கல்வியும் நல்லிணக்கமும்
அனுஷ்கா கஹந்தகமகே தசாப்தங்களாக நீடித்த யுத்தம், ஆயிரக்கணக்கான இளம் உயிர்களைக் காவுகொண்ட இரு இளைஞர் கலகங்களுக்கு (1971, 1988-89) மத்தியில் இச்சிறு தீவு ஒரு இரத்த ஆற்றையே கண்டுவிட்டது. யுத்தம் முடிந்தபோதும் வன்முறையானது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்புச் சம்பவங்கள் எனத் தடையின்றித் தொடர்கின்றது. அவற்றுக்கு மேலதிகமாக அண்மையில் சூட்கேஸ் ஒன்றினுள் தலையின்றிக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் போன்ற எண்ணற்ற கோரச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. யுத்தத்திற்குப் பின்பும் …