எமது நல்வாழ்வுக்கான சுமை: வசைகளின் கதையாடல்களில் வர்க்கம்
தற்போதைய காலகட்டத்தில் எந்த போராட்டமானாலும் கொடூரமான
அடக்குமுறையையும் அந்த இயக்கங்களின் தலைவர்கள் மீதான
திட்டமிடப்பட்ட தாக்குதல்களையும் ஏனைய உறுப்பினர்களை
செயற்படுவதினின்றும் தடுப்பதற்கான பயத்தை ஏற்படுத்தும்
உத்திகளுடனேயும் தான் முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது. சில
வேளைகளில் இதற்கான பலமான ஆயுதமானது உளம்சார்ந்ததாக
இருக்கக்கூடும்; இப்பொருளாதார நெருக்கடி காலங்களில் அதனை சமாளித்து,
இன்னும் அதனை எதிர்த்துப் போராடுவோரிடமிருந்து நெருக்கடியால்
பிழைக்க முடியாதோரை பிரிக்கும் உத்தி. இருப்பவர்களுக்கும்
இல்லாதவர்களுக்குமிடையில் ஆழமான குழிகளை தோண்டி
இல்லாதவர்களின் இழப்பில் இருப்பவர்களை நோக்கிய பலமான ஈடுபாட்டை
செலுத்துவதன் ஊடாக அரசாங்கம் தனக்கான அணியை தேர்வு
செய்துள்ளதாக கருதலாம். இந்நடவடிக்கை நீதிக்கான போராட்டத்தில்
கூட்டாகவும் வலுவாகவும் நிற்கும் தொழிற்சங்கங்கள், மாணவ மற்றும்
சிவில் அமைப்புகள் போன்ற அமைப்புகளின் மூலங்களை மௌனிக்கச்
செய்வதையும் உள்ளடக்கியுள்ளது.