இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு
மகேந்திரன் திருவரங்கனின் “மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை
நிகழும் காலத்தில் கற்றல் செயற்பாடு (15.01.2024)” குப்பி ஆக்கத்தில்
பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு விமர்சன சிந்தனையை வளார்க்கும்
கூடங்களாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியிருந்தார். உயர்கல்விக்
கூடங்கள் மாணவர்கள் விமர்சன நோக்கோடு சிந்திக்கும் தளத்திலிருந்து
வெறுமனே செயற்பாடுகளை பூரணப்படுத்தும் குறிப்பெட்டியாக
மாறியிருப்பதை ஆயாசத்தோடு குறிப்பிட்டார். மாணவர்களை அவர்கள் என்ன
கூற விளைகின்றார்கள் என்பதை கேட்பதை விடுத்து அவர்களின் மொழியை
சரிசெய்யும் செவ்கையையும் நான் இதே போன்றதொடு நிலையில் இருந்து
காண்கின்றேன்.