கௌசல்யா பெரேரா
2024 பொதுத் தேர்தல்களில் பல கல்வியாளர்கள் தேர்தல் மேடைகளில் கலந்து கொண்டனர், மேலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாராளுமன்றத்தில் காணப்பட்டனர். அவர்களில் சிலர் இப்போது அமைச்சர் பதவிகளை வகிக்கின்றனர். ஏனையவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, கல்வியாளர்களாகிய நாங்கள், பரிச்சயமான முகங்களை செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்த வித ஆச்சரியமுமில்லை. அரசியல்மயமாக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு இது ஒரு புதிய திருப்பமா?
2012-2014 ஆம் ஆண்டில் எனது கலாநிதி பட்ட ஆராய்ச்சிக்காக கல்வியாளர்களை நேர்காணல் செய்தபோது, அவர்கள் நமது துறையின் (கல்வி, உயர் கல்வி) அரசியல்மயமாக்கலைப் பற்றி குறிப்பிட்டிருந்தனர். இது பற்றிய பொதுவான புரிதல் வெளியிலிருந்து வரும் தலையீடு ஆகும். அரசியல்வாதிகள் வெளியாட்களாக இருந்தனர், பல்கலைக்கழக மாணிய ஆணைக்குவின் (UGC) தலையிட்டு செல்வாக்கு செலுத்தினர் அல்லது பல்கலைக்கழகங்கள் செயல்படும் விதத்தில் தலையிட்டனர் அல்லது தங்கள் கைக்கூலிகளை உயர் பதவிகளில் அமர்த்த முயன்றனர். எனது பங்கேற்பாளர்களில் ஒருவர் 1970களை கல்வித்துறையின் தேவையற்ற அரசியல்மயமாக்கலின் தொடக்கமாகக் குறிப்பிட்டார். இது இன்றுவரை தொடர்கிறது – கல்வித் துறைக்கு வெளியே அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு கல்வியாளர்கள் இரண்டாம் நிலைப்படுத்தப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். (பணியமர்த்தம் என்பது ஒரு பொது அதிகாரி அல்லது அரசு ஊழியர் வேறு ஒரு அரசு நிறுவனத்தில் கடமைகளை ஏற்க விடுப்பு எடுப்பதைக் குறிக்கிறது). கல்வியாளர்கள் தேவைப்படும் இடத்தில் நிபுணத்துவத்தை வழங்க முடியும் என்பதற்காக இந்த ஏற்பாடு உள்ளது, எடுத்துக்காட்டாக, சுகாதார அமைச்சிற்கு குழந்தைகள் மொழி நிபுணர் தேவைப்படும்போது.
வெளிப்படையாகப் பொருத்தமற்ற சந்தர்ப்பங்களில் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, உறவினர்களின் ஆதரவும் அரசியல்மயமாக்கல் பற்றிய கூக்குரல்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இருப்பினும், மிக நீண்ட காலமாக, உயர்கல்வியில் அரசியல்மயமாக்கல் வெளிப்படையாகவே உள் நுழைந்துள்ளது பெரும்பாலும் சட்ட வழிமுறைகள் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாக நம்மில் பெரும்பாலோரால் கவனிக்கப்படாமல் உள்ளது. உதாரணமாக, நிரந்தர கல்வியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், ‘ஆட்சேர்ப்புத் திட்டத்தில்’ விரும்பிய தகுதிகளை தகவமைக்கும் விண்ணப்பங்களுக்கான கோரிக்கைக்கு பதிலளிக்கின்றனர். இதேபோல், பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவில் தர உறுதி தலைவர் போன்ற வேறு சில பதவிகளுக்கு வழிகாட்டுதல்கள் அல்லது தேவைகள் வரையப்பட்டுள்ளன. இருப்பினும், ஆட்சேர்ப்புத் திட்டத்தின் மூலம் அல்லாமல், அல்லது தேர்வுக் குழுவால் உருவாக்கப்பட்ட குறுகிய பட்டியலிலிருந்து பரிந்துரைக்கப்படும் பதவிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவர்களின் பெயர்கள் நாட்டின் ஜனாதிபதி, கல்வி அமைச்சர் அல்லது பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் தொப்பியிலிருந்து இழுக்கப்படுகின்றன. ஒரு சட்டம் அல்லது ஒழுங்குமுறையில் வழிகாட்டும் கொள்கைகள் அமைக்கப்படலாம், ஆனால் இவை ‘நியமன அதிகாரி'(யால்) தேர்ந்தெடுக்கும் எவரையும் நியமிக்கும் அளவிற்கு பலவீனமானவை. தொப்பியில் உள்ள பெயர்கள், மந்திரவாதியின் கழுத்துபட்டி போன்றது, பார்வையாளர்களுக்கு ஒரு ஆச்சரியமாக மாத்திரமே இருக்கும். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடுகளை எடுத்துக் கொள்வோம்.
* பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் தலைவர், துணைத் தலைவர், ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களை சனாதிபதி நியமிக்கின்றார்.
*பின்னர் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு, பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் பிற ஊழியர்களை நியமிக்கிறது, அவர்கள் விரும்பினால், பிற அரச துறைகளில் பணிபுரியும் அரச பணியாளர்களை கோரி அழைத்து, அவர்களை நியமித்து தனது பிற பணியாளர்களையும் பணியமர்த்த முடியும். அது தனக்குப் பொருத்தமாக அமையும் நிரந்தரக் குழுக்கள் அல்லது தற்காலிகக் குழுக்களை அமைத்து, அவற்றுக்கான உறுப்பினர்களை நியமிக்கலாம். இந்தக் குழுக்களை ஆணையாளர்களே தலைமை தாங்க வேண்டும்.
*ஓர் அரச பல்கலைக்கழகத்தின் நிர்வாக அமைப்பான பேரவையின் அண்ணளவாக அரைவாசியை பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு நியமிக்கிறது. இதில் பல்கலைக்கழகத்திற்குள்ளேயே பல அலுவல் சார்ந்த உறுப்பினர்களும், சட்டத்தால் தீர்மானிக்கப்படும் எண்ணிக்கையான பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் நியமனதாரர்களும் அடங்குவர். இது பல்கலைக்கழகத்தைப் பொறுத்து 15 நியமனதாரர்கள் வரையாகக் காணப்படலாம். தற்போது, 17 பல்கலைக்கழகங்கள் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்கள் பேரவையில் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. இதில் அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்ட சிலரும் உள்ளனர்.
இப்போது, ஒவ்வொரு தேர்தல் சுழற்சியிலும் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து உங்களுக்கு ஒரு பொதுவான புரிதல் ஏற்பட்டிருக்க வேண்டும். சில நியமனங்களுக்கு வழிகாட்டுதல்கள் இருக்கலாம்; ஆனால் அவை மிகவும் தெளிவாக இல்லாததால் அரசியல்வாதிகள் தங்களுக்குப் பொருத்தமான வகையில் அவற்றைப் பயன்படுத்த முடியும். ஆனால் பல நியமனங்களுக்கு அத்தகைய வழிகாட்டுதல்கள் இல்லை.
கல்வி அமைச்சரின் அதிகார வரம்பு முழு கல்வித்துறையின் மீதும் விரிவாக்கப்படுகின்றமையால் அவர் (அவன் அல்லது அவள் சந்தர்ப்பத்திற்கேற்ப) சட்டத்தினால் தேவைப்படுத்தப்படுவதோடு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு வெளியிலான ஏனைய அரச பல்கலைக்கழகங்கள்(உதா: புத்த மற்றும் பாலி பல்கலைக்கழம்), தேசிய கல்வி நிறுவகம் போன்ற நிறுவனங்களுக்கும் மற்றும் பலவற்றிற்கும் அதிக எண்ணிக்கையானவர்களை பதவிகளில் நியமிப்பதற்கான ‘கடப்பாடு’ காணப்படுகிறது. அவர் சனாதிபதியிடம் ஏனையவர்களை பெயர் குறிப்பிட்டு நியமிக்கவோ அல்லது பரிந்துரைக்கவோ வேண்டும். தகவலறியும் உரிமை கோரிக்கையொன்றின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, கல்வித்துறையில் சனாதிபதி இதுவரையில் 50 நியமனங்களை வழங்கியுள்ளார் (தெரிவு செய்யும் செயல்முறையைக் கொண்ட துணை வேந்தர் நியமனங்களை தவிர)
அரச நிறுவனங்கள் முழுவதிலும் இத்தகைய நியமனங்கள் எவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க மட்டுமே முடியும்.
எனவே ஏன் இது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது?எவ்வாறாயினும் கல்வித்துறையில் அனுபவம் (அன்றேல் விஷேடத்துவம்) உடையோர் கல்வியியலாளர் ஆவர். அவர்களுள் பலர் சிறப்பான பணி ஒழுக்கநெறிகளை வெளிப்படுத்துப இருக்கலாம்; முன்னைய அரசாங்கங்களின் தவறுகளை அனுபவித்து அவ்வாறான அரசாங்கங்கள் உயர் கல்விக்கு ஏற்படுத்திய பாதிப்புகளையும் உணர்ந்திருக்கலாம். எமது நிறுவனங்களின் எதிர்கால நலனுக்காக தம்மால் இயன்றவரையில் அவர்கள் உழைப்பார்கள் என எதிர்பார்க்கலாம். என்னிடம் வினவப்பட்டிருந்தபடி எவ்வாறாயினும் இப்பதவிகள் கல்வியியலாளர்களேயே வகிக்கப்பட வேண்டும் எனவே ஏன் இக்குறித்த கல்வியியலாளர்கள் மட்டும் கூடாது? அமைச்சருக்கு கல்வித்துறையின் நலன் குறித்து அதிக ஆர்வம் இருக்கும் ஆகையால் பொருத்தமானவர்களை நியமிக்கும் அதேவேளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முழுவதிலும் அதேபோல சிறந்தோரே காணப்படின் நியமன முறையைப் பற்றி ஏன் பொருட்படுத்த வேண்டும்? முறைமையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான வழி இதுதான் எனின் ஏன் நியமன முறையை பொருட்படுத்த வேண்டும்?
இந்நியமன முறையினைக் கொண்டு இவை அரசியல் ரீதியாக மாறுவதால் இது முக்கியமாகிறது. அரசியல் நியமனம் பெற்ற ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் கூட்டு வலையமைப்பு கொள்கையில் பணிபுரிபவரும் ஆவார். இப்பதவிக்கானவர் என உங்களுக்கு தெரிந்தவர் யார்? அவர்கள் சிறந்தவர்களா?
அப்பதவிக்கும் நிறுவனத்திற்கும் தமது நிபுணத்துவத்தின் மூலம் பங்களிப்பு செய்யக்கூடிய தனிநபரொருவரால் அப்பதவி வகிக்கப்படும் போது சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். எவ்வாறாயினும் நீண்ட கால நோக்கில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய கல்வித்துறைக்கு உண்டாகும் பின்விளைவுகளும் உள்ளன.
*அதிகாரமானது குறுகியதொரு தெரிந்த வட்டத்தினுள்ளே சுழல்கிறது. எமக்குத் தெரிந்தோர், வேறு வலையமைப்புசகளினூடாக நாம் கேள்விப்பட்டோர்,பலரை நாம் சார்ந்து காணப்படுகிறோம். எவ்வளவு பொருத்தமான நபராக இருப்பினும் எமக்குத் தெரியாத நபர்களை பெயர் குறித்து நியமிக்க எம்மால் முடிவதில்லை.
*சனாதிபதி, அமைச்சர் அல்லது அவர்களுக்கு நெருக்கமானோர் என பெயர் குறித்து நியமிப்போர் எவராக இருந்தாலும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பதவிகளில் நியமிக்க அவர்களுக்குத் தெரிந்த நபர்கள் யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்.’சிறப்பான நபர்களை’ நியமிக்கும் பொறுப்பு பெயர் குறித்து நியமிப்போர் மீது சுமத்தப்படுவதோடு புதுமுக நபர்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் சிறந்தவர்களா என எவ்வாறு தெரியும்? யாரேனும் அவர்களை நம்ப வேண்டும் ஆனால் அவர்கள் சிறப்பாக செயற்படாவிட்டால் அது பெயர் குறித்து நியமிப்பவருக்கு எதிராகத் திரும்பி விடும்.
*முடிவெடுப்பது இலகுவாக இருக்கும் அதேவேளை கடினமாகவும் இருக்கலாம். குறித்த பதவியிலுள்ளவர் உங்கள் தோழராகவோ, நண்பராகவோ அல்லது நண்பரின் நண்பராகவோ இருக்கையில் அவ்வதிகாரத்தில் இருப்பவரிடம் உண்மை உரைப்பது கடினமாகும். ஒருவரிடம் உள்ள விசுவாசம், அவர் பற்றிய விமர்சனங்களை புறக்கணிக்கச்செய்யும். சமூக தொடர்புகளை பேணுவதற்காக உண்மையை உடைத்து சொல்லும் கேள்விகளின் வீரியத்தை குறைக்க வேண்டி ஏற்படலாம். முரண்பாடான வாக்கு அல்லது கருத்தினை முன்வைக்க முடியாது. ஏனெனில் சமூக தொடர்புகள் அல்லது அரசியல் தோழமை பாதிக்கப்படக்கூடும். சமூக வலையமைப்புகளின் காரணமாக அசௌகரியமான சூழ்நிலைகளை விட்டு விலகுவது எமக்கு கடினமாக உள்ளது.
*அரச நிறுவனங்கள் தேர்தல் வட்டத்தினுள் பிணைக்கப்பட்டுள்ளன. ஒரு அரசாங்கத்தின் முடிவில் சபைகளும் குழுக்களும் கலைக்கப்படுகின்றன. பொதுத்தேர்தலை அண்மித்து அதிகாரிகளும் குழுக்களின் உறுப்பினர்களும் விலகி புதிய அணிக்கு வழி அமைக்கின்றனர்(அல்லது ஆட்சிக்கு வரும் அரசாங்க கட்சியின் ஆதரவைப் பெற்று தொடர்ந்து பதவி வகிப்பதற்கான முயற்சியாகவும் இருக்கலாம்).
இவ்வழியில் பதவிகளுக்கு நபர்களை நியமிப்பது அரசமயமாக்கலின் மறைமுக ஊடுறுவும் முறையொன்றாகும். ஏனெனில் இது வழமையான செயலாக தோன்றத்தொடங்கி விட்டது.
ஆனால் நிச்சயமாக இதனை மாற்ற முடியும்.
ஒருவர், ஆட்சேர்ப்புத் திட்டங்கள், விண்ணப்ப செயல்முறை, சாத்தியமான வேட்பாளர்களின் தொகுப்பைக் கட்டுப்படுத்தும் சேர்க்கை அல்லது விலக்கலுக்கான அளவுகோல்களின் தொகுப்பை கட்டமைக்கலாம். இவை முட்டாள்தனமானவை என்று நான் கூற விரும்பவில்லை. தேர்வுகளில் மோசடி செய்வது, ஓட்டைகளை கையாளுவது போன்ற பலவற்றைச் செய்வது சாத்தியம் என்று நேரடி அனுபவம் நமக்குச் கூறுகிறது. உண்மையில், கல்வித்துறை இதுபோன்ற நிகழ்வுகளின் கதைகளைத் தொடர்ந்து பரப்பி வருகிறது. இருப்பினும், தேர்வு நடைமுறை இல்லாமல் பதவி அல்லது குழுவிற்கு ஆட்களை நியமிக்கும் ஒரு அமைப்பிலிருந்து, திறந்த அழைப்புகள் (மற்றும்)/அல்லது தேர்வு அளவுகோல்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பாக இந்த அமைப்பை மாற்றுவது, பொருத்தமான நபர்கள் (அரசியல் தொடர்புகள் உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள்) விண்ணப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும். இத்தகைய நியமனங்கள் தேர்தல் சுழற்சிகளுடன் இணைக்கப்பட வேண்டியதில்லை, மேலும் பொதுமக்கள் தகுதியற்ற வேட்பாளர்களை எதிர்க்க அல்லது எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்புகளையும் வழங்க முடியும். இது நமது நிறுவனங்களின் சுதந்திரத்தை வலுப்படுத்தவும் வழி வகுக்கும்.
இந்த வகையில் அரசியல்மயமாக்கல் என்பது NPP அரசாங்கம் நமக்குக் கொண்டு வந்த ஒரு புதிய பிரச்சனை அல்ல. மாறாக, அரசியல் நீக்கம் என்பது ஒரு தேர்தல் வாக்குறுதியாக இருந்தது! இது நமது அனைத்து நிறுவனங்களிலும் ஊடுருவிச் செல்கிறது, ஏனென்றால் முழு முறைமையும் இப்படித்தான் செயல்படுகிறது. இது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு நோயாகும், இது நமது நிர்வாக அமைப்புகளை ஏற்கனவே பலவீனப்படுத்தியுள்ளது, மேலும் தற்போதைய அரசாங்கம் – அதன் பெரும்பான்மையுடன் – இதை சிறப்பாக மாற்றுவதற்கான சிறந்த நிலையில் உள்ளது. சுற்றறிக்கைகளை நீக்கலாம், சட்டங்களைத் திருத்தலாம், கொள்கைகளையும் தேர்வு அளவுகோல்களையும் அமுல்படுத்தலாம். முழுமையான அதிகாரம் கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு நியமனங்களுக்கான திட்டமிடுதலும் வெளிப்படையானதுமான கொள்கையை உருவாக்குவதும் நிச்சயமாக சாத்தியமான ஒன்றாகும்.



