ஷாமலா குமார்
அறிவிக்கப்பட்ட பிரதான பொதுக் கல்வி பாடத்திட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பரிசீலனை செய்து கருத்து தெரிவிக்கும் வகையில் ஒரு ஆவணமும் வழங்கப்படாமை இக்கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான எனது பிரதான கரிசனைகளில் ஒன்றாகும். பொது/ அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமையை கொண்டவை. இவ்வாறு இருப்பதற்கு பதிலாக, தரம் ஒன்பதில் அறிமுகப்படுத்தவிருக்கும் “சைகோமெட்ரிக்ஸ் சோதனைகளை” நான் கவனம் செலுத்த முயன்றபோது, செய்தித் துணிக்கைகள், கல்வி அமைச்சின் அலுவலர்களுடான உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களையே நான் பயன்படுத்தவேண்டியதாகவுள்ளது. கல்வி அமைச்சை பொறுத்தவரையில் எழுத்தறிவு எண்ணறிவு திறன்கள் மற்றும் ஒரு “தொழில் ஆர்வ பரீட்சை [சரியாக சொல்லப்போனால் ஒரு தகவல் களஞ்சியம், எழுத்துப் பரீட்சை இல்லை] (ஜூலை 22, 2025, Daily Mirror)
சைக்கோமெட்ரிக்ஸ்
பிரதானமாக கல்வியியல் வேலைக்கமர்த்தல்சார் மற்றும் சிகிச்சைசார் தேவைகளுக்கு, மனோவியல் குணாம்சங்களை அறிய அளவிடல்/ சோதனைக் கோட்ப்பாடு மற்றும் ஆய்வை பயன்படுத்தி, மனோவியல்சார் தோற்றப்பாடுகளை அளவிடுவதே சைக்கோமெட்ரிக்ஸ் ஆகும். சைக்கோமெட்ரிக்ஸ் நிபுணர்கள் வெவ்வேறுபட்ட நேரங்கள், இடங்கள், மக்களிடையே ஒரே மனித குணங்களை அறிவதற்கு வினைத்திறனான தரப்படுத்தப்பட்ட கருவிகளை உருவாக்க விரும்புகிறார்கள். இக் கருவிகளை நிர்வகிக்கும்போதும் விளக்கும்போதும் சீர்த்தன்மை முக்கியம்.
சைக்கோமெட்ரிக்ஸ் ஒரு நீண்ட இழிவான வரலாற்றை கொண்டது. இதன் வேர்களை பிரான்சிஸ் கால்டனுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் திகிலூட்டும் இனவாத இனமேம்பாட்டியல் இயக்கத்தோடு தொடர்புபட்டவை. தெரிந்தெடுத்து இனப்பெருக்கம் செய்ய வைப்பதன் மூலமாக மனித இனத்தின் அறிவாற்றலை அதிகரிக்கலாம் என கால்டன் நம்பினார். ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில் வெள்ளை இனத்தவர் மரபணு ரீதியாக அதிக அறிவுபடைத்தோர் எனும் விளக்கத்திலேயே இனமேம்பாட்டியல் இயக்கம் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. இன்றும் கூட இன (ethnic and racial) சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களை பரீட்சைகள் விளிம்புநிலைப்படுத்தவும் அவர்களுக்கு மேலும் பிரதிகூலங்களை ஏற்படுத்தவும் கூடும் என புலமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வரலாற்று ரீதியாக பார்ப்போமானால் ஐக்கிய அமெரிக்காவிலே கறுப்பினத்தவருக்கு சாதகமற்ற அதிக விளைவுகளை கொண்டிருக்கக்கூடிய தீர்மானங்களை எடுப்பதை நியாயப்படுத்துவதற்கு சைக்கோமெட்ரிக் சோதனைப் புள்ளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புள்ளிகளில் காணப்படும் வித்தியாசங்கள் எமது முற்கற்பிதங்களோடு ஒத்துப்போகும் வகையில் விளக்கப்படும் அபாயத்தில் எப்போதும் உள்ளன. இவ் சாத்தியங்களிருந்து எம்மை நாம் எப்போதும் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
பக்கச்சார்ப்பை கணிப்பிடுதல்
ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்த நபர்களிடம் நியாயமற்று/ பாரபட்சமாக ஒரு கருவி நடக்கின்றது என சைக்கோமெட்ரிக் நுட்பங்களால் கணிக்க முடியும். உப குழுக்களிடையே அர்த்தத்தின் அடிப்படையில் புள்ளிகள் வேறுபடுவதை சில வேளைகளில் கருவிகள் காட்டலாம். அவ்வாறாயின் இவ் மக்களிடையே புள்ளிகள் ஒரே மாதிரியாக பார்க்கமுடியாது. அமெரிக்காவின் கல்வி மற்றும் மனோவியல்சார் பரீட்ச்சைகளுக்கான நிபந்தனைகள் (AERA, APA, NCME, 2014) பின்வருமாறு கூறுகிறது:
“இன (race, ethnicity) பால்நிலை, வயது, சமூக பொருளாதார நிலை, மொழி அல்லது கலாச்சார பின்னணி உள்ளடங்கலாக பரிசோதனைக்கு கருத்தில் கொள்ளப்படும் மக்கள் தொகுதியின் அனைத்து நபர்களின் பண்புகளும் அச்சோதனையின் வடிவமைத்தல், நிர்வகித்தல், புள்ளியிடல், விளக்குதல் மற்றும் பயன்படுத்தல் போன்றவற்றின் அனைத்து கட்டங்களிலும் கருத்தில் கொள்ளப்பட்ட வேண்டும். இதனால் நியாயமான கணிப்பீட்டை மேற்கொள்ளுவதற்கான தடங்கல்களை குறைக்க முடியும்”.
கருத்திலே கொள்ள வேண்டிய இவ் விடயங்களுக்கு பெரியளவான சரிபார்த்தல் ஆய்வு தேவைப்படும். அவ் ஆய்வு பொதுவாக அனைவராலும் பெறக்கூடியன. ஆனால், கல்வி அமைச்சு தான் பயன்படுத்த திட்டமிட்டுள்ள கருவிகள் பற்றிய தகவலை என்னால் தேடிப்பெற முடியவில்லை.
தொழில் ஆர்வம், எழுத்தறிவு, எண்ணறிவுசார் பரீட்சசைகளும் பொதுப் பாடத்திட்டமும்
தொழில் ஆர்வம். வெவ்வேறு பாட சேர்க்கைகளுக்கு மத்தியில் தெரிவுகளை மேற்கொள்ளவும் கல்விசார் கற்றலயா அல்லது தொழில்சார் கற்கைகளையே தொடர்வது எனும் தெரிவினை மேற்கொள்ளவும் உதவி செய்யும் வண்ணம் தொழில் வழிகாட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஓர் ஆர்வம்சார் தகவல் களஞ்சியத்தை பயன்படுத்துவது கல்வி அமைச்சின் திட்டமாகவுள்ளது. தொழில் ஆர்வம் ஒருவரின் திறன்களை மதிப்பிடாது. அது வெளிப்படையாக அர்த்தங்கோள்வது போல் ஒரு நபரின் ஆர்வங்களை மட்டுமே அளவிடும். தமக்கு ஆர்வமான பாடப்பரப்புக்களை மாணவர்கள் தெரிவு செய்வதை ஆதரிப்பது சிறந்த விடயமே. ஆனால் தொழில் என்பது அதிலிருந்து வேறுபட்ட விடயம். அது பல விடயங்களை கருத்தில்கொண்டு ஒரு தொழிலை தெரிவு செய்வது பற்றியதாகும். ஒரு பதினான்கு வயது மாணவர் தனது தொழில்சார் விருப்பங்களை அடிப்படையாகக்கொண்டு கல்விசார் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டுமா என்றோ அல்லது மக்களின் பல்வேறுபட்ட அபிலாசைகளை இலங்கையின் தொழில்ச் சந்தை நிறைவு செய்யுமா என்றோ ஒருவர் கேள்வி எழுப்பலாம். அக்கேள்விகள் இக் கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டவை. எனது கரிசனை என்னவெனில் நான் கல்வி அமைச்சின் அலுவலர்களோடு கொண்ட கலந்துரையாடல்களில் இக் கருவிகளின் நோக்கம் குறித்து ஒரு கவலைக்குரிய பிழையான புரிந்துணர்வு காணப்படுகிறது.
கல்வி முறையைமையோடு தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஒரு பெற்றோர் எனும் நிலையிலிருந்தும் எனது கவலை வருகின்றது. எனது மகன் கற்பிக்கப்படும் முறை பற்றி விளங்க முயன்றபோது, கல்வி முறைமையில் ஆழமான கவனயீனம் இருப்பதை உணர முடிந்தது. முறைமைப்படுத்தப்பட்ட ஒரு தொடர் தொழில்முறை அபிவிருத்தி (Continuous Professional Development -CPD) திட்டம் எதுவுமே ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தமக்காக தாமே கவனிக்க வேண்டிய நிலையிலுள்ளனர் அவர்கள். நன்றாக சீர்மை செய்யாத விற்பனை செய்யப்படும் வளங்களை பயன்படுத்தி தமக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்குள் எதை கற்பிப்பது என்றும் எவ்வாறு கற்பிப்பது என்றும் தீர்மானம் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வாறான அடிப்படை சூழலிலேயே இவ் கணிப்பீடுகள் அறிமுகமாகவுள்ளன.
சரிபார்த்தல் ஆய்வில் போதுமான சைக்கோமெட்ரிக்ஸ் ரீதியான நம்பகத்தன்மையை தொழில் ஆர்வ கருவி காட்டினாலும்கூட அதை ஆசிரியர்கள் எவ்வாறு பயன்படுத்துவார்கள்? அவர்களின் வழிநடத்துதலில் எந்தளவிற்கு அவர்களின் சொந்த முற்கற்பிதங்களும் பக்கச்ச்சார்பும் தாக்கம் செலுத்தும்? குறைந்த பயிற்சியே கொண்ட ஆனால் பாடசாலைகளில் கணிசமான வல்லமை கொண்ட ஆசிரியர்கள் கவனயீனமாக இப்புள்ளிகளை பொருத்தமற்ற முறையில் பயன்படுத்தலாம்.
எழுத்தறிவும் எண்ணறிவும். எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுச் சோதனைகளைஅறிமுகம் செய்வது பற்றி அறிவித்தல் கூறுகிறது. இருப்பினும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது தெளிவின்றியே காணப்படுகிறது. “ஒரு சீறாரும் பின்னடைய விடலாகாது” (No Child Left Behind) எனும் அமெரிக்காவின் புஷ் ஜனாதிபதியாக இருந்த கால கொள்கையோடு இவ் சோதனைகளை தொடர்புபடுத்தி கல்வி அமைச்சின் ஒரு அலுவலர் ஒரு முறைசாரா கலந்துரையாடலில் பேசினார். 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்தை சேர்ந்த NCLB எனும் இவ் புஷ் ஆட்சிக்கால கொள்கையை மாணவர்களின் அடைவுகளை அவர்களின் திறன் வெளிப்பாடு மதிப்பீடோடு இணைக்கிறது. அவ்வேளையில், பாடசாலைகளை மதிப்பாய்வு செய்வதற்கு சோதனைப் புள்ளிகளை பயன்படுத்துவது விரும்பத்தகாத கேடான விளைவுகளுக்கு இட்டுச்செல்லலாம் என மனோவியலார்கள் எச்சரித்தனர். இரண்டு தசாப்தம் கழிந்த நிலையில் அதனை பின்னிட்டு பார்க்கையிலே NCLB கொள்கைக்கு கீழ் சோதனைப் புள்ளிகள் அதிகரித்தமை குறைந்தளவிலேயே மெய் கல்வி எய்தல்களுடன் தொடர்பு பட்டதாக காணப்பட்டதோடு அவை ஆசிரியர்களின் மனவுறுதியை குறைப்பதுமாகவும் பரந்து பட்ட கற்கையை மழுங்கடிக்கூடிய பரீட்சையை நோக்காக கொண்ட வகுப்பறைகளை வலுவூட்டியதாகவும் இவை பற்றிய ஆய்வு கூறுகிறது. அதிக விளைவுகளை கொண்டிருக்கக்கூடிய சோதனைகளின் இவ் விளைவுகளை க.போ.தா. சாதாரண தர பரீட்சையிலும் உயர் தர பரரீட்சையிலும் ஏற்கனவே இலங்கை முகங்கொடுக்கிறது. மேலும் மொழி அடைவுமட்டத்தையும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) கணித அடைவு மட்டத்தையும் சாதாரண தர பரீட்சையே கணிப்பிடுவதால் தடங்காணும் நோக்கில் புதிய எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கணிப்பீடுகளை கொண்டுவருவது தேவையற்றதாக தென்படுகிறது.
எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பரீட்சைகளை பாடசாலை திறன் வெளிப்பாட்டை ஒப்பிட பயன்படுத்துவது அனைத்து மாணவர்களும் ஒப்பிடப்படக்கூடியவர் எனும் முற்கற்பிதத்தை எடுக்கிறது. இருப்பினும் சில மாணவர்கள் தமது திறன் வெளிப்பாட்டை பாதிக்கும் வகையிலான வளர்ச்சிசார் மற்றும் நரம்பியல்சார் சவால்களை சந்திப்பார்கள். இதனால் பாடசாலையின் புள்ளிகள் கீழே செல்லும் வாய்ப்புள்ளது. சைக்கோமெட்ரிக்ஸ் சோதனை முறையை பயன்படுத்தும் பல நாடுகள் விசேட தேவையுடையோருக்கான வசதிகளை வழங்குகின்றன. இருப்பினும் அனைத்து பாடசாலைகளும் அணுகக்கூடிய கணிப்பீடு செய்வதில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் இலங்கையில் இல்லை. இதை விட வேதனைக்குரிய விடயம் அவ் தேவைகளுடைய மாணவர்கள் மருத்துவரீதியாக சோதனையிடப்பட்டு உத்தியோகபூர்வமாக “வலுவற்றோர்” (“disabled”) என வகைப்படுத்த படவேண்டும். அவ் நோயறிதல்களை சமூகம் செய்யக்கூடாதாக பார்க்கும் சூழ்நிலைகளில் சமூக களங்கம் மிக மோசமானதாக இருக்கும். அத்தோடு பாடசாலையின் ஒட்டுமொத்த சோதனைப் புள்ளிகளை பாதுகாக்கும் நோக்கில், எழுத்தறிவு மற்றும் எண்ணறிவிலே சிரமப்படும் மாணவர்கள் பிழையாக சித்தரிக்கப்படும் அபாயமும் உள்ளது. கடைசியில் கல்வியின் தரத்தையும் அதன் நியாயத்தன்மையும் பாதிக்கும் வகையில் NCLB போன்ற கொள்கைகள் புள்ளிகளை விருப்பத்திற்கு ஏற்றால் போல் மாற்றுவதை தூண்டக்கூடும் என மனோவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சைக்கோமெட்ரிக்சின் மட்டுப்பாடுகள்
இவ் பிரச்சினைகளுக்கு மேல், இலங்கையில் சைக்கோமெட்ரிக்ஸ் சார் திட்டங்களை கொண்டுவர முன் அதன் வேறு சில குணாம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவதாக சைக்கோமெட்ரிக்ஸ் நிபுணர்கள் அனைத்து மனோவியல் நிகழ்வுகளும் எண்ணில் அளவிடக்கூடியது என நம்பினாலும் இவ் அளவிடுதல் ஒரு போதுமே முழுமையாக வெற்றியடைவதில்லை. இதன் அர்த்தம், இவ் அளவீடுகள் வெளியீடுகளை கணிக்கும் தமது திறனில் வேறுபடுகின்றமையை சரிபார்த்தல் ஆய்வு காட்டுகிறது. உதாரணமாக ஹன்னா மற்றும் ரௌண்ட்ஸ் இந்த ஆய்வு (Hanna and Rounds 2020) தொழில் ஆர்வ தகவல்க களஞ்சியம் ஒப்பீட்டு ரீதியில் அதிக அளவான துல்லியத்துடன் (50 %) எதிர்கால தொழில்த் தெரிவை கணிப்பிடுகின்றன. இருப்பினும் எஞ்சிய 50% பற்றி அது பிழையாகவே கணித்துள்ளது.
மேலும், பொதுவாக பயன்படுத்தப்படும் RIASEC தொழில் ஆர்வ கருவி குறைந்த அளவிலேயே வேலை, திறன் வெளிப்பாடு, உறுதியாக நிற்றல் மற்றும் தொழில் திருப்பியுடனான ஒட்டுறவைக் காட்டுகிறது (De Vries et al.,2024). மதிப்புமிக்க விளைவுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், நன்றாக ஆய்வு செய்யப்பட ஆர்வ அளவுகோலின் புள்ளிகள்கூட அவற்றில் பெரியளவான வேறுபாடுகளை விளக்க இயலாது. இவ் மட்டுப்பாடுகளை ஆசிரியர்கள் நன்றாக விளங்கவேண்டும்.
இரண்டாவதாக கணிக்கப்படும் குணாம்சங்கள் நேரத்திலும் செலவிலும் பொதுவாக மட்டுப்படுத்தப்பட்டவை. இதனால் ஒரு சில புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்தே தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலையுள்ளது. இவ் மட்டுப்படுத்தப்பட்ட குணாம்சங்கள் அரசியல் குறிப்புப்பொருட்களை கொண்டவை. உதாரணமாக, பாடசாலை திறன் வெளிப்பாட்டை கணிப்பிட எண்ணறிவு எழுத்தறிவை கணிப்பிடுவதோ அல்லது மாணவர்களுக்கு வழிகாட்ட தொழிலார்வத்தை அடிப்படையாக வைப்பதோ ஏனைய குணாம்சங்கள் அவற்றைவிட குறைந்தளவு முக்கியத்துவம் கொண்டவை என நுட்பமாக காட்டுகின்றன.
மூன்றாவதாக, ஒரு கருவியின் கணிக்கும் திறனை பார்க்கவோ அல்லது அதிலுள்ள பக்கச்சார்ப்பின் மட்டத்தை பார்க்கவோ தனி நபரே பயன்படுத்தப்படும் அகாக காணப்படுகிறார். இப் பகுப்பாய்வில் வரலாற்று சமூக காரணிகள் எவ்வாறு புள்ளிகளில் தாக்கம் செலுத்துகின்றன என்பது விளக்கப்படாமலே போகலாம். இக் குறைபாடுகள் குழுக்களை முறைமையாக விளிம்புநிலைப்படுத்துவதற்கு இட்டுச்செல்லலாம்.
இறுதியாக, புள்ளிகள் ஒரு நியப்படுத்தமுடியாத புறவயத்தன்மை/ பக்கச்சார்பின்மை மற்றும் உறுதித்தன்மையின் உணர்வை கொண்டுவரக்கூடியவை (Gitomer & Iwatani 2022). எனவே, இப்புள்ளிகளை மாணவர் பின்னணி மற்றும் அவர்கள் முகங்கொள்ளும் இடர்பாடுகள் போன்றவற்றோடு சேர்த்துப் பார்க்க முடியுமானாலும், இப் புள்ளிகள் ஒரு மேலாதிக்கம் செலுத்தும் தாக்கத்தை கொண்டிருக்கக்கூடும். எனவே தொழில் வழிகாட்டல் முறைமையில் அவை ஆசிரியர்களையும் மாணவர்களையும் வலுவிழக்க செய்யலாம். மாணவரின் செயலாண்மையை இல்லாமல்ச் செய்யலாம். மாணவருக்கு உதவும்போது ஏனைய வழங்கலிருந்து ஆசிரியர்கள் பெறும் நம்பிக்கையை மழுங்கடிக்கலாம்.
மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டலை வழங்க கல்வி அமைச்சு காட்டும் விருப்பம் சரியான நேரத்திலேயே வந்துள்ளது. வைத்தியர்களாகவும் பொறியாளர்களாகவும் வர விரும்புவதற்கு ஆப்பாலாக, மாற்று தொழில் பாதைகளை பிரபல்யப்படுத்த அது எடுக்கும் முயற்சி முன்னோக்கிய சிந்தனையை காட்டுகிறது. அதே போல் மாணவர் அடைவுகளில் சிரமப்படும் பாடசாலைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு மேலதிக ஆதரவு வழங்க முயல்வது ஒரு பெறுமதியான இலக்கே. ஆனால் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பரந்து பட்ட சமூகம் மீது குறைந்தளவான எதிர்மறை தாக்கத்துடன் இவ் நோக்கங்களை நிறைவேற்றுவது ஒரு சவால்.
பாடசாலைகளுக்குள் காணப்படும் பெரியளவான இணக்கம்சார் கடமைகள் ஆசிரியர்களுக்கு பெரும் சுமை. வலுவான CPD திட்டங்களை மீள் அறிமுகப்படுத்தல் , பாடசாலைகளுக்குள்ளான வழிகாட்டல் வேலைகளை நிபுணத்துவப் படுத்தல், மாணவர்களின் வெளியீடுகளை உண்மையாகவே மேம்படுத்தும் முன்னெடுப்புக்களை திட்டமிடுவதற்கான வளங்களையும் நெகிழும்தன்மையுடைய சூழலையும் பணியாளர்களும் நிறுவனங்களும் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தல் போன்றவையூடாக ஆசிரியர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது மேம்பட்ட ஒரு மனவுறுதியை கொண்டுவர உதவும். லாட் (Ladd 2017) இரண்டு முக்கிய நடவடிக்கைகளை NCLB கொண்டுவந்ததாக கூறுகிறார். இவை ஆசிரியர் தகமை தராதரங்களை உயர்த்துதல் மற்றும் பாடசாலை மட்ட தரவுகளை அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக கொண்டுவருதல் என்பனவாகும். NCLB போன்ற கொள்கைகளை இலங்கை பிரதி செய்யாமலே, இவ் இரண்டு படிகளுமே ஆசிரியர் பயிற்சியை மேம்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இலங்கையின் கல்வி முறையை பலப்படுத்தவும் உதவும்.



