மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும்
சுகாதாரத்துறை நெருக்கடியில் உள்ளது. வைத்தியர்களும் சுகாதார
உத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம்
இருக்கின்றார்கள். உலக சுகாதார நிறுவனமானது (2010) தனது சுகாதார
உத்தியோகத்தர்களுக்கான சர்வதேச ஆட்சேர்ப்பு தொடர்பான உலகளாவிய
நடத்தை விதித்தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
“அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின்” (பக்கம்.7) சுகாதார
உத்தியோகத்தர்களை தொடர்ந்தும் ஆட்சேர்ப்பு செய்வதை
உற்சாகப்படுத்தாமலிருக்கும் அதேவேளை, “புவியியல்ரீதியான சுகாதார
உத்தியோகத்தர்களின் சமமற்ற விநியோகத்தை கருத்திற்கொண்டு அவர்களை
வசதிவாய்ப்புகள் குறைவான பிரதேசங்களில் தக்கவைப்பதற்கான ஆதரவை
வழங்க வேண்டும்” (பக்கம்.8).
மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும் Read More »









