இலவசக்கல்வி எனும் ஆரம்ப அபாய மணி
ஆவணி 21, 2022ல் தேசிய தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர், பெருந்தொற்று
மற்றும் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
பல்கலைக்கழக நிர்வாகத்தரப்பில் மாணவர்களை மீண்டும்
பல்கலைக்கழகங்களுக்குள் எடுப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக்
கூறப்படுவதாகவும் அதுவரை நிகழ்நிலை கற்கை முறைகளை இடைக்கால
தீர்வாக முன்கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். நிகழ்நிலை கற்கைகளை
மேற்கொள்வதர்கான தொலைத்தொடர்பு கட்டணங்கள் தொடர்பில்
மாணவர்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், தொலைத்தொடர்பு
நிறுவனங்களுடன் சமிக்ஞை அலைகளை பலப்படுத்தும்
கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதுவரை மாணவர்கள்
சமிக்ஞை கிடைக்கக்கூடிய இடங்களில் நிகழ்நிலை கற்கைகளை
மேற்கொள்ளும்படியும் வேண்டினார்.