கல்வியில் காலனித்துவ நீக்கம்
ஹர்ஷன ரம்புக்வெல்ல எமது நண்பரும் சக பணியாளருமான ஹர்ஷண ரம்புக்வெல்ல 2025 சித்திரை 21ம் திகதி அபுதாபியில் காலம்சென்றதை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம். அனைத்துமே நம்பிக்கையற்று காணப்படட ஒரு நேரத்தில், வினாவலுக்கும் எதிர்ப்புக்குமான ஒரு குரலை கொண்டுவருவதற்கு பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்தும் மற்றும் அதன் ஆதரவாளர்களிலிருந்தும் சிலர் ஒருமித்த அந்த வேளையிலே, ஹர்ஷண குப்பி குழுவினை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவராவார். ஆர்வமும் அர்ப்பணிப்புமுள்ள நடிகராகவும் சிந்திக்கும் கல்வியாளருமாக இருந்த அவர் குப்பிக்கும் கல்வியல் செயற்பாட்டு சமூகத்துக்கும் செய்த …