இலங்கையில் உயர் கல்வியும் படிவங்களூடான தர நிர்ணயமும்
இலங்கையில் உயர் கல்வியின் மேம்பாடானது மிகவும் காலதாமதமாக்கப்பட்ட விடயம் என்பது சகலரும் அறிந்ததே. எனினும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை வெறும் படிவம் நிரப்பும் கட்டமைப்புக்குள் வரையறுத்து, கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை ஒரு கட்டுக்கோப்பிற்குட்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை அதிகரிப்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியானது.