உலகத்தேவைகளுக்கு ஏற்ப கல்வியை மறுசீரமைத்தல்
அக்டோபர் மாத தொடக்கத்தில் கல்வி அமைச்சு உள்ளிட்ட பிற
அமைச்சுகளுடன் நடத்திய முன்னேற்ற மதிப்பீட்டு கூட்டத்தில் ஜனாதிபதி
அனுர குமார திஸாநாயக்க, நாட்டின் கல்வி முறையை உலகளாவிய
தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரமைக்க வேண்டிய அவசியத்தை
வலியுறுத்தினார். இது ஒரு நீண்டகாலக் கொள்கை உறுதியின்
மீளுறுதிப்படுத்தலாகும். ஆனால், இத்தகைய முயற்சிகள் எவ்வாறு மீண்டும்
மீண்டும் தோல்வியடைந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளாத
நிலையையும் இது பிரதிபலிக்கிறது.’உலகளாவிய தேவை’ என்பதன் பொருள்,
உலகின் ஒவ்வொரு சமுதாயத்தையும் உலக வணிக மூலதன சந்தையில்
இணைக்கும் நோக்கமாகும்.