கலைப்பீடங்களும் ஆய்வுகளின் மேம்பாடும்
அரச பல்கலைக்கழகங்கள், குறிப்பாக மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் அல்லது கலைப்பீடங்கள் பல வருடங்களாக ஆய்வுகளில் ஈடுபடாதுள்ளன என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டாகும். நாம் எத்தனை ஆய்வுகளில் ஈடுபடுகின்றோம்? அதன் தரம் என்ன? விஞ்ஞானப் பிரிவுகளுக்கு எம்மால் ஈடுகொடுக்க முடியாதிருப்பது ஏன்? ஏன் எமது ஆய்வுகள் வெளியிடப்படுவதில்லை?