காலியாகும் பல்கலைக்கழகம்: ஏன் கல்வியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்?

காசினி லெகாமவாசம்

புத்தியீவிகளின் வெளியேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்வாக தற்போது உள்ளது. இறுதியாக வெளிவந்த 2024 ஆம் ஆண்டிற்கான மனித வெளியேற்றம் மற்றும் புத்தியீவிகள் வெளியேற்ற சுட்டியின்படி (Human Flight and Brain Drain Index) இலங்கை 175 நாடுகளில் 16 ஆம் இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் முதலிடத்திலும் உள்ளது. இது ஒரு பெரிய நெருக்கடி என்பது அப்பட்டமான உண்மை ஆகும். இது எல்லாத்துறைகளையும் பாதிக்கிறது. அத்தோடு, இதனால் ஒரு வளர்ந்துவரும் நாட்டின் வளங்களுக்கு ஒரு பெரிய சிரமம் ஏற்படுகிறது. வறுமையான நாடுகளில் இருந்து, பிரத்தியேகமாக இலவசக்கல்வி மூலம் தொழில் நிபுணர்களை வார்ப்பதற்கு பெரியளவு பொது முதலீடு செய்யப்படும் இலங்கை போன்ற ஒரு நாட்டிலிருந்து, அதிகளவு மக்கள் குடிபெயர்ந்து செல்வந்த நாடுகளுக்கு செல்லுதல், வறுமையான நாடுகலில் இருந்து வளங்களை செல்வந்த நாடுளுக்கு மாற்றுவதாக காணப்படுகிறது. எனவே குப்பி நிரலின் ஒரு முக்கிய கரிசனையான இலங்கையின் அரச பல்கலைக்கழக முறைமையிலிருந்து தேர்ச்சி பெற்றோர் (skilled) நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பின்னுள்ள, நாட்டை விட்டு அவர்களை வெளியேற வைக்கும் மற்றும் வெளிநாட்டுக்கு அவர்களை அழைக்கும் காரணிகள் பற்றி ஆராய்வது முக்கியம்.

மனக்குலைவில் இருந்து நாட்டைவிட் வெளியேறுதலுக்கு.

உடைந்து விழுந்துகொண்டிருக்கும் எமது அரச பல்கலைக்கழக முறைமையில் உள்ள சில கசப்பான யதார்த்தங்கள் கல்வியாளர்கள் வெளியேறுவதற்கான உந்து காரணிகளாக அமைகின்றன. இந்த அரச பல்கலைக்கழக முறைமையின் தேய்வின் அம்சங்களை சுட்டிக்காட்ட குப்பி கட்டுரை நிரலானது வருடங்களாக முயன்றுள்ளது. இக்காரணங்களுள் பிரதானமானதாக தேவையான நிதி இன்மை இருக்கலாம். இது இந்த முறைமைக்கு பலவீனமாகும் விளைவுகளை கொண்டிருக்கும். முதலாவதாக, உட்கட்டுமானங்களை பராமரிப்பதற்கு மிகக்குறைந்த அளவு முதலீடே செய்யப்படுகிறது (அவற்றை விரிவுபடுத்த இன்னும் குறைவான அளவே) – இதனால் (பிரத்தியேகமாக பிராந்திய பல்கலைக்கழகங்களில்) வளர்ந்து வரும் மாணவர்களின் அணிகளுக்கு இடவசதி அளிப்பதிலும் பணியாளர்களின் நலனிலும் பெரியளவான இடர்கள் ஏற்படுகின்றன. இரண்டாவதாக, ஆய்வுகளுக்கு வழங்கப்படும் நிதி கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். ஒரு கல்வியாளரின் பிரதான கடமையான கற்பித்தலை ஒழுங்காக செய்வதற்கே இந்நிலமை தடையாக உள்ளது. ஏனெனில், ஒரு கல்வியாளர் கற்பிப்பது ஆகக்கூடிய சிறப்பாக இருக்கவேண்டும் என்றால், அது அவருடைய சொந்த ஆய்வால் ஆதரப்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும் (அத்தோடு, ஏனையோர் செய்யும் ஆய்வுகளாலும் ஆதரப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், அப்படியான ஆய்வுகளை பெற்று படிப்பதற்கும் துரதிஷ்டவசமாக நிதி தேவைப்படுகிறது). மூன்றாவதாக நிதிக்குறைப்பு ஆட்சேர்ப்பை குறைக்கிறது (அல்லது அதில் பல தடைகளை கொண்டுவருகிறது). இதனால் தற்போது பணியிலுள்ள கல்வியாளர்களின் வேலைப்பளு அதிகரிப்பதோடு அவர்களின் கற்பித்தல் மற்றும் ஆய்வின் தரத்தில் குறைவும் ஏற்படுகிறது.

எப்படி ஆட்சேர்ப்பு இடம்பெறுகிறது என பார்த்தால், அது திறமையே தகுதி என நம்புவோரின் மனமுடைய செய்வதாக உள்ளது. முன்பு எமது குப்பி கட்டுரைகளின் இடையீடுகள் காட்டியது போல விண்ணப்பதாரியின் முதல் பட்டப்படிப்பிற்கு பின்னரான வளர்ச்சி மற்றும் பல துறைகள் சேர்ந்த பயிற்சியின் (interdisciplinary) நன்மைகள் என்பவற்றிக்கு மிக குறைந்த மதிப்பையே வழங்கும் தொன்மையான தெரிவு நியதிகளை கொண்டிருப்பதாக ஆட்சேர்ப்பு முறைமைகள் காணப்படுகின்றன. “கலாச்சார ரீதியாக பணிந்துபோகும்” முன்னுள்ள நிலைமைகளை பெரியளவுக்கு மாற்றதா விண்ணப்பதாரிகளை தெரிவதற்கான பொதுவான முனைவு இன்னொரு விடயமாகும். கல்வியில் புத்தாக்கங்களை கொண்டுவர திறமையும் விருப்பமும் உடையோர் அரச பல்கலைக்கழக முறைமையில் இணைவதை அல்லது தொடர்ந்து இருப்பதை ஊக்கமிழக்கச்செய்வதே இந்நிலைகளின் கூட்டு விளைவாகும்.

இந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கட்டி வைத்திருக்கும் நூலாக பரவி ஊடுருவி காணப்படு அதிகார படிமுறை நிலை காணப்படுகிறது. இதுகூட குப்பி கட்டுரைகள் பல முன்னர் சுட்டிக்காட்ட முனைந்த விடயம். அதிகார படிமுறை நிலையை தொடர்ந்து பேணுவதற்கான விருப்பமே பழைய மாணவர்களை ஆட்சேர்க்க முன்னுரிமை கொடுக்க இட்டுச்செல்லும் காரணம். தமது சிரேஷ்ட, பொதுவாக ஆண் சகவேலையாட்களின் வேலைப்பளுவின் தாக்குவிசையை பொதுவாக சுமக்க நேரிடும் இளம்வயது மற்றும் பெண் கல்வியாளர்களுக்கும் பல்கலைக்கழகங்களினுள் உள்ள அதிகார படிமுறை பிரத்தியேகமாக மனக்குலைவை ஏற்படுத்துவதாக இருக்கலாம். நிதி மட்டுப்பாடுகள் மற்றும் அதனால் வரும் ஆட்சேர்ப்புசார் தடங்கல்கள் உள்ள ஒரு சூழலில் இளம் (பொதுவாக பெண்) கல்வியாளர்கள் மீது அளவுக்கு ஒவ்வாத சுமை செலுத்தப்படுவதாக இது அமைகிறது. இதனால் நேர மட்டுப்பாடுகளுள் தொழிற்பட நிர்ப்பந்திக்கப்படும் இவர்களின் வெற்றிகரமான கல்வியாளர்களாக தம்மை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே தம்மை கூடாவாக மதிப்பளிக்கும் ஒரு வேறுபட்ட வேலை கலாச்சாரத்தை எதிர்பார்ப்பதால், இளைய கல்வியாளர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இணையப் பார்ப்பது மற்றவர்களை வீட அதிகம்.

கருத்தியல்சார் பொறிகள்/ தடங்கள்

அமைப்புசார் மனக்குலைவுகளுக்கு மேலே, நவதாராளவாத கருத்தியலின் வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. எது விரும்பத்தக்கது எது விரும்பத்தகாதது என்பதை பூகோள மையப்புள்ளிகள் (metropoles) மற்றும் இலங்கை போன்ற விளிம்புநிலை நாடுகள் இடையில் காணப்படும் தொடர்புகளின் தன்மையே பெரியளவில் தீர்மானிக்கிறது என உறுதியாக கூறலாம். உணவு, உடை, வீடு, சாதனங்கள் என மேற்கத்தேய நாடுகளின் வெளிப்படையான வாழ்க்கைமுறை, மேம்பட்ட தொழில், மேம்பட்ட வாய்ப்புக்களோடு, “மேம்பட்ட” வாழ்க்கை எனும் வாக்குறுதியோடு, விளிம்பிலுள்ள மக்களை  தொடர்ந்து கவர்ந்தவண்ணம் இருந்துள்ளது. மேற்கத்தேய சமூகங்களில் உயிர்பிழைக்க செய்யப்படும் போராட்டங்களின் திரைக்கு பின்னரான நிகழ்வுகளை மறைப்பதாகவே இது உள்ளது. உதாரணமாக, கூடுதலான இடங்களிலே வீதிகள், பொது போக்குவரத்து, சுத்தமான வளி, உணவின் தரம் (quality control) என அதிகம் கவரும் பொதுகட்டுமானங்கள் என்பன மருத்துவம் மற்றும் கல்வியின் இமய மலை அளவிலான தனியார் செலவை மறைக்கின்றன. அதிக வருவாய் பெறும் கூடுலதான நாடுகளில், வைத்திய காப்புறுதி அதிக விலையானதோடு கட்டாயமாகவும் உள்ளது. அதே நேரம், கட்டண கழிவுகள் கொண்ட கல்வி கூட (இதற்கான தகுதியை பெறும் நியதிகளை மிக இறுக்கமானவை) வீட்டின் வருவாயில் பெரியளவை எடுத்துவிடுகிறது. அழகான டிராம்கள் (trams) மற்றும் சர்வதேச பயணிகளை கொண்ட மகிழ்ச்சியான படங்களை இந்த விடயத்தை காட்டப்போவதில்லை என்பது நிச்சயம்.

வெளிநாட்டில் அதிக வாய்ப்புக்களும் அங்கீகாரமும் கிடைக்கும் எனும் மாயை இரண்டாவது கருத்தியல் பொறி. உயர்கல்வி, வைத்தியம், சிவில் சேவை, தனியார் அலுவலக வேலைகள் (private white-collar jobs) என திறமைசார் தொழில் முன்னேற்றத்தை தடை செய்யக்கூடிய பல பிரச்சினைகளை கொண்டதாக உள்ளூரில் பல திறன்சார் துறைகள் காணப்படுகிறது என்பது மறுப்பதற்கில்லை. இருப்பினும், மேற்கத்தேய நாடுகளில் நிலமைகள் அடிப்படையிலேயே வேறு என்பது ஒரு போதுமாக அறியாத நேர்மறை சிந்தனையால் உருவானது. தற்போது அதிகமாக அறியப்பட்டு பேசப்பட்டு வருவதைப்போல, மேற்கத்தேய தொழில்ச் சந்தைகள் இழிவான இனப்பாகுபாடு கொண்டவை. சமமான திறமைகள் அரிதாகவே சமமாக பார்க்கப்படுகிறது. பதிலாக, தாம் போகும் நாடுகளில் திறனுடைய புலம்பெயர்வோர் குறிப்பிட்ட உத்தியோகபூர்வ பரிட்சைகளை நிறைவுசெய்ய வைக்கப்படுகின்றனர். மருத்துவத்துறையிலே, அதைத்தொடர்ந்து ஒரு நேர்முகத்தேர்வு உள்ளது. இதுவும் இன ரீதியான பாரபட்சம் காட்டக்கக்கூடியதாக இருக்கலாம். ஆரம்பகட்ட வேலைகள் முடிந்தபிறகு, வெளிநாட்டில் பெற்ற அனுபவத்தை கணக்கிலே எடுக்காமல் சன்மானங்கள் ஆரம்பப் புள்ளியில் இருந்தே மீள் தொடங்குகிறது. இதில், அவர்கள் தம் தினசரி வாழ்க்கையில் முகங்கொடுக்க வேண்டிய மறைமுகமான ஆவேசப்படல்கள், மறுப்புக்கள், இன்னல்கள் என்பவற்றை பற்றி சொல்லவே தேவையில்லை. வெளிநாடு செல்வதற்கான ஊன்றுகோலாக தொழில் நிபுணத்துவ தகைமைகள் பயன்படும் பல சந்தர்ப்பங்களில், அவர்களின் பிள்ளைகளுக்கு மேம்பட்ட எதிர்காலம் கிடைக்கும் எனும் பார்வையிலே இது இடம்பெறுகிறது. இதில் கூட நான் மேல் குறிப்பிட்டபடி, சிறந்த வாய்ப்புக்கள் பற்றி தவறான இடத்தில் வைக்கப்பட்ட நம்பிக்கைகளாலும் மேலே நான் குறிப்பிட்ட விடயங்களை பற்றிய அறியாமையினாலுமே அவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பூகோள ரீதியில் ஏற்பட்டுள்ள வலதுசாரி அரசியல் நோக்கிய திருப்பம் எல்லாவற்றையும் இன்னும் சாவல் நிறைந்ததாக ஆக்கிவிட்டுள்ளமையை பற்றி சொல்லவே தேவையில்லை. அப்படியான ஒரு சூழலில், திறன்மிக்க புலம்பெயர்வோர் அதிகூடிய சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு சில அரிதான சம்பவங்களை வைத்து அவ்வாறான வாழ்க்கைதான் வழக்கம் என்று நினைப்பது ஒரு ஆபத்தான தவறான கருத்து. 

வெளிநாடுகளுக்கு கல்வியாளர்களை ஈர்ப்பதாக நான் மேற்கூறிய இரண்டு காரணிகளோடு (pull factor) இலங்கையை விட்டு அவர்களை வெளியேற வைக்கும் ஒரு காரணியும் (push factor) உள்ளது. இந்த காரணி ஒரு அலுவலக நிபுணருக்கு அவர்களின் சமூகத்தில் என்ன கிடைக்கவேண்டும் என்பது பற்றிய அவர்களுடைய வர்க்க பாகுபாடுகளை பெரியளவில் காட்டும் விளக்கத்தோடு தொடர்புபட்டது. பாடசாலை சேர்ப்புக்கான தனியான ஒதுக்கீடுகள், எரிபொருளுக்கான நிதி ஒதுக்கீட்டில் அதிகரிப்பு, தற்போது தடைபட்டுள்ள வாகன திட்டத்தை மீளப்பெறல், சம்பள உயர்வு என பல கோரிக்கைகளை முன்வைக்கும் கல்வியாளர் தொழில்ச் சங்க நடவடிக்கைகளில் இந்த அபிலாசைகளை தெளிவாக வெளிப்படுகின்றன. உழைக்கும் மக்கள் மேம்பட்ட வசதி நிலைகளை பெற ஆவல்லபடுவதற்கு எல்லா உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் கல்வியாளர்களின் இச்செய்கை உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பாலானோரின் நிலைமைகளை முன்னேற்றுவதற்கான இயக்கத்தோடு தொடர்புபடாமல் இருப்பதால் அது கல்வியாளர்கள் தமக்கு தாமே செய்யும் விடயமாகவும் முதலாளித்துவத்தின் வர்க்கம்சார் தர்க்கத்தினுள் பெரியளவில் அமைந்திருப்பதாகவும் உள்ளது. இக்கோரிக்கைகள் தமது தனித்துவத்தை தக்கவைக்கும் ஒரு வழியாக வெளிப்படுத்தப்படுவதால், இது ஒரு வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதியாக கற்பனைசெய்யப்படவில்லை என தெளிவாகிறது. இவ்வாறு தமது தனித்துவம்சார் தேவைகள் நிறைவேற்றப்படாத மனக்குலைவுகள் சிலரை வெளிநாடுகளில் குறைந்தது நிதி ரீதியிலான “பச்சைக் கரைகளை” தேட வைக்கலாம் (சமூக ஏணியில் மேலே செல்வதற்கான ஒரு வழியாக நிதி பயன்படுமென நினைத்து இதை அவர்கள் செய்யலாம்). ஆனால் அப்படி செல்பவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பங்களில் ஏமாற்றம் மட்டுமே எஞ்சும்.

என்ன செய்யப்பட்ட வேண்டும்?

மேலே குறிப்பிட்ட முறைமை ரீதியான இந்த வெளியேற்றும் நகர்வுக்கான காரணிகள் பற்றி செயற்பட, முதலாவதாகவும் முக்கியமாகவும், அரச உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவேண்டும். அதிக ஆட்சேர்ப்புகள் இடம்பெறுவதும் ஒவ்வொரு கல்வியாளருக்குமான வேலைப்பளு குறைவதும் இதன் உடனடி விளைவுகளாக இருக்கும். நீண்ட காலத்தில், இது மேம்பட்ட ஆய்வுகளுக்கும் கற்பித்தலுக்கும் இட்டுச்செல்லும். முக்கியமாக பிராந்திய பல்கலைக்கழகங்களில் சொல்லமுடியாத இடர்களோடு வாழ்வோரின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தல் உள்ளடங்கலாக, நிதி ஒதுக்கீட்டில் ஏற்படும் அதிகரிப்பு, அதிவிரும்பத்தக்க நிலையில், மேம்பட்ட உட்கட்டமைப்புசார் முதலீடுகளுக்கு இட்டுச்செல்லும். அடுத்ததாக, திறமையான நபர்களை பல்கலைக்கழக பதவிகளுக்கு ஈர்க்க அதிக நியாத்தன்மையுள்ள அதிக ஆக்கத்திறனான — எனவே அதிக வினைத்திறனான — ஆட்சேர்ப்பு கொள்கைகள் பெரியளவில் தேவைப்படுகின்றன. இந்த தேவையை நிறைவேற்ற வர்க்க பாகுபாட்டின் தர்க்கத்தால் உருவாக்கப்பட்ட கல்வியாளர்களுக்கென ஒரு “விசேட வகைப்படுத்தலை” உட்குடையாமல், ஆட்சேர்ப்பு முறைமைகளில் ஒரு அடிப்படை சீரமைப்பை கொண்டுவருவதன்மூலம் இது செய்யப்பட வேண்டும். மூன்றாவதாக, பல்கலைக்கழகத்தினுள்ளான சீர்திருத்தம் மூலம் அதில் ஆழமாக வேரூன்றிப்போயிருக்கும் அதிகார படிநிலை தொடர்ச்சியாக சவால்படுத்தப்பட்ட வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதில் ஆட்சேர்ப்பு வழக்கங்களை சீர்திருத்துவது பெரியளவு உதவி செய்யும். மேலும் பாலியல், பால்நிலைசார் வன்முறைகளுக்கு (SGBV) எதிரான கூடிய கடுமையான கொள்கைகள் கொண்டுவரப்படவேண்டும் (பகிடிவதை நேரடியாக கல்வியாளர்கள் வெளியேறுவதோடு தொடர்புபடாவிட்டாலும் அதற்கு எதிராகவும் கொள்கைகள் கொண்டுவரப்படவேண்டும் என சொல்லாமலே தெரியவேண்டும்). அதிக பாதுகாப்பு மற்றும் கவரும்தன்மை என்பவற்றில் அதிகமான ஒரு வேலை செய்யும் இடத்தை அப்படியான நடவடிக்கைகள் உருவாக்கும். நபர்கள் தொடர்ந்து இங்கையே இருக்க அவை காரணமாய் அமையும். இந்த நிலை மாறவேண்டுமானால், நிதி ஒதுக்கீடுகளுக்கு மேல் எமது அபிலாசைகளில் மாற்றமும் வேண்டும். மேற்கத்தேய சமூகங்களை “சொர்க்கமாக” பார்க்கும் கருத்தியலை கேள்வி கேட்கக்கூடியதும், வரலாற்று ரீதியாகவும் சரி இன்றும் சரி, மேற்கத்தேய சமூகங்களின் வெளிப்பாடுகள் காலனித்துவ சடப்பொருள்சார் மற்றும் கருத்தியல்சார் பரிமாணங்களை வெளிப்படையாக காட்டக்கூடிய ஒரு கல்வியை அது கட்டாயமாக்குகிறது. மேலும் இந்த “நல்ல வாழ்க்கை” பற்றிய காலனித்துவ விளக்கங்களால் புவியின் உயிர்ச்சூழலுக்கு அழிவுகரமான தாக்கங்கள் உருவாகியுள்ளன. இதனால் சமூக நீதி பாதிப்படைவதை பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த மனநிலையை மாற்றக்கூடிய ஒரு கல்வி வெறுமனே சமூக முன்னேற்றத்தை வெறும் பாட விடயமாக்கும்‌/ அர்த்தமற்றதாக்கும் ஒரு சமூக விடுதலையின் கருவியாக இருக்காமலும் சமூக முன்னேற்றத்தின் வெறும் பாதையாக இருப்பதைவிட மேம்பட்டதாகவும் இருக்கும்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன