரிமம் கொண்டாடும் பொருட்கள் மற்றும்
சேவைகளை அடையும் செயற்பாட்டில் காணப்படும் தடைகளை தகர்ப்பதே
அரசின் பணியாகும்.

இந்த அனுமானம் சாத்தியமானதாகவே இருப்பதாகக் கருதினாலும் கூட
இவ்வாறான சிந்தனை உய்த்தறியப்படும் வகைக்கூறுகள் அடிப்படையில்
பிழையானவை. உதாரணமாக, தனியார் சமூக சேவைகள் விலை அதிகரிப்பு
(வினைத்திறனின்மை) மற்றும் பண்புத்தரம் குறைவடைதல்
(பயனுறுதியற்றதன்மை) ஆகியவற்றில் சென்று முடிகின்றன என்பதாக
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நவதாராளவாதத்தின் வெற்றிக் கோஷங்களுக்கு
அப்பால், அவை அரச நிறுவனங்களில் இருந்து மனிதத்தன்மையை
அழித்துள்ளதோடு, சமூகத்தில் வறுமையான நிலையில் வாழும் மக்களுக்கு
ஐயப்பாடான சூழலை உருவாக்கியிருப்பதோடு வாய்ப்புகளை ஏற்படுத்துவதில்
பாரிய ஏற்றத்தாழ்வுகளாஇ ஏற்படுத்தியிருக்கின்றன.

நவதாராளவாத கருத்தியலின் படி அரச கல்வி அமைப்பானது விலை ஏறிய,
வினைத்திறனற்ற, பயனுறுதியற்ற அமைப்பாகவும், இதனால் சந்தை
இடையீடு தேவை எனவும் கூறுகின்றன. இதன் அடிப்படையில், கல்வி
நிறுவனங்களின் பங்களிப்பானது நுகர்வாளர்களை (மாணவர்கள் அல்லர்)
சந்தைக்குப் பொருத்தமான திறன்களை அதிகரிப்பதற்கான தெரிவுகளை
அறிவு, திறன்கள் மற்றும் மனப்பான்மை ஆகியவற்றை கல்விச் சந்தைகளின்
மூலம் வாங்குவதற்கான வசதிகளை மேற்கொள்ளும் அமைப்புகளாகும்.
நெருக்கடி நிலை எங்கு ஏற்படுமெனில், இவ்வாறான நுகர்வாளர்களில் சிலர்
“பண்புத்தரமற்ற” திறன்களை உள்ளீர்க்கும்போதாகும். மலடாக்கப்பட்டிருக்கும்
அரச அமைப்பானது தனிநபர்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்களை
பொதுவான அளவீட்டின் மூலம் அளவிடக்கூடிய பண்டங்களாக மாற்றுவதன்
மூலம் நுகர்வாளார்களுக்கான தெரிவுகளில் இலகுத்தன்மை ஏற்படுவதை
உறுதிப்படுகின்றது.

கல்வித்துறை நெருக்கடியில் காணப்படுவதற்கான காரணத்தை அறிய
முற்படுகையில், வினைத்திறனின்மை (மற்றும் ஊழல்கள்) என்பது
மிகக்குறுகிய அடிப்படையில் ஒரு காரணமாக முன்வைக்கப்படுவதோடு
இதனை நிவர்த்தி செய்ய தனியார் துறையின் ஈடுபாடு வேண்டப்படுகின்றது.
கெட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்
கூறலுக்கான முகாமைத்துவ அமைப்புகள் மூலமாக கட்டுப்படுத்தப்பட
வேண்டும். கல்வித்துறை சந்தை அமைப்புகளை நோக்கி திறப்படும்
போதுதான் அவை சிறப்பான நிலையை அடைவதாக
வலியுறுத்தப்படுகின்றது. வகுப்பு மற்றும் பால்மை சார்ந்து கருணையற்று
இயங்கும் சந்தைகளில் தொழில்களை பெறும் நோக்கில் மாணவர்களில்
தலைகளில் சுமத்தப்படும் “சந்தைக்கு பொருத்தமான” தகவல் திரட்டுகளின்
வழியாக மாணவர்கள் உணரும் அயன்மையாகும் உணர்வைப் பற்றி யாரும்
அலட்டிக்கொள்வதில்லை. வெற்றியை வெறுமனே விற்பனையாகக் கூடிய
திறன்களின் உள்ளீர்ப்பு எனவும் நலன்புரியை வெறுமனே
“கையளிப்புகளாகவும்” பார்க்கும் வன்முறை எங்குமே
ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. சமூக இயங்குதிறனுக்கு பெரும்பாலும்
பெற்றோரின் செல்வமே காரணமாக இருப்பதும் இதனால் நாட்டில்
கிட்டத்தட்ட 30%மான மாணவர்கள் இத்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல்
இருப்பதும் மிகச்சிலரே கல்விக்காக செலவளிக்கும் நிலையில் இருப்பதும்
எங்குமே பேசுபொருளாகுவதில்லை. சந்தைகள் சார்ந்த மொழியில் இதனை
சட்டகப்படுத்தினால் சிக்கல் மிக எளிமையானது. மாறாக இந்தச் சிக்கலை
அமைப்பு சார்ந்த சமமின்மையாக சட்டகப்படுத்தும் போது அனைவரும்
மௌனிப்பதோடு அதனை சுதந்திர சந்தை ஊதிப்பெருப்பித்தும்
வைத்திருக்கின்றது.

உள்ளிருந்து எந்த வாகையரும் வரவில்லையா?

பொதுமக்களிடம் கல்வித்துறை எவ்வகையில் செயலூக்கமற்று இருக்கின்றது
என்ற பொதுவான அபிப்பிராயம் இருக்கின்றது. கல்வித்துறையில் அதிக
ஈடுபாடு காட்டும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போன்றொர் ஏன் இந்த எளிமையான எடுத்துரைப்புகளில் இருந்து பின்வாங்குவதில்லை என எவரும்
கேட்கலாம். அதற்கான பகுதியளவான காரணமாக உள்ளிருந்து அவ்வாறாக
எழும், குறிப்பாக கூட்டான‌ குரல்கள் சிலவேளை சந்தை அமைப்புக்கு
எதிரான, பிற்போக்கான, வினைத்திறனற்ற மற்றும் பயனுறுதியற்ற
முயற்சிகளாக பெயரிடப்படுகின்றன. இவ்வாறாக குரல்கொடுப்பவர்கள்
கெட்டவர்களாக பார்க்கப்படுவதோடு அவர்களும் நெருக்கடியின் பகுதியாக
பார்க்கப்படுகின்றார்கள். இவ்வாறாக முன்வைக்கப்படும் விமர்சனங்களே
அமைப்பு மாற்றப்பட வேண்டியிருப்பதற்கான சாட்சியங்களாகும். ஆகவே,
இவ்வாறான நெருக்கடிகள் குறித்து பேசும் ஆசிரியர்களும் மாணவர்களும்
அவதூறு மற்றும் ஒடுக்குமுறை மூலம் மௌனிக்கப்படுகின்றார்கள்.
சூப்பர் மனிதன்

ஆசிரியர்களும் மாணவர்களும் மிக நுணுக்கமான மௌனிக்கப்படும் சூழலில்
விழுமிய நவதாராளவாத பிரஜை என்கிற மாயபிம்பத்தினால் தசாப்தங்களாக
பொதுமக்கள் கட்டுண்ட நிலையில் அரசாங்கம் நவதாராளவாத தர்க்கத்தால்
மிகுந்திருக்கும் போது, கொடையாளிகள் மீட்பர்களாக போற்றப்படுகின்றார்கள்;
தனியார் தொழில்வான்மையின் தலைமையான ஒரு பில்லியனர் எம்மை
மீட்பதற்காக புறப்படுகின்றார் என நாம் நம்புகின்றோம். உலகளவில் பில்
மற்றும் மெலின்டா கேட்ஸ் அமைப்பு கல்வித்துறை மற்றும்
சுகாதாரத்துறைகளில் தமது இடையீடுகள் காரணமாக போற்றப்படுவதை
போன்று இலங்கையின் கல்வித் துறைகைக் காப்பாற்ற‌ தம்மிக மற்றும்
ப்ரிசில்லா அமைப்பு தடம் பதிப்பதை நாம் பார்க்கின்றோம். கடந்த சில
வருடங்களாக இவர்கள் இலங்கையில் DP கல்வி என்ற பெயரில்
பாடசாலைக் கல்வியை குறைநிரப்பும் நோக்கில் நிகழ்நிலை தளாமொன்றை
உருவாக்கியுள்ளதோடு, “டிஜிட்டல் பல்கலைக்கழகம்” என்ற அலகில்
ஏற்கனவே இணையத்தில் காணப்படும் இலவச நிகழ்நிலை பாடநெறிகளை
அல்லது பாரியளவிலான திறந்த நிகழ்நிலை கற்கைநெறிகளையும் (MOOC)
மெய்நிகர் தகவல் தொழிநுட்ப வளாகமொன்றையும்
உருவாக்கியிருக்கின்றனர். இம்முயற்சிகள் மூலம் மாணவர்களுக்கான கல்வி
வள அணுக்கத்தை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம்; ஆனால்
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முகங்கொடுக்க முடியாது. கொடையாளி என்பவரும் இந்த சகாப்தத்தின் உருவாக்கமே. அரசாங்க
கொள்கைகள் காரணமாக சாத்தியமாகிய சொத்து குவிப்பு மூலமாகவே ஜெஃப்
பேசோஸ், அம்பானி போன்றவர்கள் உருவானார்கள்; அவ்வாறான சொத்துகள்
சில தசாப்தங்களுக்கு முன்னர் வரிகளின் மூலம் பொதுப்
பணப்பெட்டிகளுக்குள் இருந்திருக்க வேண்டிய சொத்துகளாகும். இவ்வாறான
மனிதர்களுக்குப் பின்னால் வாழ்வில் வென்று முன்னேறிய பல்வேறு
இன்னல்கள் தொடர்பான கதையாடல்கள் இருக்கும்; தற்புகழ்ச்சி கொண்ட
பணக்கார சூப்பர் மனிதர்கள் இவர்கள். இவர்களின் கதைகள் நவதாராளவாத
தர்க்கத்தோடு ஒன்றிப்போகும் தனிநபர் கதையாடல்கள். இவ்வாறான
மனிதர்கள் கல்வித்துறையில் முன்வைக்கும் தீர்வுகள் அனைவரும் தங்கள்
உளதைரியத்தால் தடைகளை தாண்டி உழைப்பின் மூலன் கனியை
சுவைப்பதாகத் தான் இருக்கும்.

இவ்வாறான கொடையாளிகள் சமூக செயற்றிட்டங்களில் தனியார்
அமைப்புகளின் மாதிரிகளை கொண்டுவருவார்கள்; இவ்வாறான
வழிமுறைகளே அவர்களின் சொத்துக்குவிப்புக்கு காரணமாக இருக்கும்.
இவ்வாறான மாதிரிகள் அவர்கள் சொத்துக் குவிப்புக்காக அணுகப்பட்ட
பாணியான ஏற்கனவே நிலவும் அமைப்பு முறைகளில் உடனடி, தீவிர, சில
நேரங்களில் இடர்வரவு நிரம்பிய தீர்மானங்களின் மூலம் தீர்வுகளை
முன்வைப்பார்கள். பொது நிறுவனங்களில், குறைந்தபட்சம்
கோட்பாட்டளவிலாவது முற்படுத்தல், இயங்கமைப்பு மற்றும் செலவு
ஆகியவற்றை நிர்ணயிக்கும் பொருட்டு நியாயமான செயன்முறையை
வேண்டி அதிகாரத்துவ முறைமையை கையாள்வார்கள். தம்மை
கொடையாளிகளாக‌ முன்னிறுத்தும் “குழப்பவாதி” தொழிலதிபர்களின்
அணுகுமுறைகளைக் காட்டிலும் இந்நடைமுறை தீர்மானம் மேற்கொள்ளும்
செயற்பாட்டில் கருத்தூன்றியதாகவும் மெதுவாகவும் இருக்கும். இதனை
மேலும் விளக்கும் ரம்யா குமார் (அவர்களுடன் சீட்ஸ் மற்றும் மெக்கோய்‍-
ப்ரெஸ் வெளியீட்டில்) பரோபகார முதலாளித்துவம் நலன்புரி மூலதனங்களை
மேற்கொள்ளும் போது தொழிலுக்கான மூலதனங்கள் போல உருப்படியான
அனுகூலங்களை எதிர்பார்த்தே மேற்கொள்ளும் என்கின்றார். தம்மிகவின் எதிர்பார்ப்பு தொழில் உருவாக்கம் தொடர்பான அளாவிடப்பட்ட நலன்களை
கல்விப்புலத்தில் உருவாக்குவதே அன்றி இவ்வாறு கணிக்க முடியாத,
பெரும்பாலானவர்கள் வேண்டாத நாட்டங்களான கல்விசார் அடிப்படையில்
மிகவும் இயங்கு நிலையில் இருக்கும் ஜனநாயகத்தை மேம்படுத்தக்கூடிய
பிரஜைகளை உருவாக்குவது அல்ல.

இந்த பரோபகாரிகள் சமூகத்தின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கின்றார்கள்.
உலகளவில் புகழ்பெற்ற கேட்ஸ் அமைப்பு பல நாடுகளில் கொள்கையளவில்
தலையீடுகளை மேற்கொள்கின்றது (ஸ்வாப், 2023). கிடைக்கப்படும் சில
சார்பற்ற ஆய்வுகள் கூட அவற்றின் வினைத்திறனை
கேள்விக்குட்படுத்துகின்றன. நிதிகள் போதுமற்ற சூழலில் இயங்கும் அரச
மற்றும் அரச சாரா அமைப்புகள் நிதி வழங்கலில் தடை ஏற்படலாம் என்ற
அச்சத்தில் அது குறித்து பேசாமலேயே இருக்கின்றன. ஸ்வாப் அவர்கள்
இவ்வாறான பின்னடைவுகளால் விளைந்த நிகழ்வுகள் சிலவற்றை
ஆவணபப்டுத்துகின்றார்.

எமது வரிப்பணம் எவ்வாறு செலவளிக்கப்படுகின்றது என்ற விடயம் எமக்கு
தெரியப்படுத்தப்பட அனுமதிக்கப்படுவோமாயின் (குறைந்தபட்சம் எமது
நாட்டில் PUCSL போன்ற அமைப்புகளால் அரச அமைப்புகளின் செயற்பாடுகள்
அவதானிக்கப்படுகின்றன) இவ்வாறான நிதிகள் சிலரின் கட்டுப்பாட்டில்
இருப்பதை அறியலாம். எனவே, நிதிகள் காணப்படும் ஒரே காரணத்தால் சில
தனிநபர்கள் பொதுக்கொள்கை உருவாக்கத்தில் தாக்கம் ஏற்படுத்த
அனுமதிக்கப்படுகின்றனர். 2022ஆம் வத்தேகம அவர்கள் கூறியது போல,
தம்மிக பெரேராவின் கல்வித்துறை தொடர்பான இடையீடுகளை அவரிடம்
சொத்து காணப்படும் ஒரே காரணத்துக்காகவே கேள்விக்குட்படுத்தலாம்.

நிதியீடுகளுக்கான விருப்பமான வளமாக பரோபகாரம் மாறும்போது,
பரோபகாரத்தில் பொதுமக்களுக்கான நிதியீடுகள் தங்கியிருக்கும் போது
அவற்றில் பொதுக்கொள்கைகள் பின்னிப் பிணைந்திருப்பதால் ஜனநாயக
செயன்முறை முக்கிமற்றுப் போகின்றது. பொருளாதார நெருக்கடியினை
தொடர்ந்து உயர்கல்விப்புலத்தில் ஏற்படும் போக்கு மாற்றங்கள் இதற்கான சான்றுகளாகும். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் பிரபா மனுரத்ன
அவர்கள் குறிப்பிட்டது போன்று கல்விக்கான நிதியீட்டம் என்பது அரசியல்
உரிமை என்பதிலிருந்து தொண்டு வழங்கலாக மாறியிருக்கின்றது.
இறுதியாக, ரம்யா குமார் மற்றும் ஏனையோர் (ப்ரெஸ் வெளியீடு) கூறுவது
போன்று பரோபகாரிகள் மற்றும் அவர்கள் சார்ந்த வகுப்பு தொடர்பான
பொதுமக்கள் அவதானம் மாறுவதோடு அவர்களின் சொத்து பொதுமக்களுக்கு
கொள்ளத்தக்க அம்சமாக மாறிப்போகின்றது.

தம்மிக பெரேரா போன்றவர்கள் எமது கல்வித்துறையை முன்னின்று தூக்கி
நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் தூக்கி நிறுத்தும்
செயற்பாடு வினைத்திறனான வரிக்கொள்கை மூலம் முன்னேற்றகரமான
பொதுமக்கள் கண்காணிப்பு மற்றும் அவர்களின் அதிகாரத்தை முன்னிறுத்தி
மேற்கொள்ளப்படாது இவற்றையெல்லாம் தட்டிக்கழித்து விட்டு வெறுமனே
தயவில் தங்கியிருப்பதை கவனமாக கவனிக்க வேண்டி இருக்கின்றது.