புதிய ஜனநாயகத்தில் பழைய போக்குகள்: கல்விக்கான பாதை
உண்மையில் தற்போதைய நிலை புதியது. நாடு கொண்டாட்ட மனநிலையில்
இருக்கும் சூழல். நாம் ஒரு புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை
பெற்றிருக்கின்றோம். ஏற்கனவே ஊகிக்கப்பட்ட அவர்களின் பாராளுமன்ற
பெரும்பான்மை பல எதிர்பார்ப்புகளை சுமந்து நிற்கின்றது. நமது
ஜனாதிபதிக்கு அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி கிடைக்காவிடினும்
இவ்வருட ஜனாதிபதித்தேர்தல் பல புதினங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதேநேரத்தில் நாம் வாழும் காலசூழலும் கவனத்தில் கொள்ளப்பட
வேண்டியது. 2022ல் ஏற்பட்ட “அரகலய- போராட்டம்- ஸ்ட்ரக்ல்’ன்” பின்னர்
நடத்தப்பட்ட முதலாவது தேர்தல் இதுவேயாகும். இலங்கையின்
சுதந்திரத்தின் பின்னர் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சி ஆகியவற்றினதும் அவற்றின் கூட்டணிகள் பிளவுக் கட்சிகள்
என்பவற்றினதும் மேடையாகவே இலங்கையின் அரசியல் களம்
காணப்பட்டது. திசாநாயக்க அவர்களின் மூலம் நாம் புது முகம், புது சமூக
வகுப்பொன்றின் முகம், எதிர்பார்க்கப்படும் ஊழலற்ற ஆட்சி என புதிய பல
அம்சங்களை எதிர்கொள்கின்றோம்.